Chapter 07
ராஜா மூக்கில் வழியும் ரத்தத்தோடு பெவிலியன் திரும்ப,சஞ்சனா ஓடி எதிர்வரவும் சரியாக இருந்தது.அவன் மூக்கில் வழிந்த இரத்தத்தை சஞ்சனா தன் துப்பட்டாவில் துடைக்க துடைக்க அது வழிந்து கொண்டே இருந்தது.அவள் துப்பட்டா முழுக்க அவன் இரத்தம் நனைந்து ஈரமாக்கியது. ஜார்ஜ்ஜை மனதிற்குள் சபித்தாள்.
பதறி அழுது கொண்டே, தன் மொத்த கோபத்தையும் ராஜேஷ் மீது காட்டினாள்.
"அவர் தான் விளையாடி ரொம்ப நாள் ஆச்சு என்று சொன்னார் இல்ல,இப்போ பாருங்க என்னாச்சு" என்று கத்தினாள்.
"சஞ்சனா அமைதியா இரு,எனக்கு ஒன்னும் ஆகலை,அவன் மேல எந்த தப்பும் கிடையாது."
ராஜா சென்று பெவிலியனில் உட்கார,வாசு பேட்டிங் ஆட களத்திற்கு வந்தான்.
ராஜேஷ் வாசுவை பார்த்து"மச்சான் ஒரு புல்டாஸ் போட்டு அவன் warning வாங்கிட்டான்.எப்படியும் பந்து கீழே பட்டு ஸ்லோவாக தான் வரும்.எப்படியாவது தட்டி விட்டு ஒரு ரன் மட்டும் எடுத்து கொடு போதும்.
டேய் அவன் பந்தை உருட்டி விட்டா கூட எனக்கு அடிக்க தெரியாதுடா.ஒரு நல்ல டீமுக்கு அழகு என்ன தெரியுமா?கடைசி பேட்ஸ்மேனை களத்தில் இறங்கவே விட கூடாது.நீங்களும் இருக்கீங்களே.
சரி சரி மச்சான் பார்த்து ஆடு.இந்த ஓவரில் இன்னும் மூன்று பால் தான் இருக்கு.
அந்த மூன்று பந்தையும் வாசு ஒன்றை மார்பிலும்,இன்னொன்றை சூத்திலும்,கடைசி பந்தை முதுகிலும் வாங்கி ராஜேஷிடம் வந்தான்.
என்னடா வாசு முகம் எல்லாம் வேர்த்து கொட்டி இருக்கு.
மச்சான் நல்லா பாருடா ,அது வியர்வை இல்ல,என் கண்ணீர்.அவன் என்னடா பந்து அவ்வளவு வேகமா வீசுறான்.கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் பந்து வந்து உடம்பு மேல படுது.
நீ ஏண்டா கண்ணை மூடற.பந்து வரும் போது பேட்டை வை போதும்.
அடி வாங்கினது கூட பரவாயில்லை மச்சான்,அங்க பாரு பந்தை எங்கே கொண்டு தேய்க்கிறான்.அவன் பந்தில் தேய்த்த எச்சில் எல்லாம் என் சட்டையில் தான்டா இருக்கு.இதை நான்தானேடா வீட்டுக்கு போய் துவைக்கணும்.
சரி சரி,HALF சும்மா வருமா,ஆடு.
அடுத்த ஓவரின் முதல் பந்தில் ராஜேஷ் இரண்டு ரன் எடுக்க முயல,ஆனால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.மீண்டும் வாசு களத்தில் பேட்டிங் செய்ய வேண்டி வந்தது.அதுவும் இரண்டாவது ரன் எடுக்கும் போது ஒரு குட்டி கலாட்டாவே நடந்தது.ஏய் வா வா..இல்லை வராதே வராதே என்று ராஜேஷ் சொல்ல வாசு முற்றிலும் குழம்பி இரண்டாவது ரன்னை எடுக்காமல் திரும்ப ஸ்ட்ரைக்கர் பக்கமே ஓட வேண்டியதாகி விட்டது .
வாசு,எப்படியாவது ஒரு ரன் மட்டும் எடுத்து கொடு போதும்.
நடக்கிறத பேசு,நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்டேடா.முதல் பந்தில் அதுவும் சிங்கிள் எடுத்து விட்டு இப்படி safe ஆ போய் நின்னுகிட்டேயே.
