Chapter 11
சஞ்சனா ஒரு முக்கியமான விசயத்தை நீ சொல்ல மறந்துட்ட?என்னை ஏழு வருஷத்துக்கு முன்பே எப்படி தெரியும்?,இப்போ சொல்லு.!
நான் மறப்பேனா,உனக்கு ஞாபகம் வரட்டும் என்று அப்பப்ப என் விரலில் உள்ள மோதிரத்தை காட்டினேன்.இப்பவாவது ஞாபகம் வருதா என்று பாரு.
ராஜா உதட்டை சுழித்து, ஞாபகமே வரல சஞ்சனா.
இந்த மோதிரம்,ஒரு பேஷண்ட் பெங்களூரில் நீ அட்மிட் பண்ணப்ப கவுண்டரில் கொடுத்தது.
அப்போ அவரோட அந்த பொண்ணு நீதானா.!
ஆமா,எங்கப்பாவை காப்பாற்றிய காரணத்திற்காக மட்டும் நான் உன்னை லவ் பண்ணல.உன்னை எப்படியாவது பார்த்து நன்றி சொல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இருந்தது.ஆனால் உன்னை எப்போ நேரில் திரும்ப ஆபீஸில் பார்த்தேனோ,அந்த ஏழு வருட ஏக்கம் காதலா மாறிடுச்சு. ஆமா இந்த மோதிரத்தை அடிக்கடி உன் முகத்துக்கு நேரா பலமுறை காட்டினேனே அப்ப கூட உனக்கு ஞாபகம் வரலையா.
இல்ல சஞ்சனா,அந்த மோதிரத்தை செலக்ட் பண்ணினது என் தங்கை.அதுவும் அவசர அவசரமாக வாங்கினது.அது எப்படி இருக்கும் என்று சரியா கூட நான் பார்க்கல.அதனால் தான் எனக்கு ஞாபகம் இல்ல.
நான் முதலில் உன்னை பார்க்கும் போது இந்த மோதிரத்தை திருப்பி கொடுத்து விட வேண்டும் என்று தான் நினைத்தேன்.ஆனா இப்போ நான் கொடுக்க மாட்டேன்பா.இது என்னவன் கிட்ட இருந்து கிடைச்ச முதல் கிஃப்ட்.
அப்படியா.!வைச்சுக்க.என்றாவது என்னவளிடம் போய் சேர வேண்டியது தானே.
அப்பொழுது கண்ணாடியில் தொங்கவிடப்பட்ட செயினை பார்த்த சஞ்சனா,"டேய் இந்த செயின் எப்படி உனக்கு கிடைச்சது."
இதுவா பெங்களூரில் உங்க அப்பாவை அட்மிட் பண்ண மோதிரம் கொடுத்து விட்டு வந்தேன் இல்ல,அப்போ மீண்டும் கடன் வாங்கி கொண்டு மோதிரம் வாங்க வந்தேன்.அப்போ இந்த செயினை பார்த்த உடனே என்னை ஏதோ ஈர்த்துச்சு.நல்ல வேலை அந்த நகையை யாரோ அடகு வைக்காம வித்துட்டு போய் இருந்தாங்க.என்கிட்ட போதுமான பணம் இருந்ததால் மோதிரம் வாங்காம இந்த செயினை வாங்கிட்டேன்.இந்த செயின் எனக்கு ரொம்ப ராசி தெரியுமா?இது வந்த உடனே நான் ஆசைப்பட்ட வேலை கிடைச்சது.என் தனிப்பட்ட வாழ்க்கையில் இழப்பு ஏற்பட்டாலும் என்னோட வேலை எல்லாமே நன்றாக செல்ல காரணம் இந்த செயின் தான்.இந்த செயினை எனக்கு ரொம்ப பிடிக்கும்,நான் இருக்கிற வேலையோ வெளியில் சுத்துற வேலை.ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இருக்காது என்பதால் நான் போட மாட்டேன்.இங்கேயே வைத்து இருப்பேன்.அப்படி இல்லை என்றால் பர்ஸில் பத்திரமாக வைத்து இருப்பேன்.
சஞ்சனா அந்த செயினை எடுக்க கண்ணில் கண்ணீர் வந்தது.
டேய் இந்த செயின் என்னோடது.என் அம்மா எனக்கு ஆசையா போட்டது.அவங்க ஞாபகமாக வைத்து இருந்தேன்.என்னோட அப்பா ஆபரேஷனுக்காக தான் நான் பெங்களூரில் விற்றேன்.கொஞ்ச நாள் கழித்து திரும்ப வாங்க அதே கடைக்கு போகும் போது அதை அப்பவே விற்று விட்டதாக சொன்னார்கள்.ஆனால் உன்கிட்ட தான் வந்து இருக்கு.
பாரேன் சஞ்சனா,நமக்குள்ள செம wave length ஓடிட்டு இருக்கு.உன் அம்மா உனக்கு ஆசையா கொடுத்த செயினை எடுத்துக்கோ.
