Chapter 23

விவேக்கிடம் பேசி விட்டு, சிறிது நேரம் கழித்து வந்த ஹாசிணி,

ஏங்க, ஹைதராபாத்ல சில மீட்டிங்ஸ் போகனுமாம்! நீங்க போறீங்களா இல்ல நானும், மாமாவும் போயிட்டு வரட்டுமா?

நீயுமா? நீ ஏன் போகனும்?

மாமா மட்டுந்தான் போறதா இருந்தது, ஆனா, இப்ப இருக்குற நிலைல, அவரைத் தனியா அனுப்ப எனக்கு மனசு இல்லை, அதான் நானும் போலாம்னு பாக்குறேன்…

நாங்கப் போனா ரெண்டு பேரா போகனும்! நீங்கன்னா ஒத்தை ஆளு! எப்படியும், இந்த அதிர்ச்சில, நாம வாழ்க்கையை ஆரபிக்க இன்னும் டைம் தேவைப்படும்! பேசாம, நீங்க இந்த மீட்டிங்சையும் சக்சஸ்ஃபுல்லா முடிச்சா, உங்களுக்கும் கத்துகிட்ட மாதிரி இருக்கும், ப்ரூவ் பண்ண மாதிரி இருக்கும்!

தன்னைப் போகச் சொன்ன அதிர்ச்சியில் இருந்தவன், தாங்கள் சேர இன்னும் நாளாகும் என்பதில் இன்னும் கடுப்பானான்!

ஆமா, இன்னும் எத்தனை தடவை உனக்கு ப்ரூவ் பண்ணனுமோ?!

நான் என்ன எனக்காகவா கேக்குறேன்! நமக்காக கேக்குறேன். இப்பிடியே மாச சம்பளத்துக்கு, வாழ்க்கை ஃபுல்லா, மாமாகிட்ட கையேந்திகிட்டு இருக்கப் போறீங்களா? எங்க மாமால்லாம் அவ்ளோ கஷ்டப்பட்டத்துனாலத்தான் இன்னிக்கு இவ்ளோ பெரிய பொசிஷன்ல இருக்காரு!

இன்னமும் அவள் சுந்தரையே புகழுவதில் கடுப்பானவன், சரி, நானே போறேன் என்றான்!

சூப்பர்ங்க! நீங்க ரெடியாகுங்க! நானும் மாமாவும், வெளிய கிளம்புறோம்! டிக்கெட் எடுத்துட்டு, மீட்டிங் டீடெயில்ஸ் எல்லாம் மெயில் அனுப்புறேன். நீங்க பாத்து போயிட்டு வாங்க!

தன்னை வழியனுப்பக் கூட இல்லாமல் அவள் கிளம்புவதில் இன்னும் எரிச்சலானவன்,

சரிதான் போடி, ஏதோ கொஞ்சம் நேர்மையா இருக்கலாம்னு பாத்தா, ஓவராதான் போற! இந்த விவேக் நினைச்சா, எவளை வேணா மடக்குவான்! இந்த ட்ரிப்புலியே ஒருத்தியை மடக்கி போட்டுட்டு வந்து உன்னையும் முடிக்கிறேன் என்று நினைத்தான்.

ஒரு மணி நேரம் கழித்து விவேக்கிற்க்கு ஃபோனில் அழைத்தவள், ரெடியாகிட்டீங்களா? 9.30க்கு ஒரு ஃப்ளைட் இருக்கு. டீடெயில்ஸ் மெயில் பண்ணியிருக்கேன். நம்ம டிரைவரே உங்களை ஏர்போர்ட்ல டிராப் பண்ணிடுவாரு! போயிட்டு, டெய்லி மீட்டிங் எப்டி போச்சுன்னு அப்டேட் பண்ணுங்க!

ம்ம்…

ஆங், அப்புறம்… கப்போர்ட்ல ஒரு ஃபைல் இருக்கும்! அதை ரூம்ல அக்காகிட்ட கொடுத்து, மாமா வந்ததும் கொடுக்கச் சொல்லிடுங்க!

நா… நானா? நான் எப்டி…. என்றூ தடுமாறினான் விவேக்!

நானே கொடுக்கனும்னு நினைச்சேன், மறந்துட்டேன்! ஏன் நீங்கக் கொடுங்களேன்!

இல்லை… இன்னிக்கு இவ்வளவும் நடந்ததுக்கப்புறம்….

நீங்களா தப்பு பண்ணீங்க? இல்லைல்ல? அப்புறம் என்ன தயக்கம்?!

சரி என்று நொந்தவன், அந்த ஃபை எடுத்துக் கொண்டு ஹரிணியின் அறைக்குச் சென்று கதவைத் தட்டினான்.

விவேக் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தன்னையும், தன் நடத்தையையும் மிகக் கேவலமாக பேசிய அதிர்ச்சியில் மனம் நொந்தபடியே, அவள் அறைக்குச் சென்ற ஹரிணி, சுந்தரின் வருகைக்காக மட்டுமே காத்திருந்தாள்! விவேக்கைப் போன்றவனை நம்பியதன் பலன், கட்டிய கணவன் மட்டுமல்ல, சொந்தத் தங்கையுமே நம்பவில்லை என்பது அவளை மிகவும் உலுக்கியிருந்தது! இனி சுந்தரிடம் மன்றாடி மன்னிப்புக் கேட்பது மட்டுமே ஒரே வழி என்று குன்றியிருந்தவள், சுந்தர்தான் கதவைத் தட்டுகிறாரோ என்று நினைத்து கதவைத் திறந்தாள்!

