Chapter 10
அடுத்த நாள் காலை சஞ்சனா ராஜா வழக்கமாக செல்லும் டீக்கடை அருகே காத்து இருந்தாள்.
ஆனால் அப்பொழுது ராஜா வராமல் ராஜேஷ் மட்டும் வந்தான்.
அண்ணா,ராஜா எங்கே? வரலையா..!!
இந்த அண்ணன் கிண்ணன் கூப்பிடற வேலை வைச்சிக்காத சஞ்சனா,
சரி கூப்பிடல,எனக்கு ராஜா வேணும் எங்கே அவன்?
எதுக்கு என் நண்பனை தொடர்ந்து காயப்படுத்தி கொண்டே இருக்கவா?அது தான் உனக்கு வசதியா புது லவ்வர் கிடைச்சாச்சு இல்ல.அப்புறம் என்ன?
சப்பென்று ஒரு அறை ராஜேஷ் கன்னத்தில் விழுந்தது.
ஏய் என்னடி ,என் நண்பனை ஏமாத்திட்டு என்னையே அடிக்கிறீயா.பொண்ணு ஆச்சேன்னு பார்க்கிறேன்.இல்லைன்னா கன்னம் கின்னம் எல்லாம் பழுத்துடும் பார்த்துக்க.
பின்ன என்னடா, அரைகுறையாக பார்த்திட்டு உளற வேண்டியது..!நான் ஜார்ஜ் லவ்வை ஏற்று கொண்டதை நீ பார்த்தீயா. அங்கே உண்மையா என்ன நடந்தது தெரியுமா?
நாங்க தான் பார்த்தோமோ ,நீ அவன் கிட்ட இருந்து ரோஜா பூவை வாங்கீனேயே.
ரோஜா பூவை வாங்கினேன்.ஆனா அவன் கொடுத்த கீரிட்டிங் கார்டு வாங்கினேனா.பெண் புத்தி தான் பின்புத்தி என்று சொல்லுவாங்க.உங்க ரெண்டு பேர் புத்தியும் அப்படி தான் இருக்கு.நான் நேற்று அவன் நம்பருக்கும், உன் நம்பருக்கும் ஃபோன் பண்ணினா ரெண்டு பேரும் என்கிட்ட பேசாம போதையில் உளறிட்டு இருக்கீங்க.
அப்போ ஜார்ஜ்ஜோட காதலை நீ ஏற்று கொள்ள வில்லையா?
இல்லை.என் மனசில் ராஜாவை வச்சிக்கிட்டு அவனுக்கு எப்படி ஓகே சொல்ல முடியும்?
அப்போ அங்க என்ன தான் நடந்தது?
அதை நான் ராஜாகிட்ட தான் சொல்ல முடியும்.என்னை அவன்கிட்ட உடனே கூட்டிட்டு போ.
எனக்கு அதை விட வேற என்ன முக்கியமான வேலை சஞ்சனா,வா உடனே கூட்டிட்டு போறேன்.
ராஜா ரூம் வந்தவுடன்,ராஜேஷ் தீடீர் ப்ரேக் அடித்து நின்றான்.
அய்யோ மேல நிலைமை வேற சரியில்ல.நேற்று சரக்கு அடித்து வாந்தி எல்லாம் எடுத்து வச்சி இருக்கோம்.அதுவும் சஞ்சனா அவன் ஆளு சரக்கு அடிச்சு இருப்பதை பார்த்தா என்னை தான் வெளுத்துடுவா.அப்படியே எஸ் ஆயிட வேண்டியது தான்.
"என்ன ஆச்சு அப்படியே நின்னுட்ட,வா வந்து எந்த ரூம் என்று காட்டு."
சஞ்சனா ஒரு முக்கியமான ஃபோன் கால் எனக்கு இருக்கு.நீ என்ன பண்ணு ,நேராக மேலே மொட்டை மாடி போ,ஒரே ஒரு சிங்கிள் ரூம் தான் இருக்கும்.அது தான் ராஜாவோட ரூம்.நான் ஃபோன் பேசி முடித்து விட்டு வரேன்.
டேய் போதையில் அவன் இருந்தால் எழுப்பி விட நீ கொஞ்சம் துணைக்கு வா,
No no, அதுகெல்லாம் நான் சரிப்பட்டு வர மாட்டேன் ,இதுக்காக மேலே ஒரு பீஸ் உனக்கு உதவி செய்ய(அடி வாங்க) காத்திட்டு இருக்கு சஞ்சனா.நீ மேலே போ.
சஞ்சனா மாடி படி ஏற,
"வாசு இன்னிக்கு உனக்கு சங்கு தான்டி ஊஊஊஊஊஊ தான். தாரை தப்பட்டை மேளம் எல்லாத்துக்கும் சொல்லிட வேண்டியது தான்."என்று ராஜேஷ் சிரித்தான்.