"இல்ல,இந்த செயின் என் அம்மாவுக்கு என்கிட்ட இருப்பதை விட,அவங்க மருமகன் கிட்ட இருப்பது விருப்பம் போல இருக்கு.இது உன்கிட்டேயே இருக்கட்டும்.ஆனா இதுக்கு மேல் தினமும் உன் கழுத்தில் தான் இருக்கணும்" என்று அவன் கழுத்தில் அணிவித்தாள்.
டேய் நேற்று நீ வேற என்கிட்ட கோவிச்சிட்டு போய்ட்ட,நான் இரவில் இருந்து சாப்பிடவே இல்லை தெரியுமா.ரொம்ப பசிக்குதடா"
என் செல்லத்துக்கு வேற ரொம்ப பசிக்குது,இங்கே கொஞ்ச தூரத்தில் மாலா அக்கா கடை இருக்கு.அங்கே போய் சாப்பிடலாம்.
சிவன் பார்க் அருகே போடப்பட்டு இருந்த ஒரு தள்ளுவண்டி கடைக்கு ராஜா அவளை கூட்டி செல்ல,அதை பார்த்து சஞ்சனா ஆச்சரியம் அடைந்தாள்.ராஜா உணவகம் என்று எழுதி இருந்தது.
"வா ராஜா வா என்ன இன்னிக்கு லேட்"மாலா அக்கா அன்புடன் வரவேற்க,
எல்லாம் இந்த தேவதையால் தான் அக்கா,அப்புறம் முக்கியமான விசயம் இந்த தேவதை தான் என்னை காலம் முழுக்க ஆள பிறந்தவள்.
அப்படியா வாழ்த்துக்கள்,உன் நல்ல மனசுக்கு உண்மையாவே தேவதை தான் கிடைச்சு இருக்கா.
டேய் என்னடா உன் பேர் வச்சு இருக்கு.
அதுவா நான் ஒரு உதவி செய்தேன் அதுக்காக அவங்க என்மேல உள்ள அன்பினால் வச்சி இருக்காங்க.என்ன உதவி என்று கேட்காதே.செய்த உதவியை எப்பவும் சொல்லி காட்ட கூடாது.
"அக்கா பாப்பா நல்லா இருக்கா,"ராஜா கேட்டான்.
"நல்லா இருக்கு ராஜா,ஸ்கூல் திறந்து 2 மாசம் ஆச்சு.இந்த ஸ்கூலில் தான் இன்னும் புக் கொடுக்காம இருக்காங்க.ஆனால் வெளியே கள்ள சந்தையில் எல்லாம் விலைக்கு ஈசியா கிடைக்குது.என்ன பண்றதுன்னே புரியல."
கவலைபடாதே அக்கா,நான் நாளைக்கு DPI வழியா தான் போறேன்.வரும் போது கண்டிப்பாக பாப்பாவுக்கு புக்ஸ் வாங்கிட்டு வரேன்.
சரி ராஜா.
பாப்பா ஏழாவது தானே படிக்குது.
இல்லப்பா இந்த வருஷம் எட்டாவது.
ம்,மடமடவென்று பாப்பா வளர்ந்துடுச்சு அக்கா.
ஆமாம்,அவ வேற அடிக்கடி ஏன் ராஜா மாமாக்கு கல்யாணம் ஆகல என்று கேட்குது.பொண்ணு கிடைக்கலனா சொல்லு,இன்னும் கொஞ்ச நாளில் சீக்கிரமா வளர்ந்து நானே கட்டிக்கிறேன் என்று சொல்லுது.
அதுக்கென்னக்கா கட்டிக்கிட்டா போச்சு,என்ன சஞ்சனா உனக்கு ஓகே தானே!
"உதை விழும் படுவா" என்று அவள் அவன் காதை திருகினாள்.
அப்பொழுது ராஜாவின் மொபைலுக்கு அழைப்பு வர,"அய்யயோ நான் இவளுக்கு வேற காலையில் இருந்து ஃபோன் பண்ணவே இல்லையே.கண்டிப்பா திட்ட போறா"
"யாருடா ஃபோன்ல"சஞ்சனா கேட்க
"உன்னோட வில்லி"
"என்னது என்னோட வில்லியா"
"ஆமா பேசிட்டு வந்து சொல்றேன்."
ராஜா அந்த பக்கம் நகர
மாலா அக்கா சஞ்சனாவிடம் பேச்சு கொடுத்தாள்.
ஒரு நல்ல பையனை தான் தேடி பிடிச்சு இருக்கே.