விவேக்கைக் கண்டவள் கோபம், உன்னால்தானே இதெல்லாம் என்ற குற்றம் சாட்டும் தொனி, நீ என்ன பண்ணியிருந்தாலும், உன்னை நம்பி வந்த என்னைச் சொல்லனும் என்று சுய இரக்கம் எல்லாம் கழந்து அவனைப் பார்த்தாள்!

அவள் பார்வையை உணர்ந்தவன்,

இ… இது ஹரிணி உன்கிட்ட கொடுத்து, சு… சுந்தர்கிட்ட கொடுக்கச் சொன்னா!

ஒரு காலத்தின், உன் புருஷனை நமக்கு வேலைக்காரனா வெச்சுக்குவேன் என்று வீரவசனம் பேசியவன், இப்போது உண்மையாலுமே தன் தங்கைக்கும், கணவருக்கும், வேலைக்காரனாக இருப்பதில் ஒரு இகழ்ச்சிதான் வந்தது, ஹரிணிக்கு!

அப்படி என்ன இருந்தது என்று இவனிடம் மயங்கினோம்? ஒரு பிரச்சினையில் கூட நின்று, என்னைக் காப்பாற்ற முடியாத இவனெல்லாம் ஒரு ஆம்பிள்ளை என்று சென்றிருக்கிறோம் என்று தன் மேலேயே எரிச்சல் வந்தது அவளுக்கு!

அவ்ளோதானா என்று கேட்ட ஹரிணியின் குரலில் அவ்வளவு நக்கல்!

அ… அவ்ளோதான்! எ… என்னை ஹைதராபாத் போகச் சொல்லியிருக்காங்க! நா… நான் கிளம்புறேன்!

முழுக்க அவங்க சொல்படி கேக்க ஆரம்பிச்சுட்டீங்க போல? அப்புறம் எதுக்கு அவ்ளோ பில்டப் கொடுத்தீங்க? வெறும் வாய்தானா?

சா.. சாரி ஹரிணி!

நேரத்தைப் பாத்தீங்களா? அடுத்தவன் பொண்டாட்டியை எல்லாம் ஆட்டிவெச்ச நீங்க, கட்டுன பொண்டாட்டியை தாலி கட்டி மூணு மாசமாகியும், ஒரே ரூம்ல இருந்தும், ஒரு மண்ணும் செய்ய முடியலை?

உங்களைச் சொல்லிக் குத்தமில்லை! உங்களுக்காக, என் புருஷனை அசிங்கமா பேசுனேன், கூடப் பொறந்த தங்கச்சின்னு பாக்காம, என் தங்கச்சி வாழ்க்கையவே பணயம் வெச்சேன் பாத்தீங்களா, என்னைச் சொல்லனும்!

சு… சுந்தர் என்னச் சொன்னாரு?

பார்றா, என்னையவே என் புருஷனுக்கு மரியாதை கொடுக்கக் கூடாதுன்னு பேசுன ஆளு, அவரே இவ்ளோ மரியாதை கொடுக்குறாரு!

தான் அவளைக் காப்பாற்றாததில், ஹரிணி கடும்கோபத்தில் இருப்பதை உணர்ந்தவன், இப்போதைக்கு அவளிடம் பேச வேண்டாம் என்று அங்கிருந்து கிளம்பினான்!

அவன் கிளம்பி இரண்டு மணிநேரமாகியும், சுந்தர், ஹாசிணி வரவில்லை! அவ்வளவு பெரிய வீட்டில் யாருமில்லாமல் தனிமையில், இருட்டில் அமர்ந்திருந்தவளுக்கு, கடும் துக்கத்தில், தான் செய்த தவறின் வீரியத்தில் மனதிலும் இருட்டு நிரம்பியிருந்தது!

சிரித்த படியே வந்த ஹாசிணி, சுந்தர், மிகக் கேசுவலாகச் சாப்பிட ஆரம்பித்தவர்கள், அவளைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை! சாப்பிட்ட பின்னும் ஹாலில் அமர்ந்து ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தவர்களைக் கண்டு ஹரிணிக்கே ஆச்சரியம் வந்தது!

விவேக்கை குற்றம் சாட்டிய பின், திரும்ப அதன்பின் சுந்தரிடம் பேசவில்லை என்று உணர்ந்தவள், மெதுவாக அவர்களிடம் வந்தாள்!

உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசனும்!

சொல்லு!

த… தனியா!

மிகப் பெரிய ரகசியமெல்லாம், அம்பலத்துக்கு வந்துடுச்சு! இன்னும் என்ன? நம்ம ஹாசிணிதானே?! சொல்லு!

ஒரு காலத்தில், தங்கச்சியாக இருந்தாலும், எங்க பர்சனல் என்று பேசியவன், இப்போது ஹாசிணி முன்பே அவளை நடத்துவது இன்னும் பீதியைக் கிளப்பியது! மிகவும் நொந்தக் குரலில் சொன்னாள்!

நான் சொன்னதெல்லாம் உண்மை, வி… விவேக்தான் எல்லாத்துக்கும் காரணம், என்னை நம்புங்க ப்ளீஸ்!

நீ சொல்றது உண்மைன்னா, விவேக் ஏன் இல்லைன்னு சொல்லனும்? உன்னையே அசிங்கமாப் பேசனும்?

அவன் பொய் சொல்றான்! ஏமாத்துறான்!

உன் கூட இத்தனை வருஷம் வாழ்ந்து, ஒரு குழந்தையும் பெத்து, நம்ம குடும்பத்துக்காகவே ஓடி ஓடி உழைக்கிற என்னையவே நீ ஏமாத்திட்ட! எத்தனையோ பொய் சொல்லிட்ட! உன்னை விடவா, அவன் மோசமாயிட்டான்?!