மொட்டை மாடியில் சிமெண்ட் ஷீட் போட்ட ஒரு அறை.அறையின் உள்ளே ஒரே ஒரு அலமாரி,அதில் துணிகள் அடுக்கி வைக்கபட்டு இருந்தது.ஒரு சீலிங் பேன்.பெயருக்கு ஒரு மேசை,ஒரு நாற்காலி.அந்த மேசையும் இஸ்திரி போடுவதற்கு மட்டுமே ராஜா உபயோகப்படுத்துவான்.படுக்க பாய்.ஓரமாக ஒரு சின்ன dust bin.ஒரு 25 லிட்டர் water can.அவசரத்திற்கு சமைக்க ஒரு ஸ்லாப் இல் induction stove மற்றும் சில பாத்திரங்கள் இவை மட்டுமே அந்த அறையில் இருந்தன.பாத்ரூம் அறையின் வெளியே ஒட்டி இருந்தது.சொல்ல போனால் பூவே உனக்காக படத்தில் வரும் அறையை போல தான். பரந்து விரிந்த மொட்டை மாடி எல்லாம் அவன் ராஜாங்கம் தான்.
டேய் ராஜா,உன் டூத் பிரஷ்ஷை நான் யூஸ் பண்ணிக்கவா என்று கேட்டு கொண்டே பாத்ரூமில் இருந்து வாசு ஜட்டியோடு வெளியே வரவும்,சஞ்சனா மொட்டை மாடி உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
வாசு அவளை பார்த்தவுடன்,திடுக்கிட்டு வந்த வழியே திரும்பி சென்று தாளிட்டு கொண்டான்.சஞ்சனாவும் திரும்பி கொண்டு கண்ணை மூடி கொண்டாள்.
டேய் கண்றாவி பிடிச்சவனே,இப்படி தான் ஜட்டி போட்டுட்டு வெளியே திரிவீயா.பேண்ட் போட்டுட்டு வெளியே போடா.
"சிஸ்டர்,இது பேச்சுலர் ரூம்,கொஞ்சம் இப்படி அப்படி தான் இருக்கும்.நீங்க தான் வரும் பொழுது முன்னாடியே சொல்லிட்டு வரணும்."
குடித்து விட்டு பண்ணிய அலப்பறையில் அறை முழுக்க அலங்கோலமாகி இருந்தது.ராஜா முதல் முறை குடித்ததால் அங்கங்கே வாந்தி வேறு எடுத்து வைத்து இருந்தான்.பாயில் கவுந்து அடித்து படுத்து இருந்த ராஜாவின் தலையை மடியில் வைத்து கொண்டு "டேய் எந்திரிடா "என்று அவனை எழுப்ப லேசாக கண் திறந்தான்.
என்ன இது நம்ம தலையணை இப்படி மெத்து மெத்தென்று இருக்காதே,லேசாக ராஜா கண் விழிக்கும் போது முலை குன்றுகளின் வழியே அவள் நிலவு முகம் தெரிய "ஏய் சஞ்சனா,கண்ணை மூடினாலும் வர,திறந்தாலும் வர.உன்னை மறக்க முடியலடி, உன் கவிதை பாடின கண்களும்,காதல் பேசின கைகளும் பொய்யா சஞ்சனா?கடைசியில் நீயும் என்னை விட்டு போய்ட்டியே.கண்ணை திறந்தா கூட கனவில் வந்த உன் முகம் தான்டி முன்னே வருது..
டேய் இது கனவு இல்லடா,நிஜம் தான்.டேய் வாசு உள்ளே என்னடா பண்ற,வெளியே வாடா பன்னி.
வாசு ஆடை அணிந்து கொண்டு வெளியே வர,சஞ்சனா அவனை பார்த்து" என்னடா இவனுக்கு ஊத்தி கொடுத்தீங்க.இன்னும் போதை தெளியாமல் இருக்கான்."
அது வந்து சிஸ்டர்,காலையில் கூட உங்க நினைப்பாகவே புலம்பிட்டு இருந்தான்.தொந்தரவு தாங்க முடியல.அது தான் மீதம் இருந்த சரக்கை நான் தான் கொஞ்சம் அவன் வாயில் ஊற்றி விட்டேன்.
அடப்பாவி, உன்னை ..…..! சரி அப்புறமா உன்னை கவனிச்சுக்குறேன்.முதலில் இவனை வந்து ஒரு கை பிடித்து வெளியே வந்து உட்கார வைடா.
வாசுவும், சஞ்சனாவும் ராஜாவை மொட்டை மாடியில் உட்கார வைத்தனர்.சஞ்சனா பக்கெட் பக்கெட்டாக தண்ணியை எடுத்து வந்து ராஜா மேலே ஊற்றினாள்.ராஜாவின் தலையை பிடித்து வாளியில் உள்ள தண்ணீரில் முக்கினாள்.
"அய்யோ அய்யோ யாராவது ஓடி என் நண்பனை வந்து காப்பாத்துங்க,அவன் மூச்சு முட்டி செத்துட போறான்."வாசு அலற
சஞ்சனா வாசுவுக்கு,ஒரு அறை பளாரென்று கொடுத்தாள்.