சரி சரி ஆடு.அடுத்த பந்தை வாசு கண்ணை மூடி கொண்டு சுத்த,பந்து எங்கே எங்கே என்று அனைவரும் தேட அது safe ஆக கீப்பரிடம் சென்று இருந்தது.ஆனால் எல்லோரும் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க , நான் அடிச்ச பந்து ஒருவேளை வெளியில் போய் விட்டதோ என்று ஒரு நிமிஷம் வாசு நினைத்தான்.
"டேய் லூசு வெளியில் போ,நீயே ஸ்டம்பை தட்டி விட்டு அவுட் ஆயாச்சு."
நடுவர் ராஜேஷிடம் என்னப்பா அவ்வளவு தானா உங்க டீம் என்று ராஜேஷிடம் கேட்க
அப்பொழுது ராஜா மீண்டும் சஞ்சனாவின் கெஞ்சுதலையும் மீறி களத்தில் இறங்குவதை பார்த்து சந்தோசம் அடைந்தான்.
ராஜேஷ் ராஜாவிடம் வந்து ,மச்சான் இன்னும் 28 பந்து மீதம் இருக்கு,அதுவரை நாம் களத்தில் நின்றால் போதும்.வேற எதுவும் தப்பா பண்ணிட வேணாம்.
சரி ராஜேஷ்.
ராஜேஷ் ,ராஜா இருவரும் single தட்டி கொண்டே இருக்க,ராஜேஷ் மட்டும் அவ்வப்போது 4 ரன்களை அடிக்க ரன் உயர்ந்து கொண்டே வந்தது.14 ஓவர் வரை 75 ரன்கள் எடுத்து வந்து விட்டனர்.கடைசி ஓவரை ஜார்ஜ் வீச வந்தான்.
அவன் வீசிய பந்துகளை இருவருமே லாவகமாக கையாண்டு 5 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தனர்.கடைசி பால் ராஜா களத்தில் நிற்க ராஜேஷ் அவனிடம் அடித்து ஆடு சைகையில் கூறினான்.
ஜார்ஜ் வேண்டுமென்றே பவுன்சர் வீச,இந்த முறை ராஜா தயாராக இருந்து ,அந்த பந்தை பவுண்டரி எல்லை கோட்டை தாண்டி சிக்சர் அடித்தான்.
நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவரில் sales அணி 89 ரன்களை எடுத்தது.
ராஜேஷ் ராஜாவிடம் "எப்படியோ ராஜா ஓரளவு கௌரவமான ஸ்கோரை எடுத்து விட்டோம்,இதற்கு மேல் தோற்றாலும் பரவாயில்லை."
அடுத்து telesales அணி பேட்டிங் செய்ய வந்தது. ஜார்ஜ்ஜும் , சதிஷும் களம் இறங்கி அடித்து ஆடினர். முதல் நான்கு ஓவரில் 44 ரன்களை குவித்தனர்.
ராஜேஷ் ராஜாவை அழைத்து ,எப்படியும் யார் போட்டாலும் ரன் போயிட்டு தான் இருக்கு so நீயே வந்து பந்து போடு என்றான்.
ராஜா பந்து வீச முதல் இரண்டு பந்துகளும் wide ஆக சென்றது.
அதைப் பார்த்து ஜார்ஜ் "டேய் சதிஷ் நாம ரன்னே அடிக்க தேவையில்லை. இவனுங்களே ரன்னை வாரி வழங்கிடுவாங்க.இந்த ஒவரிலேயே மேட்ச்சை முடிச்சு விடு.
சதீஷ் அடுத்த பந்தை கவனக்குறைவாக எதிர்கொள்ள பந்து inswing ஆகி காலுக்கும் பேட்டுக்கும் நடுவில் நுழைந்து ஸ்டம்பை தெறித்தது. முதல் விக்கெட் 46 ரன்களுக்கு விழுந்தது.
ராஜேஷ் சந்தோஷத்தில் ஓடி வந்து ராஜாவை கட்டி பிடித்தான்.
எப்படி மச்சான் என்னால நம்பவே முடியல
ரொம்ப சிம்பிள் ராஜேஷ் ,அவன் சைக்காலஜியில் விளையாடினேன். வேண்டும் என்று முதல் இரண்டு பந்தை வைடாக வீசினேன். மூன்றாவது பந்தும் வெளியில் தான் வரும் என்று அவன் ஏமாந்த சமயம் பந்தை உள்நோக்கி வீச அவன் அவுட் ஆகி விட்டான்.அதுவும் நான் பவுலர்டா.inswing,outswing ரெண்டும் எனக்கு வீச தெரியும்.
