Chapter 47
மணி அமர்ந்திருந்த விமானம் கோயம்புத்தூர் நோக்கி பறந்து கொண்டிருந்தது. மணியின் பதட்டம் கொஞ்சம் தணிந்திருந்தது, ஆனால், இரண்டு மணிநேரத்துக்கு முன், வாழக்கை அவனுக்கு கொடுத்த அதிர்ச்சியில் இருந்து, இன்னும் அவன் முழுமையாக மீண்டுருக்கவில்லை, முடியுமா? என்றும் தெரியவில்லை. அந்த கருத்தரங்கத்திற்கு செல்லும் பொழுது, மிகவும் தெளிவான மனநிலையுடன் இருந்தான். அந்தக் கருத்தரங்கத்தில் கேட்கப்படப் போகும் கேள்விகளில், ஒரே ஒரு கேள்விக்கான பதிலை அளிக்கத்தான், அந்த கருத்தரங்கத்தில் கலந்து கொள்ளவே ஒப்புக் கொண்டு இருந்தான்.
சில மாதங்களுக்கு முன் திட்டமிட்டது போலவே, அந்த அமைப்பு அனைத்து தொகுதிகளிலும் தோற்றிருந்தது. அதைத் தொடர்ந்து, எதிர் கட்சி ஆட்சிக்கு வர, மணியின் நிறுவனத்தின், ப்ராஜக்ட் கட்டுமானப் பணிகள், வெகு ஜோராக நடந்து கொண்டிருந்தது. கட்டுமான பணியின் போது ஏற்பட்ட, ஒரு சிறு விபத்தில், ஏழு பேர் மரணித்துவிட, அதை பெரும் பிரச்சனையாக்கி, தேர்தல் தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது, அந்த அமைப்பு. ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது, வியாபார கணக்குகளை காட்டிலும், உளவியல், உணர்வுகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த விபத்தின் காரணமாகவும், அதைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தின் காரணமாகவும், மணியின் நிறுவனத்தின் பெயர் ரொம்பவே அடி வாங்கியிருந்தது. அதை சரிக்கட்டும் முயற்சிகளின், ஒரு பகுதியாக, அவன் இந்தக் கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள சம்மதித்தான். இளம் வயதில் வெற்றி கொள்பவர்களை பெரிதாக தூக்கிக் கொண்டாடும் சமூகம், நமது, இந்திய சமூகம். சமூகத்தின் அந்த இயல்பை, தன் வயதை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ஊடகங்களின் வழியே, தனது நிறுவனத்தின் முகமாக, தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம், அவனுக்கு. அந்த விபத்தைப் பற்றிய கேள்விக்கான பதிலை, ஏற்கனவே தயாராக வைத்திருந்தான். அதை மட்டுமே மனதில் ஓட்டியபடி, தெளிவாக அந்த மேடையில் அமர்ந்திருந்தான்.
இவனோடு சேர்த்து மொத்தம் நான்கு இளம் தொழில் முனைபவர்கள், அந்த கருத்தரங்கத்தில் விருந்தினராக பங்கேற்றிருந்தனர். நான்கு விருந்தினர்களையும் அறிமுகப்படுத்தி பேசினார், நிகழ்ச்சியின் தொகுப்பாளர். அவருக்கு ஐம்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் வயது, நாட்டின் மிகப் பிரபலமான ஊடகவியலாளர்களில் ஒருவர். மணியை, அறிமுகப்படுத்திப் பேசும் பொழுது, அவனது நிறுவனத்தின் செயல்பாடுகளை காட்டிலும், அவனது வயதையே முன்னிறுத்தி பேசினார். எதை மணி தன் பலமாக நினைத்துக் கொண்டு இந்த நிகழ்வில் கலந்து கொள்ள நினைத்தானோ, அதைவைத்தே அவனை சிறுமைப் படுத்துவது போல, வஞ்சப் புகழச்சியில் பேசினார். இந்தியத் தொழில் துறையின் "போஸ்டர் பாய்", "மேன் வித் தி மிடஸ் டச்" என்று அவர் மணியை அறிமுகம் செய்து பேசியது நல்ல எண்ணத்தில் கூட இருக்கலாம். மணியை அறிமுகப் படுத்திப் பேசும் பொழுது அவர் உபயோகப்படுத்திய "வொண்டர் கிட்" வார்த்தை அவனை உரச கூடாத வகையில் உரசி, அவன் உணர்வுகளை தட்டி எழுப்பியது. சிலர் நொடிக்கு முன் அமைதியாக இருந்த மணியின் மனது, கொந்தளித்துக் கொண்டிருந்தது, அந்த ஒரு சொல்லால்.