சஞ்சனா வெட்கத்தில் குனிய
ஏன் அவன் பேரில் கடை இருக்கு என்று கேட்டே இல்ல,அதை சொல்ல வேண்டும் என்றால் என்னோட கடந்த கால வாழ்க்கையை பற்றி சொல்ல வேண்டி இருக்கும்.அது ஒன்னும் ஒழுக்கமான வாழ்க்கை கிடையாது.அதனால் அவன் சொல்ல மாட்டான்.எல்லோரும் என் உடம்பை மட்டும் பார்த்தாங்க.ஆனா அவன் மட்டும் தான் என்னை ஒரு அக்காவாக பார்த்தான்.ஆமா நான் ஒரு விபச்சாரி.ஒருநாள் நான் கைது செய்யப்பட்டு ஒரு போலீஸ் ஸ்டேஷனில் இருந்தப்ப என்னோட குழந்தை அழுதுக்கிட்டு வெளியே நின்னுட்டு இருந்துச்சு.அவன் அந்த ஸ்டேஷன் sub இன்ஸ்பெக்டரை வேலை விசயமாக பார்க்க அடிக்கடி வருவது வழக்கம்.அப்போ அழும் என் குழந்தையை அவன் தான் சமாதானப்படுத்தி ஒரு நாள் முழுக்க அவன் வைத்து இருந்தான்.மறுநாள் கோர்ட்டில் எனக்காக காசு கட்டி வெளியே கொண்டு வந்துட்டு "அக்கா இந்த தொழில் செய்வது எல்லாம் தப்பு."என்று சொல்ல அதற்கு நான்"எனக்கு வேற வழி தெரியலப்பா,என்னோட குழந்தைக்காக உடம்பை விக்க வேண்டியதா இருக்கு."என்று சொன்னேன்.அப்புறம் அவன் தான் அவன் கம்பனியில் house keeping வேலை வாங்கி கொடுத்தான்.என்கிட்ட கொஞ்ச கூட தயக்கம் இல்லாம தம்பி மாறி சகஜமா பழகுவான்.ஒரு நாள் நான் எடுத்த வந்த இட்லியை சாப்பிட்டு விட்டு "அக்கா சூப்பரா இருக்கு,நீங்க இட்லி கடை போட்டால் சூப்பரா போகும் என்றான்.நான் அதற்கு அவ்வளவு காசுக்கு எங்கேப்பா போவேன் என்று கேட்க, அவன் எப்படியோ லோன் செக்சனில் இருந்த அவன் ஃப்ரெண்ட்ஸ் ஐ பிடிச்சு எப்படியோ லோன் வாங்கி இந்த கடையும் வைத்து கொடுத்து விட்டான்.தில்லு முல்லு பண்ணி தான் லோன் வாங்கி கொடுத்தான்.இதுவரை லோன் சரியாக கட்டி விட்டேன்.இன்னும் ஆறு மாதம் இருக்கு.நான் இப்போ என் குழந்தையோட சந்தோசமாக வாழ்கிறேன் என்றால் அது அவனால் மட்டும் தாம்மா.அந்த அன்பினால் தான் நான் இந்த கடைக்கு அவன் பெயரை வைச்சேன்.நீ அவனுக்கு மனைவியாக வர போறே,அவனை பற்றி உனக்கு எல்லா விசயமும் தெரிய வேண்டும் என்பதால் தான் நான் வெட்கம் விட்டு என்னோட கடந்த கால வாழ்கையை உன்கிட்ட மட்டும் சொன்னேன்.
சஞ்சனா அவனை பெருமையுடன் பார்க்க,அவன் இன்னும் போனில் பேசி கொண்டு இருந்தான்.
பேசி முடித்து விட்டு வர,யாருடா எனக்கு அந்த வில்லி? என்று சஞ்சனா கேட்க,
உனக்குதாம்மா அவ வில்லி,எனக்கு இல்ல.என்னோட குட்டி ராட்சசி. நாளை மறுநாள் சென்னை வருகிறாளாம்.உன்னிடம் அவளை அறிமுகப்படுத்த போகிறேன்.
வாசகர்களுக்கு ஒரு குறிப்பு:
இந்த பதிவில் வரும் மாலா அக்கா,மற்றும் இன்ஸ்பெக்டர் ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்.பின்பு ராஜாவுக்கு நடக்க போகும் சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் மற்றும் மாலா அக்கா தொடர்புபடுத்தி கதை வரும்.
அன்று முழுவதும் இருவரும் மால்,சினிமா உற்சாகமாக பொழுதை கழித்தனர்.
டேய் இதுவரை நீ என் வீட்டுக்குள் வந்ததே இல்ல.இப்போ வா.
வரலாமே என்று சொல்லி விட்டு ராஜா உள்ளே வர,
வீடு சின்னதா இருந்தாலும் உன் கைவண்ணத்தில் ரொம்ப அழகா இருக்கு சஞ்சனா. எங்கே உன் அப்பா இல்லையா?
அவர் வெளியூருக்கு போய் இருக்கார்.அடுத்த வாரம் வந்து விடுவார்.