சூப்பர்டா, அப்போ கடைசி ஓவரையும் நீ தான் வீச போற
ராஜா அதற்கு "போடா முட்டாள் இன்னும் 44 ரன்கள் தான் அவர்கள் எடுக்க வேண்டும் 65 பந்துகள் மீதம் உள்ள நிலையில் 9 விக்கெட்டுகள் கைவசம் உள்ளது.இந்த மேட்ச் கடைசி ஓவர் வரை போகாது.
இல்ல மச்சான்,என் உள்மனது சொல்லுது.இந்த மேட்ச் கண்டிப்பாக கடைசி ஓவர் வரை போகும்.
அந்த ஓவரிலேயே ராஜா மேலும் ஒரு விக்கெட் எடுக்க telesales அணி ஐந்து ஓவர்களில் 48 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்தது.
விக்கெட் விழுந்த உற்சாகத்தில் அடுத்தடுத்து sales அணியினர் பந்தை கட்டுக்கோப்பாக வீச டெலிசேல்ஸ் அணியும் ரன்னை குவிக்க திணறினர்.சீரான இடைவெளியில் விக்கெட் வேறு விழுந்து கொண்டே இருந்தது. ஆனால் ஜார்ஜ் மட்டும் ஒரு பக்கம் நங்கூரம் போல் நின்று கொண்டு இருந்தான். ஒவ்வொரு தடவை சேல்ஸ் அணி விக்கெட் எடுக்கும் பொழுது சஞ்சனா துள்ளி குதித்து தன் நாயகனை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தாள்.
டெலிசேல்ஸ் அணி 13 ஓவர்களில் 76 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டை இழந்திருந்தது.14 வது ஓவரில் முதல் 5 பந்துகளில் 1,0,2,1,0 என்று மட்டுமே ரன்கள் வந்தது.கடைசி பந்தை கண்ணை மூடி கொண்டு பதினோராவது வீரர் சுற்ற அது பேட்டில் பட்டு கீப்பருக்கு பின் 4 ரன்கள் சென்றது.
அதை பார்த்து ராஜேஷ், டேய் வாசு நீயும் இந்த மாதிரி ஒரு சுற்று சுற்றி இருந்தா நம்ம டீமுக்கு ஒரு நாலு ரன் வந்து இருக்குமில்ல.
நானும் சுத்தினேன் மச்சான்,ஆனா பேட்டில் பந்து படாம ,பேட் தான் ஸ்டம்பில் பட்டு விட்டது.நானெல்லாம் விளையாட வந்ததே பெரிய விசயம் பார்த்துக்க.
ராஜா VS ஜார்ஜ்
கடைசி ஓவர் 6 பந்துக்கள் 6 ரன்கள் TELESALES அணி வெற்றி பெற தேவை.
SALES அணி ஒரு WICKET எடுத்தால் வெற்றி என்ற நிலை.STRIKER முனையில் நிற்பது முதல் ஓவரில் இருந்து களத்தில் இருக்கும் ஜார்ஜ்.
கடைசி ஓவரை ராஜா வீச, ஜார்ஜ் எதிர்கொண்டான்.
முதல் பந்து ஸ்டம்பை நோக்கி யார்க்கராக வீச அந்த பந்தை GEORGE DEFENCE செய்ய மட்டுமே முடிந்தது.
இரண்டாவது பந்தை ஜார்ஜ் ஒரு ஸ்டெப் முன்னாடி வந்து யார்க்கரை புல்டாசாக மாற்றி, ராஜாவின் தலைக்கு மேல் அடிக்க அது நேராக பவுண்டரி லைனுக்கு முன் விழுந்து தொட்டது .இப்பொழுது இலக்கு வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே. நான்கு பந்துகள் மீதம் இருந்தது.
ராஜா ஓடி வந்து அதே லென்த் அதே லைனில் ஆனால் வேகம் வெகுவாக குறைத்து வீசினான். ஜார்ஜ் அடித்து முடித்த பின் பந்து பேட்டை மெதுவாக கடந்து சென்று ஸ்டம்பை பதம் பார்த்தது.கடைசியில் sales அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.
sales அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் சஞ்சனாவும் கலந்து ஆடி கொண்டு இருந்ததை பார்த்து ஜார்ஜ் கோபம் அடைந்தான். ஏற்கனவே தன் பரம எதிரியிடம் தோற்றது ஒருபுறம் ,சஞ்சனா ஆடிக்கொண்டிருந்தது மறுபுறம் என கோபத்தில் அவன் கண்கள் சிவந்தது.