ஒருசொல், ஒருவரது வாழ்க்கையில் பெரிய உள்ள குழப்பத்தை ஏற்படுத்தும், அமைதி இழக்கச் செய்யும் என்பது அந்த வார்த்தை, ஒருவரது வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்பை, முக்கியத்துவத்தை கொண்டே உணர முடியும். திகட்டாத இன்பத்தையும், உயிர்கொல்லும் வலி என இரண்டையும், அவன் வாழ்வின் பதின் வயதிலேயே கொடுத்திருந்தான், அந்த "வொண்டர் கிட்" மணிகண்டன். சில நொடிகள், தான் எங்கு இருக்கிறோம் என்பதை மறக்கும் அளவுக்கு, அவனது புலன்கள் மரத்துப் போய்விட்டன. சில நொடிகளில்தான், சுதாரித்துக் கொண்டு, அறிமுகத்திற்கு நன்றி சொன்னாலும், அவனது உள்ளமோ எப்பொழுது இந்த மேடையில் இருந்து இறங்குவோம்? என்று நினைக்க ஆரம்பித்திருந்தது.
தொகுப்பாளர்: "இந்தியத் தொழில்துறையின் "வொண்டர் கிட்" என்று உங்களை குறிப்பிடுவதை எப்படி பார்க்கிறீர்கள்?"
முதல் கேள்வியே அவனது மனசஞ்சலத்தை அதிகப்படுத்தியது. "முட்டாள்கள் தான் அதிசயத்தை நம்புவார்கள்" என்று சொல்லு இன்று கொந்தளித்த மனதை கட்டுப்படுத்திக் கொண்டு
மணி: "நான் அதிசயங்களை நம்புவதில்லை!!" புன்னகைக்க முயன்று தோற்றுப் போனான்.
இரண்டு வருடங்களுக்கு முன்வரை உணர்வுகளை கட்டிப்போடுவதில் இணை இல்லாமல் இருந்தவன, உணர்ச்சிப் பிழம்பாய் இருந்தான். இன்னும் விளக்கமாக பேசுவான் என்று எதிர்பார்த்திருந்த தொகுப்பாளர், அவன் பதில் சொல்லி முடித்து விட்டான் என்று உணர்ந்ததும், மற்ற மூவரிடமும், தன் அடுத்த சுற்று கேள்வியை, கேட்க ஆரம்பித்தார்.
தொகுப்பாளர்: "கடந்த ஒன்றரை வருஷத்துல, உங்களோட சொத்து மதிப்பு 46 மடங்கு!!, 46 சதவீதம் இல்ல, 46 மடங்கு உயர்ந்திருக்கு!! இந்த வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீங்க?"
ஏற்கனவே சஞ்சலத்தில் இருந்தவனை, மேலும் தூண்டியது, அவனை நோக்கி கேட்கப்பட்ட, இரண்டாவது கேள்வி. நால்வருக்கு ஒரே மாதிரியான கேள்விதான் என்றாலும், வார்த்தைத் தேர்வுகளில் தெளிவாக அடித்தார், அந்த தொகுப்பாளர்.
மணி: "ஒரு சின்ன திருத்தம், 46 மடங்கு உயர்ந்தது, என்னோட சொத்து மதிப்பு இல்ல, ஃப்யூச்சர் குரூப்ஸ்ஸின் சந்தை மதிப்பு!!" தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பதிலளித்தாள்.
தொகுப்பாளர்: "இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?"
தொடர்ந்து சீண்ட பட்டான், மணி.
மணி: "என்னோட சொத்துன்னு நான் நம்புவது!! ஃப்யூச்சர் குரூப்ஸ்ஸில் நேரடியாகவும், மறைமுகமாகவும், வேலை பார்ப்பவர்களைத் தான்!!. அப்படி பார்த்தா, கடந்த மூணு வருஷத்துல, என்னோட சொத்து மதிப்பு எட்டு மடங்கு உயர்ந்திருக்கு"
தன்னிலை இழக்கும், விழும்பில் இருந்தான், மணி. அவன் சொன்னது உண்மையா அல்லது பொய்யா என்பதை அவன் மட்டுமே அறிவான்.
தொகுப்பாளர்: "உங்களுக்காக வேலை பாக்குறவங்கதான் உங்களோட சொத்துனு சொல்றீங்க!! மகிழ்ச்சி!! ஆனா, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, நாக்பூரில், உங்க கம்பெனி கன்ஸ்ட்ரக்ஷன் சைட்ல ஏழு பேர் இறந்திருக்கிறார்கள்? இல்லையா?"
உண்மையிலேயே, மணி, இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்வது, அந்த தொகுப்பாளருக்கு பிடிக்கவில்லை தான், போல.
