Chapter 05

நல்ல வேலையாக எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டினாள், பதினைந்து நிமிடத்தில் போட்டி நடக்கும் கிளப்பை அடைந்தோம், வண்டி நின்ற அடுத்த நொடி காரை விட்டு இறங்கினேன். பின்னால் இருந்த கிட் பேக்கை எடுத்து தோளில் மாட்டிய பின்தான் நார்மலாக சுவாசமே வந்தது, அவளை சட்டை செய்யாமல் நான் கிளப் ஆபீஸ் நோக்கி நடந்தேன், எனக்கான போட்டியின் கோர்ட் நம்பர் கேட்டுக் கொண்டு திரும்ப, இடுப்பில் கைவைத்து முறைத்துக் கொண்டிருந்தாள் சுமா,

"கொஞ்ச நேரம் பொறுக்க மாட்டியா?,,, சொல்லாம கொல்லாம இப்படி வந்த என்ன அர்த்தம்?,,, ம்?" அவள் பொறிந்தது தள்ள,

"மேட்ச் கோர்ட் நம்பர் செக் பண்ண வந்தேன்!"னு

தலை குனித்தவாரே சொன்னேன், அப்போது யாரோ "ஹாய் சுமா" என்று அழைக்க, இவளும் "ஓ ஹாய், நிரோ"னு பதில் கொடுக்க, நான் நிமிர்ந்தது அவர்களைப் பார்த்தேன், அங்கே "நிரோ" என்று இவள் அழைத்த பெண்ணும், பக்கத்தில் ஒரு பதினாறு, பதினேழு வயது மதிக்க தக்க பையனும் இவளை நோக்கி வந்தார்கள். அந்த பெண்மணியின் உடன் வந்த பையன்

"ஹாய் ஆண்ட்டி"னு கை அசைக்க, இவளும் அவன் தலைமுடி கலைத்து

"என்னடா நாளுக்கு நாள் அழகாகிக் கிட்டே போற?"னு கொஞ்ச, அவன்

"போங்க ஆண்ட்டி, எப்போப் பாத்தாலும் என்னை ஓட்டுரதிலேயே இருங்க"னு குழைய,

இதை சகிக்க முடியாத நான், இவள் மறுபடியும் திட்டினாலும் பரவா இல்ல என்று நினைத்துக் கொண்டு என் மேட்ச் கோர்ட்டை நோக்கி நடந்தேன். கோர்ட்டை அடைந்த நான் கிட் பேக்கை திறந்து ரெடியாக,,,,, "ஹாய்" என்று ஒரு குரல், தேன்குரல், நான் நிமிர்ந்து பாக்க, கேலரியில் ஒரு ஆறேழு வரிசைக்கு மேல், அழகே உருவமாக ஒரு பெண், என்னைப் பார்த்து கை அசைத்தால், பக்கத்தில் நான்கு பெண்கள் இரு பையன்கள், நான் திரும்ப கை அசைக்க, என்னை நோக்கி இறங்கி வந்தாள். என்னைவிட மூன்று அல்லது நான்கு வயது அதிகம் இருக்கலாம், ஒயிட் ப்லோரல் லாங் ஸ்கர்ட், மேரூன் கலர் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் அணிந்திருந்தாள், அருகில் வந்தவள்

"ஆர் யு தே ஒன் கோயிங் டு கம்பிட் வித் தருண்?"னு கேக்க, நான் பதில் கூறாமல் அவளைப் பார்த்து மலங்க மலங்க முழிக்க, என தொளைப் பற்றி அசைத்தாள், சுயநினைவு வந்தவனாக

"சாரி, என்ன கேட்டீங்க?"னு கேக்க

"நீ தான் தருண் கூட மோதப் போறியா?"னு கேக்க, நான் தெரியவில்லை என்று உதடு பிதுக்க

"உன் பேரு மணிகண்டன்னா? உன் மேட்ச் கோர்ட் இதுவா?"னு அவள் கேக்க, என் பேரு எப்படி இவளுக்குத் தெரியும் என்று யோசித்தவரு, அவளின் கேள்விக்கு

"எஸ், நான் தான் மணிகண்டன், ஐ ஹாவ் எ மேட்ச் இன் திஸ் கோர்ட் அட் எய்ட், வொய்?"னு சொல்ல,

"சொ ஸ்வீட்,,, பேட் லக் தம்பி,,,,, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்"னு சொல்லி என் முன்னந்தலை முடி கலைத்து விட்டு, திரும்பி சென்று தன் கூட்டத்துடன் அமர்ந்து கொண்டாள், இவள் சென்று அமர்ந்ததும் "கொள்" என்று ஒரு சிரிப்பு அக்கூட்டத்தில், கடுப்பில் கோர்ட்டை விட்டு வெளியே வந்தேன், அவள் என்னை தம்பி என்று சொன்னதை விட, என்னை ஒரு சிறுவனைப் போல் பார்த்ததுதான்(?),,, என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

உள்ளே செல்ல மானமில்லாம் அங்கேயே உலத்திக் கொண்டிருந்தேன், கையில் இருந்த ராக்கெட்டை சூழற்றிக் கொண்டே, சிறிது நேரத்தில் என் பெயர் சொல்லி அழைப்பு வர, உள்ளே சென்றேன். அங்கே நின்றிருந்த என் போட்டியாளன் வேறு யாருமமில்லை,,, சுமா கொஞ்சி அந்த பையன்,,,,தருண். நான் கோர்ட்டை சுற்றி ஒரு பார்வை பார்க்க, கேலரியில் முதல் வரிசையில், அந்த "நிரோஷா"க்கு (பின்னால் தெரிந்து கொண்டேன் "நிரோஷா" தான் "நிரோ" என்று) பக்கத்தில் அமர்ந்து கொண்டு,,, என்னை முறைத்தவாறு இருந்தாள் சுமா.

