Chapter 37

உள்ளே குதித்த உருவத்தை பார்த்து ஒரே நேரத்தில் சம்பத் அதிர்ச்சி அடைய,ஸ்ருதி மகிழ்ச்சி அடைந்தாள்.

இவன் எப்படி உள்ளே வந்தான்?என்று சம்பத் திடுக்கிட ,வந்தவன் காலால் ஒரு எத்து விட சம்பத் உருண்டு கீழே விழுந்தான்.சேலையை எடுத்து ஸ்ருதியிடம் கொடுத்து"நீ கட்டிக்கோ தங்கச்சி"என்றான் நஞ்சுண்ட கவுடா.

என் தங்கச்சி மேலேயடா கை வைக்கிற என்று மேலும் ஒரு உதை விட்டான்.

சம்பத்திற்கும் , நஞ்சுண்டாவிற்கும் ஒரு துவந்த யுத்தமே ஆரம்பம் ஆகியது.மாத்திரையின் பவர் கூடுதல் வலுவை கொடுத்ததால் நஞ்சுண்டாவின் முரட்டு உடம்பிற்கு இணையாக சண்டை போட்டான் சம்பத்.கைகளாலும்,கால்களாலும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.சண்டையில் பெரும்பாலும் மாறி மாறி இருவரும் முன்னிலை பெற்றனர்.சம்பத்துக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற கோபத்தில் மூர்க்கத்தனமாக சண்டை போட்டான்.நேரம் ஆக ஆக சம்பத் கை ஓங்கியது.சம்பத்தின் தாக்குதல்களை சமாளிக்கவே நஞ்சுண்டாவிற்கு போதும் போதும் என்று இருந்தது.ஒரு கட்டத்தில் நஞ்சுண்டாவின் காலை கால்பந்து உதைப்பது போல் ஓங்கி உதைக்க அவன் முட்டி போட்டு மடங்கி உட்கார்ந்தான்.இதை பயன்படுத்தி கொண்டு புஜங்களால் நஞ்சுண்டாவின் கழுத்தை கிடுக்கிபிடி போட்டு பிடித்தான் சம்பத்.இதில் நஞ்சுண்டாவுக்கு மூச்சு விட முடியாமல் திணறி கண்கள் இருட்டி கொண்டு வந்தது.நஞ்சுண்டாவின் கைகள் சம்பத்தின் கைகளை எவ்வளவு முயன்றும் தளர்த்த முடியவில்லை.

அனுபமா நீ கொடுத்த மாத்திரை சரியான மாத்திரை தான்டி என்று சம்பத் மனதிற்குள் மெச்சி கொண்டான்.இல்லை என்றால் இந்த முரட்டு உருவத்தை எல்லாம் என்னால் தோற்கடிக்க முடியுமா?என்று தன் பிடியை மேலும் இறுக்கினான்.நஞ்சுண்டாவின்‌ மூச்சு கொஞ்ச கொஞ்சமாக அடங்கி கொண்டே வர

சரியாக அந்த நேரத்தில் சம்பத் பின்மண்டையில் உருட்டு கட்டையால் ஒரு அடி நச்சென்று விழுந்தது.சம்பத் பிடியை தளர விட நஞ்சுண்டா மயங்கி கீழே சாய்ந்தான்.சம்பத் எழுந்து வெறியோடு அடித்த ஸ்ருதியை நோக்கி திரும்ப,இப்பொழுது தலையின் முன்பக்கம் இன்னொரு பலத்த அடி விழ சம்பத் ஸ்ருதியை நோக்கி கையை நீட்டி "உன்னை விட மாட்டென்டி"என்று சொல்லி கொண்டே மயங்கி கீழே விழுந்தான்.

உருட்டு கட்டையை கீழே போட்டு விட்டு நஞ்சுண்டாவை தொட்டு அண்ணா, அண்ணா என்று ஸ்ருதி அழைக்க,நஞ்சுண்டா மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தான்.ஸ்ருதி NCC இல் இருந்ததால் FIRST AID சிகிச்சை எல்லாம் அத்துபடி.அவன் மார்பில் கை வைத்து இரண்டு மூன்று முறை நன்றாக அழுத்த நஞ்சுண்டாவின் இதய துடிப்பு அதிகரித்து மூச்சு வந்தது.ஸ்ருதி தண்ணிரை தெளித்து எழுப்ப நஞ்சுண்டா இருமிகொண்டே எழுந்தான். அருந்த நீர் கொடுக்க, நஞ்சுண்டா சகஜ நிலைக்கு வந்தான்.

தங்கச்சி உனக்கு ஒன்னும் ஆகவில்லையே?

இல்லை அண்ணா நீங்க தான் சரியான நேரத்தில் வந்து காப்பாற்றி விட்டீர்களே!

சரி வா ஸ்ருதி நாம இங்கிருந்து சீக்கிரம் கிளம்பலாம்.

கீழே போய் கதவை திறக்க முயல,lock ஆகி இருக்கு ஸ்ருதி.இரு நான் மேலே போய் அவன் பாக்கெட்டில் சாவி இருக்கிறதா என்று பார்த்து வருகிறேன்.அவன் பாக்கெட்டில் தடவி பார்த்தும் சாவி எங்கேயும் இல்லை.

நஞ்சுண்டா கீழே வர,ஸ்ருதி அவனை பார்த்து,"அண்ணா சாவி கிடைச்சுதா?"

இல்லை ஸ்ருதி அவன் எங்கு வைத்து தொலைத்தோனோ தெரியலையே என்று நஞ்சுண்டா புலம்பினான்.

சரி கிடைப்பதை எல்லாம் கொண்டு இருவரும் கதவை உடைக்க தொடங்கினார்கள்.பழங்கால வீட்டின் கதவு மிகவும் வலுவாக இருக்க,கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை.

ஆமா நீங்க எப்படி வந்தீங்க அண்ணா,

உன்னை கோச்சிங் கிளாஸில் இருந்து கூட்டி போவதை பார்த்தேன் ஸ்ருதி, வழியில் bike off ஆகி விட்டது.வேற வழி இல்லாம தொடர்ந்து ஓடி வந்தேன்.அப்போ இந்த மண் சாலையில் கார் இப்போ வந்ததற்கான தடம் தெரிந்தது.அதை பார்த்து இங்கே ஓடி வந்தால் உன் சத்தம் கேட்டு pipe ஐ புடிச்சிட்டு மேலே ஏறி வந்தேன்.

இப்போ வெளியே எப்படி அண்ணா போறது?

வேற வழியே இல்ல தங்கச்சி,முதல் மாடி பால்கனியில் இருந்து துணி கட்டி கீழே இறங்க வேண்டியது தான்.நஞ்சுண்டா விறுவிறுவென ஆங்காங்கு இருந்த ஸ்கிரீன் துணிகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து கட்டினான்.வா ஸ்ருதி இது போதும்,இதை பால்கனியில் கட்டி இறங்கி விடலாம்.

மீண்டும் சம்பத் மயங்கி கிடந்த பால்கனி அறைக்கு செல்லும் போது நஞ்சுண்டாவின் கால்கள் இடறி ஸ்ருதி கீழே வைத்து இருந்த தண்ணி பாட்டிலை தட்டிவிட,பாட்டிலில் இருந்த நீர் வழிந்து நேர்கோடாக சம்பத் முகத்தை நோக்கி பயணித்து கொண்டு இருந்தது.

நஞ்சுண்டா பலமான முடிச்சு போட்டு துணியை கீழே இறக்க அது ஏறக்குறைய தரையை தொட்டது.