அப்போ வீட்டில் யாரும் இல்லையா?
ம்ஹீம் யாரும் இல்லை
வாவ்,அப்போ இது தான் சரியான சந்தர்ப்பம்.
எதுக்கு?
ஒரு perfect கிஸ் உன்னிடம் வாங்க,
டேய் திருட்டு பூனை கிட்ட வராதே,
ராஜா நெருங்கி வர,சஞ்சனா பின்னோக்கி செல்ல சுவற்றில் முட்டி கொண்டாள்.
டேய் காலையில் தானே உனக்கு தானே கொடுத்தேன், மறுபடியுமா?
சஞ்சனா பக்கவாட்டில் நகர,சுவற்றில் கை வைத்து தடுத்தான்.அவள் நெற்றியில் சரிந்த முடியை ஒற்றை விரலால் விலக்கி ஒரு முத்தம் வைத்து விரலால் அவள் முகத்தில் நெற்றியில் இருந்து நாசி வழியே நேராக அவள் இரு இதழ்களை விரலால் வருடி,
தினமும் காலையில் சூரியன் உதிக்கும் போது சூரியன் புதுசு தான்,அதுபோல உன் இதழை ஒவ்வொரு முறை சுவைக்கும் போதும் புது தேன் அல்லவா சுரக்குது.இந்த தேனுக்கு ஈடான சுவை இந்த உலகில் எங்குமே கிடையாது..! .
ம்.இந்த தேன் உனக்காகவே உருவாகியது ராஜா..சஞ்சனா வெட்கத்தில் தலை கவிழ
அப்போ நான் எப்ப நினைத்தாலும் பருகலாம்?
ம் ,தடை ஏதும் இல்லை?வெட்கத்தில் அவள் கன்னம் சிவக்க
மீண்டும் இருவரும் இதழில் இதழ் கலந்தனர்.அவள் ஆரஞ்சு சுளை உதடுகள் அவன் உதட்டோடு கலந்தது. அவளின் பூ இதழாலும் பொன் இதழாலும் தேனை அள்ளி தெறிக்க அவன் ஆசை தீர பருகினான். அவன் கைகள் அவள் தோளில் இருந்து இறங்கி அவள் இடையை அழுத்தியது.அவள் அவன் பின்னந்தலையை மலர்கரத்தால் பின்னி கொண்டு முத்தத்தை வழங்கினாள்.அவன் நாக்கை அவள் உதட்டு பிளவுக்குள் நுழைக்க,எந்த வித தடையும் இன்றி அவள் வரவேற்றாள்.அவள் நாக்கின் நுனியை தொடவும் இருவருக்கும் எலக்ட்ரிக் ஷாக் உடல் முழுக்க பாய்ந்தது.அவன் நாக்கு அவள் நாக்குடன் வாய்க்குள் கபடி விளையாடியது.அடுத்து அவள் நாக்கு அவன் வாய் எல்லைக்குள் புகுந்து ஓடி பிடித்து கபடி விளையாடி அவன் நாக்கை தொட்டு வெற்றி கண்டது.இப்படி மாறி மாறி இருவரும் முத்த மழையில் நனைந்து சண்டை இட்டனர்.இருவருக்கும் பிரிய வேண்டும் என்ற எண்ணம் வரவே இல்லை.
கடைசியில் சஞ்சனா மூச்சு வாங்க ,அவன் முடியை பிடித்து இழுத்து "டேய் என் அப்பா ஊரில் இருந்து வந்த உடனே நீ வந்து பேசி என் கழுத்தில் மூணு முடிச்சு போடற, அப்புறம் பாரு,இந்த சஞ்சனாவின் திறக்காத சிப்பியின் கதவு உனக்காக கட்டில் மீது திறந்து இன்பகடலில் உன்னை மூழ்கடிக்கும் "
"வாவ்"அதற்காகவே காத்து இருக்கிறேன் கண்மணி.
சஞ்சனா அவன் இரு பாதத்தின் மீது ஏறி அவள் இரு கையை இருபுறம் விரித்து அதில் பின்னி பிணைய கண்ணால் சைகை காட்ட அதை பார்த்த ராஜா அவள் கரங்களில் அவன் கை கோர்த்து," செம கேடி தாம்மா நீ"என்று கூற அவள் சிரித்து கொண்டே தன் இதழை அவனுக்கு சுவைக்க கொடுத்தாள்.
சஞ்சனாவின் திறக்காத சிப்பியி்ன் கதவு கல்யாணத்திற்கு முன் திறக்க காரணம் என்ன?அவள் அப்பா, ராஜாவை சந்திக்கும் தருணம் ஒரு மிகப்பெரிய சம்பவம் ராஜாவுக்கு நிகழ போகிறது.அதன் மூலம் ராஜாவுக்கு உண்டாக போகும் கெட்ட பெயரை சஞ்சனா எப்படி போக்க போகிறாள்.?எப்படி அவள் அப்பாவை சம்மதிக்க வைத்து அவனை கர
ம் பிடிக்க போகிறாள்.?அதற்கு முன் ராஜா மற்றும் ஜார்ஜ் மோதல் வேறு நேரடியாக நிகழ போகிறது?அதனால் ஏற்படும் விளைவு என்ன?காத்து இருங்கள்.
