Chapter 12

Park sheraton ஓட்டலில் அனைத்து விற்பனை பிரதிநிதிகளும் குழுமியிருந்தனர்.உயர் பதவியில் இருப்பவர்கள் எல்லோரும் அங்கே இருந்ததால் எந்த ஒரு சிறு தவறும் நடந்தாலும் உடனே அவர்களுக்கு தெரிந்து நடவடிக்கை எடுப்பார்கள் என எல்லோரும் எல்லாவற்றையும் அடக்கி கொண்டு இருந்தனர்.அதுவும் இந்த மாதிரி ஒரு நாள் தான் அனைவரும் ஃபைவ் ஸ்டார் ஓட்டல் உணவையே பார்த்து சாப்பிட முடியும் என்பதால் முகத்தில் ஒருவித இறுக்கத்துடனும்,உள்ளே மகிழ்ச்சியுடனும் அமர்ந்து இருந்தனர்.

தலைமை அதிகாரி நாராயணன் புது பிளானை அறிமுகப்படுத்தியது மட்டும் இல்லாமல் ஒரு புது அனுகுண்டையும் சேர்த்து தூக்கி போட்டார்.எல்லோருடைய மாத TARGET இல் 10 ஆர்டர் இன்னும் அதிகமாக எடுத்தால் தான் INCENTIVE கிடைக்கும் என்று கூற,யார் முகத்திலும் ஈயாடவில்லை.

ராஜேஷ் வாசுவிடம்"டேய் வாசு,பழைய TARGET முடிப்பதற்கே இங்கு நாக்கு நுரை தள்ளி ரெண்டு மாசத்துக்கு ஒருமுறையோ இல்லை மூணு மாசத்துக்கு ஒரு முறையோ தான் incentive வாங்கறோம்.இப்போ என்னடா பண்றது?

அதெல்லாம் incentive வாங்கறவன் கவலைப்படனும் மச்சான். நமக்கேதுக்கு அந்த கவலை? அதோ பக்கத்தில் இருக்கானே ராஜா, அது அவன் கவலை பட வேண்டியது. ராஜேஷ் மட்டன் பிரியாணி வாசனை கமகமவென்று வருது.பசி வேற வயிற்றை கிள்ளுது.side dish வேற என்னென்ன இருக்கு என்றே தெரியல.சீக்கிரம் மீட்டிங் முடிந்தால் நல்லா இருக்கும்.போய் ஒரு கட்டு கட்டலாம்.

Buffey முறையில் தான் சென்று அனைவரும் சென்று வேண்டியதை எடுத்து சாப்பிட வேண்டும்.விதவிதமான உணவுகள் அடுக்கி வைக்க பட்டு இருந்தது.எங்கேயும் போல இங்கேயும் லேடீஸ் ஃபர்ஸ்ட்.அதனால் சஞ்சனா முதலில் சென்று தன் காதலனுக்கு சேர்த்து வாங்கினாள்.ராஜா வரிசையில் நின்று கொண்டு இருக்க,சஞ்சனா இரண்டு தட்டுக்களோடு வந்து முன் நின்றாள்.

என்ன சஞ்சனா இப்ப என்ன அவசரம்,நானே பொறுமையா வாங்கி சாப்பிடுவேனே.

"பரவாயில்லை வா,உனக்கு non veg எனக்கு veg ஓகே வா,"

ராஜாவுக்கு தன் நண்பர்களை விட்டு பிரிய தர்ம சங்கடமாய் இருந்தது.

"சரி போடா,நாங்களும் 5 நிமிஷத்தில் வாங்கி வந்துடறோம்"ராஜேஷ் கூற

ராஜாவும்,சஞ்சனாவும் தனியாக ஒதுங்கினர்.

"ஏன் சஞ்சனா உனக்கு தான் non veg பிடிக்காதே, எதுக்கு எனக்காக வாங்கின"

எனக்கு பிடிக்காது தான்,ஆனா உனக்கு பிடிக்குமே..!இன்னும் சொல்ல போனால் உனக்காக கொஞ்ச கொஞ்சமாக non veg செய்ய கற்று கொள்கிறேன்.

ஏய் லூசு,.உனக்கு பிடிக்காத எதையும் கஷ்டப்படுத்தி கொண்டு செய்ய வேண்டாம்.நீ என்ன செய்தாலும் நான் சாப்பிட தயார்.அப்படி நான் அசைவம் தான் சாப்பிட ஆசை வந்தால் நான் வெளியே போய் சாப்பிட்டு கொள்கிறேன் போதுமா?

"சரி"என்று சஞ்சனா சந்தோஷத்துடன் தலையாட்டினாள்.

சஞ்சனா தன் உணவை எடுத்து "இதோட டேஸ்ட் எப்படி இருக்கு பார்" என அவனுக்கு ஸ்பூனில் ஊட்ட,அதற்கு அவனோ "உதடும் விரலும் இருக்க,ஸ்பூன் எதற்கு"கேட்டான்.