மணி: "அது ஒரு விபத்து, விபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை!! எங்க சைடுல நிர்வாக ரீதியா இன்னும் முழுமையான விசாரணை முடியல!! அதே மாதிரி சட்ட ரீதியான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்!! ஆதனால், இதைப்பற்றி, இதுக்கு மேல, விரிவாகப் பேசுறது, இப்போ, சரியாக இருக்காது!! நீதிமன்ற விசாரணை முடிந்ததும், விரிவா பதில் சொல்றேன்!!”
எந்த கேள்விக்காக, இந்த கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்தானோ, அந்தக் கேள்விக்கு மிகவும் சுருக்கமாகவே பதிலளித்தான். இறந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீடு!!, குடும்பத்தில் வேலை பார்க்கும் தகுதி உடைய, அத்தனை பேருக்கும் வேலை!!, படித்து கொண்டு இருப்பவர்களின் முழு கல்விச் செலவையும் ஏற்றுக் கொண்டது!! என விரிவான, ஒரு பதிலை வைத்திருந்தான். ஆனால் அப்படி தான் சொல்லப்போக்கும் பதிலில் இருந்தே, மீண்டும் கேள்வி கேட்கப்பட்டால், எங்கே, தன் கட்டுப்பாட்டை இழந்து விடுவோமோ, என்ற பயத்தில், மிகவும் சுருக்கமாகவே பதிலளித்தான்.
தொகுப்பாளர்: "22 வயதில், உங்க குழுமத்தின் தலைமை பொறுப்பை ஏற்ற பொழுது எப்படி உணர்ந்தீர்கள்?"
மணி: "ஏஜ் இஸ் ஜஸ்ட் அ நம்பர்!! முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு மட்டுமே வயது ஒரு சவாலாக இருந்திருக்கும்!! Business is part of our dinner table conversations!! சின்ன வயசுல இருந்தே தொழில் சூழலில் வளர்ந்த எனக்கு, எப்படியும் ஒருநாள் அந்த பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று தெரியும்!! அதனால அந்த நேரத்துல, என்னை நிரூபிக்கணும்ங்கிற உறுதி மட்டுதான் மனசுல இருந்துச்சு!!"
இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு இருக்கக் கூடாது என்றுதான், மணியின், பின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
தொகுப்பாளர்: "முன்னாடி ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது, உங்ககிட்ட வேலை பாரக்கிறவங்க தான், உங்களுடைய சொத்துனு சொன்னிங்க!! ஆனா இந்த வருஷம், எழு தனி விமானங்கள் வாங்கி இருக்கீங்க!! உங்க பேச்சும்!!, உங்களோட செயல்பாடும்!! முரணாக இருக்கே?" கருத்தரங்கின் கருத்தே, தடம் மாறிக் கொண்டிருந்தது.
மணி: "உங்க கையில கட்டியிருக்கிற வாட்ச்சோடா மதிப்பு என்ன?"
சில நொடிகள் தன்னை நிதானித்துக் கொண்டவன், தொகுப்பாளரின் கேள்விக்கு, முதல் முதலாக, சரியான பதிலளிக்கத் தயாராகியிருந்தான்.
தொகுப்பாளர்: "6000 டாலர்ஸ்!!" மணி கேள்வி கேட்க, தொகுப்பாளர் பதிலளித்தார்.
மணி: "அது தொலைஞ்சி போனா, அதத்தேடி உங்ககிட்ட கொடுத்தா, அதிகபட்சமா எவ்வளவு சன்மானம் தருவீங்க?"
கருத்தரங்கின் சுவாரசியத்தை அடுத்த கேள்வியில் கூட்டினான், மணி.
தொகுப்பாளர்: "ஒரு இரண்டாயிரம் ரூபாய்!!" பதில் சொல்ல, சிரித்தான்.
மணி: "என் கையில் இருக்கிறது Aldo வாட்ச்!!, அதிகபட்சம் 150 டாலர் இருக்கலாம்!!, இது தொலைஞ்சி போனா, திரும்பக் கிடைக்கிறது!! என்னோட, தனிப்பட்ட மொத்த சொத்தையும் செலவு பண்றதுக்கு, ஒரு நொடி கூட யோசிக்க மாட்டேன்!! இரண்டு பேர் கையில் இருக்கிறது நேரத்தைமட்டுமே காட்டக்கூடிய வாட்ச்தான்!! ஆனா, அந்த வாட்ச் மேல, ரெண்டு பேருக்கும், வேற வேற மாதிரியான, மதிப்பு இருக்கு!!. அதே மாதிரிதான், சிலருக்கு சொத்து மதிப்புங்கிறது பணமாக இருக்கலாம்!! ஆனா, எனக்கு ஃப்யூச்சர் குரூப்ஸ்ஸில் வேலை பார்க்கிறவங்க தான்!! வாழ்க்கையில, நான் எதை அதிகமா மதிக்கிறேன்னு எனக்கு தெரியும்!! வாழ்க்கையைப் பத்தின என்னோட மதிப்பீடு, அடுத்தவர்களின் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது!!"