ஜார்ஜ் தன் teammate சங்கீதாவை பார்த்து,அவ ஏன் நம்ம எதிர் அணி பக்கம் போனாள் என்று கேட்க,
அதற்கு சங்கீதா,அவ ராஜாவை காதலிக்கிறா ஜார்ஜ்.போன மாசம் அவ Target முடிக்க அவன் உதவி பண்ணினானம்.உடனே அவன் மேல இவளுக்கு காதல் வந்து விட்டது.
ச்சே,நான் கிரிக்கெட் பிராக்டீஸ் சென்ற இந்த ஒரு வாரத்தில் என்னென்னமோ நடந்து விட்டதே,சஞ்சனா எங்கே போய் விட போகிறாள் என்று நான் கவனக்குறைவாக இருந்த நேரத்தில் இந்த ராஜா முந்தி கொண்டு விட்டானே.வெறும் ஃபீல்டு டிரெய்னிங் ஒருநாள் தானே என்று கவனிக்காமல் விட்டது எவ்வளவு பெரிய பிசகு. ஜார்ஜ்ஜின் மனதில் சஞ்சனாவை கவிழ்க்க திட்டங்கள் உதயம் ஆயின. உன்னிடம் நான் தோற்று கொண்டே இருக்கிறேன் ராஜா.ஆனால் இந்த தடவை அவளை உன்னிடம் இருந்து பிரித்து என்னை காதலிக்க வைத்து உன்னை வாழ்க்கை முழுக்க அழ வைக்க போகிறேன்.இதுவரை நான் உன்னிடம் தோற்ற அனைத்துக்கும் நான் உனக்கு கொடுக்கும் சரியான தண்டனை இது தான் என மனதில் சபதம் எடுத்தான்.
ஜார்ஜ் வீசும் வலையில் சஞ்சனா சிக்குவாளா? சஞ்சனாவிடம் ராஜா தன் காதலை சொல்ல முடிந்ததா? காத்திருங்கள்.
டீம் co ordinator பல்லவி வந்து ராஜேஷிடம் வந்து வாழ்த்துக்களை தெரிவித்தாள்.
சூப்பர் ராஜேஷ் ,ஒரு கேப்டனாக டீமை அருமையா வழி நடத்தினீங்க,கடைசி வரை நின்னு நீங்க அடிச்ச ஸ்கோர் தான் நம்ம டீமை வெற்றி பெற வைச்சது.
ராஜாவிடமும் கை கொடுத்து ,"நீங்களும் அருமையா பந்து வீசி முக்கியமான 4 விக்கெட்களை எடுத்ததால் தான் வெற்றி பெற முடிந்தது.சூப்பர்.மேலும் பல்லவி சஞ்சனாவை பார்த்து " என்ன சஞ்சனா உங்க டீம் தோற்றதிற்கு இங்க வந்து இவங்க கூட கொண்டாடிட்டு இருக்கே.உனக்கும் ராஜாவுக்கும் something ஏதாவது?
சஞ்சனா மௌனமாய் ராஜாவை பார்க்க,ராஜா பல்லவியிடம்"இதுவரை அப்படி ஒன்னும் இல்ல பல்லவி,சஞ்சனா எனக்கு ஒரு நல்ல ப்ரெண்ட் அவ்வளவு தான்"
அப்போ நீ இன்னமும் சிங்கிள் தானே.நான் உன்னை லவ் propose பண்ணலாம் அல்லவா !..
இதை கேட்டு சஞ்சனா கோபித்து கொண்டு போக ,
அய்யோ என்ன பல்லவி காரியத்தையே கெடுத்துட்டீயே,அங்க பாரு வாசு இருக்கான்,அவன் இன்னும் நீ அவனுக்கு கொடுத்த லீட் data எதுவுமே முடிக்கல.கையும் களவுமாகப் சிக்கி இருக்கான்.அவனை விடாதே புடி.ஏய் சஞ்சனா ஒரு நிமிஷம் நில்லு"என்று அவள் பின்னாடி கத்தி கொண்டு ஓடினான்.