ஸ்ருதி நீ முதலில் கீழே இறங்கும்மா,

ஸ்ருதி மெதுவாக துணியை பிடித்து கொண்டு கீழே இறங்க நஞ்சுண்டா கெட்டியாக துணியை பிடித்து கொண்டான்.

ஸ்ருதி கீழே இறங்கி முடிக்கும் நேரம்,இம்முறை நஞ்சுண்டாவின் பின் மண்டையில் அடி விழுந்தது.அடித்தது சம்பத் தான்.

நஞ்சுண்டா மயங்கி சரிய,"இருடி நான் கீழே வரேன் நீ எங்கேயும் தப்பி போக முடியாது"என்று சம்பத்தும் துணியை பிடித்து கொண்டு கீழே இறங்க தொடங்கினான்.

ஸ்ருதி கம்பௌண்ட் கேட்டை திறந்து கொண்டு சாலையில் ஓட துவங்க,தன்னை கடத்திய கார் மண் சாலையில் எதிரே தூரத்தில் வருவதை பார்த்து"அய்யோ அனுபமா வேறு எதிரில் வருகிறாள்,சம்பத்தும் பின்னாடி துரத்தி கொண்டு வருகிறான்.இருவரிடம் மாட்டினால் அவ்வளவு தான் நம் கதி என்று மண்சாலையில் இருந்து பிரிந்து,பக்கத்தில் உள்ள புதர் மண்டிய காட்டு பகுதியில் ஓட துவங்கினாள்.

ஷெட்டி தன் கிராமத்தில் ஹெலிகாப்டரில் இறங்க போலீஸ் டிஜிபி தயாராக இருந்தார்.

என்ன ஆச்சு,என் மனைவியை கண்டுபிடித்து விட்டீர்களா?

இல்ல சார்,ஆனா நிறைய விவரங்கள் கிடைத்து இருக்கு,வாங்க காரில் பேசிக்கொண்டே போகலாம்.

டிஜிபி காரில் ஷெட்டியை பார்த்து,"சார் இது கிராமம் ஆதலால் பெருசா சிசிடிவி footage கிடைக்கல.ஆனால் இன்ஸ்டிட்யூட் இருந்து இந்த footage கிடைச்சு இருக்கு பாருங்க.

ஸ்ருதியும் ஒரு பெண்ணும் வெளிவருவதை வீடியோவில் பார்த்தார்கள்.

அந்த பொண்ணுக்கு சிசிடிவி எங்கே இருக்கு என்று தெளிவாக தெரிஞ்சு இருக்கு சார்.அதனால் சிசிடிவி இருக்கிற இடத்தில் எல்லாம் தெளிவா தன்னோட முகத்தை காட்டவே இல்லை.வெளியே நின்று இருக்கும் கார் உங்களோடது தான் சார்.அதில் தான் இருவரும் ஏறுகிறார்கள்.அப்புறம் கொஞ்ச நேரத்தில் ஒரு bike அந்த கார் பின்னாடி போய் இருக்கு.அதில் போகிறவர் உங்க எதிரி நஞ்சுண்டப்பா தான் சார்.அவரோட bike பாதி வழியிலேயே நிக்குது.அவரோட மொபைலும் கொஞ்ச தூரத்தில் விழுந்து கிடந்தது.அதையும் கைபற்றி விட்டோம்.அவரும் மிஸ்ஸிங்.ஒருவேளை அவர் கடத்தி இருக்கலாம் என்ற கோணத்தில் நாங்க விசாரணை செய்ஞ்சுட்டு இருக்கோம் சார். அவர் சம்பந்தப்பட்ட இடத்தில் எல்லாம் தேடி துருவிட்டோம் சார்.இன்னும் எதுவும் தகவல் கிடைக்கல.

சரி என் மனைவி மொபைல் என்கிட்ட பேசும் போது தான் cut ஆச்சு.அதை trace பண்ணீங்களா?

சார் அதையும் try பண்ணிக்கிட்டு இருக்கோம் சார்,அவங்க use பண்ற நம்பர் தமிழ்நாட்டு நம்பர் என்பதால் சென்னையில் உள்ள சர்வரில் தான் டவர் லொகேஷன் எல்லாம் பதிவு ஆகுது.சென்னை போலீஸ் மூலமா details கேட்டு இருக்கோம்.அது முழுக்க வேற division என்பதால் சில formalities எல்லாம் கேட்டாங்க,அதை எல்லாம் செய்து கொடுக்க கொஞ்சம் late ஆகி விட்டது.

என்னய்யா போலீஸ் நீ,சென்ட்ரல் மினிஸ்டர்க்காக என்று சொல்லி கேட்க வேண்டியது தானே!

சொன்னோம் சார்,ஆனா அவங்க formalities தான் முக்கியம் என்று சொல்லிட்டாங்க.இன்னும் கொஞ்ச நேரத்தில் எந்த டவர் என்று தெரிந்து விடும்.

இரு இரு எல்லாம் நேரம் பார்த்து விளையாடுறாங்க,நான் அவங்களை அப்புறமா பார்த்துக்கிறேன்.

அந்த நேரம் டிஜிபி செல்ஃபோன் தன் ரீங்காரத்தை பாட,DGP எடுத்து ஹலோ என்றார்.அப்படியா? என்றார்.சூப்பர் என்றார்.சார் ஒரு GOOD நியூஸ்

சொல்லுய்யா,என் மனைவி கிடைத்து விட்டாளா?ஆர்வமாக ஷெட்டி கேட்க

இல்லை சார், ஆனா உங்க மனைவி போன கார் கிடைத்து விட்டது .

மீண்டும் ஷெட்டி முகம் சுருங்கியது.

இப்பதான் என் மனைவி போன காரையே கண்டு பிடிக்கிறீங்களா?வாங்களேன் போய் பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டு விட்டு அப்படியே goa ஒரு ட்ரிப் போய் வந்து விட்டு ஒரு நாலு நாள் கழித்து தேடலாம்?என்று ஷெட்டி முறைத்து கொண்டே கேட்டான்.

இல்ல சார்.

நீ எதுவும் பேசாதேய்யா,உன்னை நம்பினா வேலைக்கு ஆகாது. நீ முதலில் கார் இருக்கும் இடத்திற்கு வண்டியை விடு.நானே மற்றதெல்லாம் பார்த்துக்கிறேன்.

அதற்குள் ஸ்ருதி இருக்கும் இடம் தெரிந்து கிராம மக்கள் அனைவரும் கார் இருக்கும் இடத்திற்கே வந்து விட்டனர்.எல்லோரும் கவலை தோய்ந்த முகத்துடன் காத்து கொண்டு இருந்தனர்.

படுபாவி,அந்த பொண்ணு முகத்தை பார்த்தா யாருக்காவது கடத்தி போக தோணுமா,அவன் கை கால் விளங்காம போக என்று ஒரு பெண் சாபம் விட

அந்த பொண்ணு எல்லோரிடமும் கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் எவ்வளவு ஆசையா பழகி கொண்டு இருந்தது.எப்படியாவது அந்த பொண்ணு நல்லபடியாக வந்து விட வேண்டும் என்று மற்றவர்கள் வேண்டி கொண்டு இருந்தனர்.

ஷெட்டி அமைதியாக வந்து காரை நோட்டமிட,உள்ளே ஸ்ருதி handbag இருந்தது.அதை எடுத்து பார்க்க அவன் கண்களில் கண்ணீர் வந்தது.சாவி காரிலேயே விடப்பட்டு இருந்தது.அப்பொழுது கிராம மக்களின் வேண்டுதல் பலித்தது.