சரி, நீ சொல்றது உண்மையாவே வெச்சுக்குவோம்! உன் பேச்சுப்படியே பாத்தாலும், அவன் அப்ரோச் பண்ணப்ப, அவனுக்கு கல்யாணம் ஆகியிருக்கலை! ஆனா உனக்கு ஆகியிருந்ததுல்ல? அவனைப் பாத்த அன்னிக்கே வார்னிங் பண்ணேன்ல? எதையுமே கேக்காம, எல்லாம் பண்ணிட்டு, இப்ப மாட்டுன உடனே, அவனை மாட்டி விடுற! அதான், அவன் எஸ்கேப் ஆக, உன்னை மாட்டி விட்டுட்டான்! இதுல அவன் மட்டும் என்ன மோசம்?

ஒரு வேளை உன் உணர்வுகளை நான் மதிக்கலை, இல்லை உன்னை படுக்கைல திருப்தி படுத்தலன்னு இருந்துச்சுன்னா, என்கிட்ட பேசி, ஏதாவது ட்ரை பண்ணியிருந்திருக்கலாம்! எதுவுமே ஒத்து வரலை, என்னால உனக்குச் சந்தோஷம் இல்லைன்னு தோனுச்சுன்னா, நேரடியா டைவர்ஸ் கேட்டிருக்கலாம்!

எவ்ளோ பெரிய துரோகத்தைப் பண்ணிட்டு, என் கூடவே சிரிச்சு பேசிகிட்டு, என் காசையே எடுத்து, இன்னொருத்தன் கூடச் சேந்து சுத்திட்டு, இப்ப அவன் ஏமாத்துறான்னு சொல்ல உனக்கு கூசலை?!

எ… என்னையை மன்னிச்சிடுங்க!

எல்லா தப்பையும் பண்ணிட்டு, மன்னிச்சிடுன்னு சொன்னா, நான் தியாகி ஆகிடனுமா???

அ… அப்ப என்ன பண்ணப் போறீங்க?

ம்ம்ம்… உனக்கு முழுச் சுதந்திரம் கொடுக்கப் போறேன்!

அ… அப்டீன்னா?

இனி, நீ யார் கூட வேணா போகலாம்! எங்க வேணா போகலாம், என்ன வேணா செய்யலாம்! நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்! அவ்ளோ, இதே விவேக் கூட, இதே வீட்ல கூட நீ ஒண்ணா இருக்கலாம்! உனக்கு எந்த அப்ஜெக்‌ஷன் இல்லையே ஹாசிணி!

விவேக் ஓகே சொன்னா, எனக்கு எந்தப் ப்ராப்ளமும் இல்லை மாமா!

பாரு ஹாசிணி கூட ஓகேன்னு சொல்லிட்டா! விவேக்னு இல்லை, வேற எந்த ஆணோடவும், நீ என்ன வேணா பண்ணிக்கோ! ஆனா…

ஆ… ஆனா?

இனி உனக்காக நான் ஒரு பைசா செலவு செய்ய மாட்டேன்! இந்த வீட்ல இருக்கற ஒவ்வொரு நாளுக்கும் நீ வாடகை தரணும்! அப்படி தர்றதுக்கு உன்கிட்ட காசு இல்லைன்னா, இந்த வீட்டு வேலை எல்லாத்தையும் நீ பாக்கனும்! மத்தபடி உன் வெளிச் செலவுகளுக்கு காசு வேணும்ன்னா, நீ வெளில வேலை தேடிக்கோ! வேணும்ன்னா, சொல்லு, நம்ம கம்பெனிலியே உனக்கு ஒரு வேலை போட்டுத் தர்றேன்! நீ படிச்ச படிப்புக்கு, எக்ஸ்பீரியன்ஸும் இல்லாம, உனக்கு பெரிய வேலை, சம்பளம் கொடுக்க முடியாதுதான்! இருந்தாலும், பரவாயில்லை, முடிஞ்சளவு சம்பளம் போட்டுத் தர்றேன்! ஆனா ஒண்ணு, உன்னால ஏதாச்சும் பிரச்சினை வந்தாலோ, இல்லை நீ பண்ண தபெல்லாம் உன் அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சாலோ, உன்னைக் காப்பாத்த நானோ, ஹாசிணியோ வர மாட்டோம்!

எ… எனக்குப் புரியலை!

புரியலை? உன்னை மனைவியா ட்ரீட் பண்ணேன், எந்தத் தகுதியும் இல்லாட்டியும், மனைவிங்கிற ஒரே காரனத்துக்காக, ராணி மாதிரி பெரிய பதவில என் கம்பெனில உக்கார வெக்க நினைச்சேன்! ஆனா, நீ உனக்கான இடம் எதுன்னு சொல்லிட்ட! உனக்கு எல்லாம் ஈசியா கிடைச்சதுனால, அதோட அருமை புரியலை! அதான், இனி அது கஷ்டப்பட்டாதான் உனக்கு கிடைக்கும்னு மாத்தப் போறேன்!

பணம் வேணுமா, வேலைக்குப் போ! சுகமா பங்களால தூங்கனுமா, அதுக்கான விலையைக் கொடு! ரொம்ப அழகுன்னு நினைச்சுகிட்டீல்ல? அந்த அழகைத் தர்ற மேக்கப், டிரஸ்ஸு எல்லாத்தையும் உழைச்சு வாங்கிக்கோ! உதவிக்கு வான்னு கூப்பிட்டப்ப முடியாதுன்னு சொன்னீல்ல, இப்ப நீ வாழனும்னு வேலைக்குப் போன்னு சொல்றேன்! இதுக்கப்புறமும், உனக்கு இன்னொருத்தன் கூட போறதுக்கு டைம் இருந்தா, போயிட்டு வா, நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்!