யாரு ராஜா அந்த வில்லி?
அது வேறு யாருமில்லை சஞ்சனா,என் சின்ன தங்கை தான்.அவ என் கூட இருக்கும் போது யாரையும் என்னிடம் நெருங்க விட மாட்டாள்.இந்த மாசம் நான் உன் கூட இருந்ததால் ஊருக்கு போக முடியல.அதனால் அவ என்னை பார்க்க சென்னை வருகிறாள். "ம்"சஞ்சனா எனக்கு ஒரு ஐடியா என் தங்கை ஏன் சென்னை வரணும்,நாம ரெண்டு பேரும் இப்போ கிளம்பினால் கூட நாளை காலை என் சொந்த ஊருக்கு போக முடியும்.நீயும் என் அம்மா,என் தங்கை கிட்ட அறிமுகம் ஆன மாதிரி இருக்கும்.அங்கே போய்ட்டு நான் சொல்ற மாதிரி ஒரு சின்ன கேம் மட்டும் play பண்ணு.
ராஜா சஞ்சனா காதில் அந்த விசயத்தை சொல்ல, "ம்" என்று சந்தோஷமாக தலையாட்டினாள்.
ராஜாவும்,சஞ்சனாவும் சென்னை - பெங்களூர் பைபாஸ் சாலையில் பறந்தனர்.
டேய் இங்கே இருந்து உங்க வீடு எவ்வளவு தூரம்?
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சென்னைக்கும்,பெங்களூருக்கும் சரியா நடுவில் இருப்பது தான் என்னோட ஊர் சஞ்சனா.
சரியாக காலை 4 மணி அளவில் போய் சேர்ந்தனர்.சிறு நகரம் தான்.இன்னும் மக்கள் நடமாட்டம் தொடங்கவில்லை.
சஞ்சனா,ராஜா கொடுத்த விவரத்தின் படி சரியாக அவன் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினாள்.
ராஜாவின் அம்மா வந்து கதவை திறக்க,
யாரும்மா நீ ? அந்த பெண்மணி கேட்க,..
நீங்க தான் ராஜாவோடா அம்மாவா?
ஆமாம்.
அப்போ உங்ககிட்ட தான் ரொம்ப முக்கியமான விசயம் பேசணும்.நான் ராஜா ஆபீஸில் இருந்து வரேன்.உள்ளே போய் பேசலாமா..!!
சரி வாம்மா,அதற்குள் ராஜா தங்கை எழுந்து வர,சஞ்சனா அவளை பார்த்து"நீ தான் திவ்யாவா?
ஆமா நீங்க யாரு?
சொல்றேன்.என் பேரு சஞ்சனா.உங்க அண்ணன் சரியான திருடன்.கூட வேலை செய்யும் பொண்ணுக்கு கிட்ட இருந்து முக்கியமான ஒண்ணை திருடிட்டான்.அதுவும் திருடி ஏமாற்றிவிட்டு இங்கே தான் வந்ததாக தகவல்.அது தான் அவனை கையும் களவுமாக பிடிக்க இங்கே வந்து இருக்கோம்.
எங்க அண்ணன் அந்த மாதிரி எல்லாம் செய்ய கூடிய ஆள் இல்ல.அவன் வேணா ஏமாந்து விட்டு வருவான்.ஆனா மத்தவங்களை ஏமாற்ற மாட்டான்.
ராஜாவின் அம்மாவும் அதற்கு ஆமோதிக்க
ஒருவேளை பாதிக்கபட்ட பொண்ணே வந்து நேரில் சொன்னால் என்ன பண்ணுவீங்க.
நாங்க அப்பவும் நம்ப மாட்டோம் இருவரும் ஒரு சேர சொன்னார்கள்.
சரி உங்க அண்ணன் எங்கே?
அவன் சென்னையில் இருக்கான்.
இல்லை அவன் இங்கே தான் இருக்கான்.நான் உங்க வீட்டை சோதனை போடணும்.
எங்க அண்ணா இங்கே இல்ல.சொன்னா புரிஞ்சிக்கோங்க.
நான் நம்ப மாட்டேன்.சஞ்சனா கீழே நோட்டம் விட்டு மாடிப்படி ஏற,ராஜாவின் தங்கையும் அம்மாவும் பின் தொடர்ந்தனர்.
அம்மா இந்த பொண்ணை ஏம்மா உள்ளே விட்ட,பார்க்க களவாணி பொண்ணு மாறி தெரியுது.