அனுபமா படுகுஷியில் இருந்தாள்.இந்நேரம் எப்படியும் ஸ்ருதி , சம்பத்திற்கு சொந்தமாகி இருப்பாள்.இன்னும் மகிழ்ச்சியை இரட்டிபாக்கி கொள்ள ஷெட்டிக்கு ஃபோன் செய்தாள்.

என்னடா மச்சான் எப்படி இருக்கே?

யாரு அனுபமாவா?

ஆமாடா மச்சான்.

அனுபமா ஒழுங்கா போனை வச்சிடு,நான் செம கோபத்தில் இருக்கேன்.

தெரியும்டா மாப்பிள்ளை,உன் பொண்டாட்டியை காணோம்,நீ தேடிட்டு இருக்கே,அவ இருக்கும் இடம் பற்றி உனக்கு தகவல் சொல்லலாம் என்று call பண்ணா ரொம்ப தான் கிராக்கி பண்றீயே

ஏய் அனுபமா,உனக்கு ஸ்ருதியை பற்றி என்ன தெரியும்!சீக்கிரம் சொல்லு.உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானால் தரேன்.ஷெட்டி கெஞ்சினான்.

அப்பா ,பொண்டாட்டி மேல தான் எவ்வளவு பாசம்! நீ அங்க துடிப்பதை பார்த்து எனக்கே இங்கே படபடப்பா ஆகுது.ஆனா ஒரு விசயம் இப்போ உன் பொண்டாட்டி உனக்கு கிடைச்சாலும் அவ கற்பொடு இருக்க மாட்டா.இந்நேரம் ஒருத்தன் அவளை சின்னாபின்னமாகி இருப்பான் பரவாயில்லையா?

ஐயோ பரவாயில்லை அனுபமா,எனக்கு அவ உயிரோடு கிடைச்சாலே போதும்.

அப்போ சொல்றேன் கேட்டுக்கோ,உனக்கும் எனக்கும் சம்பத்தப்பட்ட இடத்தில் தான் இருக்கா.முடிஞ்சா யோசித்து கண்டுபிடி.இன்னொரு விசயம் சொல்றேன் அதையும் கேளு.அவளை கடத்தி ஒருத்தன் கிட்ட மாட்டி விட்டதே நான் தான்டா.என்று கூற

ஷெட்டி நரம்பு புடைக்க,அனுபமா உன்னை சும்மா கூட விட மாட்டேன்டி என்று போனில் கத்தியதை பார்த்து ஒரு நிமிஷம் அங்கு இருந்த அனைவருமே பயந்தனர்.

கத்தியே நீ செத்துடாதடா,போய் மிச்சம் மீதி உள்ள உன் பொண்டாட்டி உசிரையாவது காப்பாற்று போ என்று சிரித்து கொண்டே போனை அணைத்தாள்.

சார் என்ன ஆச்சு சார் ,என்று போலீஸ் DGP வந்து கேட்க,

அது ஒண்ணுமில்ல நீ போய்யா,என்னை கொஞ்சம் தனிமையில் விடு

ஷெட்டி மனதிற்குள் யோசிடா யோசிடா உனக்கும் அனுபமாவிற்கும் சம்பந்தப்பட்ட இடம் என்ன?என்று யோசித்து கொண்டு இருக்கும் பொழுது சர்ச் மணி ஒலித்து மணி 6 என்றது.ஸ்ருதி கடத்தப்பட்டு இரண்டு மணி நேரம் ஆகி இருந்தது.

ஷெட்டி மூளைக்குள் உடனே பல்ப் எரிந்தது.ச்சே இதை எப்படி தவற விட்டோம்.என்னோட பண்ணை வீட்டிற்கு பக்கத்தில் அல்லவா சர்ச் இருக்கு.ஸ்ருதி phone அணைவதற்கு முன் தெளிவாக சர்ச் bell ஓசை கேட்டதே!எல்லா இடத்திலும் தேடுவோம்.ஆனா என் வீட்டில் தேட மாட்டோம் என்று எவ்வளவு கிரிமினலா இவ யோசிச்சு இருக்கா.உன்னை வந்து கவனிச்சுகிறேன்டி இரு என்று ஷெட்டி மின்னலென காரை கிளப்பி கொண்டு போனான்.

சார் உங்க wife மொபைல் கட் ஆன டவர் எது என்று தெரிந்து விட்டது?என்று டிஜிபி கத்தி கொண்டே ஓடிவர,அதற்குள் ஷெட்டி அவர்கள் கண் பார்வையில் இருந்தே மறைந்து இருந்தான்.

பக்கத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் மொபைலுக்கு யாரோ அழைக்க இம்சை அரசன் 23ம் புகிகேசி ரிங்டோன் வந்தது.

ஏண்டா எதுனா புதிய செய்தியை கொண்டு வருவாய் என்று பார்த்தால் இறந்து புதைத்த செய்தியா கொண்டு வருவாய் என்று ரிங் ஆகியது.இதை கேட்டு அங்கு இருந்த கிராம மக்கள் அனைவரும் சிரித்தனர்.

புதர் மண்டிய காட்டு பகுதியில் ஸ்ருதி ஓடுவதை பார்த்து விட்ட சம்பத் வெறித்தனமாக அவளை துரத்த தொடங்கினான். உதிர்ந்து காய்ந்த இலைகள் இவர்கள் கால்கள் மிதிபட்டு காட்டின் நிசப்தத்தை கலைத்தது.

அனுபமா ஏன் திரும்ப காரில் வருகிறாள் என்று சம்பத்துக்கு புரியவில்லை.நாளை தானே வருவதாக சொன்னாள்.சரி வரட்டும்,துணைக்கு ஒரு ஆள் ஆச்சு என்று விடாமல் ஸ்ருதியை துரத்தினான்.ஆனால் காரில் வந்த நபர் அனுபமா அல்ல.இவர்கள் இருவரும் ஒடும் திசையை பார்த்து விட்ட காரில் இருந்த நபரும் காரை நிறுத்தி விட்டு அவர்கள் ஓடிய திசையை நோக்கி விரைந்தான்.

ஸ்ருதி உண்மையில் அவனுக்கு சரியான போக்கு காட்டி கொண்டு இருந்தாள்.சில நேரங்களில் வேண்டுமென்றே வேகம் குறைத்து ஓடுவாள்.இதில் இருவருக்குமான இடைவெளி குறைந்து அவன் கைக்கு சிக்கி விடுவாள் என்று அவனை நினைக்க வைத்து ,மின்னல் போல் வேகத்தை கூட்டி ஒடுவாள்.ஒவ்வொரு தடவை அவள் கைகளில் இதோ சிக்கி விடுவாள், அதோ சிக்கி விடுவாள் என்று சம்பத் நினைத்தால் நடக்கவே இல்லை.மான் எப்படி சிறுத்தைக்கு போக்கு காட்டுமோ அது போல் தான் ஸ்ருதி அவனுக்கு போக்கு காட்டி கொண்டு இருந்தாள். காலேஜில் அவள் தான் ஓட்டப்பந்தய சாம்பியன் ஆயிற்றே.சிறுத்தையோ, புலியோ என்ன தான் வலிமையான மிருகமாக இருந்தாலும் மானை ஓடி வேட்டையாடுவது என்பது இயலாத காரியம்.அதனால் தான் predator தனது prey யை ஒளிந்து மறைந்து தீடீர் பாய்ச்சலில் நிலைகுலைய வைத்து தான் வேட்டையாடுவது வழக்கம்.சம்பத்திற்கும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தொடங்கியது.வியர்வை ஆறாக பெருகியது.ஸ்ருதி ஏறக்குறைய சம்பத்தின் சக்தியை உறிஞ்சி விட்டு இருந்தாள்.இவளை ஓடி பிடிப்பது என்பது இயலாத காரியம் என்பது தெளிவாக தெரிந்து விட்டது அவனுக்கு.எனவே மீண்டும் தன் குறுக்கு வழியை உபயோகித்தான்.ஏற்கனவே சூரியன் மறைந்து இருந்ததால் இருள் படர துவங்கி இருந்தது.