உனக்காக பாத்து பாத்து செஞ்சு கொடுத்துட்டிருந்ததுனாலதானே, உனக்கு அதோட அருமை தெரியலை! இனி உனக்கு வேணுங்கிறதை நீ செஞ்சுப் பழகு!

நானா உனக்கு டைவர்ஸும் தர மாட்டேன்! உனக்கு வேணும்ன்னா, நீயே வாங்கிக்க! நானா பாத்து, கொஞ்சம் அமவுண்ட் கூடத் தர்றேன்!

எ… என் பையன்…

அவனைப் பத்தி நீ கவலைப்படாத, ஹாசிணி பாத்துக்குவா!

ஹா… ஹாசிணி எப்டி?

என்னமோ இத்தனை நாளா, நீ பாத்துகிட்ட மாதிரி பேசுற என்று இப்போது கேட்டது ஹாசிணிதான்!

விவேக் உன்கிட்ட ஏதாச்சும் கொடுத்தானா?!

ம்ம்… என்று எடுத்து வந்து தந்தவளைப் பார்த்து சுந்தர் கேட்டான்!

இதுல என்ன இருக்குன்னு பாக்கலியா?

இ… இல்ல!

ஏன்?

இ… இல்ல, இது உங்ககிட்ட கொடுக்கச் சொன்னதா ஹாசிணி சொன்னதா….

பார்றா! என் ஃபைல்ங்கிறதுனால பிரிச்சுப் பாக்கலியா? அவ்ளோ டீசண்ட்டா நீங்க?

நானும் ஹாசிணியும்தான் ஒண்ணா வெளியப் போயிருக்கோம்! ஒண்ணா வரப் போறோம்! அதுக்குள்ள அதை எடுத்து உன்கிட்ட கொடுத்து, நான் வந்தவுடனே வாங்கி என்னத்தை சாதிக்கப் போறோம்?!

விவேக்கும் யோசிக்கலை! நீயும் யோசிக்கலையா?

ஆங்…

ஆக்சுவலா, ஒரு சான்ஸ் கொடுத்தேன்! அதுல எஸ்கேப் ஆகியிருக்கலாம்! ப்ச்… இனி பிரயோஜனமில்லை!

எ… என்ன சான்ஸ்? எ… எதுக்கு? என்று ஃபைலைப் பார்த்த ஹரிணி அதிர்ந்தாள்!

மிகக் குழப்பமான மனநிலையில் விமானத்தில் அமர்ந்த விவேக்கிற்க்கு, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியவில்லை! எப்போதும் மிகக் கவனமாக இருப்போமே, இப்போது என்னாயிற்று என்று யோசித்தான்!

மூன்று மாதமாக தன் கவனம் முழுக்க ஹாசிணியிடம் நல்ல பெயர் வாங்குவது, அதற்காக சுந்தரின் நிறுவனத்தில் கடுமையாக உழைப்பது என்று மட்டுமே வாழ்ந்திருப்பது புரிந்தது! கொஞ்சம், கொஞ்சமாக வந்து வெற்றியைத் தொடும் தருணத்தில், மீண்டும் பழைய இடத்திற்கே சென்ற உணர்வு அவனுக்கு!

ஏதோ தப்பு நடக்கிறது, ஆனால் என்னவென்று தெரியாததொரு உணர்வு!

அவனுக்கு கீதாவிடம் பேச வேண்டும் போலிருந்தது! மூன்று மாதமாக அவளிடமும் அதிகம் பேசவில்லை! ஒரு வாரமாய் அவளுக்கு அழைத்தால், ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்றே பதில் வருகிறது! இந்த ட்ரிப் முடிந்து வந்து, நேரில் சென்று பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்!

ஒரு வாரம் முன்பு

ஒரு நாள் மதியம், அப்பா கூப்பிட்டதற்காக தாய் வீட்டுக்கு வந்த கீதாவிற்கு, ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது! வீட்டில் எல்லாரும் பேருக்கு சிரித்தாற் போலிருந்தது. தன் தாய் வீட்டுக்கு வந்தது மட்டுமல்ல, புனேயில் படித்துக் கொண்டிருக்கும் தன் மகளை, தன் கணவன் அழைத்து வந்திருப்பதால், அவளைப் பார்ப்பதுதான் கீதாவுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி!

பொதுவாக பெண்கள், தந்தையுடன்தான் மிக நெருக்கமாக இருப்பார்கள்! ஆனால், இங்கு நேரெதிர். கீதாவைத்தான், அவள் மகளுக்கு மிகப் பிடிக்கும்! தன் அம்மா, தனக்கு அக்கா போல் இருப்பதில் அவளுக்கு மிகப் பெருமை! கீதாவும், தன் மகளின் மேல் அதீத அன்பு வைத்திருப்பதும், அவள் ஆசைப்பட்டதை எல்லாம் நிறைவேற்ற முனைவதும், அவளுக்கு முழுச் சுதந்திரம் கொடுப்பதும் எல்லாம் சேர்ந்து இருவரையும் மிக நெருக்கமாக்கியிருந்தது.