எப்போது உண்டான ஃபார்மாலிட்டீஸ் முடிந்து, டாஸ் போட அவன் பக்கம் விழுந்தது, பரஸ்பர கைக்குழுக்களுக்கு பின், நான் என் பக்கம் போக " கமான் தருண், கமான்" யென்று ஒரு சத்தம், எனக்கு நன்றாக தெரியும் அது அந்த ஒயிட் ஸ்கர்ட் தேவதையின் சத்தம் என்று. அவளப் பார்க்க விரும்பவில்லை, ஆனால் தருணின் மீது கொலை வெறியில் இருந்தேன், இருக்காதா பின்னே?,,, என்னை பாசமாக ஒரு பார்வை கூட பக்காத என் அம்மா இவனை கொஞ்சுகிறாள்!,,,, இந்த ஒயிட் ஸ்கர்ட் தேவதை,, இவனை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறாள்!, நிமிர்ந்தது தருணைப் பார்த்தேன், சர்வீஸ் போட ரெடியாக இருந்தான், ரேபிரீ அவனிடம் ரெடி?னு கேக்க அவன் "எஸ்!” என்றான், என்னிட திரும்பிய ரேபிரீ ரெடி?னு கேக்க, ராக்கெட்டால் ஷூவை தட்டிவிட்டு "எஸ்!" என்றேன்

நான் ராக்கெட்டால் ஷூவை தட்டியதில் இருந்து இருபது நிமிடம் கழித்து!

நான் வாயெல்லாம் பல்லாக, ஒயிட் ஸ்கர்ட்டைப் பார்த்து சிரித்தபடி,,, தருணின் கையை குழுக்கிக் கொண்டிருந்தேன், அழகாக வாயை குனட்டியவள்,,, வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள், முறுபடியும் பரஸ்பர கைக்குழுக்களுக்கு பின், நான் என் கிட் பேக்கில் என்னுடைய உடைமைகளை வைத்துக் கொண்டிருக்க

"வெல் பிளேய்டு எங் மேன்" சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க, அங்கே நேற்று இதே வார்த்தைகளை கூறியவருடன் இன்னொருவர் நின்றிருந்தார். நான் எழுந்து நிக்க, கை குடுத்தார்கள், நான் நன்றி சொல்லி விட்டு, சுமாவை தேட, அவள் என்னிடம் தோற்ற தருணுக்கு ஆறுதல் சொல்லும் கூட்டத்தில் இருந்தாள், எனக்கு சிரிப்பு வந்தது

"உன் ரிஜிஸ்டிரேசன் ஃபார்ம்ல பாத்தேன், உனக்கு 13 வயசுதானே?"னு புதிதாக வந்தவர் கேட்க்க, ஆமா என்று தலையசைத்தேன்

"எதுக்கு உன் கேட்டகிரில ஆடாம, அன்டர்-16ல கம்பிட் பண்ணின?"னு அவர் கேக்க

"என் கோச்-தான், முடிவு பண்ணினார்"னு நான் சொல்ல

"உன் கோச் எங்க"னு திரும்ப அவர் கேக்க, நான் நடந்ததைச் சொல்ல, அவர்

"இஸ் தேர் சம்படி வித் யு"னு கேக்க நான் தயங்கி நின்றேன், அவர் மறுபடியும்

"உன் கூட யாராவது வந்துருக்காங்களா"னு கேட்டார், நான் இல்லை என்று தலையசைக்க, என் தோள்களில் ஒரு கை விழுந்தது,

"எஸ், ஐ ஆம் ஹிஸ் மாம்! ஏதாவது ப்ராப்ளம்மா?"னு பின்னால் இருந்து ஒரு சத்தம், சுமாவினுடையது

"நோ ப்ராப்ளம் சுமா மேடம்!, தம்பீ, உங்க பையனு தெரியாது மேடம், கவுதம் தான் நேத்து சொன்னார், ஒரு சின்ன பையன் அன்டர்-16ல கம்பிட் பண்றான், நல்ல பொடன்ஷியல் இருக்குனு, இன்னைக்கு இவன் விளையாடுரத பாத்தோம், ஹி ரியல்லி காட்ட பொடன்ஷியல் டூ மேக் இட் பிக்"னு சொல்ல, சுமா அவர்களிடம் நன்றி சொன்னாள்.

புதிதாக வந்தவர் பெயர் சுந்தர்னும், அவர் இந்த கிளப் டென்னிஸ் அக்கடமி டைரக்டர்னும், சுமா இந்த கிளப்பில் (அது ஒரு ரேகிரியேஷன் கிளப், டென்னிஸ் அக்கடமி அதில் ஒரு பகுதி) மேம்பர்னும் பின்னாடி தெருஞ்சிக்கிட்டேன். இருவரும் சுமாவிடம் என் திறமையை புகழ்ந்ததார்கள், சரியா தயார் பண்ணினால் நான் தொழில்முறை டென்னிஸ் ஆட பிரகசமான வாய்ப்பு இருப்பதாக கூறினார்கள். தங்கள் அக்கடமியில் சேர்க்கும் படி கேட்டுக் கொண்டார்கள்.