சட்டென்று எதிர் வந்த பள்ளத்தில் மறைந்து கொண்டான்.

துரத்தும் போது ஏற்பட்ட இலைகள் ஓசைகள் நின்று போனதை பார்த்து அவன் பின் தொடரவில்லை என உணர்ந்த ஸ்ருதி தன்னை சற்று ஆசுவாசப்படுத்தி கொள்ள ஒரு மரத்தின் நிழலில் சற்று நேரம் அமர,வெளிச்சம் முழுக்க மறைந்து இருட்டி கொண்டே வந்தது.சம்பத் ஓசைப்படாமல் தனக்கும் ஸ்ருதிக்கும் உள்ள இடைவெளியை பதுங்கி பதுங்கி குறைத்து கொண்டே வந்தான்.இருட்டில் ஸ்ருதிக்கு எதுவும் தெரியவில்லை.இன்னும் எட்டும் தூரத்தில் ஸ்ருதி அமர்ந்து இருப்பதை பார்த்து அவள் மேல் தீடீர் என பாய்ந்தான்.இதை ஸ்ருதி சற்றும் எதிர்பார்க்கவில்லை.எல்லாம் நொடிகளில் நிகழ்ந்து விட்டது.

ஏண்டி தேவிடியா,உன்னை அப்படியே விட்டு விடுவேன் என்று நினைத்தாயா?உன் உடம்பை இன்னிக்கு பஞ்சர் ஆக்குறேண்டி என்று சொல்லிக்கொண்டே அவள் ஜாக்கெட்டின் இடதுபக்கத்தை கிழித்தான்.

இதுவரை தன்னை யாரும் கெட்ட வார்த்தையில் திட்டி கேட்டு இராத ஸ்ருதியின் தன்மானத்தை அவன் சொன்ன வார்த்தை தூண்ட அவன் கன்னத்தை நகங்களால் கீறினாள்.

"ஆ"என்று அவன் வலியில் அலற,அவள் கன்னத்தில் மாறி மாறி அறைந்தான்.ஸ்ருதியும் கொஞ்சமும் விடாமல் போராடினாள்‌.பூமியில் அவள் கைகள் துழாவி கொண்டு இருக்க வகையாக ஒரு கல் கிடைத்தது.

அவள் மார்பில் கை வைத்து ஜாக்கெட்டை கிழிக்கும் நேரம் ஓங்கி அவன் நெற்றியில் கல்லினால் தாக்கினாள்.இதில் சம்பத் வலியில் அலறி ஜாக்கெட்டில் இருந்து கையை எடுக்க

அவ்வளவு தான் தன் மேல் இருந்த அவனை பலம் கொண்டு தள்ளி விட்டு எழுந்து ஓட முயற்சிக்க ,சம்பத் அவள் கால்களை எட்டி பிடிக்க,மீண்டும் ஒரு உதை அவன் அடி வயிற்றில் எட்டி ஒரு உதை உதைக்க அங்கேயே அடி வயிற்றை பிடித்து கொண்டு சுருண்டு விழுந்தான்.

கண்மண் தெரியாமல் எதிரில் என்ன இருக்கிறது என்று கூட தெரியாமல் இருட்டில் ஸ்ருதி எழுந்து ஓடினாள்.ஓடிய ஸ்ருதி எதிரே வந்த நபர் மீது முட்டி கொண்டு கீழே விழ இருந்தவளை அவள் இடுப்பில் கை வைத்து அவள் நாணல் தேகத்தை தாங்கி பிடித்தான்.இருட்டாக இருந்தாலும் அப்பொழுது உதயமான நிலா வெளிச்சத்தில் தனக்கு நன்கு பழக்கமான முகம் தெரிய,பாய்ந்து அவனை கட்டி தழுவிகொண்டாள்.அவனும் அவள் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்து அவளை இறுக்க கட்டி கொண்டான்.அந்த நபர் யாரும் அல்ல,காரை ஓட்டி வந்த நபர் தான்.

காரில் யார் வருகிறார்கள் என்று கூட தெரியாமல் இப்படியா விழுந்தடித்து ஓடுவது?இன்னும் கொஞ்ச தூரம் ஓடி இருந்தால் கர்நாடக பார்டர் தாண்டி கேரளா பார்டரே வந்து விட்டு இருக்கும்!என்று அவள் காதில் அவன் கிசுகிசுக்க,

ச்சீ போடா,என்று வெட்க்கபட்டு அவன் மார்பில் அவள் நிலவு முகத்தை புதைத்தாள்.

யார் அந்த நபர்?இதை விட எளிதான கேள்வி இருக்க முடியாது

அவனை பார்த்த சந்தோஷத்தில் கட்டி பிடித்து கொண்டு சந்தோஷத்தில் தேம்பி தேம்பி அழ தொடங்கினாள்.

அவள் மோவாயை பிடித்து நிமிர்த்தி"அது தான் நான் வந்துட்டேன்ல அழாதேடா பப்பாளி"என்று அவன் சொல்ல

ஏண்டா,நேற்று என்கிட்ட சொல்லாம போன? அவன் மார்பில் செல்ல அடி அடிக்க,மீண்டும் அவளை ஆரத்தழுவி கொண்டான்.

அவளுக்கு இப்பொழுது உலகத்திலேயே பாதுகாப்பான இடம் அவன் மார்பை தவிர ஏதும் சிறந்த இடம் எதுவும் இருப்பதாக தோன்றவில்லை.மீண்டும் கொடி போல் அவனை கட்டி சுற்றி கொண்டாள்.அவன் வேறு யாரும் அல்ல ஷெட்டி தான்.

பின்னாடி ஓடி வந்த சம்பத்,இருவரும் கட்டி தழுவி கொண்டு இருப்பதை பார்த்து ஆத்திரம் கொண்டு,

ஏண்டி தேவிடியா,என்கிட்ட மட்டும் அப்படி முரண்டு பிடிச்சிட்டு இப்போ அவன்கிட்ட மட்டும் ஒட்டிக்கிட்டு நிக்கிற என்று வெறி வந்தவன் போல கத்தினான்.

இதை கேட்டு ஷெட்டியின் இரத்த நாளங்கள் எல்லாம் கொதித்தது.கட்டி கொண்டு நின்று இருந்த ஸ்ருதியை விலக்கி ஓடி வந்த சம்பத் மீது தன் மொத்த கோபத்தையும் சேர்த்து ஓங்கி ஒரு குத்து விட சம்பத் பத்து அடி தூரம் சென்று பின்னோக்கி விழுந்தான்.

அப்பொழுது ஸ்ருதி முகத்தை பார்க்க,அவள் கன்னத்தில் சம்பத் அடிச்ச கைரேகைகள் பதிந்து இருப்பதையும் அவள் ரவிக்கை கிழிந்து அவன் நகக்கீறல்கள் இருப்பதை பார்த்து, மேலும் கோபம் வந்தது. தன் சட்டையை கழட்டி அவளுக்கு அணிவித்து விட்டு

ஷெட்டி ஸ்ருதியை பார்த்து,"அவன் உன்னை அடிச்சானா ஸ்ருதி"

"அவன் அடிச்சது கூட எனக்கு வலிக்கலடா, ஆனா அவன் கெட்ட வார்த்தையில் திட்டியது தான்டா எனக்கு வலிக்குது"என்று அழுது கொண்டே கூற கை முஷ்டியை உயர்த்தி கொண்டு ஷெட்டி அவனிடம் சென்றான்.