கீதாவும், விவேக்கிடம் எவ்வளவு சல்லாபித்திருந்தாலும், எல்லாவிதமான காமத்திலும் ஈடுபட்டிருந்தாலும், தன் மகளின் மீதான எந்த ஒரு தவறான பார்வையையோ, கற்பனையில் கூட அவளை இணைப்பது மாதிரியான எண்ணங்களோ இருக்கக் கூடாது என மிக உறுதியாக சொல்லியிருந்தாள்! அந்தளவிற்கு பாசம் அவள் மேல்!

அவளைப் பார்க்கப் போகும் மகிழ்ச்சியில் சற்று புற உலகை மறந்திருந்தவளுக்கு, கொஞ்ச நேரம் கழித்துதான் ஏதோ உறுத்தியது! எல்லோரும் பட்டும் படாமலும் பேசுவது போல் தோன்றுவது பிரம்மையா? தன் மேல் எப்போதும் பாசமாயிருக்கும் அண்ணன் தன்னைக் கண்டு கொள்ளவில்லையோ, அதனாலேயே அண்ணிக்கும் தனக்கும் எப்போதும் ஈகோ பிரச்சினை இருந்தாலும், எப்போதும் பாசத்தோடு இருக்கும் தம்பி மனைவியும் கூட அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லையோ என்று தோன்றியது!

தன் மகளும், கணவரும் கூட தான் வந்து இவ்வளவு நேரமாகியும் தன்னைத் தேடி வராது இருப்பதும், அவர்களைத் தேடிச் சென்றவளுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது!

காரணம், குளிச்சிட்டு வந்துடுறேம்மா என்று விலகிச் சென்ற தன் மகளின் முகத்திலும் புன்னகையே இல்லை என்பதுதான்! அவள் கணவனோ, அவளை எதுவும் கண்டு கொள்ளாமல், ஃபோனில் பேசிக் கொண்டு, லாப்டாப்பில் இருந்தான்!

குளித்து விட்டு வந்த மகளும் வெளியே சென்று விட, கீதாவின் கணவனோ,

உன்கிட்ட கொஞ்சம் பேசனும், இந்த லாப்டாப்ல, இதை எல்லாம் பாத்துட்டு வா, வெயிட் பண்றோம்! என்று சொல்லி விட்டு எழுந்து சென்றான்.

என்னவென்று புரியாமல் லாப்டாப்பை பார்த்தவள், இடிந்து நின்றாள்!

அதில், அவளுக்கும், விவேக்கிற்க்கும் இருந்த கேவலமான உறவை பறைச்சாற்றும் எல்லா ஆதாரங்களும் இருந்தது!

லாப்டாப்புக்கு அருகில் இருந்த காகிதத்தில், ”ஓரளவு டீசண்ட்டான ஆதாரங்களை மட்டும்தான் உன் குடும்பத்திற்கு காட்டியிருக்கிறேன், ஆனால் எல்லா அசிங்ககளுக்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளன” என்றிருந்தது!

திக்பிரம்மை பிடித்து, அடுத்து என்ன என்று அதிர்ச்சியுடன் வெளியே வந்தவளை ஒட்டு மொத்தக் குடும்பமும் பார்த்தது!

தன்னைப் பாசமாகப் பார்க்கும் அண்ணனின் முகத்தில் வெறுப்பு, அன்புடன் பழகும் தம்பி மனைவியின் முகத்தில், உன் கூடவா பழகினேன் என்ற அசூயை, அண்ணியின் முகத்தில், என்கிட்ட எவ்ளோ சீன் போட்டிருப்ப, மாட்டுனியா, சாவுடி என்ற வஞ்சம், தன் முகத்தைப் பார்க்கக் கூட விரும்பாத தம்பியின் முகத்திருப்பல், இப்படி பண்ணிட்டியேடி பாவி என்று கதறும் அம்மாவின் கண்ணீர் முகம் என்று பலது இருந்தாலும், அவளுக்கு மிகவும் திகிலைக் கொடுத்தது,

முழுக்க அவமானத்தை சுமந்து, உன் மேல எவ்ளோ பாசம் வெச்சிருந்தேனே என்று தலை குனிந்து நிற்கும் தன் தந்தையின் முகம்,

எந்தச் சலனமும் அற்ற தன் கணவனின் முகம்,

ஒட்டு மொத்த வெறுப்பு, கோபம், அசிங்கம் என்று எல்லாவற்றையும் முகத்தில் தேக்கி வைத்து, இவளையே பார்க்கும், இவளது மகளின் முகம்!

தன் மகள், தன் தந்தையின் கையைப் பிடித்து, ஒருவொருக்கொருவர் ஆறுதலாய் இருப்பது தெளிவாய் தெரிந்தது இவளுக்கு!

நீண்ட நேரம் நிலவிய மவுனத்தை, உடைத்தது கீதாவின் அம்மாதான்!

எங்களை மன்னிச்சிடுங்க மாப்ளை! நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்குறோம்!

கண்டவங்களுக்காக, நீங்க ஏன் அத்தை தண்டனை அனுபவிக்கனும்? தப்பு செஞ்சவங்கதானே அனுபவிக்கனும் என்றது அவளது அண்ணி!

இப்படி ஒரு கேவலமான பிறப்பை பெத்துட்டேனே? என்ன பண்றது? நாங்கதான் தண்டனை அனுபவிக்கனும்!

உங்க பொண்ணை மட்டுமா பெத்தீங்க? இந்த வீட்டுக்காக ஓடா உழைக்கிற பெரிய மாமா, இன்னமும் நீங்க என்னச் சொன்னாலும் நல்லதுக்குன்னு எடுத்துக்குற எங்க வீட்டுக்காரரையும் கூடத்தான் பெத்துருக்கீங்க! அக்கா சொல்ற மாதிரி, நீங்க இவ்ளோ விசனப்படாதீங்க என்று தம்பி மனைவியும், அண்ணன் மனைவியும் கீதாவின் அன்னையைத் தேற்றிக் கொண்டிருந்தனர்!