சிரித்தவாறே மணி சொல்லி முடிக்க, அரங்கத்தில் பலத்த கைதட்டல். கைதட்டல் அடங்கியதும் மீண்டும் தொடர்ந்தான், மணி.
மணி: "இப்போ உங்கள் கேள்விக்கு பதில் சொல்றேன்!! ஏழு விமானங்கள் வாங்கியது, ஃப்யூச்சர் குரூப்ஸ்ஸின் தேவைக்காக!!. மணிகண்டன், என்ற தனி மனுஷனோட, தேவைக்காக இல்லை!!.
கொஞ்சம் பெரிதாகவே சிரித்தான். எதிராளியை அடித்து வீழ்த்துவதைவிடவும், வெற்றிபெருவது சாவாலானது, அப்படி ஒரு சாவலான வெற்றியத்தான் பெற்றுவிட்டதாக நினைத்தான். மணியின் மனது இலகுவாக இருந்தது.
அதற்குப் பின்பு கேட்கப்பட்ட இயல்பாக கேள்விகளுக்கு இயல்பாகவும், நேர்த்தியாகவும் பதிலளித்தான்.
ஒரு மணி நேர உரையாடலுக்கு பின்.
தொகுப்பாளர்: "நிகழ்ச்சியின் கடைசிக் கட்டத்திற்கு வந்து விட்டோம், கடைசியாக இரண்டு பர்சனல் கேள்வி்!!. நாலு பேருக்கும் ஒரே கேள்விதான்!!. நீங்க நாலு பேருமே சின்ன வயசிலேயே பெரிய பொறுப்புகளை எடுத்துக் கொண்டவர்கள்!! அதனால சொந்த வாழ்க்கையில் நிறைவேறாத ஆசைகள்னு ஏதாவது இருக்கா?
மற்ற மூவரும் தங்களின் நிராசைகளை கூற, மணி, தனக்கு அப்படி எதுவும் இல்லை, சிறுவயதிலிருந்து தொழில் தான் தன்னுடைய ஒரே ஆசை என்று சொல்லி முடித்தான்.
தொகுப்பாளர்: உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? புதிதாக தொழில் புரிய விரும்புபவர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?
மற்ற மூவரும் தங்களின் எண்ணங்களை சொல்ல, மணியின் முறை வந்தது.
மணி: "உண்மைய சொல்லனும்னா, இந்த கேள்விக்கு என்கிட்ட பதில் இல்லை!! என்று நிறுத்தியவன் சிரிக்க, இந்த அரங்கத்திலும் சிரிப்பொலி.
"எங்க நாலு பேர்ல, Mr.மான்ஜீத் தவிர்த்து, மீதி மூணு பேருமே, மூன்றாவது அல்லது நான்காவது தலைமுறை தொழில் முனைவோர்கள்!! நான் தொழிலில்ல ஈடுபட ஆரம்பிச்சப்பவே, வலுவான அடித்தளத்தோட, வழிகாட்ட சரியான ஆட்கள் எனக்கு துணையா இருந்தாங்க!!. அதனால, மற்ற இரண்டு பேரும் தப்பா எடுத்துக்கலான, இந்தக் கேள்விக்கு Mr.மான்ஜீத்தான், பதில் சொல்றதுக்கு தகுதியானவர்னு நான் நம்புறேன்!!"
மணி சொல்ல, மீண்டும் அரங்கத்தில் பலத்த கைதட்டல். கைத்தட்டல் அடங்கியதும் தொடர்ந்தான், மணி.
"உழைப்பு!!. ஒரு செயல்ல, நாம இறங்குறப்ப, அது கேக்குற, உழைப்பை நாம குடுக்கணும்!! ரொம்ப கிளிசேவான பதிலா இருந்தாலும், வெற்றிக்கான அத்தனை ரகசியமும் கிளிசேவாகத்தான் இருக்கும்னு நான் நம்புறேன்!!" மீண்டும் அரங்கத்தில் கைதட்டல்.
தொகுப்பாளர்: "இந்த கருத்தரங்கத்தின் நிறைவாக, ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து, ஒரு புகைப்படம் காட்டப்படும்!!. அதைப் பற்றிய உங்களது நினைவுகளை பகிர்ந்து கொள்ளலாம்!!" என்று சொன்னதும் அங்கிருந்த திரையில் ஒன்றன் பின் ஒன்றாக புகைப்படங்கள் காட்டப்பட்டது.