அவன் சட்டை காலரை பிடித்து தூக்கிய ஷெட்டி மீண்டும் அவனை அடிக்க,அதை சம்பத் தடுத்தாலும் அவனிடம் இருந்து ஒரு வலுவற்ற எதிர்ப்பே வந்தது.

என்ன இது மாத்திரை வீரியம் குறைந்து விட்டதா?இவனை என்னால் எதிர்க்க முடியவில்லையே.இதுவரை இருந்த சக்தி எல்லாம் எங்கே போனது என்று சம்பத் மனதில் நினைத்தான்.

எங்கே இவனிடம் இருந்த சக்தியை எல்லாம் தான் ஸ்ருதி 30 நிமிடம் ஓடவிட்டு எல்லாவற்றையும் உறிஞ்சி விட்டாளே.

அவன் கையை முறுக்கி முதுகில் ஓங்கி ஷெட்டி ஒரு குத்து விட சம்பத் மூச்சு விட முடியாமல் திணறினான்.

வேறுவழியில்லை,இவன் மனசு தளரும் படி ஏதாவது சொல்லி தான் இவனிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்று சம்பத் நினைத்து"உன் பொண்டாட்டியை நான் முழுசா அனுபவிச்சு முடிச்சிட்டேன்.போ என் எச்சில் பட்ட உணவை போய் தின்னு போ என்று வாய் கூசாமல் அவன் கூறிய பொய்யை கேட்டு ஸ்ருதி அதிர்ச்சி அடைந்தாலும்,அடுத்து ஷெட்டி கூறிய வார்த்தைகள் அவள் நெஞ்சில் பாலை வார்த்தது.

"டேய் எச்சை,அவ நெருப்புடா என்று எனக்கு தெரியும்.நானே அவ அனுமதி இல்லாம தொட முடியாது.நீ என்னடா பெரிய சிப்சு.நான் இதுவரை கவலை பட்டது எல்லாம் அவ உயிருக்கு எந்த ஆபத்தும் வரகூடாது என்பது மட்டும் தான்.அவ எனக்கு திரும்ப கிடைத்து விட்டாள், அது மட்டும் போதும்டா எனக்கு என்று மேலும் முரட்டுத்தனமாக உதைத்தான்.

சம்பத் என்ன நம்ம ராஜதந்திரங்கள் வீணாக போய் விட்டதே, இன்னும் பயிற்சி வேண்டுமோ என்று நினைக்க,அடுத்தடுத்து விழுந்த உதைகள் அவனை மேலும் நிலைகுலைய வைத்து மண்ணில் சாய்த்தது.இருந்தும் ஷெட்டி வெறி அடங்காமல் பக்கத்தில் உள்ள பெரிய கல்லை எடுத்து அவன் தலைமேல் போட முயற்சிக்க,ஸ்ருதி ஓடிவந்து ஷெட்டியை தடுத்தாள்.

டேய் வேண்டாம்டா,உன்னால் இதற்கு மேல் ஒரு உயிர் கூட போக கூடாது.வேண்டாம் அவனை விட்டு விடு என்று ஸ்ருதி சொல்ல ஷெட்டி உடனே கல்லை போட்டு விட்டான்.

ஸ்ருதி சம்பத்தை பார்த்து,இவன் கிட்ட என்னத்த பார்த்து மயங்கின? என்று கேள்வி கேட்டேயே இப்போ பாரு நான் ஒரே ஒரு வார்த்தை சொன்னவுடன் கல்லை போட்டு விட்டான்.என்ன தான் அவன் புருஷன் ஆனாலும் இதுவரை ஒரு தடவை கூட என் பேச்சை அவன் மீறியதே இல்லை.எனக்கு உண்டான space அவன் கொடுக்க தவறியதும் இல்ல.எனக்கு தேவையான ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து நான் கேட்காமலே அவன் செய்கிறான்.ஆண் என்ற திமிரே என்னிடம் காண்பித்தது இல்ல.இதை விட ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடம் இருந்து வேறென்ன வேண்டும்.இங்க பாரு என்று ஸ்ருதி ஷெட்டியை அறைந்தாள்.ஷெட்டி அதிர்ச்சியோடு அவளை பார்த்தாலும் எதுவும் செய்யவில்லை.

ஸ்ருதி ஷெட்டி கன்னத்தில் முத்தம் வைக்க பதிலுக்கு அவள் கன்னத்தில் இரண்டு முத்தம் வைத்தான்.இப்போ நான் அவனை அடிச்சேன்,அமைதியாக வாங்கி கொண்டான். ஆனா திருப்பி அடிக்கவே இல்ல.முத்தம் கொடுத்தேன்.பதிலுக்கு இரண்டு முத்தம் கொடுத்தான்.அன்பை காட்டினால் மட்டும் இரண்டு மடங்கு அன்பை காட்டுவான்.இது தான் அவன்,இந்த காரணங்களால் தான் அவன் இன்னொரு பெண்ணுக்கு மனைவி என்றால் கூட என்னை அவனை நோக்கி இழுத்தது.போய் உன் பொண்டாட்டிக்கு முதலில் மரியாதை கொடுத்து வாழு என்று சொல்லிய ஸ்ருதி,ஷெட்டி கரம்பிடித்து நடந்தாள்.தூரத்தில் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து ஓடி வருவது அவர்கள் ஏந்தி கொண்டு வந்த தீப்பந்த வெளிச்சத்தில் இருந்து தெரிந்தது.

சம்பத், ஷெட்டியிடம் தோற்றது ஒருபுறம்,ஸ்ருதி கிடைக்காமல் போனது மறுபுறம் என்று கோபம் தலைக்கேற மதி இழந்தான்.பக்கத்தில் இருந்த ஒரு கூரான கல்லை எடுத்து ஸ்ருதி பின்தலையை நோக்கி வீச அவன் காலுக்கு கீழே இருந்த கண்ணாடி வீரியன் பாம்பு ஒன்று காலை கடித்தது.அதில் வலியில் சம்பத் கத்தவும் ,ஸ்ருதி திரும்பி பார்க்கவும் அவன் வீசிய கல்லை பார்த்து விலகுவதற்குள் அது நெற்றியில் உரசி லேசான காயத்தை உண்டு பண்ணி கடந்து சென்றது.

அவன் திருந்த மாட்டான் ஸ்ருதி ,என்று மீண்டும் ஷெட்டி அவனை நோக்கி செல்ல

நில்லுடா,எனக்கு ஒன்னும் இல்ல,அங்க பாரு அவனை தான் பாம்பு கடிச்சு இருக்கு என்று இருவரும் ஓடி போய் பார்த்தனர்.

பார்க்க மலை பாம்பு மாதிரியே இருக்குல்ல,என்று ஸ்ருதி சொல்ல,

இல்ல இது என்ற சொல்ல வந்த ஷெட்டியை கை அமர்த்தினாள்.

இது விசம் இல்லாத பாம்பு தான் சம்பத்,பயப்படாதே பக்கத்தில் உள்ள ஹாஸ்பிடல் சென்று ஒரு இஞ்செக்சன் போட்டால் சரி ஆகி விடும்.டேய் அவனை தூக்குடா என்று ஸ்ருதி கூற அமைதியாக ஷெட்டி அவனை தூக்கினான்.

அதற்குள் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து விட அவர்களிடம் ஷெட்டி சம்பத்தை ஒப்படைத்தான்.