சஞ்சனா வாசுவிடம்"ஏண்டா நல்லா இருந்தவனை குடிக்க வைச்சு கெடுத்துட்டு இப்போ வந்து இங்கே கத்திட்டு இருக்க,எங்க ரெண்டு பேருக்குள்ள நடுவில் யாராவது வந்தீங்க,அங்கேயே கொன்னுடுவேன் பார்த்துக்க.போய் கீழே நின்னு யாரும் மேல வராம பாரு போ.நானா ஃபோன் பண்ணும் போது தான் ரெண்டு பேரும் மேலே வரணும்.புரிஞ்சுதா"
வாசு கன்னத்தில் கை வைத்து கொண்டு மௌனமாக தலையாட்டினான்.
"சிஸ்டர் ஒரே ஒரு சந்தேகம்,அப்படி ரெண்டு பேரும் மேலே தனியா என்ன பண்ண போறீங்க"
"இங்கே கொஞ்ச வாயேன்"சஞ்சனா கூற வாசு அருகே வந்தான்.
வாசுவின் தலையில் கையில் இருந்த கூஜாவினால் ஓங்கி தலையில் அடித்து"இப்போ தானே சொன்னேன்.எங்க ரெண்டு பேருக்குள்ள என்ன வேணும்னா நடக்கும்.குறுக்கே வந்தே அவ்வளவு தான்"
வாசு தலையை தேய்த்து கொண்டே சிறிது தூரம் சென்று "சிஸ்டர் ,நீங்க குளிப்பாட்ட அவன் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல, விட்டா குழந்தையே கொடுத்துடுவான் பார்த்து உஷாரா இருங்க."என்று வாசு சொல்ல,சஞ்சனா கூஜாவை தூக்கி எறிய அதில் இருந்து தப்பி கீழே ஓடினான்.
வாசு தலையிலும் , கையிலும் கை வைத்து கொண்டு வருவதை பார்த்து ராஜேஷ்"என்ன வாசு மேலே பூஜை எல்லாம் நடந்துச்சு போல"
இப்ப தான் அவனுக்கு அபிசேகம் எல்லாம் நடந்துட்டு இருக்கு.எனக்கு தான் மணி அடிச்சிட்டா மச்சான்.
தெரியும்டா வாசு,அதுக்கு தான் நான் உஷாரா இங்கேயே நின்னுட்டேன்.
அவ அடிச்சது கூட பரவாயில்ல மச்சான்.ஆனா என்னை வாட்ச்மேன் ஆக்கி விட்டா.அவங்க ரெண்டு பேர் நடுவில் யாரும் வரக்கூடதாம்.அதுக்கு யாரும் மேல வராம நான் காவல் இருக்கனுமாம்.அப்படி என்ன மச்சான் மேல நடக்கும்?
வாயேன் வாசு,அதை அவ கிட்டேயே போய் மேல கேட்டு விடலாம்?
அய்யோ நான் வர மாட்டேன்பா,இப்ப கூட கடைசியில் அந்த கூஜாவை தூக்கி எறிஞ்சா பாரு,சரியா என் தலையை நோக்கி வந்தது.மயிரிழையில் உயிர் தப்பி வந்து இருக்கேன்.
ராஜாவின் போதை சற்று தெளிந்தது.
சஞ்சனா நீயா..!! நீ எப்படி இங்கே? போதை ஓரளவு தெளிந்து ராஜா கேட்க
போய் உடை மாற்றி கொண்டு வா,நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.
சஞ்சனா சூடு தண்ணீரில் லெமன் டீ அவனை போட்டு குடிக்க வைத்தாள்.கொஞ்ச நஞ்ச போதையும் கீழே இறங்கியது.
சஞ்சனா ராஜாவிடம் " இப்போ என்ன நடந்துச்சு என்று சார் தண்ணி எல்லாம் அடிக்க ஆரம்பிச்சுட்ட,"
எல்லாம் உன்னால தான் சஞ்சனா,ஜார்ஜ் உன்கிட்ட வந்து காதலை சொன்னப்ப நான் நொறுங்கிட்டேன்.அந்த வலியை குறைக்க தான் குடிச்சேன்.என்று தலையை குனிந்து கொண்டே சொல்ல
டேய் நிமிர்ந்து என் கண்ணை பார்த்து பேசுடா.
நான் ஜார்ஜ் காதலை ஏற்றுக் கொண்டேனா?அதை நீ பார்த்தியா?
நீ அவன் கிட்ட சிரித்து கொண்டே பூ வாங்கினயே சஞ்சனா,அதை நான் பார்த்தேனே..!அதுவும் இந்த மாதிரி நடப்பது ஒன்னும் எனக்கு புதுசு இல்லையே.
முட்டாளாடா நீ,நான் உன்கிட்ட பழகுவதிற்கும் ,மத்தவங்ககிட்ட பழகுவதிற்கும் வித்தியாசம் உனக்கு தெரியலையா. நான் உன் கூட டான்ஸ் ஆடும் போது கூட போட்டியா இல்லாம ஜோடியா தான்டா ஆடினேன்.உன்னை தவிர வேறு யார் இருந்தாலும் நான் ஆடி இருக்கவே மாட்டேன் புரிஞ்சிக்க.ஒரு பொட்டை பொண்ணு அத்தனை பேர் முன்னாடி உன் கூட ஜோடியா ஆடும் போதே தெரிய வேணாம், அவ உன்னை எவ்வளவு விரும்புறா என்று..!!