இந்தியாவில், இதுபோன்ற சென்டிமெண்டலான சடங்குகளை, எந்த துறையைச் சார்ந்தவர்களாலும் தவிர்க்க முடியாது. சினிமா கிசுகிசு போன்ற ஒரு அரிப்பு அது. மற்ற மூவரும் தங்களுக்கு காட்டப்பட்ட புகைப்படத்தை பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள, கடைசியாக மணியின் முறையும் வந்தது. திரையில் காட்டப்பட்ட படத்தை பார்த்ததும் மணி அதிர்ந்தான்.
தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்து ஒரு புகைப்படம் பகிரப்படும் என்பதும், அது பற்றிய கருத்துக் கூற வேண்டும் என்பதும் முன்பே அவனுக்கு சொல்லப்பட்டது தான். மணியும் அவன் மலை இறங்கும் ஒரு புகைப்படத்தைத் தான் இந்த கருத்தரங்கில் பகிர்வதற்காக கொடுத்திருந்தான். ஆனால் திரையில் காட்டப்பட்டதோ, கையில் நாலு இன்ச் வெற்றிக் கோப்பையுடன், கழுத்தில் மெடலுமாக, 19வயது மணி, சிரித்துக்கொண்டிருந்தான். அதுவரை இலகுவாக இருந்தது மணியின் உடலின் மயிர்களெல்லாம் விடைத்து நின்றது. உடல் சிலிர்த்துக் கொள்ள, மனது இறுக்கமானது. ஆறு வருடங்களுக்கு முன்வரை, மது எப்படி அவன் வாழ்க்கையில் நீக்கமற நிறைந்திருந்தாளோ, அதேபோலத்தான் டென்னிஸ்ம். சொல்லப்போனால், அன்புகக்காக, அரவணைப்புக்காக ஏங்கிக் கிடந்தவனுக்கு தேவைப்பட்ட அங்கீகாரத்தையும், வெளிச்சத்தையும், அவனுக்கு முதன் முதலில் கொடுத்தது டென்னிஸ் தான். மதுவைக் கொடுத்ததே டென்னிஸ் தான். மதுவை இழந்ததற்கு, மணியின் தவறொடு, மற்றவர்களின் தவறும் காரணமாக இருந்திருந்தாலும், அவன் டென்னிஸை இழந்ததற்கான, மொத்த காரணமும் அவன் மட்டுமே. மணி, மீண்டும், ஒரு இழப்பின் வலியை உணர்ந்தான்.
"சோ யு அர் அ டென்னிஸ் பிளேயர்?" தொகுப்பாளரின் கேள்வி அவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. தலையை மட்டும் அமோதிப்பாக ஆட்டினான், முகத்தில் வெளிப்பட்ட உணர்வுகளை அவனால் மறைக்க இயலவில்லை.
"இன்னும் சர்ப்ரைஸ் முடியல?" மர்மமாக புன்னகைத்தபடி, தொகுப்பாளர் திரையை நோக்க, மணியின் பார்வையும் திரையை நோக்கி சென்றது.
திறையில் இருந்த புகைப்படம் விரிவடைந்தது. சற்றுமுன் வெற்றிக் கோப்பையுடன் காணப்பட்ட மணியின் அருகே, அவனிடம் தோற்ற எதிராளி இருந்தான். மணியிடம் தோற்ற எதிராளியின் புகைப்படம் காட்டப்பட்டதும், அந்த கருத்தரங்கு கூட்டத்தில், ஒரு சிறு சலசலப்பு, ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் மனித சப்தங்கள்.
"உங்க ஆப்போனெண்ட் யாருன்னு தெரியுமா?" தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, தெரியாது என்பது போல் தலையசைத்தான்.
"என்னோட ஞாபகம் சரியா இருந்தா, he is Spanish!!" என்றான் மணி. பெரிதாக ஏதோ ஒன்று வந்து விழப்போகிறது என்ற பதட்டம் அவன் மனதில். முதன் முதலாக பதட்டப்படுபவனின் மன நிலையில் இருந்தான்.
"உங்கள்ல யாருக்காவது தெரியுமா?" தொகுப்பாளர், கூட்டத்தைப் பார்த்து கேட்க
"felino munez" என்று கோரசாக, சத்தம் வந்தது.
"த்ரீ டைம்ஸ் கிராண்ட்ஸ்லாம் சேம்பியன்!!" தொகுப்பாளர் சொல்ல, அரங்கத்தில் பலத்த கைதட்டல்.