ராஜேஷ் பல்லவியிடம் "பல்லவி அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் லவ் பண்றாங்க.ஆனா இன்னும் சொல்லிக்கல.யார் முதலில் சொல்லுவாங்க என்று அவர்களுக்குள் ஒரு போட்டியே நடக்குது.கூடிய சீக்கிரம் யாராவது ஒருத்தர் சொல்லிடுவாங்க.
"ஓ அப்படியா சங்கதி"
ஏய் சஞ்சனா ஒரு நிமிஷம் நில்லு,ஓடிப்போய் அவள் கை பிடித்து நிறுத்தினான்.
சஞ்சனா அவனை பார்த்து"நீ இன்னும் சிங்கிள் தானே,நான் உன்னை லவ் புரோபோஸ் பண்ணவா என்று அவ கேட்கிறா,நீயும் அதுக்கு பல் இளிக்கற.மவனே அப்படியே மூஞ்ச முகரை அடிச்சு உதைச்சிடுவேன் பார்த்துக்க"
பின்ன நீயும் என்கிட்ட காதலை சொல்லல,நானும் உன்கிட்ட காதலை சொல்லல.ஒரு நல்ல ஆஃபர் தானா வரும் போது எப்படி விடறது?
அப்போ அவ பின்னாடியே போக வேண்டியது தானே,ஏன் என் பின்னாடி ஓடி வந்தே !..
"அப்போ அவ பின்னாடி போலாமா?உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே தான்" என்று ராஜா திரும்ப
"போன்னு சும்மா ஒரு வார்த்தை சொன்னா,அப்படியே போய்டுவியா"என்று அவன் கன்னத்தில் சப்பென்று அறைந்தாள்.
"அய்யோ வலிக்குதுடி,என்னடி இப்படி அடிக்கிற"
"நீ என்னை தவிர வேற எவ வந்து உன்கிட்ட லவ் சொன்னாலும் ல,நான் அப்படித்தான்டா அடிப்பேன்"என்று மற்றொரு அறை விழுந்தது.
"அப்போ நீ உன் காதலை சொல்லு கண்மணி"
"முடியாது போடா ,நீ சொல்லு முதலில்"
ராஜா அவள் முகத்தை தன் இரு கரங்களில் ஏந்தி "ஒளி சிந்தும் கண்களை கொண்ட இந்த தேவதைக்கு நான் தகுதியானவனா என்று தெரியல.நான் முன்னாடியே கேட்ட மாதிரி எனக்கு கொஞ்சம் டைம் மட்டும் கொடு அது போதும்"
"முதலில் இந்த தாழ்வு மனப்பான்மையை விட்டு தொலைடா,உனக்கு என்ன குறைச்சல்,சதுர முகம்,மாநிறம்,அகன்ற மார்பு,கம்பீரமா இருக்க,முடிந்த வரை இல்லாதவங்களுக்கு உதவி செய்யற,இது மட்டும் இல்லாம எனக்கு தெரிந்து இதுவரை உனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை.இதை விட ஒரு பொண்ணு ஒரு ஆண் கிட்ட என்ன எதிர்ப்பார்ப்பா சொல்லு?"
"எதிர்பார்ப்பாங்க சஞ்சனா, என்னோட முன்னாள் காதலி வாயாலேயே கேட்டு இருக்கேன்.பெண்கள் அடிப்படையா எதிர்பார்க்கும் நல்ல வேலை,சொந்த வீடு, கார் இது எதுவும் என்கிட்ட இல்ல.நான் இன்னும் தெரு தெருவா சுத்தற sales executive மட்டும் தான் "
"இதெல்லாம் எனக்கு தெரியாதா?அது தெரிஞ்சு தானே நான் உன் கூட வரேன்.அவளும் நானும் ஒண்ணா?போடா லூசு"
ராஜேஷ் வந்து"என்ன மச்சான் பட் பட்டென்று பட்டாசு வெடிக்கிற சத்தம் எல்லாம் கேட்டுச்சு"
ராஜா"அப்படியா அதெல்லாம் ஒன்னும் இல்லையே"
"இல்லை இல்லை. எனக்கு நல்லா கேட்டுச்சு,எங்கே கொஞ்சம் கன்னத்தை காட்டு.என்னடா இப்படி கன்னம் சிவந்து போய் இருக்கு
ஏய் சஞ்சனா ,என்ன என் நண்பனுக்காக கேட்க ஆள் யாரும் இல்லை என்று நினைச்சியா,நான் இருக்கேன்"
ராஜேஷுக்கும் ஒரு அறை கன்னத்தில் சப்பென்று விழுந்தது.