தெரியும் சஞ்சனா,நான் நேற்று உனக்கு ஃபோன் பண்ணேன்.அப்போ சங்கீதா என் மேல நீ கோபமாக இருப்பதாகவும்,என்னை நீ பார்க்க விரும்பல என்றும் சொன்னா.இருந்தும் நான் உன் மேல உள்ள நம்பிக்கையில் தான் நேரில் வந்தேன். அப்போ தான் ஜார்ஜ் அவன் உன்கிட்ட காதலை சொல்லும் போது அவன் கையில் இருந்து நீ பூ வாங்கின.
ஓ ,சங்கீதா இந்த மாதிரி வேற சொல்லி இருக்காளா.!சரி நீ கேட்க வேண்டியது தானே?சஞ்சனா ஏன் கோபமாக இருக்கா என்று?
நான் கேட்டேன் சஞ்சனா அதுக்கு அவ ,நீ பரிசு வாங்கும் போது நான் இல்லையாம்.அதனால் நீ கோபப்பட்டே என்று சொன்னா.எனக்கு அப்படியே வந்து உன் கன்னத்தில் ஒரு அறை விடனும் போல இருந்தது.
விட வேண்டியது தானே ! என்னை அடிக்கிற உரிமை மட்டும் இல்ல அணைக்கிற உரிமையும் உனக்கு மட்டும் தான்.இங்க பாரு ராஜா,நீ எதனால் தடுமாறி விழுந்தே.முந்தா நாள் இரவு ஏன் என் போனை நீ எடுக்கல என்ற எல்லா விசயமும் எனக்கு தெரியும்.அந்த ஜார்ஜ் உனக்கு கொடுத்த ஜூஸில் தூக்க மாத்திரை கலந்து இருந்தான்.
ஓ ,அதனால் தான் எனக்கு தூக்கம் தூக்கமாக வந்துச்சு.நான் கூட இரத்தம் கொடுத்ததில் வந்த சோர்வு என்று நினைச்சுட்டென் சஞ்சனா.சரி ஜார்ஜ் கிட்ட பூ வாங்கிய அப்புறம் என்ன தான் நடந்தது.?
ராஜா ,இந்த உலகில் நான் விட்டு கொடுக்க முடியாத ரெண்டு பேர் யார் என்றால்,ஒன்னு என் அப்பா,இன்னொன்னு நீ.உனக்கென பிறந்தவடா நான்.உன் மேல நான் கோபப்படுவேன்,அடிப்பேன்,ஏன் சமயத்தில் கடிக்க கூட செய்வேன். ஆனா எப்பவும் உன்னை விட்டு போக மாட்டேன். உனக்கு ஒன்னு என்றால் நான் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாது.அன்னிக்கு கிரிக்கெட் போட்டியில் ஜார்ஜ் வேண்டும் என்றே உன் மூக்கை உடைத்து காயப்படுத்தியதை பார்த்து நான் சும்மா இருப்பேன் என்று நினைச்சீயா,அன்றில் இருந்து அவனை பழி வாங்க சமய
ம் பார்த்துட்டே இருந்தேன்.
Flashback
ஐ லவ் யூ சஞ்சனா என்று ஜார்ஜ் கூறி பூவை கொடுக்க சஞ்சனா வாங்கி கொண்டு"கீதா அங்கே ரங்கோலி நடுவில் வைக்க ரோஜா கேட்டீயே , இந்தா இதை use பண்ணிக்க."சஞ்சனா கோலம் போட்டு கொண்டு இருந்த அவளிடம் கொடுக்க
ஜார்ஜ் அதை பார்த்து கோபமா"சஞ்சனா அந்த ரோஜா உனக்கு,காதலின் சின்னமா உன்கிட்ட கொடுத்தேன்.அதை போய் நீ தரையில் வைக்கிற.."
ஜார்ஜ், நான் ராஜாவை காதலிப்பது உனக்கு தெரியுமா?
ம்,தெரியும் சஞ்சனா,அவன் உன் அழகுக்கும் அறிவுக்கும் கொஞ்சம் கூட தகுதி இல்லாதவன்
நான் அவனை காதலிப்பது தெரிந்தும் நீ என்னிடம் வந்து காதலை சொல்லுகிறாய் பலே.இதில் இருந்தே தெரியுது நீ எவ்வளவு சுயநலம் பிடித்தவன் என்று"சஞ்சனா பதில் தாக்குதல் தொடுத்தாள்
ஜார்ஜ் உஷாரானான்.இவ மத்த பொண்ணுங்க மாறி கிடையாது.கொஞ்சம் வார்த்தையை கவனமாக தான் விடனும் என்று நினைத்தான்.