நம்பமுடியாமல், இடதும் வலதுமாக தலையை அசைத்துக் கொண்டடிருந்த மணியின் வாயிலிருந்து "வாவ்!! வாவ்!!" என்ற வார்த்தைகள், அவனது கட்டுப்பாடில்லாமல் வந்து கொண்டிருந்தது.
சொல்ல முடியாத உணர்வுகள் மனதை நிறைத்திருக்க, பல வருடங்களுக்குப் பின், முதல் முறையாக மூளையின் கட்டுப்பாட்டில் இருந்த மணியை, மொத்தமாக தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது, அவனது மனது. கைத்தட்டல் அடங்க வெகுநேரம் ஆனது, கைதட்டல் அடங்கிய பின்னும் நம்பமுடியாத மணியின் தலையசைப்பு நிற்கவில்லை. ஒருவாராக சுதாகரித்துக் கொண்ட பின்.
"இந்த மேட்ச் விளையாடும்போது, அவருக்கு பதினாறு அல்ல பதினேழு வயசுதான் இருக்கும்!! என்ன விட மூணு வயசு கம்மி!! அந்த ஏஜ்ல பிசிகல் க்ரோத் பெரிய அட்வண்டேஜ்!! ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் ஜெயிச்சேன் ஞாபகம்" சொற்கள் அவன் சொல்லுக்கு கட்டுப்படாமல் போக, உலறினான், தன் தாடையை தடவ ஆரம்பித்தான்.
"இல்ல!!, நீங்க அந்த மேட்ச்ல, ஸ்டிரேட் செட்ல ஜெயிச்சிருக்கிங்க!!" தொகுப்பாளர் மணியின் கூற்றை திருத்த, விரக்தியாக சிரித்தான். தீடிர் என்று கிடைத்த இந்த அங்கீகாரம், அவன் மூளையை முடக்கியது. ஏதாவது சொல்லி, இந்த அங்கீகாரத்தை தட்டிக்கழிக்க வேண்டும் என்று சிந்தித்தான்.
"லோக்கல் டோர்னமேண்டல, ரஞ்சில, சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை நிறைய பேர் எடுத்திருக்கலாம்!! அதுக்காக, அவர் விக்கெட் எடுத்த எல்லாரும், அவரை விட திறமைசாலினு சொல்ல முடியாது, இல்லையா? அந்த மாதிரிதான் இதுவும்!! தயவு செய்து, இந்த மாதிரி ஏதாவது போட்டோஸ் இருந்தா, டெலீட் பண்ணிடுங்க!!. It's not fair for a champion!!" வலிந்து சிரித்தவாறே சொல்லி முடித்ததும், சிரிப்பலை அந்த அரங்கத்தில். அதைத் தொடர்ந்து, கைதட்டல் ஒலி, அந்த அரங்கத்தை நிறைத்தது. எனோ அந்த கைதட்டல், அவன் உள்ளத்தின் படபடப்பை மேலும் கூட்டியது.
"அந்த டைம்ல, என் வாழ்க்கையே......" ஆரம்பித்தவன், தீடிர் என்று நிறுத்தினான். ஒரு நிமிடம் கண்களை மூடி பெருமூச்சு விட்டுவிட்டு, தொடர்ந்தான்.
"அந்த டைம்ல என் வாழ்க்கையே அந்த மேட்ச்சோடா முடிவுல தான் இருந்துச்சின்னு நம்பினேன்!!. Loosing was not an option for me!!. ஜெயிச்சே ஆகனும்ற கட்டாயம்!! நான் கடைசியா விளையாண்ட டென்னிஸ் மேட்ச்ம், அதுதான்!! அந்தப் படத்துல இருக்குற கப், அந்த டோர்னமேண்ட் பிரைஸ் மணி-செக்னு எல்லாத்தையுமே, மும்பை ஏர்போர்டில் தொலைச்சிட்டேன்!!" மீண்டும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள பேச்சை நிறுத்தினான்.
"எதுக்காக, அந்த டர்ணமெண்ட்ல ஆடுனேனோ? அத, மொத்தமா தொலைச்சிட்டேன்!! அதுக்காக எத்தனையோ நாள் கண்ணீர்விட்டு அழுதிருக்கேன்!! ஆனா இப்ப யோசிச்சுப் பார்த்தா, I don't deserve it!! அதனாலதான், அது என் கையை விட்டுப் போச்சு புரியுது!!" கண்களில் தெரிந்த வலியை மறைத்துக் கொண்டு, விரக்தியாக சிரித்தான். பெரும் மன பாரம் இறங்கியதைப் போல இருந்தது அவனுக்கு.