சுமாவும் நான் கொடைக்கானலில் படிப்பதை சொல்லி கஷ்டம் என்றும், தான் யோசித்து விட்டு சொல்வதாக சொன்னாள். சிறிது நேரத்தில் தருணும், அவன் அம்மாவும் வந்து நான் சுமாவின் மகன் என்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்தார்கள். ஒரு அரைமணி நேரம் ஏதேதோ பேசினார்கள், தருணும் அவன் பங்குக்கு எண்ணப் பாராட்டினான். சுமா ஏதோ என் திறமைக்கு மொத்தமும் அவள் தான் காரணம் என்பதைப் போல அவர்களிடம் கர்வமாக,, பெருமைப் பீத்திக கொண்டாள், நான் அந்த ஒயிட் ஸ்கர்ட் தேவதை வரமாட்டாளா என்ற எதிர்பார்ப்பில், சுமாவின் பீத்தலை அவர்களுடன் வேண்டா வெறுப்பாக கேட்டுக் கொண்டிருந்தேன்.

டோர்னமெண்ட் நிர்வாகி ஒருவர் வந்து என்னை அழைத்து, மெயின் டோர்னமெண்ட்க்கு நான் தேர்வானதாகவும், அதற்கான பதிவை இன்றே செய்தது கொள்ளலாம் என்று சொல்லிச் சென்றார். மறுபடியும் தருணும், அவன் அம்மாவும் எனக்கும், சுமாவுக்கும்(?) வாழ்த்து சொல்லி விட்டு கிளம்பினார்கள். நாங்களும் மெயின் டோர்னமெண்ட்க்கு பதிவு செய்து விட்டு, அதற்கான பதிவு தொகை ஐம்பதாயிரம் யென்று சொல்ல, சுமா அதிர்ச்சியுடன்

"இவ்வளவு எதிர்ப் பாக்கல, இது என்ன மாதிரியான டோர்னமெண்ட்?"னு கேக்க

"மேடம் இது தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷனோடா டோர்னமெண்ட், ஸ்டேட் லெவல் ராங்கிங்க் இருக்கு, உங்க பையன் அக்கடமி ரிஜிஸ்டர்ட் மெம்பர் இல்லன்றாலதான், இவ்வளவு கட்டுரிங்க, மெம்பர்-ஆ இருந்தா முப்பது பர்சண்ட் கம்மீ"னு சொல்லுச்சு கவுண்டர்ல இருந்த பொண்ணு

"ஓகே"என்ற சுமா தன் பையை நோண்டினாள்

"பேமண்ட் பண்ண பத்து நாள் டைம் இருக்கு மேடம், பையனோட ரிஜிஸ்டர் நம்பர் வச்சு பத்து நாளுக்குள்ள வந்து பே பன்னிக்கலாம்"னு

"நோ, நோ, இப்பவே கட்டிரலாம், ஜஸ்ட் இவ்வளவு அமெளண்ட் நான் எதிர்ப் பார்க்கலை"னு சொல்லி காரட் கொடுத்தாள். எல்லாம் முடிந்து ஐந்து நிமிடம் கழித்து காரில் சென்று கொண்டிருக்கையில்,,,, வழியில் இருந்த ஐஸ்கிரீம் கடையை நான் பார்க்க அதை சுமா கவனித்து

"ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?"னு கேக்க,

நான் என்ன சொல்வதென்று தெரியாமல்,, சரி என்று தலையாட்டிட்டேன். காரை யு-டர்ன் போட்டு, ஐஸ்கிரீம் கடை முன்பு நிறுத்தினாள், உள்ள சென்று எனக்கு பிடித்த ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன். சுமா என்னையே பார்ப்பது போல் இருந்தது, நிமிர்ந்து பார்க்க தூண்டிய எண்ணத்தை அடக்கி கொண்டு ஐஸ்கிரீம்மை காலி செய்துக் கொண்டிருந்தேன்.

"எதுக்கு அப்படி சொன்ன?" சுமாவின் திடீர் கேள்வியால், நிமிர்ந்து "எதை பற்றி கேக்ககிறாள்?" என்ற குழப்பத்துடன் அவளைப் பார்க்க, என் குழப்பத்தை அறிந்தது கொண்டவள்

"அதான், யாராவது உன் கூட வந்து இருக்கங்களானு?, மேட்ச் முடிஞ்சதும் கேட்டங்கல்லா, நீ எதுக்கு இல்லனு தலையாட்டுன?,,,ம்ம்?"னு அவள் கேக்க,

"பின்ன என்ன சொல்ல சொல்லுற என்ன?, அம்மா வந்துருக்காங்க, இவங்க தான் என் அம்மானு சொல்லணும் எதிர்ப் பாத்தியா? அப்படி நான் சொல்லணும்னா அம்மான்ற முறைல நீ ஏதாவது செஞ்சிருக்கணும்ல எனக்கு, இது வரைக்கும் என்ன செஞ்சிருக்க? என்ன பெத்தத தவிர்த்து? ஒரு மயிரும் செய்யல? இதுல கேள்வி மாயிறு வேற?"னு கோபத்துல கத்தனும் போல இருந்தது எனக்கு. கோபத்தை கட்டு படுத்த கண்களில் கண்ணீர் தோன்றியது, இதைப் பார்த்த சுமா

"ஓகே.., சும்மா சின்ன புள்ள மாதிரி அழாதே, நான் எதுவும் கேட்கல!".
----------------------------

அந்த ஐஸ்கிரீம் பார்லர் நிகழ்வுக்கு இரண்டு மாதம் கழித்து,

பரஸ்பர கைக்குழுக்களுக்கு பின், நான் என் கிட் பேக்கை எடுத்துக் கொண்டு கோர்ட்டை விட்டு வெளியேறினேன். மெயின் டோர்னமெண்ட், லீக் சுற்றின் முதல் போட்டியில், மறுபடியும் நேர் செட்களில் வென்றிருந்தேன். இந்த முறை என்னுடன் யாரும் இல்லை, கோச் காலிறுதிப் போட்டிக்கு முன் வந்து விடுவதாக உறுதி அளித்திருந்தார், தாத்தாக்கு பிசினஸ் மீட் இருந்ததால், அவரும் இரண்டு நாளில் வருவதாக உறுதி அளித்திருந்தார்.