ஒரு இக்கட்டான சமயத்தை சேர்ந்து எதிர்கொள்ளும் போதுதான், அந்தக் குடும்ப உறுப்பினர்களிடையே இருக்கும் புரிதலும், அன்பும் அதிகமாகிறது என்ற உண்மை, அங்கே நிரூபணம் ஆகிக் கொண்டிருந்தது!

பெண்ணாகிய தான் செய்த தவறிற்க்கு, தன் வீட்டுப் பெண்கள் மட்டுமே பேசிக் கொண்டிருக்க, ஆண்கள் அனைவரும் தலை குனிந்து நிற்பது, அவளுக்கு இன்னும் அவமானமாய் இருந்தது.

நீண்ட நேரம் கழித்து பேசியது, அவளது பாசமான அண்ணன்தான்! அப்பா, என்ன பண்ணனும்ன்னு சொல்லுங்கப்பா, இவளை அப்படியே வெட்டிக் கொன்னு போட்டுடுறேன்!

அவசரப்படாதீங்கண்ணா! கொஞ்சம் பொறுமையா இருங்க என்றது அவள் தம்பி!

இவ பண்ண காரியத்துக்கு எப்டிடா பொறுமையா இருக்குறது?! முடியலைடா?

நான் அவளுக்காகச் சொல்லலைண்ணா! இவளுக்காக, உங்க வாழ்க்கையை ஏன் வீணடிக்கனும்? அதுக்குச் சொல்றேன்!

எல்லாவற்றையும் கேட்டு அமைதியாய் இருந்தாலும், திடீரென்று உணர்ச்சி வசப்பட்டவராய், எ… எங்களை மன்னிச்சிருங்க மாப்ளை! என்று காலில் விழப் போன என் தந்தையைப் பிடித்தது, என் மகள்தான்!

தாத்தா, ஏன் இப்படி பேசுறீங்க! உங்க மேல என்ன தப்பு இருக்கு? அத்தை சொன்ன மாதிரி தப்பு பண்ணவங்க நிம்மதியா இருக்கிறப்ப, நீங்க ஏன் இப்படி கண்கலங்குறீங்க?!

மனசு தாங்கலடி ராஜாத்தி! இப்படி நம்ம உறவுக்கே இப்படி வேட்டு வெச்சிருக்காளே, இந்த ராட்சசி என்று அந்தப் பெரியவர் கதறினார்!

நீங்க என்ன மாமா இப்படி பேசிகிட்டு இருக்கீங்க? உங்க பொண்ணு மட்டுந்தான் உறவா? பேத்தி இல்லியா? நம்ம எல்லாக் குடும்பத்துக்கும் சேத்து, தங்கமாட்டம் ஒத்தைப் பேத்தியை வெச்சிருக்கீங்க! விட்டுட முடியுமா? நம்ம வீட்டு இளவரசியை, உங்க பொண்ணு பண்ண தப்புக்காக எப்படி விட முடியும்?!

பேத்தியை மட்டுமில்லை, அண்ணனையும் சேத்துதான் சொல்றேன். இத்தனை வருசமா பாக்குறோம், அண்ணன் உங்கப் பொண்ணை எப்படி பாத்துகிட்டாருன்னு தெரியாதா? உங்கப் பொண்ணு பண்ண தப்புக்கு அவரு என்ன பண்ணுவாரு? அவருக்கு, இந்த நிலையில நாமதான் உறுதுணையா இருக்கனும்! நம்மளை உறவா நினைக்கப் போயிதான், அண்ணன், நம்மகிட்ட காதும் காதும் வெச்சா மாதிரி கொண்டு வந்திருக்காரு. அப்படிப்பட்டவரை விட்டுக் கொடுத்துடுறதா? நீ கவலைப்படாதடா தங்கம் என்று மூத்த மருமகள், கீதாவின் மகளை இழுத்து அன்பாய் அரவணைத்துக் கொண்டாள்!

சரியாச் சொன்னீங்க அக்கா, நம்ம ரெண்டு பேருக்குமே ஆம்பிளைப் பசங்கதான்! இனி உனக்கு, ஒண்ணுக்கு, ரெண்டு அம்மா இருக்காங்க தங்கம் என்று, கீதாவின் மகளை வருடிக் கொடுத்து, மூத்த மருமகளிடம் இன்னும் இணக்கமானாள், இரண்டாவது மருமகள்!

அந்த வீட்டின் முழு கண்ட்ரோலும் தன்னிடம்தான் இருக்க வேண்டும் என்று எல்லாப் பெண்களையும் போல் நினைத்த மூத்த மருமகள், இந்தத் தருணத்தில் குடும்பத்தை தூக்கி நிறுத்தினால், மிக இயல்பாக தனக்கு முக்கியத்துவம் வரும் என்று கணக்கிட்டவள், நியாயத்தைப் பேசி, அன்பால் அனைவரையும் தேற்றினாள்! அவள் யாரையும் ஏமாற்றவில்லை! அன்பால் அனைவரையும் வெல்ல நினைத்தாள்! அவளுடைய இத்தனை நாள் பொறுமை அன்று வெல்ல ஆரம்பித்தது! இத்தனை நாள் பொறுமைக்கு கிடைத்த பரிசாக, அவள் மேல் அதீத நம்பிக்கை அனைவருக்கும் பிறந்தது!