அப்படி இல்ல சஞ்சனா,நான் விரும்புற பொண்ணை ராணி மாறி வைச்சிக்க ஆசைப்படறேன்.நீ என் வீட்டை பார்த்து இருப்பே.என் அப்பா,அம்மா எல்லோரும் உன்கிட்ட எவ்வளவு அன்பா நடந்துகிட்டாங்க என்று உனக்கு தெரியும்.அந்த ராஜா கூட போன உனக்கு என்ன கிடைக்கும்?.மாச சம்பளத்தை நம்பி பிழைக்கும் அன்றாடங்காச்சி அவன்.ஒரு லோயர் மிடில் கிளாஸ் அவனால் உனக்கு பெருசா என்ன சுகத்தை கொடுக்க முடியும் சொல்லு.ஒரு கார் கூட வாங்க முடியாது அவனால்.கடைசி வரை நீ அவனுடன் வாடகை வீட்டில் தான் குடும்பம் நடத்தனும்.
ஓ.அப்போ உன் வீடு,வசதி,ஆடம்பரம் இவற்றை பார்த்து மயங்கி அவனை விட்டு உன்னுடன் வந்து விடுவேன் என்று நினைத்து தான் உன் பிறந்த நாள் விழாவிற்கு கூப்பிட்டே இல்ல.
ஜார்ஜ் பொறுமை இழந்து"சஞ்சனா இப்போ கூட நான் "ம்"என்று சொன்னால் என் பின்னால் வர நூறு பெண்கள் இருக்கிறார்கள்.என்னோட உயரம் என்னவென்று தெரியாம நீ பேசாத.ஒரு ஆர்டர் விட்டு கொடுத்தான் என்பதற்காக எல்லாம் அவனை காதலிப்பது எல்லாம் டூ மச் சஞ்சனா.நான் அப்படி அல்ல,நீ என்னை காதலித்தால் கிடைக்கும் சொகுசு வாழ்க்கையை கொஞ்சம் நினைத்து பார்.அவனை விட நான் இரண்டு ஆர்டர் விட்டு கொடுத்து உன்னை பரிசு வாங்க வைத்துள்ளேன்.
அவனும்,நீயும் ஒண்ணா ஜார்ஜ்,அவன் நான் யாரென்றே தெரியாம ,எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் செய்த உதவிக்கும்,விட்டு கொடுத்தால் நான் கிடைப்பேன் என்று பிரதிபலனை எதிர்பார்த்து நீ செய்த உதவிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.உன்னால் வாங்கிய பரிசு,உன் மேசை டிராயரில் தான் இருக்கு போய் எடுத்துக்கோ.இன்னொன்னு புரிஞ்சிக்க .நான் ராஜாவை காதலிப்பது அந்த ஒரு காரணம் மட்டுமல்ல, எங்களுக்குள் 7 வருஷ பந்தம் இருக்கு.அதை நானே அவனுக்கு இன்னிக்கு தான் சொல்ல போறேன்.
ஜார்ஜ்"வீடு, கார்,ஒழுங்கான படிப்பு இது எதுவும் இல்லாத அந்த பிச்சைக்காரனை நம்பி போனால் நீயும் பிச்சை தான் எடுக்கணும் சஞ்சனா.
"Mind your words ஜார்ஜ்,இன்னொரு தடவை அவனை பற்றி தப்பா ஏதாவது பேசின அவ்வளவு தான்.அவன் கால் தூசிக்கு சமம் ஆக மாட்டே நீ எல்லாம்.அவன் கிட்ட நீ நினைக்கிற மாறி காசு இல்ல தான்.ஆனால் தன்னால் முடிந்த அளவு தினமும் முடியாதவங்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கிறான்.ஆனா நீ ஒரு பிச்சைகாரனுக்கு 5 பைசா கூட போட மாட்டே.உன்னை மாதிரி அப்பா,அம்மா சம்பாதித்து வைத்த காசில் வளர்ந்தவன் கிடையாது அவன். தன்னோட சுய முயற்சியில் வளர்ந்தவன்.எனக்கு அவன் கூட வாடகை வீட்டில் இருந்தால் கூட சந்தோஷம் தான்.இந்த கார்,வீடு இது எதையும் எதிர்பார்த்து நான் அவனை காதலிக்கல.
"சஞ்சனா, நான் சொன்னதால் தான் டீம் மெம்பர் எல்லோரும் உன்கிட்ட பேச ஆரம்பித்து இருக்காங்க.ஞாபகம் இருக்கட்டும்."
ச்சீ போடா,எனக்கு நீங்க யாருமே பேசவில்லை என்றாலும் எனக்கு கவலை கிடையாது.ராஜா ஒருத்தன் போதும்.அவனுக்காக நான் எதையும் இழக்க தயார்.
சஞ்சனா உனக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தப்ப நான் தான் உன்னை காப்பாற்றினேன் தெரியுமா?
சஞ்சனா அதை கேட்டு வாய் விட்டு சிரித்தாள்.
என்ன அந்த கஸ்டமர் வந்து சத்தம் போட்டதை பற்றி சொல்றியா.
ஆமாம்.