சுமாவை என்னுடன் தினமும் போட்டிகளுக்கு வருவாள் என்று தாத்தா சொல்ல, நான் முடியவே முடியாதென்று மறுத்துவிட்டேன், அவர் எவ்வளவோ சொல்லியும் நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன். இறுதியாக, அப்பா வீட்டில் தாங்கிக் கொண்டு தினமும் போட்டியில் கலந்து கொள்வதாக முடிவயிற்று, போட்டிகளில் உதவ கவுத்தம் சார் சம்மதம் சொல்லி இருந்தார், அவருக்கு என்னை எப்படியாவது தங்களது அக்கடமியில் சேர்த்துக்கொள்ள விருப்பம். அவர் போட்டி முடிந்ததும் என்னை ரிலக்ஸ் பண்ண சொல்லிவிட்டு, ஒரு மணிக்கு அவருடைய அறைக்கு வர சொல்லிவிட்டு சென்றார், எனக்கான அடுத்த ஆட்டம் இரண்டு மணிக்கு. அப்படியே ஒவ்வொரு கோர்ட்டையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

சரி கொஞ்ச நேரம் காரில் சென்று தூங்கலாம் என்று ஒரு கேலரியில் இருந்து செல்ல எத்தனிக்கையில், கோர்டில் டென்னிஸ் விளையாடும் ஒரு டீ-ஷர்ட், ஸ்கர்ட்டுடன் வந்தாள் அந்த ஒயிட் ஸ்கர்ட் தேவதை. அப்படியே இருக்கையில் அமர்ந்தேன், போட்டியாளர் பெயர் அறிவிப்பின் பொது அவள் பெயர் பானுமதி என்றறிந்தேன், சும்மா சொல்லக்கூடாது நன்றாகவே விளையாடினாள், வெற்றியும் பெற்றாள். அவள் கிட் பேக் செய்யும்வரை காத்திருந்து, அவள் பையை தோள்களில் போட்டுக் கொண்டு திரும்ப, முன்னால் சென்று

"வெல் பிளேய்டு, congratulations" சொல்லி கை நீட்டினேன், சிரித்தவள்

"தாங்க்ஸ்" என்றாள், நான் கையை விடாமல்

"நீங்க டென்னிஸ் ஆடுவீங்கன்னு சொல்லவே இல்ல"னு சொல்ல,,,, தன் கைகள் உருவிக்கொண்டவாள், என் தலைகளில் கொட்டி

"நீ கேக்கவே இல்லையே"னு சொல்லி,,,, என் தலை முடிகளை கோதி விட்டு சென்றாள்.

நான் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். இப்பொழுதும் இவள் என்னை ஒரு சிறுவனைப்(?) நடத்தியது எனக்குப் பிடிக்கவில்லை!(?). அன்று மதியமும் என் போட்டி முடிந்தவுடன் நேராக ஷெட்யூல் சார்ட்டில் பேர் வைத்து அவள் ஆடும் கோர்ட், நேரம் அறிந்து கொண்டு அந்த கோர்ட் கேலரியில் மேல் வரிசையில் அமர்ந்து கொண்டேன். இந்த முறை அவள் ஜெய்த்த பின்பு வாழ்த்த செல்லவில்லை, அவள் வெளியே கிளம்பும் வரை இருந்து விட்டு, நானும் கிளம்பி காரை வந்தடைந்தேன்.

என் கேட்டகரியில் மொத்தம் நாலு குரூப், ஒவ்வொரு குரூப்பிலும் ஆறு பிளேயர்ஸ், ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு பெயர்கள் கால் இறுதிக்கு தகுதி பெருமாறு போட்டியின் அமைப்பு இருந்தது. அன்று லீக் போட்டிகளின் கடைசி போட்டி, எப்பொழுதும் போல் நேர் செட்களில் வென்றேன், பலத்த கர ஒலி, அன்று அரங்கம் நிறைந்து வழிந்தது, லீக் போட்டிகளின் ஊடே கொஞ்சம் பிரபலம் அடைந்திருந்தேன், அதுதான் காரணம். பரஸ்பர கைக்குழுக்களுக்கு பின், நான் என் கிட் பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்ப நிறைய பேர் கை கொடுத்து வாழ்த்தினார்கள்.

எல்லாம் முடிந்தபின் வெளியே வந்து தாத்தாவிடமும், கோச்-சிடமும் ஃபோன் செய்து சொல்ல இருவரும் மகிழ்ந்தார்கள், நான் தனியாக இருப்பதைப் போல் தோன்றுவதாக தாத்தாவிடம் சொல்ல, மறுநாள் காலையில் நான் கண்விழிக்கும் பொது என் ரூமில் இருப்பதாக சத்தியம் செய்தார். எனக்கு பிடித்தவர்கள் யாரும் இல்லை என் வெற்றியை பகிர்ந்து கொள்ள என்று நினைக்கையில் கண்கள் காலங்கியது. அப்படியே வெளியே சென்று ஒரு மரத்தின் நிழலில் இருந்த பெஞ்சில் அமர்ந்தேன்.