சஞ்சனா"என்னடா உனக்கு இப்போ,எனக்கும் இவனுக்கும் நடுவில் நீ வந்தே உனக்கும் மிதி தான்"
ராஜேஷ் கன்னத்தை பிடித்து கொண்டு"மச்சான் இனிமே நீ யாரோ நான் யாரோ, சஞ்சனா இதுக்கு மேல் நான் உங்க ரெண்டு பேர் நடுவில் வந்தா என்னன்னு கேளு.ராஜா,இனிமேல் உனக்கு தினமும் பட்டாசு வெடிக்கும்,கன்னம் சிவக்கும்.அனுபவி ராஜா அனுபவி. யப்பா என்ன அடி,வீட்டுக்கு போய் கன்னத்தில் ஓத்தடம் கொடுக்கணும் போல இருக்கே"
சரியாக அந்த நேரம் வாசு"ராஜா,நாங்க சரக்கு அடிக்க wine shop போறோம்.வெற்றியை என்ஜாய் பண்ண போறோம், நீயும் வாடா"
அவனுக்கும் ஒரு அறை சப்பென்று விழுந்தது.
சஞ்சனா வாசுவிடம்"டேய் என் முன்னாடியே வந்து அவனை wine shop கூப்பிடறீயா"
வாசு ராஜேஷிடம்."என்னடா பார்க்க பஞ்சு பொம்மை மாறி இருக்கா ஆனா அடி இடி மாதிரி விழுது,கையாடா அது, என் பொண்டாட்டி கூட என்னை இந்த மாதிரி அடிச்சது இல்லைடா.நான் என்னடா தப்பா கேட்டேன்?"
ராஜேஷ் வாசுவிடம்,"டேய் நான் ஏற்கனவே ஒரு ரவுண்ட் அடி வாங்கிட்டு தான் உட்கார்ந்துக்கிட்டு இருக்கேன்.நீ கேட்டது தப்பு இல்ல. கேட்ட இடம்,கேட்ட நேரம் தான் தப்பு.அமைதியா வா மூடிட்டு போலாம்."
சஞ்சனா அவர்களை பார்த்து"டேய் ரெண்டு பேரும் எங்கடா கிளம்பறீங்க"
வாசு அதற்கு"சிஸ்டர் கச்சேரி இன்னும் முடியலையா.கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க"
யாருக்குடா ரெஸ்ட் ?
"உங்களுக்கு தான் சிஸ்டர்.நீங்க அப்புறமா ,வாடா வாசு நாயே என்று ஒரு குரல் கொடுத்தால் போதும் நான் வந்து உதை வாங்கி கொள்கிறேன்"
சஞ்சனா"டேய் இவன் தண்ணி அடிப்பானா?"
"இல்ல சிஸ்டர் அவன் வந்து எங்க கூட கூல் ட்ரிங்க்ஸ் மட்டும் குடித்து கம்பனி கொடுப்பான்."
"இதுக்கு மேல, கூல் ட்ரிங்க்ஸ் குடிக்க கூட இவனை கூப்பிட கூடாது சரியா?"
"இதுக்கு மேல தண்ணி குடிக்கிறப்ப கூட அவனை கூப்பிட மாட்டேன் சிஸ்டர்"
என்னது மறுபடியும் தண்ணியா?
"ஐயோ நான் குடிக்கிற தண்ணிய சொன்னேன் சிஸ்டர்"
"ரெண்டு பேரும் போங்கடா"
"வாடா மச்சான் போவோம்.all the best ராஜா,நீயும் நல்லா வாங்கிட்டு வீடு போய் சேரு "என்று ராஜேஷிம்,வாசுவும் ஓட்டம் பிடித்தார்கள்.
சஞ்சனா ராஜாவிடம் "ஏன் நீ தண்ணி அடிக்க மாட்டியா"
"ம்ஹீம்"
எப்பவுமேவா இல்லை,என் முன்னாடி இன்னிக்கு மட்டுமா?
எப்பவுமே தான்.என் அப்பாகிட்ட இருந்த குடிப்பழக்கத்தினால் என் அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டாங்க என்று நான் கண் கூடாக பார்த்து இருக்கேன் சஞ்சனா.அந்த மாதிரி ஒரு கஷ்டத்தை என்னை நம்பி வரும் பொண்ணுக்கு நான் கொடுக்க மாட்டேன்.