அங்க தான் நீ என்கிட்ட வந்து மாட்டிகிட்ட ஜார்ஜ்.நீ என்னவனின் மூக்கை கிரிக்கெட் போட்டியில் வேண்டும் என்றே உடைத்ததற்கு உன்னை பழிவாங்க காத்து கொண்டு இருந்தேன்.சரியா நீயும் வந்து மாட்டின.எப்படி எப்படி .நீயே உன் உறவினரை கால் பண்ண சொல்லி enquiry கொடுக்க வைத்து,அதை என் Basket இல் போட வைத்து ,என்னை அவரிடம் பேச வைத்து ,வேண்டும் என்றே அவரை பொய் சொல்ல வைத்து என்னை மாட்டி விட்டு நீ காப்பாற்றுவது போல் சூப்பராக நடித்தாய் ஜார்ஜ்.ஒரு சூப்பர் நாடகம் நடத்தின.
பிளான் எல்லாம் நல்லா தான் போடற,ஆனா கடைசியில் கோட்டை விடுகிறாயே.நான் கஸ்டமர் கிட்ட பேசிய call recording கேட்டா போதும் யார் மீது தவறு என்று.அதை எடுப்பதா எனக்கு சிரமம்.இதில் முட்டாள் மாறி , install பண்ணும் டெக்னீஷியன் கிட்ட என்னோட உறவினர் வீடு தான்,கொஞ்சம் நல்லா install பண்ணி கொடு என்று உன்னை நீயே வேற போட்டு கொடுத்துகிட்டே. நீ பண்ணின தில்லு முல்லு,எல்லாவற்றையும் ஆதாரத்தோடு call recording ,டெக்னீஷியன் கிட்ட எல்லா தகவலையும் வாங்கி நாராயணன் சார் கிட்ட மெயில் அனுப்பி ஆச்சு.இன்னும் கொஞ்ச நேரத்தில் ராஜா வந்து என்கிட்ட உன் முன்னாடி அவன் காதலை சொல்ல போறான்.நானும் அவன் காதலை ஏற்று கொள்ள போகிறேன்.ஒரே நேரத்தில் உனக்கு இரு தண்டனை.
துர்கா குறுக்கே "ராஜா வந்துட்டு போய்ட்டான் சஞ்சனா "
எப்பக்கா?..
இப்போ தான் கொஞ்ச நேரம் முன்னாடி சஞ்சனா,நீ ஜார்ஜ் கிட்ட இருந்து பூவை வாங்குவதை பார்த்து கண்ணில் கண்ணீரோடு திரும்பி போய்ட்டான்.
அப்பொழுது நாராயணன் சார்,சஞ்சனா,ஜார்ஜ் இருவரையும் தன் அறைக்கு உடனே வர சொன்னதாக ஆள் அனுப்பினார்.
நாராயணன்(vp)சார் அறையில்
நாராயணன் இருவரிடம்"சஞ்சனா,நான் உன் மெயிலை பார்த்தேன்.இதை என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்ததிற்கு நன்றி.ஜார்ஜ் நீ இந்த மாறி கம்பனி பேரை உன்னோட சுயநலத்திற்காக damage பண்ணுவது மன்னிக்க முடியாத குற்றம்.நான் உனக்கு உடனே warning லெட்டர் hr மூலமா issue பண்ண சொல்லி இருக்கேன்.அடுத்த financial year வரை நீ அடுத்த லெவல் போக முடியாது.இன்னொரு தடவை இந்த மாதிரி நடந்தால் உன்னோட வேலையை உடனடியாக இழக்க நேரிடும்.மேற்கொண்டு நீ எங்கும் வேலை பார்க்க முடியாத படி உன் கேரியரில் பிளாக் மார்க் வந்து விழும்.This is the last warning.
சஞ்சனா தன் முயற்சியில் வெற்றி அடைந்து வெளியே வர,ஜார்ஜ் மனதில் மேலும் ராஜா,சஞ்சனா மேல் வன்மம் வளர்ந்து பற்றி எரிந்தது.
சஞ்சனா அவனை பார்த்து,இங்க பாரு ,ராஜா நேரடியாக மட்டும் மோதுவான்.அப்புறம் போன போகுது என்று அப்படியே மறந்து விட்டு விட்டு போய்டுவான்.ஆனா சஞ்சனா மறக்கவும் மாட்டாள், போனால் போகுது என்று விடவும் மாட்டாள்.சந்தர்ப்பம் வரும் வரை பொறுமையா இருந்து சரியா உன்னை சிக்க வைச்சு எப்போ,எப்படி உன்னை பழி வாங்குவேன் என்று உனக்கு தெரியாது.விளைவுகள் ரொம்ப மோசமாய் இருக்கும்.கொலையும் செய்வாள் பத்தினி என்று தான் கேள்விப்பட்டு இருப்பே.ஆனால் ராஜாவுக்காக இந்த சஞ்சனா எதையும் செய்வாள் என்று எச்சரித்து விட்டு சென்றாள்.
இது தான் நடந்தது என்று சஞ்சனா சொல்ல, கேட்டு ராஜா அயர்ந்து போனான்.