"வெல் பிளேய்டு,,,,congratulations,,,,, ஸ்ட்ரைட் செட்,,,,ஓண்டர் பாய்"னு சத்தம் கேக்க, கண்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பாக்க, அங்கே பானுமதியும், கூட இரண்டு பெண்களும் நின்றிருந்தார்காள். நான் அழுக்கிறேன் என்று அறிந்தவள் சற்று பதறி, அருகில் அமர்ந்தது, என் முதுகில் கைவைத்தவள்

"என்னடா ஆச்சு?" யென்று ஏதோ ரெம்ப நாள் பழக்கியவள் போல் கேக்க, நான் பதி சொல்லாமல் அமைதியாக இருக்க, தன்னுடன் வந்தவர்களை போகுமாறு செய்கை செய்தவள், என் தோள்பற்றி அசைத்தவள், மறுபடியும்

"என்னடா ஆச்சு, எதுக்கு அழுறே"னு கேக்க, நான் என் உள்ளத்தில் இருந்ததை அவளிடம் கொட்டிவிட்டு,, மறுபடியும் கைகளுக்குள் முகம் புதைத்து அழுதேன்,,, சிறது நேரம் என் முதுகில் தட்டிக் கொடுத்தவாள்

"இட்ஸ் ஓகே, அதான் உன் தாத்தா நாளைக்கு வந்துருவேணு சொல்லிருக்காருல, வந்துருவாரு, ஸ்ட்ரைட் செட்..மனி!. இதுக்கெல்லாம் வொர்ரி பண்ணலாமா?"னு என்னை தேற்றினாள், நான் கண்களை துடைத்துக் கொண்டு,

"அது என்ன ஸ்ட்ரைட் செட்.மணி?"னு கேக்க

"நீ தான் எல்லா மேட்ச்சும் ஸ்ட்ரைட் செட்ல ஜெய்கக்குற! அதனால ஸ்ட்ரைட் செட்.உன் பேரு மணிகண்டம்..அதனால ஸ்ட்ரைட் செட்.மணி"என்றாள்

"என் பேரு மணிகண்டன், நாட் கண்டம்"னு கோவமாக சொல்ல, என் இரு கன்னங்ககளையும் பிடித்து கிள்ளி, தன் நாக்கை கடித்து தலையாட்டி

"ஓகே மிஸ்டர் மணிகண்டன்"னு சொல்ல,

இந்தமுறை அவள் எனக்கு உண்மையிலேயே பெரிய பெண்ணாக தெரிந்தாள், நான் அவள் முன் சிறியவனாக உணர்ந்தேன். ஒரு அழகான பெண் மீது உண்டான சராசரி சிறுவனின் ஈர்ப்பு, சினேக உணர்வாக மாறிப்போன தருணம் அது. அவளைப் பார்த்து சிரித்தேன்.

"ஓகே, நான் கிளம்புறேன் எனக்கு ஹாஃப் ஹவர்ல மேட்ச் இருக்கு"னு சொல்லி என் தலை முடிகளை கலைத்துவிட்டு கிளம்பினாள்.

அவள் சென்ற சிறிது நேரத்தில் நானும் அவள் மேட்ச் நடக்கும் கோர்ட் கேலரியில் சென்ற அமர்ந்தேன், இந்த முறை இரண்டாவது வரிசையில். வந்த சிறிது நேரத்திலேயே என்னை கவனித்து விட்டு கை அசைத்தாள், நானும் பதிலுக்கு கை அசைத்தேன். நன்றாக விளையாடினாள், வெற்றியும் பெற்றாள். பரஸ்பர கைக்குழுக்களுக்கு பின், அவள் கிட் பேக் செய்து பையை தோள்களில் போட்டுக் கொண்டு என்னை அழைத்தாள், நான் சென்று

"வெல் பிளேய்டு, குட் கேம்"னு சொல்லி கை நீட்ட

"கூப்டா தான் விஷ் பண்ணுவியே?"னு சொல்லி கை குடுத்தாள், நான் சிரித்துக் கொண்டே அவள் கையை குலுக்க

"ஃபீலிங்க் குட்?"னு கேக்க, நான் தலையசைத்து சிரித்தேன், என் முதுகில் தட்டிக் கொடுத்தவள்

"இப்படித்தான் இருக்கனும், சின்ன பையனா இருந்துக்கிட்டு அழுதா எனக்கு பிடிக்காது" என்று சொன்னவள் "ஓகே பாய்" என்று சொல்லி அவள் நண்பர்கள் கூட்டத்துடன் சென்றாள்.

இரண்டு நாள் கழித்து, கால் இறுதி ஆட்டத்திற்க்கு தயாராகிக் கொண்டிருந்தேன், தாத்தாவும் கோச்-சும் ஏமாற்றி இருந்தார்கள், தாத்தா சுமாவை துணைக்கு அழைத்துச் செல்லுமாறு எவ்வளாவோ சொல்லிப் பார்த்தார், நான் பிடிவாதமாக மறுத்து விட்டேன், என் வெற்றியில் அவள் கர்வமும் பெருமையும் கொள்வதில் எனக்கு துளியும் விருப்பமில்லை.

"ஹாய் டா"னு சத்தம் வர, நான் சிரித்துக்கொண்டே திரும்பி பார்த்தேன், அங்கே பானுமதி, அவள் நேற்றே கால் இறுதி போட்டியில் வென்றிருந்தாள்.