ச்சே இல்லடி ,முகம் லட்சணமா இருக்கு.கண்டிப்பாக நீ நினைக்கிற மாறி இருக்காது.
மூன்று பேர் மொட்டை மாடி வரவும்,ராஜா அங்கே பாய் விரித்து படுத்து கொண்டு இருப்பதை பார்த்து இருவரும் அதிர்ச்சி ஆக,
பார்த்தீங்களா யார் இது,உன் அண்ணனை இங்கே ஒளிச்சு வச்சுகிட்டு ரெண்டு பேரும் என்னையே ஏமாத்துறீங்களா..!
டேய் நீ எப்படா வந்தே..!அண்ணா நீ எப்ப வந்தே என்று அவன் தங்கையும் ஓடி வந்து கட்டி கொண்டாள்.
இப்பவாது நான் சொல்வதை உண்மை என்று நம்பறீங்களா ?சஞ்சனா கேட்க
"இப்பவும் சொல்றேன் சஞ்சனா,என் அண்ணன் எதையும் திருட மாட்டான்.அந்த கடவுளே வந்து சொன்னாலும் நாங்க நம்ப மாட்டோம்" என அவன் தங்கை திவ்யா உறுதியாக சொன்னாள்.
நான் தான் அப்பவே சொன்னேனே சஞ்சனா,என் குட்டி ரோசும் சரி,என் அம்மாவும் சரி ,என்னை பற்றி என்ன தான் தப்பா சொன்னாலும் நம்ப மாட்டாங்க.
சஞ்சனா உடனே ராஜாவின் அம்மா காலில் விழுந்தாள்.அத்தை என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க.
நீ நல்லா இரும்மா,முதலில் எழுந்திரு.ராஜா என்னடா இதெல்லாம்?
அம்மா அவ சொன்னது எல்லாம் உண்மை தான்.நான் திருடியது உண்மை தான்.
நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டே.உண்மையை சொல்லு என்ன நாடகம் நடக்குது இங்கே?அவன் தங்கை கேட்க
நிஜமா தான்டா குட்டி ரோஸ்,அவ மனசை நான் திருடிட்டேன்.அவ உன் அண்ணி.அம்மா அவ உன் மருமகள்.
இதை ஏண்டா என்கிட்ட சொல்லல,என்று அவன் தங்கை பக்கத்தில் உள்ள பைப்பை எடுத்து அடிக்க,
டேய் மூக்கு(ராஜா எப்பவுமே அவன் தங்கையை மூக்கு அல்லது குட்டி ரோஸ் என்றே அழைப்பான்.) அடிக்காதே,நேற்று தான்டா நானே அவகிட்ட என் காதலை சொன்னேன்.இதோ இன்னிக்கு நேராகவே உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டேன் போதுமா?
ம் எனக்கு பிடிக்கல,அவளை எல்லாம் என்னால் அண்ணியாக ஏற்று கொள்ள முடியாது,
டேய் மூக்கு என்னடா இப்படி சொல்ற,அவ ரொம்ப நல்லவடா,,ராஜா முகம் வாட,சஞ்சனாவும் அதிர்ச்சி அடைந்தாள்.
அய்ய, மூஞ்ச பாரு அதுக்குள்ள எப்படி சுருங்கி போச்சு,போய் கட்டிக்க போ ,ராஜா முகம் மலர்ந்தது .
அண்ணி கோவிச்சுக்காதீங்க ,நான் சும்மா தான் விளையாடினேன்.எனக்கு உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.அம்மா அண்ணியை கூட்டிட்டு வா நாம கீழே போலாம்.இவன் மேலேயே கிடந்து சாகட்டும்.
டேய் மூக்கு,எப்பவும் நான் வந்தால் என் கூட தான் இருப்பே,இப்ப என்னடா அவ கூட ஒட்டிகிட்ட.
இனிமே அப்படி தான் அண்ணா,
சஞ்சனாவிற்கு அம்மா இல்லாததால் ,ராஜாவின் அம்மாவோடு எளிதாக ஒன்றி விட்டாள்.
திவ்யா சஞ்சனாவை பார்த்து,"ஏன் அண்ணி உங்க அழகுக்கும் அறிவுக்கும் போயும் போயும் இந்த சுமார் மூஞ்சி குமாரை போய் செலக்ட் பண்ணி இருக்கீங்க."
ஏன் திவ்யா,உன் அண்ணனுக்கு என்ன குறைச்சல்.அழகிலும் சரி,அறிவிலும் சரி ஒன்னும் குறைந்தவர் இல்லையே.என்ன வெயிலில் சுற்றி கொஞ்சம் கலர் கம்மி அவ்வளவு தானே
ம் ,நீங்க உங்க காதலனை விட்டு கொடுக்க மாட்டீங்களே,அப்புறம் என் அண்ணா சரியான மங்குனி ஆச்சே.எப்படி அவன் உங்க கிட்ட வந்து காதலை சொன்னான்
மங்குனி மட்டும் இல்ல,இந்த காதல் விசயத்தில் மட்டும் சரியான tubelight.அவனை என்கிட்ட காதல் சொல்ல வைக்க நான் பட்ட பாடு எனக்கு தானே தெரியும்.