என்ன மாப்ளை, எதுவுமே சொல்ல மாட்டேங்குறீங்க? நீங்க என்ன சொன்னாலும் கேக்குறோம்! இவளைக் கொல்லனும்னு நினைச்சாலும் சரி, டைவர்ஸ் பண்ணனும்னு நினைச்சாலும் சரி, என்ன பண்றதுன்னு சொல்லுங்க? நாங்க ஒங்க பக்கம்தான் நிப்போம்!

சில நொடிகள் மவுனமாய் இருந்த கீதாவின் கணவன், பேச ஆரம்பித்த போது, அவன் குரல் கரகரத்து இலேசாய் உடைந்திருந்தது!

இ… இனி என்னால இவளோட வாழ முடியாது மாமா! ஆ… ஆனா, என்னால டைவர்ஸ்லாம் பண்ண முடியாது! நான் மாசா மாசம், கொஞ்சம் பணம் அனுப்பிடுறேன். சென்னைல ஒரு சிங்கிள் பெட்ரூமை எடுத்துக் கொடுக்குறேன். அங்கியோ இல்லை இங்க உங்ககிட்டயோ இருக்கட்டும்! அதுக்கு மட்டும் உதவி பண்ணுங்க!

அதைக் கேட்டு கீதாவின் மகளே அதிர்ந்தாள்!

ஏம்ப்பா… இவங்களுக்கு இன்னும் எதுக்கு செலவு பண்ணுறீங்க? டைவர்ஸ் பண்ணலாம்ல?

கீதாவின் தம்பியும் கூட கேட்டான், ஏன் மாமா டைவர்ஸ் வேணாம்ன்னு சொல்றீங்க?

பொண்ணை பெத்திருக்கேனே மச்சான்?! விஷயம் வெளிய தெரிஞ்சா, உங்களுக்கும்தான் அசிங்கமா இருக்கும்! ஊருக்குள்ள நடமாட முடியாது! எல்லாம் தாண்டி, நாளைக்கு என் பொண்ணுக்கு மாப்ளை பாக்குறப்ப, அவங்கம்மா மாதிரி பொண்ணு இருந்துட்டான்னு யாராவது யோசிச்சா என்னாகுறது? எவ்ளோ நல்லா படிச்சிருந்தாலும், எல்லாரும் ஒரே மாதிரி இருப்பாங்களா என்ன?

அம்மா செத்துட்டான்னு சொன்னா பரிதாபம் இருக்கும்! ஆனா, அம்மாவோட கேரக்டர் சரியில்லைன்னா, படிக்கிற இடத்துல இருந்து கல்யாணம் வரைக்கு ஒவ்வொருத்தனும், ஒவ்வொரு மாதிரி பேசுவாங்க! என் பொண்ணு, அந்த வார்த்தையைக் கேட்டா எவ்ளோ துடிப்பா?? நான் இருக்குறப்ப, அவளை பரிதாபமா பாக்குறதுக்கே விட மாட்டேன்! கேவலமா பாக்க விட்டுடுவேனா? அதான், காதும் காதும் வெச்ச மாதிரியே இருக்கட்டும்! நான் வெளியூர்ல வேலை செய்யுறேன், இனி பெரும்பாலும் வர மாட்டேங்கிற மாதிரியே இருக்கட்டும்! என் பொண்ணை நான் பாத்துக்குவேன்! எனக்காக இந்த உதவியை செஞ்சுத் தர முடியுமா என்ற போது அவன் குரல் தழுதழுக்க ஆரம்பித்திருந்தது!

இந்த நிலையிலும், தங்கள் குடும்பத்திற்காகவும், தங்கள் பேத்திக்காகவும் யோசித்து பேசிய அவனது மாண்பினைக் கண்டு வியந்த அந்தக் குடும்பம், அவனை அப்படியே தாங்கிக் கொண்டது! அவன் துயர் துடைக்க உறுதுணையாய் இருப்பதாய் தீர்மானம் கொண்டது!

ஒட்டு மொத்தமாய், கீதா அங்கு தனித்து விடப்பட்டிருந்தாள்! அவளிடம் யாரும் பேசவில்லை! கீதா, தன் மகளிடம் மட்டுமே பேச விரும்பினாள்!

அவளையும், தன் கணவனையும் பின் தொடர்ந்து அவர்கள் அறைக்குள் நுழைந்தவள்,

நீ… நீயும் என்னை வெ.. வெறுத்துடாதடா என்று மகளிடம் தழுதழுத்தாள்!

அவள் பேசப்பேச, அவர்களை தனிமையில் விட கிளம்பிய கீதாவின் கணவனை தடுத்து நிறுத்திய மகள்,

அம்மா கூட விட்டுட்டு நீங்க மும்பைக்கு வேலைக்கு போனப்ப, உங்க கூடப் பேசனும்னு நினைச்சப்பல்லாம், நீங்க வர முடியாததை நான் தப்பா நினைச்சேம்பா! ஆனா, என் சந்தோஷத்துக்காகவும், நான் சுயமா நிக்கறதுக்காகவும் பாத்து பாத்து எனக்காக செஞ்சீங்கங்கறதை, நான் நினைச்சே பாக்கலை! அப்பேர்பட்ட உங்களுக்கு துரோகம் பண்ணவங்க கூட, என்னைத் தனியா விட்டுட்டு போயிடாதீங்கப்பா, ப்ளீஸ்!

அப்பா சொல்றதைக் கேக்குற? நான் சொல்லுறதைக் கேக்க மாட்டியா என்று அழுத கீதாவை தூக்கி வாரிப் போட வைத்தது, அவளது மகளின் பதில்!