"எங்க உன் தாத்தா?"என்று அவள் கேக்க, என் முகம் சுருங்கியது, புரிந்து கொண்டவள், என்னை நெருங்கி என் முதுகை தடவியவள்

"ஓகே, என்ன உன் சிஸ்டர்-ஆ நினச்சுக்கோ, ஐ ஆம் ஹியர் ஃபார் யு!"னு அவள் சொல்ல நான் அவள் கண்களை பார்த்தேன், என்னை விட்டு சற்று விலகியவள், இரு கைகளை விரித்து

"ஹக்"என்றால், நான் சோகமாக பார்த்துக் கொண்டே இருக்க, "கமான்" என்றவள் அவளாகவே என்னை லேசாக கட்டிப் பிடித்தால். நான் அவளது தோள்கள் உயரம் கூட இல்லை. பின் என் தோள்களை பற்றி விலக்கியவள்

"டு யு பீல் பெட்டர்?"கேட்டவள், நான் கண்களில் கண்ணீர் மல்க சிரித்தவாரே தலையசைக்க, என் கண்ணீரை கைகளால் துடைத்தவள்

"குட்,,,, நவ் கோ அண் கெட் திஸ் கேம்"னு சொல்லி என் தலை கலைத்து, கேலரியில் சென்று அமர்ந்தது கொண்டாள்.

அந்த ஆட்டம் கொஞ்சம் நேரம் பிடித்தது, நாப்பது நிமிடங்கள் கழித்துதான் வெற்றி பெற்றேன், இதுவும் நேர் செட்களில் தான், என்ன என்னை எதிர்த்து சில பாயிண்ட்ஸ் முதல் முறையாக எடுத்திருந்தான், எதிர்த்து விளையாடியது ஸ்டேட் பிளேயர்-ஆம் பின்னால் பானுக்கா(ஆம், இனிமேல், அவள் பானு அக்கா) சொல்ல தெரிந்து கொண்டேன். எல்லாம் முடிந்தபின், கிட் பேக்கை தோள்களில் போட்டுக் கொண்டு அவளைப் பார்த்தேன், அவள் நண்பர்கள் கூட்டத்துடன் எழுந்து வந்து கைகொடுத்தாள், கையை விடுவித்தவள், தன் கைகளில் உள்ள என் வியர்வையை பார்த்தாள், சிரித்தாள்

"ஃபைனலி, ஒருத்தனவது உன்னை வெர்க்க, விறுவிறுக்க ஆட வச்சானே, தேங்க் காட்"னு சொல்லி மேல கை எடுத்து கும்பிட்டாள்.

அவளது நண்பர்களும் கைக்குலுக்க அனைவரையும் அறிமுக படித்தி வைத்தாள். எல்லாரும் இந்த அக்கடமியில் பயிச்றி பெறுபவர்கள். சிலர் இந்த டோர்னமெண்ட்டிலும் விளையாடினார்கள், பானுவையும் இன்னும் இரு பசங்களைத் தவிர அனைவரும் டோர்னமெண்ட்டில் இருந்து வெளியேற்ற பட்டுவிட்டார்கள் என்று அவர்கள் சொல்ல அறிந்தது கொண்டேன். பின் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கார்ப் பார்க்கிங் நோக்கி நானும் பானுவும் நடந்தோம். பாய் சொல்லிவிட்டு அவரவர் கார்களில் ஏறி வீட்டிற்க்கு சென்றோம்.

அனைத்து கேட்டாகிரிக்கும் அரையிறுதி ஒரே நாள், வெள்ளிக்கிழமை. வியாழக்கிழமை மதியமே கோச்சும், தாத்தாவும் சேர்ந்தே வந்தார்கள், இருவரிடமும் இது வரை நடந்த மொத்த டோர்னமெண்ட் கதையையும் மூச்சு விடாமல் சொல்லி முடித்தேன். கோசக்கு கெஸ்ட் ரூம் தயார் செய்யப் பட்டிருந்தது, இரவு உணவு முடித்துவிட்டு அவரவர் அறைக்கு சென்று உறங்கினோம்.

மறுநாள்,

எனக்கும், பானுவிற்க்கும் ஒரே நேரத்தில் அரையிறுதி போட்டி, காலையிலேயே அவளை தேடிச் சென்று விஷ் பண்ணிட்டு வந்தேன், சிறிது பதட்டத்துடன் இருந்தாள். சொல்லி வைத்ததைப் போல, நேர் செட்களில் எளிதான வெற்றி, சீக்கிரம் போட்டியை முடித்துக் கொண்டு பானுவின் மேட்ச்சை பார்க்கும் நோக்கத்தில் எப்பொழுதையும் விட கூடுதல் எஃபர்ட் போட்டு ஆடினேன். பரஸ்பர கைக்குழுக்களுக்கு பின், அங்கிருந்து விடுபட்டு, தாத்தாவிடம் சொல்லிவிட்டு பானுவின் ஆட்டத்தை காண செல்லலாம் என்று நினைக்கயில், அந்த அக்கடமி டைரக்டர் சுந்தர் வந்து என்னை அழைத்தார், தமிழநாடு ஸ்டேட் டீம் செலெக்ஷன் பேணல் மெம்பர்ஸ் என்று சொல்லி இருவரிடம் அறிமுக படுத்தினார்.