அதானே பார்த்தேன்.கடைசி வரை அப்படியே எட்ட நின்று இதயம் முரளி மாதிரி காதலை கூட சொல்லாம ஓடி போய்டுவான்.
ராஜாவின் அம்மா,சஞ்சனாவிற்கு ஜடை பின்னி அலங்காரம் செய்து பூ வைக்க,அவளுக்கு அழுகை வந்து விட்டது.
ஏன் சஞ்சனா அழுவுற,
ஒண்ணுமில்ல அம்மா,நீங்க எனக்கு செய்வதை எல்லாம் பார்க்கும் போது என் அம்மா ஞாபகம் வந்துடுச்சு.
நீயும் எனக்கு ஒரு பொண்ணு தான் சஞ்சனா,அழக்கூடாது .இதோ இந்த பொண்ணு காலேஜ் முடித்து விட்டால் நாங்க சென்னை தான் வரப்போறோம்.இன்னும் கொஞ்ச நாள் தான் நாம எல்லோரும் ஒண்ணா தான் இருக்க போறோம்.
அன்றைய பொழுதும் இனிமையாகவே கழிந்தது.
ராஜா மற்றும் சஞ்சனா விடைபெற்றனர்.
என்ன அண்ணா,முதல் முறையா அண்ணி வந்து இருக்காங்க.இன்னும் ஒரு நாள் தங்கி இருக்கலாமே.
இல்லடா மூக்கு,நாளைக்கு ரெண்டு பேருமே வேலைக்கு போகனும்.இனிமே அடிக்கடி ரெண்டு பேரும் வரோம். ஓகே வா
சஞ்சனாவிற்கு,ராஜாவின் அம்மாவை மிகவும் பிடித்து விட்டது.அவரை விட்டு பிரிய அவளுக்கு மனமே இல்லை.
சஞ்சனா கவலைப்படாதே,உங்க அப்பாகிட்ட மட்டும் தான் இன்னும் சம்மதம் வாங்கணும். வாங்கிட்டோம் என்றால் சீக்கிரம் டும் டும் டும் தான்
டேய் என் மருமகளை பார்த்து கூட்டிட்டு போடா,பழைய மாதிரி எல்லாம் வண்டிய வேகமாக ஒட்டாதே.
என் வருங்கால பொண்டாட்டியை பத்திரமாக கொண்டு போய் சேர்ப்பது என் பொறுப்பு போதுமா அம்மா!
சஞ்சனா ராஜாவிடம் "டேய் நம்ம கல்யாணத்திற்கு நான் உன் அம்மா,தங்கையிடம் சம்மதம் வாங்கி ஆச்சு.இனி நீ தான் என் அப்பாவிடம் சம்மதம் வாங்கணும் "
"உன் அப்பா ஊரில் இருந்து வந்த உடனே சம்மதம் வாங்கி விட வேண்டியது தான் சஞ்சனா"
இருவர் மனதிலும் சந்தோசம் முழுக்க நிரம்பி வழிந்தது.ஆனால் சஞ்சனா ராஜாவை அவள் அப்பாவிடம் அறிமுகபடுத்தும் பொழுது நடக்க போகும் சம்பவம் இருவர் சந்தோசத்தையும் பறிக்க போகிறது.
அடுத்த நாள்,
என்ன வாசு, நொண்டி நொந்து வர,ராஜா கேட்க.
டேய் எல்லாம் உன் ஆளினால் தான்டா இப்படி ஆச்சு,மனுஷியாடா அவ.கொஞ்சம் கூட பச்சை புள்ளை என்று பார்க்காம போட்டு அடிக்கிறா.ஆனா அவகிட்ட அடி வாங்கின ராசி என் பொண்டாட்டி முதல், போறவன்,வர்றவன் கிட்ட எல்லாம் ரெண்டு நாளாக அடி வாங்கினேன்டா
டேய் அவளை பற்றி மட்டும் குறை சொல்லாதே,உனக்கு அவ அடி கொடுத்து இருந்தாலும்,எனக்கு முந்தா நாள் முழுக்க முழுக்க முத்த மழையில் குளிப்பாட்டிட்டாடா.
அடப்பாவி இப்போ அனுபவிடா அனுபவி.சீக்கிரம் என்னை மாறி கல்யாணம் பண்ணி பொண்டாட்டி கையால் பூரிக்கட்டை,துடைப்பகட்டையால் உதை வாங்கும் காலம் வராமலா போகும்.கண்டிப்பாக வரும்டா.
அவ கையால் அடி வாங்க கூட கொடுத்து வைத்து இருக்கணும் போடா.