ஏன்மா உனக்கு ஒன்னும் ஆகலயே என்று பாசத்தோடு அவர்கள் கேட்க,

அய்யோ எனக்கு ஒன்னும் ஆகலை,அவருக்கு தான் பாம்பு கடிச்சு இருக்கு,அவரை முதலில் ஹாஸ்பிடல் கூட்டி போகணும்.

ஏன் ஸ்ருதி,அவனை கடிச்சது,கண்ணாடி வீரியன் பாம்பு.அது விச பாம்பு.

தெரியுமே, விஷ பாம்பு என்று தெரிந்தால் அவன் பயப்படுவான்.அதனால் பயத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.இதனால் விஷம் உடல் முழுக்க வேகமாக பரவும்.நான்கு மணி நேரத்தில் மனிதனை கொல்ல கூடிய இந்த விஷம் அப்புறம் இரண்டே மணி நேரத்தில் கொன்று விடும்.அதனால் தான் நான் சொல்லல என்று ஸ்ருதி மெதுவாக சொன்னாலும் சம்பத் காதில் தெளிவாகவே விழுந்தது.

ச்சே,நான் இவளுக்கு எவ்வளவு கெடுதல் செய்து இருந்தாலும் இவள் எனக்கு நல்லது நினைக்கிறாளே என்ற உண்மை சம்பத் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் குத்தியது.கண்களில் இருந்து தானாக கண்ணீர் வரவைத்தது.

ஷெட்டி வந்த காரில் அவனை ஏற்ற, கார் மருத்துவமனையை நோக்கி விரைந்தது.

அப்பொழுது ஸ்ருதி ,"அய்யயோ நஞ்சுண்டா அண்ணன் என்னை காப்பாற்ற வந்து அங்கே மயக்கமாக இருக்காரு"என்று கூறினாள்.

கவலைப்படாதே ஸ்ருதி,உன் அண்ணனுக்கு ஒன்னும் ஆகலை,போலீஸ் ஏற்கனவே அங்கு வந்து அவரை மீட்டு ஹாஸ்பிடல் கூட்டி போய் விட்டார்கள் என்று ஷெட்டி கூற நிம்மதி அடைந்தாள்.

டாக்டர் எந்த பாம்பு கடித்தது என்று கேட்க,ஸ்ருதி உடனே "கண்ணாடி வீரியன்" என்று சொன்னாள்.

உங்களுக்கு அடிபட்டு இருக்கே ,சிஸ்டர் இவங்களுக்கு first aid உடனே கொடுங்க

எனக்கும் ஒன்னும் இல்ல டாக்டர்,நீங்க முதலில் அவரை பாருங்க,ஸ்ருதி சொன்னாள்.

பாம்பு கடித்த இடத்தில் கட்டு ஏதாவது போட்டீர்களா? என்று டாக்டர் கேட்க

இல்ல டாக்டர்,அப்படி போட்டால் விஷம் அங்கேயே நின்று அங்கு இருக்கும் தசைகள் அழுகி விடும் என்பதால் போடல ஸ்ருதி கூறினாள்.

Very good.அப்படி கட்டு எதுவும் போட கூடாது.அதே போல வாய் வைத்தும் விஷத்தை உறிஞ்ச கூடாது. என்று டாக்டர் சொன்னார்.மேலும் பாம்பின் விஷ முறிவு மருந்தை ஏற்றி கொண்டே டாக்டர் சம்பத்தை பார்த்து," MR,நீங்க உயிரோடு இப்போ இருக்க காரணம் இவங்க தான்.உங்களை கடித்தது கடுமையான விஷம் உள்ள பாம்பு.சரியான நேரத்தில் உன்னை கொண்டு வந்து சேர்த்து இருக்காங்க,அவங்க தப்பா ஏதாவது செய்து இருந்தால் உங்க உயிர் அல்லது காலை இழக்க வேண்டி இருந்து இருக்கும்.

சம்பத் கைகள் ஸ்ருதியை நோக்கி கை கூப்ப ,அவள் அவனிடம் நடந்ததை மறந்து விடுங்க சம்பத்,இதற்கு மேல் ஒழுங்கா இருங்க என்று தன்னை பார்க்க வந்த மக்களிடம் சென்று விட்டாள்.

அந்த இரவிலும் அவள் மீது உள்ள பிரியத்தில் அந்த மக்கள் அவளை பார்க்க வந்து இருந்தனர்.ஷெட்டிக்கே கிடைக்காத மரியாதை இது.

அப்பொழுது சம்பத் அருகே வந்த ஷெட்டி அவனை பார்த்து"அவளோட இடத்தில் யார் இருந்தாலும் உன்னை அப்படியே சாக விட்டு இருப்பார்கள்.தனக்கு கெடுதல் நினைப்பவருக்கு கூட நல்லது செய்யும் உயர்ந்த எண்ணம் கொண்டவள்.அது தான் ஸ்ருதி.அவளை அடைய எப்படி உனக்கு எந்த தகுதியும் இல்லையோ,அதே போல் அவளை அடைய எனக்கும் எந்த தகுதியும் இல்லை,அந்த அளவு அதிகமான காரணங்கள் உள்ளது.ஆமாம்,விதி வசத்தால் அவள் எனக்கு மனைவியாகி இருந்தாலும் அவளுக்கு நான் தகுதி ஆனவனே கிடையாது.உன்னை இப்பொழுது கூட உயிரோடு விட எனக்கு மனமே இல்லை.ஆனால் அவள் வார்த்தையை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது.பிழைத்து போ.அவள் மேல் எனக்கு காமம்,மற்றும் அன்பு இரண்டுமே உண்டு.காமத்தால் அவளுடன் உடலுறவு கொள்ள ஏங்குகிறேன்.அன்பினால் அவளை விட்டு விலகுகிறேன்.காமம் ஜெயிக்குமா இல்லை அன்பு ஜெயிக்குமா?என்பதை காலம் தான் சொல்லும் என்று ஷெட்டி அவனிடம் கூறினான்.

தன் அழகிய மனதால் தன் பெரியப்பா,நஞ்சுண்டா,இப்போது சம்பத் போன்ற கெட்டவர்களின் மனதையே மாற்றி வென்ற ஸ்ருதிக்கு அதே போல் நல்லவளான அனிதாவின் மனதையா வெல்ல முடியுமால் போய் விடும்?ஆனால் உண்மையான பரீட்சையை ஸ்ருதிக்கு காலம் அங்கு தான் வைத்து உள்ளது.எந்த பெண்ணும் தன் கணவனை வேறொரு பெண்ணுக்கு விட்டு கொடுக்க மாட்டாள்.அதற்கு அனிதாவும் விதிவிலக்கல்ல.

ஸ்ருதி வீட்டுக்கு வர,இதுவரை ஸ்ருதியை காணாமல் தவித்து கொண்டு இருந்த குழந்தை மதன் "அம்மா"என்று ஓடி வந்து கால்களை கட்டி கொண்டது.

தாயம்மா,குழந்தையை உள்ளே கூட்டி போ,ஸ்ருதி நீ போய் முதலில் குளித்து விட்டு ,சாப்பிட்டு போய் ரெஸ்ட் எடு.காலையில் பார்த்துக்கலாம்.ஷெட்டி சொல்ல

தாயம்மா குழந்தையை அழைக்க,அது வரமாட்டேன் என்று அடம் பிடித்தது.

ஷெட்டி அதட்டினாலும் மசியவில்லை.

டேய் மதன்,இதோ அம்மா போய் குளித்து விட்டு உடனே வந்துடறேன்.அப்புறம் நானே வந்து உனக்கு சாப்பாடு ஊட்டறேன் ஓகேவா என்று கேட்க,

மதன் அமைதியாக "ம்"என்று தலையாட்டி கொண்டே தாயம்மாவிடம் சென்று விட்டது.