"வெற்றியோட ரகசியம் என்ன கேட்டீங்கல்ல!! I'm a right hand player!! அந்த மேட்ச் முடிஞ்சு கொஞ்ச நாளிலே, ஒரு ஆக்சிடெண்ட்!! வலது கையில், உள்ளங்கையிளையும், விரல்கள்ளையும், ஏழு எழும்பு முறிவு!! டென்னிஸ் ராக்கெட்டை சரியா பிடிக்கிறதுக்கு, ஆறு மாசம் தேவைப்பட்டிருக்கும்!! இதுதான் வாழ்க்கை என்று நம்பியிருந்த ஒன்ன என்னோட தவறால் இழந்துவிட்டேன்!! அந்த இழப்பை ஈடுகட்டத்தான், இப்ப வரைக்கும் முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன்!! என்னோட பிரண்டு ஒருத்தங்க சொன்னாங்க, that I am an early bloomer!! அவங்க சொன்ன போது, சும்மா சொல்றாங்கன்னு நெனச்சேன்!! யோசிச்சுப் பார்த்தா, அவங்க சொன்னது எல்லாம் உண்மைதான்னு தோணுது!! இந்த தடவை அந்த early bloomமை இன்னும் கொஞ்ச நாள் தக்கவச்சுக்கணும்னு உழைச்சுக்கிட்டு இருக்கேன்" மணியின் உதடுகளில், ஒரு சிறு புன்னகை. மீண்டும் அந்த அரங்கத்தில் கைதட்டல்.
அந்த மேடையில் இருந்து இறங்கிய மணிக்கு வெளிக்காற்று வாங்க வேண்டும் என்று தோன்றியது. அவனது கண்கள், அவனது உதவியாளர்களை தேடியது. சில நொடிகள் அவனது தேடலை உணர்ந்து, அவனை நோக்கி வந்தனர். மணி, exit எங்கே என்று கேட்க, அவனை அழைத்துச் சென்றனர். வெளிக்க காற்றை சுவாசிக்க, அவனது மனதின் படபடப்பு கொஞ்சம் அடங்கியது.
"ஹலோ!! மிஸ்டர் மணிகண்டன்!!" என்ற சத்தம் கேட்க திரும்பி பார்த்தான்.
தலையில் டர்பனும், முகத்தில் முக்கால்வாசி தாடியுமாக, அந்தக் கருத்தரங்கில் இவன் பாராட்டிப் பேசிய, 35 வயது, மான்ஜீத் சிங், இவனை நோக்கி கை நிட்டினார், அருகிலேயே டர்பனும், தாடியுமாக, இன்னொருவன். கை கொடுததான். மணியின் உதவியாளர்கள், கொஞ்சம் தள்ளிச்சென்று நின்றார்கள்.
"மை பிரதர், பல்விந்தர்!!" அருகில் இருந்தவனை, அறிமுகப் படுத்தினார். மணி, அவனுடனும் கைகுலுக்கினான்.
"தேங்க்ஸ்!!" என்ற பல்விந்தரை, கேள்வியாக பார்த்தான் மணி.
"For your compliments!!" (என் அண்ணனை பாராட்டி பேசியதற்காக), அவன் சொன்னதும், சிரித்தான், மணி
"It's purely business Balvinder!!.... I have 18% stake in your brothers company!!,.... marketing strategy!! (அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை!! இது வியாபார தந்திரம் பல்விந்தர்!!, உங்க அண்ணன் கம்பெனில முதலீடு பண்ணி இருக்கேன்!! 18 சதவிகிதம்)!!" என்று சிரித்தவாறே கண்ணடித்தான் மணி, சம்பந்தமே இல்லாமல் கேளிக்கையான ஒரு மூடில் இருந்தான். அண்ணன், தம்பி இருவரது முகத்திலும் ஈயாடவில்லை.
"Just kidding!! your brother deserves all the praise and more!! (சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்!! அத்தனை வார்த்தைகளும் தகுதியானவர் உங்க அண்ணன்!!)" என்று சொல்லி மீண்டும் கண்ணடித்தான்.
அண்ணன், தம்பி இருவரும் சிரிக்க, மான்ஜீத் சிங்கிடம், பொதுவாக பேச ஆரம்பித்தான். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, பல்விந்தரின் மொபைலுக்கு தொடர்ந்து அழைப்பு வந்துகொண்டே இருந்தது. அது, ஒவ்வோரு முறை அடிக்கும்போதும், அழைப்பைத் துண்டித்துவிட்டு, இவர்களின் கலந்துரையாடலில், கலந்து கொள்ளவே முற்பட்டான். ஆனால் விடாமல், மீண்டும் அவனது தொலைபேசிக்கு அழைப்பு வந்தது, எதேச்சையாக அவனது மொபைலின் தொடுதரையை பார்த்த மணியின் கண்களில் "wifey" என்று பட,
"Come on, attend the call!!" என்றான் மணி. அழைப்பை எடுத்த பல்விந்தர், அதை காதுக்கு கொடுத்த, இரண்டு நொடியில்
"பானு!!" என்றவன் முகத்தில் பரபரப்பு, இவர்களை நோக்கி திரும்பியவன், தான் போகவேண்டும், அவசரம் என்று கை காட்டியவாறு, ஹோட்டலினுள் நடக்க ஆரம்பித்தான்
"பானு!!...என்ன ஆச்சு?" ஆந்த பஞ்சாபியிடம், தமிழ்க் கேட்டதும், எங்கோ சற்றென்று இடித்தது மணிக்கு.