அவர்கள் என்னை பாராட்ட, என் கோச்சும் வந்து சேர்ந்து கொண்டார், ஒரு மணி நேரத்துக்கு மேலாக என் திறமை பற்றியும், நான் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும், ஒரு பெரிய விவாதம் அரங்கேறியது. இறுதியாக அந்த செலெக்ஷன் பேணல் மெம்பர்ஸ் என் தாத்தாவை அழைத்து, எனக்கு சிறந்த எதிர்காலம் டென்னிஸ்ல் இருப்பதாகவும், தொழில்முறை பயிற்சி கொடுக்கச் சொல்லியும், என் வயதில் இவ்வளவு திறமையாக ஆடிய யாரையும் தான் பார்த்ததில்லை என்று அவர்களில் ஒருவர் சொல்ல, என் தாத்தா பூரித்துப் போனார். இருவரும் மறுபடியும் என்னை பாராட்டி விட்டு சென்றார்கள், சுந்தரும் அவர்களைப் பின் தொடர்ந்தார்.

தாத்தா என்னை வாஞ்சையாக அனைத்துக் கொள்ள, கோச் எண்ணி தட்டிக் கொடுத்தார்.
நான் தாத்தாவிடம் காரில் காத்திருக்க சொல்லிவிட்டு, பானுவின் கோர்ட் நோக்கி விரைந்தேன். நான் சென்று பாக்க, அங்கு போட்டி ஏற்கனவே முடிந்து விட்டிருந்தது, விசாரித்தில் பானு தோற்று விட்டதாக தெரிந்து கொண்டேன், ஏதோ நானே தோற்று விட்டதைப் போன்ற வருத்தம், கனத்த நெஞ்சத்துடன் காரை நோக்கி நடந்தேன். அங்கே சற்று தொலைவில் ஒரு கார் அருகே நின்றிருந்தாள் பானு, அழுதிருக்கிறாள் என்பது முகத்தில் தெரிந்தது, அதைப் பார்த்த எனக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. நான் வேகமாக காரில் ஏறி அமர்ந்து கொள்ள, கார் வீட்டை நோக்கி நகர்ந்தது.

இறுதிப் போட்டி ஒருநாள் இடைவெளி விட்டு இருந்தது. அன்று இரவு உணவருந்தும் பொது தாத்தா அப்பாவையும் அம்மாவையும் இறுதிப் போட்டிக்கு வரும் படி அழைத்தார், எனக்கு பிடிக்கவில்லை. அவர்களும் ஏதேதோ காரணம் சொல்லி மறுத்து விட்டார்கள், சிவா, தனக்கு ஏதோ குவார்டேலி மேனேஜ்மெண்ட் ரிப்போர்ட் ரிவ்யு இருப்பதாகவும், சுமா, தனக்கு ஏதோ முன்னாடியே ஒத்துக்கொண்டே சர்ஜரி இருப்பதாகவும். அந்த சிவா வேறு யாரும் அல்ல, என் அப்பா, சிவகுருநாதன், இனி இக்கதையில் வெறும் சிவா.

இறுதிப் போட்டியில்,, எனது போட்டி பரிசளிப்புக்கு முன், கடைசி போட்டியாக இருக்கும் படி அட்டவணை தயாரித்திருந்தார்கள், நாலு மணிக்கு. பொதுவாக முதலில் அன்டர்-12, 14, 16, 18 என்றுதான் இருக்கும் என்றும், எனக்காகவே அன்டர்-16 போட்டி கடைசியாக மாற்றப் பட்டிருக்கும், என்று கோச் பெருமையாக சொல்ல, நானும் சந்தோஷமாக உணர்ந்தேன். இறுதிப் போட்டி நடக்கும் அன்று கிளப் விழாக்கோலம் பூண்டிருந்தது, புதிதாக நிறைய கட்-அவுட்கள், சிலவற்றில் ஒரு அரசியல்வாதி சிரித்துக் கொண்டிருந்தார். கோர்ட்க்கு முன்பாக இறுதிப் போட்டியில் விளையாடும் வீரர்களின் கட்-அவுட்கள், அவர்களைப் பற்றிய சிறு குறிப்புடன். எனக்கு மட்டும் கூடுதலாக ஒரு கட்-அவுட், ஒரு பேக் ஹேண்ட் ஷாட் அடிக்கும், சில கண நொடிகளுக்கு முன் எடுத்து, பந்ததை அடிக்க ஆக்ரோஷமான ஒரு பொசில இருந்தேன், என்னை நானே யாரையோ பார்ப்பதை போல பார்த்துக் கொண்டிருந்ததேன். என் தோள்களில் ஒரு கை விழ

"பதிமூணு வயசுலேயே உனக்கு கட்-அவுட்! காலக்குற மணி!"னு சத்தம் வர, வெக்கம் கலந்த சிரிப்புடன் திரும்பினேன், அவள் சிரித்தவாறு,, உதடு பிதுக்கி, கண்களை அகலித்து, தலையை ஆட்டினாள். மறுபடியும் சிரித்தேன், பின்பு அவள் தோற்றது நினைவுக்கு வர, என் சிரிப்பு காணாமல் போனது.

"சாரி ஃபார் யுவர் லாஸ், அக்கா"னு சொல்ல, குனிந்து என் முகத்துக்கு நேராக அவள் முகத்திக் கொண்டுவந்து, கன்னங்களை கிள்ளியவள்,

"இட்ஸ் ஓகே, எப்படியும் நீ இன்னைக்கு வின் பன்னிருவ, ரெம்ப சோகமா இருந்தா! அந்த கப்பெ எனக்கு குடுத்துரு!"னு அவள் கேக்க, ஐய்யோ யென உள்ளுக்குள் அதிர்ந்தேன் (சின்ன பையன் தானே), அதை கவனித்தவள்

"அப்போ கப்பே நீ வச்சுக்கோ, மெடல் குடுப்பங்க அதே என்ட்டா குடுத்துரு"னு கேக்க, அமைதியாக இருந்தேன். வாய் விட்டு சிரித்தவள், என் தலைகளில் கொட்டி

"எனக்கு ஒன்னும் தரவேண்டாம் நீ, நல்ல ஆடி வின் பண்ணு பொதும்" என்று சொல்லி என்னை பிடித்து வயிற்றில் கிச்சு கிச்சு மூட்ட, நான் சிரித்து கொண்டே அவள் பிடிகளில் இருந்து தப்பி ஓடினேன்.