ராஜா இன்னிக்கு சாயங்காலம் சரக்கு அடிக்கலாமா?
டேய் அது சஞ்சனா போன வருத்தத்தில் சரக்கு அடிச்சதுடா,இதுக்கு மேல எல்லாம் என்னால் சரக்கு அடிக்க முடியாது.
டேய் அது தான் ஒரு தடவை சரக்கு அடிச்சிட்டே இல்ல,இதுக்கு மேல பழகிக்க வேண்டியது தான்.சஞ்சனாவுக்கு தெரியாம சரக்கு அடிச்சா தப்பு இல்ல.அப்புறம் எங்களுக்கு யாரு சரக்கு வாங்கி கொடுப்பா.
அந்த நேரம் சஞ்சனா வந்து தன் கையில் இருந்த பையினால் வாசு தலையில் ஒரு போடு போட,
சிஸ்டர் நீங்க எப்போ வந்தீங்க..!!
நீ அவனை சரக்கு அடிக்க கூப்பிட்டப்ப வந்துட்டேன்.நீ தான் கெட்டு போகிற என்று பார்த்தால் அவனையும் சேர்த்து கெடுக்கிற உன்னை..
இல்ல சிஸ்டர்,எந்த ஒரு பழக்கமும் தீடீரென விட கூடாது.கொஞ்ச கொஞ்சமாக தான் விடனும்.அதை தான் நான் அவனுக்கு பக்குவமாக சொல்லி கொடுத்தேன்.
டேய் அடங்குடா,அவன் என்ன மொடா குடிகாரனா,அன்னிக்கு தான் ஏதோ முதல் முதலாக குடிச்சான். ஓசில குடிப்பதற்கு நீ அலையிற என்று பச்சையா தெரியுது.இன்னொரு தடவ அவனை கூப்பிட்ட அவ்வளவு தான் பார்த்துக்க.
ராஜா இந்தா உனக்கு லஞ்ச்,சஞ்சனா நீட்டினாள்.
அப்பொழுது மூன்று பேருக்கும் ஒருசேர குரூப் மெசேஜ் வந்தது.
என்ன இது இன்னிக்கு சாயங்காலம் 7 மணிக்கு பார்க் ஷெரட்டன் ஓட்டலில் மீட்டிங் என்று போட்டு இருக்கு.ஏதோ புது பிளான் அறிமுகம் பண்ண போறத போட்டு இருக்கு.
அப்போ இன்னிக்கு இரவு செம சாப்பாடு தான் வாசு குதுகாலித்தான்.
ஆபிசில்
என்னடா ஜார்ஜ் உன் நிலைமை இப்படி ஆயிடுச்சு,TL வினோத் கூட உன்கிட்ட பம்முவான்.ஆனா புதுசா வந்த சஞ்சனா பொண்ணு இப்படி அசிங்கப்படுத்தி விட்டது.
அது தான்டா பாலாஜி எனக்கு ஒன்னும் புரியல.இந்த மாதிரி என் வாழ்க்கையில் நடந்தது எனக்கே புதுசு.அதுவும் ராஜா மட்டும் தான் என்கிட்ட அடிக்கடி மோதி கொண்டு இருந்தான்.அதையும் நம்ம மேனேஜர் வச்சி அவனை மட்டம் தட்டி வைத்து இருந்தேன்.ஆனா இவ வந்த பிறகு அவன் அடுத்தடுத்து என்னை கிரிக்கெட் மற்றும் வாழ்க்கையில் தோற்கடித்து விட்டான்.
இப்ப என்ன பண்ண போற ஜார்ஜ்,
அதையும் எனக்கு சஞ்சனா தான் கற்று கொடுத்து இருக்கா பாலாஜி.சந்தர்ப்பம் வரும் வரை காத்து இருந்து தான் பழி வாங்க வேண்டும்.
ஆனா உனக்கு தான் அந்த பழக்கம் இல்லையே ஜார்ஜ்,கோபத்தில் அவசரப்பட்டு எதுனா பண்ற,அது அவர்களுக்கு சாதகமாக போய் முடிந்து விடுகிறது.
நீ சரியா தான் சொல்ற பாலாஜி,எனக்கு அவ கிடைக்காத கோபத்தில் என் உடல் முழுவதும் பற்றி கொண்டு எரிகிறது.நான் அவர்கள் ரெண்டு பேர் மட்டும் ஒன்றாக இருப்பதை பார்த்தால் கோபத்தில் என்ன பண்ணுவேன் என்றே தெரியவில்லை.
மாலை மீட்டிங் முடிந்தவுடன் சாப்பிடும் போது சஞ்சனா, ராஜாவுடன் கொஞ்சி குழாவ தான் போகிறாள்.அதை பார்க்க போகும் ஜார்ஜ்ஜினால் ஏற்பட போகும் விளைவு என்ன?