"என்ன சஞ்சனா இப்படி பண்ணிட்டே,அவனுக்கு இன்னும் கொஞ்ச நாளில் steps.அவன் அடுத்த லெவலுக்கு போய் இருக்க முடியும்."
ராஜா எனக்கு தீங்கு செய்தால் போனால் போகுது என்று மன்னித்து விட்டுடுவேன்.ஆனா உனக்கு எதுனா தீங்கு நினைச்சா நான் சும்மா கூட இருக்க மாட்டேன்.அதை விடு உன் ஸ்டெப்ஸ் ரிசல்ட் எப்போ வருது.
ம்ம்.அது இன்னும் கொஞ்சம் லேட் ஆகும் என்று நினைக்கிறேன் சஞ்சு.எப்படியும் பதினைந்து நாளாவது ஆகும்.
சரி சரி நேற்று நீ சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லு,நான் என் காதால் அந்த வார்த்தையை கேட்கணும்.
ஐயோ இப்போ என்கிட்ட கிரீட்டிங்ஸ் கார்டும் இல்ல,பூவும் இல்லையே.ம் ஒரு நிமிஷம் சஞ்சனா,வேகமாக உள்ளே சென்றான்.
ஒரு பேப்பரை எடுத்து மடமடவென அவள் உருவத்தை வரைந்தான்.
அவள் முன்னே ஒரு கால் மடித்து உட்கார்ந்து அவள் படத்தை அவளிடமே நீட்டி"கண்மணி உன் தாமரை முகத்தை விட அழகான வாழ்த்து மடல் ஒன்று இந்த உலகிலே கிடையாது.அன்பே..!எந்தன் காதல் சொல்ல ஒரு கணம் போதுமே,அதை நானும் மெய்ப்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டுமே.எனக்கு அந்த வாய்ப்பை தருவாயா?I love you as forver " என்று சொல்ல அவள் கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்து அவனை அள்ளி கட்டி கொண்டாள்.
இந்த ஒரு நிமிஷத்துக்காக தான் நான் இவ்வளவு நாள் காத்திட்டு இருந்தேன் என்று அவன் முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தாள்.
அவள் முகத்தை அவன் ஒரு விரலால் தூக்கி,அவள் கண்ணை பார்த்து "என் சுட்டு விரல் உன் பூ மேனியில் பட்டவுடன் இதழில் வழியும் தேனை ருசிக்கவா"என்று அவன் கேட்க
ச்சீ போடா என்று அவள் வெட்கப்பட்டு ஓட, ராஜா அவள் கையை எட்டி பிடித்தான்.அவள் இதழோடு இதழ் கலக்க அவன் முகத்தை கொண்டு வர அவள் கண்களை மூடினாள்.இருவர் இதழ்களும் சந்தித்தன.இருவரும் யார் இதழில் சுவை அதிகம் என தேடி மெய்மறந்து இருவரும் முத்தம் தர,
எங்க ரெண்டு பேரை கீழே விளக்கு பிடிக்க வைச்சிட்டு மேல ரெண்டு பேரும் ரொம்ப நேரமா என்னடா பண்றீங்க என்ற ராஜேஷ் குரல் கேட்டு இருவரும் அவசரமாக விலகினர்.
நம்மை ரெண்டு பேரை பிரிப்பதற்கே வந்து விடுவாங்க உங்க பிரண்ட்ஸ் என சஞ்சனா மனதுக்குள் பொருமி கொண்டே "டேய் நான் தான் ஃபோன் பண்ற வரைக்கும் யாரும் மேலே வரக்கூடாது என்று சொன்னேன் இல்ல."என ராஜாவின் நண்பர்களை அதட்டினாள்.
இல்ல சஞ்சனா,வாசுவோட பேக் மேல இருக்கு.எடுத்துட்டு போலாம் என்று வந்தோம்.ராஜா..கொஞ்சம் முகத்தை இந்த பக்கம் திருப்பு.என்ன வழக்கத்திற்கு மாறாக உன் உதடு சிவந்து இருக்கு.இரத்தம் வேற வருது.
அது வந்து ஒன்னும் இல்லடா, உன் கண்ணில் பிரச்சினை எதுனா இருக்கும்.போய் கண் டாக்டரை பாரு.
இல்லை இல்லை என் கண் நல்லா தான் இருக்கு ,வாசு நீ பார்த்து சொல்லு.அவன் உதடு சிவந்து தானே இருக்கு
டேய் ராஜேஷ், உன் கண்ணு தான் சரியில்ல.உதட்டில் மட்டும் இல்ல,அவன் முகம் முழுக்க தான்டா அங்கங்கு சிவந்து இருக்கு
சஞ்சனா உடனே"டேய் இப்போ ரெண்டு பேருக்கும் என்னடா தெரியணும்.நான் தான் அவனுக்கு முத்தம் கொடுத்தேன் போதுமா?
ஏன் சிஸ்டர்,இரத்தம் வர்ற அளவுக்கா இப்படி வன்முறை முத்தம் கொடுக்கறது?