ம், நீ இப்படியே இருந்தா எனக்கு சந்தோஷம்.
(ஆனால் அவளே,அவன் முதல் முறை மது அருந்த காரணமாக இருக்க போகிறாள்)
சரி சஞ்சனா,எங்க உங்க டீம் ஆளுங்களே காணோம்.
அவங்க அப்பவே போய்ட்டாங்க
சரி வா,நான் உன்னை வீட்டில் ட்ராப் பண்ணிடறேன்..
வீட்டுக்கு செல்லும் வழியில்,நீண்ட நாள் கழித்து கிரிக்கெட் விளையாடியதால் ராஜாவுக்கு தோள் பட்டையில் வலி உருவாகி சரியாக வண்டி ஒட்ட முடியவில்லை.
இதில் மேடு பள்ளம் பார்க்காமல் அங்கு அங்கு ப்ரேக் அடிக்க,முதல்முறை சஞ்சனாவின் பஞ்சு போன்ற பந்துக்கள் இரண்டும் அவன் முதுகில் உரச,அவன் உடலில் இதமான சூடு ஏறியது.
என்ன சார் ,இன்னக்கி வண்டி ஓட்ட திணறுகிற மாறி இருக்கு,
மேலும் அவள் மூச்சுக்காற்று அவன் பின் கழுத்தில் பட்டு மூடு ஏறி தீப்பிடிக்க ஏதும் பேசாமல் தட்டு தடுமாறி சஞ்சனா வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
சஞ்சனா அவனிடம்"உன்னோட முன்னாள் காதலி,ஒரு வைரத்தின் மதிப்பு தெரியாம அதை உதறிட்டு போய் இருக்கா,ஆனா எனக்கு அதன் மதிப்பு தெரியும்.நான் என்ன நிலை வந்தாலும் இந்த வைரத்தை விட்டுவிட மாட்டேன்.சரி இப்போ மூக்கில் வலி எப்படி இருக்கு"
ம் ,பரவாயில்ல இரவு ஒரு pain killer மாத்திரை போட்டால் சரியாகி விடும்.
Pain killer மாத்திரை எல்லாம் வேண்டாம்.சஞ்சனா சுற்றும் முற்றும் பார்த்து,யாரும் அருகே இல்லை என்பதை உணர்ந்து,
அவன் மூக்கில் அடிபட்ட இடத்தில் முத்தம் ஒன்று வைத்தாள்.
"ஸ்ஸ்ஸ்.ப்ப்ப்பா சரியான pain killer மாத்திரை இது தான்.போட்ட உடனே வலி மாயமாய் மறைந்து விட்டது.கன்னத்தில் நீ அடித்த அடி இன்னும் வலிக்குது?"
சஞ்சனா அவன் இரு கன்னத்தில் முத்தம் வைக்க
"நெற்றியில் இருந்து மூக்கு வரை வந்தாச்சு.அப்படியே இன்னும் கொஞ்சம் கீழே இறங்கினா இன்னும் நல்லா இருக்கும்."
"ஹா அஸ்கு புஸ்கு,அது நீ காதலை சொல்லும் போது தான் தருவேன்."
"உன் செந்தூர இதழில் சேகரித்து வைத்து இருக்கும் இந்த மலைதேனை அருந்தும் நாளை எதிர்நோக்கி காத்து இருக்கிறேன் என் கண்மணி"
"ச்சீ போடா" என்று வெட்கத்துடன் ஓடினாள்.
நேற்று என் வானம் மழை தரவில்லை.
ஏனோ என் தோப்பில் குயில் வரவில்லை,
வானவில் இருந்தும் வண்ணங்கள் இல்லை,
பூக்கள் இருந்தும் புன்னகை இல்லை,
அரண்மனை வாசல் தாண்டி நான் அன்புக்கு ஏங்கினேன்,
உன்னிடம் சேர்ந்த பின்பு தான் சொர்க்கத்தை வாங்கினேன்,
எனக்கு இந்த சொந்தம் போதுமே..
அவள் காதலுடன் கொடுத்த அந்த முத்தம் அவன் உடம்பில் இருந்த வலியை மட்டுமல்ல ஏறி இருந்த சூட்டையும் காணாமல் போக செய்தது.