உன் பேச்சை மட்டும்தான்மா இவன் கேட்கிறான்.வேறு யார் பேச்சையும் கேட்பது இல்லை என்று தாயம்மா சொல்ல,

அதற்கு ஸ்ருதி, அவன் குழந்தை தானே தாயம்மா, என்னை அவனோட அம்மாவாக பார்க்கிறான்.அதனாலே தான்.ஒரு 5 mins நான் குளித்து விட்டு வந்து விடுகிறேன்,நீங்க குழந்தைக்கு சாப்பாடு மட்டும் ரெடி பண்ணுங்க.என்று ஸ்ருதி ஓடினாள்.

குளித்து விட்டு வந்து சாப்பாடு ஊட்ட,குழந்தை மழலை மொழியில் காலையில் செய்த உணவு வேண்டும் என்றது.

தாயம்மா,காலையில் செய்த சிறுதானியத்தில் செய்த இனிப்பு இருக்கா என்று ஸ்ருதி கேட்க,

ம் இருக்கும்மா,இதோ எடுத்து வரேன்.

எடுத்து வந்து ஸ்ருதியிடம் ஒரு கப் மற்றும் ஷெட்டியிடம் ஒரு கப் கொடுத்தார்கள்.

ஷெட்டி அதை சாப்பிட்டுவிட்டு wow சூப்பர்,இதை யார் செய்தது?

ஐயா,ஸ்ருதி தான் செஞ்சாங்க. நாட்டு சர்க்கரையும்,சிறு தானியம் கலந்து செஞ்சாங்க.காலையிலேயே வேலைக்காரங்க சாப்பிட்டு நல்லா இருக்கு என்று காலி பண்ண பார்த்தாங்க,நான் தான் குழந்தைக்கு என்று கொஞ்சம் எடுத்து வைச்சேன்.

உன்னை தான் கிச்சன் பக்கமே போக கூடாது என்று சொல்லி இருக்கேன் இல்ல,என்று ஷெட்டி குரலை உயர்த்தி பேச,

என்ன என்பது போல் ஒரே ஒரு பார்வை ஸ்ருதி பார்த்தவுடன் ஷெட்டி குரல் தாழ்ந்து விட்டது.

இல்ல ஸ்ருதி,இப்ப உன் படிப்பு தானே முக்கியம் என்று அவள் கண்களை பார்க்க முடியாமல் குரலை தாழ்த்தி சொன்னான்.

இங்க பாருங்க,எல்லா நேரமும் சும்மா படித்து கொண்டே இருக்க முடியாது.என்னால் முடிந்த அளவு சின்ன சின்ன வேலைகள் செய்து கொண்டே தான் இருப்பேன்.அதுவும் இது என் வீடு.என் வீட்டை ஒழுங்கா பார்த்து கொள்வது வேண்டியது தானே என் பொறுப்பு,என்று ஸ்ருதி மறுமொழி கூற

என்னது உன் வீடா? ஷெட்டி அதிர்ந்து கேட்க

ஹே,அதான் நான் காணவில்லை என்றதும் ஹெலிகாப்டர் பிடித்து கொண்டு அடிச்சு பிடிச்சு ஓடி வந்தீர்களா?வந்து எந்த உரிமையில் என்னை கட்டி பிடித்தீர்கள்?இங்க இந்த வீட்டில் உனக்கு என்ன உரிமை இருக்கோ,அதே அளவு உன்னில் பாதியான எனக்கும் உரிமை இருக்கு,

ரொம்ப உரிமை எடுத்து பேசற ஸ்ருதி நீ,

அதெல்லாம் நீ என்னை கட்டி பிடிக்கும் முன் யோசித்து இருக்க வேண்டும்.ஸ்ருதி சொல்ல,

ஆங், அதுவந்து நீ தான் முதலில் கட்டி பிடிச்சே,அதனால் தான் நானும் கட்டி பிடிச்சேன்.

யோவ் ஒரு பொண்ணு நானே வெட்கத்தை விட்டு ஒத்துக்கிறேன், உன்னை பார்த்த சந்தோஷத்தில் தான் கட்டி பிடிச்சேன் என்று.இப்ப நீ சொல்லு என்னை எதுக்கு கட்டி பிடிச்சே?

ஷெட்டி கண்களை தாழ்த்தி கீழே குனிந்து கொள்ள

நிமிர்ந்து பார், என்னை கண்ணை பார்த்து சொல்லு என்று ஸ்ருதி அதட்டினாள்.

அது வந்து என்று ஷெட்டி மென்று முழுங்க,அப்பொழுது ஷெட்டி ஃபோன் அழைக்க ,எடுத்து பார்த்தால் அது மது என்று வர உடனே எடுத்தான்.

அப்பா இவகிட்ட இப்போது தப்பிச்சோம்டா சாமி,என்று போனை எடுத்து ,"ஹலோ மது" என்றான்

என்னடா ஆச்சு ,ஸ்ருதி கிடைச்சுட்டாளா?என்று மது கேட்க,

ம்ம் கிடைச்சுட்டா,நல்லா இருக்கா மது,இப்போ வீட்டில் தான் இருக்கா

News சேனல் எல்லாம் பார்த்தேன்.ஒரு நியூஸ் கூட அதை பற்றி வரவில்லை.

இல்ல மது நான் தான் போலீஸ் கிட்ட சொல்லி இருந்தேன்.நியூஸ் சேனல் எதுக்கும் தகவல் போக கூடாது என்று.

சரி,நீ போனை உடனே ஸ்ருதிகிட்ட கொடு மது சொல்ல

ஸ்ருதி மதனை மடியில் இருத்தி கொண்டே " ஹலோ சொல்லு மது"

என்ன ஸ்ருதி ,என்ன ஆச்சு யார் உன்னை கடத்தினார்கள்?.

அது ஒன்னும் இல்ல மது,நான் சென்னையில் வேலை பார்த்த முதலாளிக்கு ஆரம்பத்தில் இருந்தே என் மேல ஒரு கண்.இங்க இருக்கிற ஒரு பொண்ணு கூட சேர்ந்து தான் என்னை கடத்தினாங்க.ஆனா தெய்வம் மாதிரி நஞ்சுண்டா அண்ணா வந்து காப்பாற்றினார்.அப்புறம் இவனும் சரியான நேரத்தில் வரவும் சரியாக இருந்தது.

என்கிட்ட போனில் அவன் ஒரே அழுகை தெரியுமா?இதுவரை அவன் அழுது நான் பார்த்ததே இல்லை என்று மது சொல்ல

என்னது அழுகை வேறயா?ஸ்ருதி கேட்டாள்.

ஆமாடி,அப்படியே பச்சை புள்ள மாதிரி அழுவுறான்.அப்புறம் நான் தான் நாளைக்கு வரேன்,நான் வருவதற்குள் பாரு,ஸ்ருதி உன்கூட இருப்பா பாரு என்று சொன்னதுக்கு பிறகு தான் கொஞ்சம் அமைதியானான்.

சரி மது,நீ இப்போ எங்கே இருக்கே?

நான் ரெடி ஆயிட்டு இருக்கேன் ஸ்ருதி.விடியற்காலை 4 மணிக்கு பிளைட்.காலையில் அங்கே வந்து விடுவேன்.

சரிவா மது,காலையில் நேரில் பேசுவோம் என்று போனை வைத்தாள்.