"வாட் இஸ் யுவர் பிரதர்ஸ், நேம்!!" தெரிந்து கொண்டே கேட்டான்.
"பல்வீந்தர் ரஞ்சித் சிங்!! வீ கால் ஹிம் ரஞ்சூ!! Why?" என்று கேட்ட மான்ஜீத் சிங்கிடம், ஒன்றும் இல்லை என்று தலையசைத்தவன், தன் கிளம்ப வேண்டும் என்று அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு வேகமாக நடந்தான்.
"Get me in a car!!, இப்போவே டெல்லியில் இருந்து கிளம்பறோம்!!" என்று சங்கரபாணியிடம் சொல்லிவன், அருகிலிருந்த வந்த உதவியாளரிடம் சிகரெட்டை கேட்டான்.
சங்கரபாணி, மணி இட்ட பணியை செய்து முடிக்க கிளம்பினார். பொறுமை இல்லாமல், பார்க்கிங் நோக்கி நடக்க, அருகிலிரந்த உதவியாளர்
"சார், லாபி இந்த பக்கம்!!” என்று கை காட்டினான். உதவியாளர் கை காட்டிய திசையில் வேகமாக நடக்க ஆரம்பித்தான். அவன் லாபியை அடைந்த சில நொடிகளுக்குள் கார் வந்துவிட, முப்பது நொடி கழித்து, அவன் அமர்ந்திருந்த கார், அந்த ஹோட்டலின் கேட்டைத் தாண்டியதும்தான், இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சைவிட்டான் மணி. இன்னும் அவனது பதட்டம் தனியவில்லை. மொபைலை எடுத்தவன், நேத்ராவுக்கு அழைத்தான், காதுக்கு அழைபேசியைக் கொடுத்திருந்தவன், அந்த அழைப்பு எடுக்கப்பட்டதும்,
“மது யுஸ்ல இருக்கானு சொன்ன?”
“அதுக்கு இப்போ என்ன?”
"அவ, இங்க, டெல்லில இருக்கா!! இப்போ!!” என்றவன் எதிர்முனையில் பேசியவரின் பதிலை எதிர்பார்க்காமல், அழைப்பை தூண்டித்தான்.
"லைட்டர்" என்று கேட்டவாறு சீகிரெட்டைஉதடுகளுக்கு கொடுக்க, அதன் நுனி பற்றவைக்கப்பட்டது.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் சீகிரெட்டை புகையை உள்ளிலுத்தான், உள்ளிலுத்த புகையை, மூக்கின் வழியே, வெளியேற்றியவாரே, காரின் கண்ணாடியை இறக்கினான்.
************
அதே நேரம், அந்த கருத்தரங்கு நடந்த ஹாலில்,
"வாட்?” என்ற பல்வீந்தர் ரஞ்சித் சிங்கின் முகத்தில் விவரிக்க முடியாத அதிர்ச்சி.
அவனுக்கு எதிரே, துடைக்க, துடைக்க, நிற்காமல் வலிந்து கொண்டிருக்கும் கண்ணீருடன் மது. இருகைகளாலும் முகத்தை மூடி அழுந்த துடைத்தவன்,
“the tennis guy?” என்றான், பதில் தெரிந்திருந்து நம்ப முடியாமல் மீண்டும் கேட்டான்.
கீழ் உதடுகளை பற்களால் கடித்தவாரே, மேலும் கிலுமாக தலையசைத்தவளிடம் இருந்து, விசும்பலின் சத்தம்.
P.S
தொழிலைப் பற்றியும், அவனுது டென்னிஸ் வாழ்வின் இழப்பைப் பற்றி பேசுவது போல், மனம்விட்டு யாரிடமும் கூறக் கூட முடியாத, அவனது காதலையும், அதன் இழப்பையும், அதன் வலியையும் மணி கூற, அவன் பேசியதன் மொத்த அர்த்தத்தையும் புரிந்து கொள்ள கூடிய, ஒரே உயிர், அதே அரங்கத்தில் தான் இருந்த்து என்று அவன் அறிந்திருக்கவில்லை.