ஆனால் இதே போன்று எதிர்காலத்தில் அவள் கொடுக்க போகும் முத்தம்,அவனுள் காமகனலை மூட்டி அவர்கள் இருவரையும் கலவியில் ஒன்றிணைக்க போகிறது எப்படி? ஒரு முத்தம் மோகதீயை அணைத்தது,மற்றொரு முத்தம் மோகதீயை பற்ற வைக்க போகிறது?இயற்கையின் அதிசயத்தை என்னவென்று சொல்ல?.
அடுத்த நாள் ஆபிசில் சஞ்சனா வந்து உட்காரும் போது,அவள் டீம் நண்பர்கள் எல்லோரும் முகத்தை திருப்பி கொண்டார்கள்.யாரும் பேச கூட இல்லை.
சஞ்சனா சங்கீதாவிடம்"Hi சங்கீ ,என்னாச்சுடி எல்லோரும் என்னை பார்த்த உடனே முகத்தை திருப்பிட்டாங்க,"
சங்கீதா அவளிடம் " நம்ம டீம் நேற்று தோத்து இருக்கு,நீ நம்ம எதிரி டீம் கூட போய் ஆடிட்டு இருக்கே.என்கிட்ட பேசாதே "என அவளும் முகத்தை திருப்பி கொண்டாள்.
வழக்கமாக தன் பக்கத்தில் உட்காரும் துர்கா அக்கா கூட இன்று வராதது ,தான் தனிமைப்படுத்த
படுவதை சஞ்சனா உணர்ந்தாள்.
மதிய உணவு இடைவெளியில்
Cafetaria சென்று அவர்களுடன் சாப்பிட உட்கார,அவள் டீம் நண்பர்கள் உடனே எழுந்து வேறு மேசை சென்று விட்டனர்.
அப்பொழுது எதிர்பாராதவிதமாக ஜார்ஜ் சஞ்சனா எதிரே உட்கார்ந்தான்.
நீ கவலைப்படாதே சஞ்சனா,
ஏய் டீம் எல்லோரும் வாங்க.எப்படி இருந்தாலும் சஞ்சனா நம்ம டீம்,நாம அவளை விட்டு கொடுக்கலாமா?வாங்க எல்லோரும் ஒண்ணா சாப்பிடலாம்.
அனைவரும் , ஜார்ஜ்ஜின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அமைதியாக வந்து உட்கார்ந்தனர்.
இங்க பாருங்க டீம்,நம்ம டீமுக்குள்ள,எந்த பிரச்சினையும் எப்பவும் வரகூடாது. முன்ன மாதிரி எல்லோரும் சஞ்சனா கிட்ட பேசி கலகலப்பாக இருங்க.
தாங்க்ஸ் ஜார்ஜ் ,என்று சஞ்சனா சொல்ல,.
பரவாயில்ல சஞ்சனா,நீ சாப்பிடு.
ஜார்ஜ் மனதிற்குள் "இப்போ தாங்க்ஸ் சொல்ல வைச்ச உன் வாயால் கூடிய விரைவிலேயே ஐ லவ் யூ என்று சொல்ல வைக்கிறேன்" என்று சொல்லி கொண்டான்
சங்கீதா,சிறிது நேரம் கழித்து ஜார்ஜ்ஜை தனிமையில் பார்த்து"என்ன ஜார்ஜ் நீ சொல்லி தானே நாங்க எல்லோரும் சஞ்சனாவிடம் பழகுவதை தவிர்த்தோம்.இப்போ நீயே வந்து கூட பழக சொல்ற."
"எல்லாம் காரணமாக தான் சங்கீ,இப்போ தானே இந்த ஜார்ஜ் முதல் அடியை எடுத்து வச்சி இருக்கேன்.இனி அடுத்து அடுத்து நான் எடுத்து வைக்கும் அடியில் அந்த சஞ்சனாவிடம் இருந்து விலகி ராஜா விலகி போவான்.இந்த ஜார்ஜ் நெருங்கி போவான்.
அப்புறம் எனக்கு நீ ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு.நாளைக்கு என்னோட பர்த்டே.எங்க வீட்டில் celebrate பண்ண போறோம்.எப்படியாவது சஞ்சனாவை மட்டும் அங்கே கூட்டிட்டு வந்துடு."
"அவ வருவாளா ஜார்ஜ்,"
ஜார்ஜ் அதற்கு "வர வைக்க வேண்டியது உன் பொறுப்பு சங்கீ."