ஃபைனல், பலத்த கர ஒலி,,,, விரைவாக முடிந்தது,,,, எப்பொழுதும் போல நேர் செட் வெற்றி, மொத்தமா மூணு பாயிண்ட் தான் விட்டுக் கொடுத்திருதேன். ஜெய்த்தவுடன் பானுவைத்தான் கண்கள் தேடின, அவள் ஃப்ரெண்ட்ஸ்-களிடம் ஹை ஃபைவ் அடித்துக் கொண்டிருந்தாள். பரஸ்பர கைக்குழுக்கள், மறுபடியும் அக்கடமி டைரக்டர் சுந்தர், தமிழநாடு ஸ்டேட் டீம் செலெக்ஷன் பேணல் மெம்பர்ஸ், இந்த தடவை இன்னும் இருவர் இருந்தார்கள், என் திறமை பற்றியும், நான் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும், தொழில்முறை பயிற்சின் அவசியத்தை என தாத்தா மற்றும் கோச்-சிடம் விவதித்தார்கள்.

எல்லாம் முடிந்து நான் என் கிட் பேக் நோக்கி போக, மேலும் சிலர் கை குலுக்கினார்கள், என் கிட் பேக்கை மடியில் வைத்திருந்தாள் பானுக்கா. சிரித்துக்கொண்டே அவளிடம் போக, கிட் பேக்கில் இருந்து மாற்று உடையை எடுத்தக் கொடுத்து, என்னை ஃபிரெஷ்-ஆகி வரச்சொன்னாள், அவள் சொல்லுக்கு கட்டுப் பட்டவன் போல வாங்கிக் கொண்டு சென்றேன். பரிசளிப்புக்கு ரெடியாகி வர, அங்கே என் தாத்தாவுடன் பேசிக் கொண்டிருந்தாள் பானுக்கா, நான் ஏற்கனவே பானுவை பற்றி மொத்தத்தையும் சொல்லியிருந்தேன் தாத்தாவிடம். பரிசளிப்பின் மொத்த நேரமும் என்னுடன் தான் இருந்தாள் பானு, முடிந்து கிளம்புகையில் பானுவை அழைத்த தாத்தா, அவள் தலையில் கை வைத்து, ஒரு பெருமூச்சு விட்டு, கன்னங்களை வாஞ்சையுடன் தடவி

"ரெம்ப நன்றி கண்ணு" னு சொல்ல

"இட்ஸ் ஓகே தாத்தா"னு சிரித்துக் கொண்டே எங்களிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டாள்.

-------------------------

மறுநாள் காலை கிளம்பி நாங்கள் பழனி வந்தடைந்தோம். ஆச்சிகளிடம் என்னை வானளவு புகழ்ந்தார், அவர்களும் என்னைக் கொஞ்சி சந்தோஷம் அடைந்தனர். மறுநாள் செய்தித் தாளில் நான் பரிசு வாங்கும் படம் வந்திருந்தது, ஆச்சிகள் வீட்டுக்கு வரும் அனைவரிடமும் காட்டி பெருமை கொண்டார்கள். இரண்டு நாள் கழித்து எங்கள் காபி எஸ்டேட் போனோம், தாத்தா என் கோச்-சை குடும்பத்துடன் வர வரவழைத்து, விருந்து கொடுத்து நன்றி சொன்னார். அன்று இரவு எனக்கு, டோர்னமெண்ட் ஃபைனலில் கட்-அவுட்டில் இருந்த போட்டோ வாட்ஸ்ஆப்பில் வந்தது, நான் திரும்ப "ஹூ இஸ் திஸ்?னு கேக்க, வாய் கோணி, நாக்க நீட்டியிருந்த பானுவின் போட்டோ பதிலாக வந்தது. நார்மலான குசல விசாரிப்புக்கு பின்

"இந்த போட்டோ எப்படி உங்க கிட்ட வந்தது?"

"நான் தான் அக்கடமில கேட்டு வாங்குனேன்"

"எதுக்கு"

"அன்னைக்கு நீ இத பாத்துக்கிட்டே இருந்தியா, அதனால உனக்கு அனுப்பலாம்னு"

"என் நம்பர் எப்படி உங்களுக்கு கிடச்சிச்சு"

"ஏன் டா,,, ஒரு போட்டோ அனுப்புனா தாங்க்ஸ் சொல்லாம,,,, கேள்வியா கேக்குற?"

"சாரி! சும்மா தான் கேட்டேன், தேங்க் யு சொ மச்"

"தாங்க்ஸ்! கூட உன்கிட்ட கேட்டு வங்க வேண்டியதா இருக்கு?"னு

அவள் மெசேஜ் அனுப்ப, நான் ஒரு சிரிக்கும் ஸ்மைலி அனுப்ப, அவள் கோப ஸ்மைலி அனுப்பினாள். இப்படி ஆரம்பித்த எங்களது வாட்ஸ்ஆப்பில் நட்பு. சில வாரங்களில் தினமும் டெக்ஸ்ட் பண்ணும் அளவுக்கு வளர்ந்தது.

-------------------------​
Next page: Chapter 06
Previous page: Chapter 04