"அது எங்க ரெண்டு பேரு சம்பந்தப்பட்டது,நான் ஒரு விசயம் உங்க ரெண்டு பேர்கிட்ட கேட்கணும்.ஒழுங்கா உண்மையை சொல்லுங்க."
சஞ்சனா பக்கத்தில் உள்ள கம்பை எடுத்து கொண்டு "நான் ராஜா மொபைலுக்கு ஃபோன் பண்ணும் போது அவ என்ன சொல்ல போறா,என்னை மறந்து விடு,உனக்கு வேறு ஒரு நல்ல பொண்ணு கிடைப்பா என்று தான் நான் சொல்வேன் என்று சொல்லி போனை கட் பண்ணினது யாரு"என்று கேட்க
ராஜேஷ் உடனே "அது நம்ம வாசு தான் சஞ்சனா"
ஓ அது நீ தானா,அப்புறம் ரெண்டாவது தடவை ஃபோன் பண்ணும் போது சஞ்சனாவை விட ஆயிரம் மடங்கு அழகிகளை கொண்டு வந்து லைனில் நிப்பாட்றேன்,நீ பொறுக்கிக்க என்று சொன்னது யாருடா
"அதுவும் நம்ம வாசு தான் சஞ்சனா"ராஜேஷ் உடனே பதில் சொல்ல
ஓ எல்லாமே சார் தானா,கொஞ்சம் முன்னாடி வந்து நில்லுங்க சார்.
வாசு ராஜேஷ் காதில்"டேய் நானா இதெல்லாம் சொன்னேன்."
"ஆமாடா நீ தான் பேசின"
வாசு மனதில்"அய்யயோ இந்த சரக்கு உள்ளே போய்ட்டா நான் என்ன பேசறேன் என்றே எனக்கு தெரியல.ரொம்ப கொடூரமா இல்ல பேசி இருக்கேன்.அடைமழை வெளுத்து வாங்க போகுது வாசு உடம்பை ரெடி பண்ணிக்க,"
சிஸ்டர் எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்.வன்முறை எல்லாம் கையில் எடுக்க கூடாது.அதுவும் நான் ஏற்கனவே காலையிலேயே உங்க கிட்ட அடி வாங்கிட்டேன்.இதுக்கு மேல இந்த பாடி தாங்காது.
டேய் அது அவனுக்கு சரக்கு ஊற்றி கொடுத்ததுக்கு விழுந்த அடி,சஞ்சனா அவன் காலில் ரெண்டு அடி போட,
சிஸ்டர் போதும் என்னை விட்டுடுங்க,அப்புறமா நடக்கறதே வேற
அப்புறம் என்னடா பண்ணுவ,
வாசு செத்துருவான் சிஸ்டர்,நீங்க அடிக்கிற அடி எல்லாம் இந்த பாடி தாங்காது.அப்புறம் நீங்க கொலை கேஸில் வீணா உள்ளே போக வேண்டி இருக்கும்.
ராஜேஷ் சஞ்சனாவை பார்த்து,ஓகே சிஸ்டர் உங்களை வீட்டில் விட்டுட்டு நாங்க ராஜாவை வெளியே கூட்டிட்டு போறோம்.
சஞ்சனா ராஜாவை கட்டி கொண்டு"முடியாது அவன் இன்னிக்கு முழுக்க என் கூட தான் இருப்பான்.நீங்க வெளியே போங்கடா"
சிஸ்டர் அவனுக்கு எப்பவுமே நாங்க தான் ஃபர்ஸ்ட்.அதுக்கு அப்புறம் தான் நீங்க,நீயே உன் வாயாலேயே சொல்லு மச்சான்.
ராஜா கட்டி கொண்டு இருந்த சஞ்சனா குளிர் நிலவு முகத்தை ஒரு நிமிடம் பார்த்து"டேய் ராஜேஷ் இன்னிக்கு ஒருநாள் என் கூட இருக்கணும் என்று அவ ஆசைபடுறா.நான் வேணா நாளை"
சஞ்சனா உடனே சந்தோஷத்தில் ராஜாவுக்கு முத்தம் கொடுக்க
"டேய் வாசு நைட் ஷோ ஆரம்பம் ஆயிடுச்சு,இதுக்கு மேல நாம எல்லாம் அவன் கண்ணுக்கு தெரிய மாட்டோம் வா கிளம்பலாம்,டேய் ராஜா பொண்டாட்டி ஆகாத காதலியை தாயாக மட்டும் ஆக்காம பார்த்துக்க"என்று ராஜேஷ் சொல்லி விட்டு ஓட
"ச்சீ போங்கடா பொறுக்கிஸ்"சஞ்சனா அவனை வெட்கபட்டு மேலும் அவள் மாங்கனிகள் நசுங்க இறுக்கி கட்டி கொண்டாள்.
இவர்களது சந்தோஷம் நீடிக்குமா.?அடிவாங்கிய பாம்பு சும்மா
இருக்குமா ?ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் எவ்வளவு துன்பம் வந்தாலும் சஞ்சனா ராஜாவை விட்டு கொடுக்க போவது இல்லை.அடுத்தடுத்த பகுதிகளில்