போனை வைத்தவுடன் ஸ்ருதி அவனை ஏறிட்டு பார்க்க,

ஷெட்டி ஸ்ருதியிடம் "மது என்ன சொன்னா ஸ்ருதி"

அவ காலையில் வருவதாக சொன்னாள்.நீ அழுதியாடா?

சொல்லிட்டாளா,சொல்லிட்டாளா அதுக்குள்ள,ஒரு ரெண்டு பொண்ணுங்க ஒரு நிமிஷம் பேசகூடாதே உடனே எல்லா விசயமும் வெளிவந்து விடுமே!

கேட்டதுக்கு என்னடா பதில்?

ஆமா அழுதேன் இப்போ அதுக்கு என்ன?..

அது தான் என் மேல அன்பு இருக்குல்ல, அப்புறம் ஏண்டா நடிக்கிற?

அதற்குள் போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்து விட இருவர் பேச்சும் நின்றது.

சார் இது மேடமோட பழைய ஃபோன்,அப்புறம் இது நீங்க வாங்கி வர சொன்ன புது ஃபோன் சார்.

இப்ப புது ஃபோன் எதுக்கு?அது display மட்டும் தானே லேசா உடைஞ்சு இருக்கு,அதை மாற்றி விட்டாலே போதுமே,

இப்ப டிஸ்ப்ளே மாற்றுவதற்கு எல்லாம் நேரம் இல்ல ஸ்ருதி,புது போனில் உன் sim card போடு.

இன்ஸ்பெக்டர் மேலும்,"சார் இன்னொரு முக்கியமான விசயம் அந்த பொண்ணு அனுபமாவை பிடிச்சாச்சு,அப்புறம் அவளுக்கு கார் எடுத்து கொடுத்து உதவியது எல்லாம் உங்க வீட்டு வேலைகாரன் தான்.அவனையும் அரெஸ்ட் பண்ணி ஆச்சு.

சரி நீ என்ன பண்ணு,அவங்களை warning பண்ணி விட்டுவிடு.ஷெட்டி சொன்னான்

என்ன சார் இப்படி சொல்றீங்க?இன்ஸ்பெக்டர் திடுக்கிட்டான்.

பின்ன என்னய்யா,அவளை arrest பண்ணினால் என் பொண்டாட்டி என்ன கோர்ட் case எல்லாம் வர முடியுமா?என் மனைவி பேர் controversy ஆவது எனக்கு சுத்தமா பிடிக்கல. நான் சொன்னதை மட்டும் செய் போ.

சரிங்க சார். என்று இன்ஸ்பெக்டர் விலகினார்.

மறுநாள் காலை பொழுது விடிய,

ஸ்ருதி ஷெட்டியிடம் வந்து "இந்தா என் ஜாக்கெட் மற்றும் பாவாடை.முந்தா நாள் இரவு என் ஜாக்கெட்டை அவசர அவசரமா அவிழ்க்கும் போது ஹூக்கை பீச்சி போட்ட இல்ல, நான் குளித்துவிட்டு வருவதற்குள் இதை தைச்சு வை.

ஊசி,நூல் இந்தா

ஏண்டி இதெல்லாம் எனக்கு தைக்க தெரியாதுடி

பழைய ஃபோன் இருக்கறப்ப,புது ஃபோன் என்னை கேட்காம வாங்கின இல்ல,காசோட அருமை பற்றி உனக்கு தெரியல.அதுக்கு தண்டனை இது தான் தைச்சு வை.

ஷெட்டி ஊசியில் நூல் கோர்க்க முடியாமல் திணறுவதை பார்த்து சிரித்த ஸ்ருதி

"ஏண்டா இந்த சின்ன ஊசியில் உன்னால நூல் கோர்க்க முடியல,நீ எப்படிடா என்னோட ஊசியில் பக்குவமா உன் நூலை உள்ளே விடுவ?"ஸ்ருதி கேட்க

அதெல்லாம் ஒழுங்கா உள்ளே விடுவேன் என்று சொல்லி நாக்கை கடித்து கொண்டான்.ஸ்ருதி வரவர உன் வார்த்தை எல்லாம் double meaning ஆயிட்டு வருது.

Double meaning எல்லாம் இல்ல,single meaning தான்.உன்னை எக்காரணம் கொண்டும் யாருக்காகவும் நான் விட்டு கொடுக்க தயாராக இல்லை. ஸ்ருதி ,ஸ்ருதி என்று என்னை நினைத்து கொண்டே உன்னோட தண்டை என்னோட குழியில் உன்னை இறக்க வைக்கிறேன் பார் .இது சவால் என்று சொல்லிவிட்டு ஸ்ருதி குளிக்க சென்றாள்.

ஆமா அந்த ஊசியும் இந்த ஊசியும் ஒண்ணா,அதுவும் அந்த ஊசி அப்படியே காந்தம் மாதிரி நூலை உள்ளே இழுத்து கொள்ளும்.இது அப்படியா?என்று ஷெட்டி முனகி கொண்டே ஒரு வழியாக ஊசியில் நூலை கோர்க்க,

என்ன சார் இப்போ சொன்னீங்க?ஸ்ருதியின் குரல் பின்னாடி இருந்து கேட்டது.

அடிப்பாவி இன்னும் நீ போகலையா?

இப்ப அடுத்து நீங்க என்ன சொல்ல போறீங்க என்று தெரிஞ்சிக்க நின்றேன். தெரிஞ்சாச்சு,இதோ போறேன்.ஸ்ருதி அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

அவள் ஜாக்கெட்டை அவன் தைத்து கொண்டு இருக்கவும்,மது தன் குழந்தைகளோடு உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.அவன் ஜாக்கெட்டை தைத்து கொண்டு இருப்பதை பார்த்து ஒரு நிமிடம் ஆச்சரியம் ஆகி அவள் விழிகள் விரிந்து

டேய் என்னடா பண்ணிட்டு இருக்கே! நீயாடா இது ?என்று மது கேட்க

மது நீயா ? அதுக்குள்ள எப்படி நீ வந்தே?என்று ஷெட்டியும் அதிர்ச்சியாக

நான் வந்தது இருக்கட்டும்.என்னடா இது ஜாக்கெட், பாவாடை எல்லாம் வைச்சு என்ன பண்ணிட்டு இருக்கே?

இதுவா,ஆண்கள் உபயோகப்படுத்தும் லேட்டஸ்ட் வகை லுங்கி மது,நல்லா காற்றோட்டமாக இருக்கும்.வீட்டில் இருக்கும் போது இப்படி கட்டிக்கிலாம்,அப்புறம் வேர்த்துச்சுன்னா இப்படி முட்டிக்கு மேல தூக்கி கட்டிக்கலாம் என்று பாவாடை அணிந்து காண்பித்தான்.

இப்ப நீ இதில் என்ன பண்ணிட்டு இருந்த?

ஜஸ்ட் கோர்த்துக்கிட்டு இருந்தேன் மது.அதுதான் சிவாஜி சார் நடிச்ச கர்ணன் படத்தில் வருமே எடுக்கவா இல்லை கோர்க்கவா என்று?ஷெட்டி சம்பந்தம் இல்லாமல் உளறினான்.

டேய் உண்மைய சொல்லு,மது மீண்டும் கேட்க

இல்லையே அந்த வசனம் கர்ணன் படத்தில் தான் வரும் மது என்று மீண்டும் ஷெட்டி சமாளிக்க,

அப்போ அந்த ஜாக்கெட்?

அது என்னோடது தான் மது ,நான் தான் தைக்க சொன்னேன் என்று ஸ்ருதி தலையை துவட்டி கொண்டே புத்தம் புது மலராய் வெளியே வந்தாள்.​
Next page: Chapter 38
Previous page: Chapter 36