நான் யார் சொன்னதையும் கேக்கலைம்மா! சொல்லப்போனா, அப்பா உன் மேல முழு நம்பிக்கையை வெச்சிருந்தாரு! நீ பண்ண அசிங்கத்தை முதல்ல பாத்ததே நாந்தான்மா! உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க, ஒரு நாள் ஈவ்னிங் முன்னாடியே வீட்டுக்கு வந்தப்ப, நீ எங்கியோ போறியே, ஏதாச்சும் மாலுக்கு போவ, அங்க சர்ப்ரைஸ் கொடுத்தா இன்னும் செமயா இருக்கும்னு உன்னை ஃபாலோ பண்ணா, யாரோ ஒருத்தன் வீட்டுக்கு போற! நீ போட்டிருக்குற டிரஸ்ஸு, வாசல்ல வெச்சு அவன் நடந்துகிட்ட முறையிலியே உன் அசிங்கம் தெரிஞ்சிடுச்சி! அது எல்லாம் அப்பாகிட்ட சொன்னப்பவும், அப்பா நம்பலை!

நாந்தான் அப்பாகிட்ட சொல்லி, ஒரு டிடெக்டிவை வெச்சு முழுக்க ட்ரேஸ் பண்ணேன்! அவன் கூட சேந்து சுத்துனது மட்டுமில்லாம, என்னென்ன அசிங்கமால்லாம் நடந்துருக்கன்னு எல்லாம் எங்களுக்குத் தெரியும்! தாத்தா பாட்டிக்கு தெரிஞ்சதெல்லாம் கூட கொஞ்சம்தான்! ஆனா, எங்களுக்கு முழுசா தெரியும்! அதுனால பொய் சொல்லனும்னு நினைக்காத!

நான் இனி எதையும் மறைக்கவோ, பொய்யோ சொல்ல விரும்பலை! ஆனா, என் பக்க நியாயம், ஏன் இப்படி செஞ்சேன்னு கூட கேக்க மாட்டியா?

தப்பு செய்யுறதுக்கு முன்னாடி என்கிட்டயோ, இல்ல அப்பாகிட்டயோ உன்னோட பிரச்சினையைப் பத்தி பேசனும்ன்னு ட்ரை பண்ணியிருக்கியாம்மா?

எல்லாத் தப்பையும் தெரிஞ்சே பண்ணிட்டு, அப்பாவுக்கு முழுக்க துரோகம் பண்ணிட்டு, இப்ப அதுக்கு காரணம் இருக்குன்னு கூசாம சொல்றப்பதான், உன் மேல இருக்குற கோபம் அதிகமாகுது! உனக்குல்லாம் சமூகத்துல்ல இவரோட மனைவின்னும் பேரு வாங்கனும், உன்னோட அரிப்பையும் நினைச்ச மாதிரி தீத்துக்கனும் இல்ல? அப்டி உனக்கு உடல் தேவை இருந்துச்சுன்னா, அப்பா கூடவே மும்பைக்கு போயிருக்கனும், இல்ல வேற ஒருத்தரு வேணும்ன்னா, நேர்மையா டைவர்ஸ் பண்ணியிருக்கனும். பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு, இப்ப உன் பக்க நியாயமா?

உன்னை நினைச்சாலே அறுவறுப்பா இருக்கு! அந்த ஹரிணியோ யாரோ ஒருத்தி கூடல்லாம் சேந்து சுத்தியிருக்க! உன்னையெல்லாம் எப்படி நம்புறது? நாளைக்கு என்னையே அது மாதிரி எங்கியாவது தள்ள மாட்டன்னு என்ன நிச்சயம்?! ச்சீ… உன்னையெல்லாம் அம்மாவா இல்லை, பொம்பிளையா கூட நினைக்க முடியலை!

என்ன இருந்தாலும், என் பொண்ணைப் பத்தி மட்டும் நினைக்காத என்று திட்டவட்டமாகக் கூறிய கீதாவிற்கு, கடைசியில் தன் செயல்கள், தன் பெண்ணிடமே ஒட்டு மொத்த நம்பிக்கையையும் அழித்து விட்டதை எண்ணி மனம் உடைந்தவள் விலகிச் சென்ற போது, அவளை ஆறுதல்படுத்த யாருமே முனையவில்லை!

அவளைச் சொந்த ஊரிலேயே விட்டு விட்டு, கொஞ்சம் பணம் மட்டும் கொடுத்து விட்டு, அவர்கள் கிளம்பும்போது, இனி, என் வாழ்க்கைக்கோ, அப்பா வாழ்க்கைக்கோ இன்னும் அசிங்கத்தை ஏற்படுத்துற எந்தச் செயலையும் செய்யாம இருந்தாலே எங்களுக்கு உதவியா இருக்கும் என்று வெறுப்பாய் சொல்லி விட்டுச் சென்ற மகளோ, அவளை முகம் கொடுத்தும் பார்க்காத கணவனோ, அவளது குடும்பமோ, அவள் மேல் எந்த விதக் கருணையும் காட்டவில்லை!

தனிமையின் காரணமாக, தான் விரும்பிய காமங்களை எல்லாம் அரங்கேற்றியவள், இன்று முழுக்க தனிமைப்பட்டுக் கிடந்த போது, முழுக்க உடைந்து, எந்த வித உணர்வும் இன்றி, ஏறக்குறைய நடைபிணமாய் மாறியிருந்தாள்!​
Next page: Chapter 24
Previous page: Chapter 22