"சரி"என அவளும் சிரித்து கொண்டே தன் உணவை எடுத்து அவள் தளிர் கரங்களால் அவனுக்கு ஊட்டவும், அதை ஜார்ஜ் எதேச்சையாக பார்க்கவும், அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

அப்பொழுது ராஜேஷூம்,வாசுவும் அங்கே வர,"டேய் உங்க ரொமான்ஸை வேறு இடத்தில் வைச்சுக்க கூடாதா?

சஞ்சனா அதற்கு ,"ஏன்?நாங்க மறைவா தான் உட்கார்ந்து இருக்கோம்.யார் பார்த்தாலும் எனக்கு கவலை இல்லை."

ராஜா உடனே "இல்ல சஞ்சனா,அவன் சொல்றதும் சரி தான்.நாம ரெண்டு பேர் வெளியே போகும் போது தனியா உட்கார்ந்து சாப்பிட்டா எந்த பிரச்சினை கிடையாது .ஆனா இங்கே கம்பனி பார்ட்டி என்று வரும் பொழுது தனி தனியாக தான் இருக்க வேண்டும்.என்ன தான் நாம் காதலர்களாக இருந்தால் கூட இடம்,பொருள் பார்த்து தான் பழக வேண்டும்.

அப்பொழுது வாசு,டேய் ராஜா என்னடா உன் தட்டில் மட்டும் பீசு இத்தனை இருக்கு என்று அவன் தட்டில் கை வைக்க சஞ்சனா அவன் தலையில் குட்டி விட்டு,"அவன் தட்டில் கை வைத்தால் மகனே இன்னிக்கு வீடு போய் சேர முடியாது" என மிரட்டி விட்டு சென்றாள்.

ராஜா சாப்பிட்டு விட்டு கை கழுவ செல்வதை பார்த்து, ஜார்ஜ்ஜும் பின்னாடியே சென்றான்.

ராஜா கை கழுவும் போது,ஜார்ஜ் ராஜா காதில் விழும்படி தன் நண்பனிடம் வேண்டுமென்றே பேச்சு கொடுத்தான்.

"ஏண்டா பாலாஜி இந்த சேல்ஸ் பசங்களே ஏன் இப்படி இருக்காங்க,நாம சப்பி போடுகிற எச்சை ஆர்டரை தான் எடுக்கிறாங்க என்று பார்த்தால் நாம அனுபவித்து தூக்கி எறியும் பொண்ணுங்களை கூட விட மாட்டாறாங்க .அதுவும் என் பிறந்த நாள் அன்னிக்கு அந்த சஞ்சனாவை என் ரூமில் வைச்சு மேட்டர் போட்டேன் பாரு, செம பீசுடா அவ"என்று அவன் கூறும் போதே அவன் கன்னத்தில் பலமான குத்து விழுந்தது.அதில் நிலை தடுமாறி அவன் கீழே விழ,பாலாஜி ராஜாவை தாக்க தொடங்கினான்.பாலாஜி இருப்பதோ ஒல்லி.அடிக்க வந்த பாலாஜியை அலேக்காக தலை மேல் தூக்கி ராஜா வெளியே வீசி எறிந்தான்.அடுத்து ஜார்ஜ் எழுந்து ராஜாவை அடிக்க வர,இருவருக்கும் துவந்த யுத்தம் ஆரம்பமாகியது.என்ன தான் ஜிம்க்கு போய் ஜார்ஜ் உடம்பை பார்த்து பார்த்து வலுவாக்கி வைத்து இருந்தாலும் ராஜாவின் இயற்கையாக உருவாகி இருந்த வலிமைக்கு முன் ஈடு கொடுக்கவே முடியவில்லை.சரமாரியாக ராஜாவிடம் ஜார்ஜ் அடி வாங்கி கொண்டு இருந்தான்.அதுவும் ராஜாவின் வேகம் அசாதாரணமாக இருந்தது.ஜார்ஜ் அடிக்க கை ஓங்கும் முன்,ராஜாவின் கை வேகமாக செயல்பட்டு ஜார்ஜை தாக்கி நிலை குலைய வைத்தது.மின்னல் போல் ராஜா தொடுத்த தாக்குதலில் ஜார்ஜ் முற்றிலும் நிலை குலைந்து கீழே விழுந்தான். இருந்தும் ஆத்திரம் அடங்காமல் மாறி மாறி அவன் மார்பில் ராஜா எட்டி எட்டி உதைத்தான். இவர்கள் இருவர் சண்டையிடுவதை பார்த்து இவர்கள் நண்பர்கள் ஓடி வந்து பிடித்து கொண்டனர்.ராஜா அவர்களையும் மீறி காளை போல் துள்ளி ஜார்ஜ்ஜை கோபத்துடன் எட்டி எட்டி உதைத்தான்.

ஜார்ஜ் முகத்தில் அடி வாங்கி இரத்தத்துடன் தலைமுடி களைந்து பரிதாபமாக இருக்க,பக்கத்து தனி அறையில் சாப்பிட்டு கொண்டு higher official அனைவரும் இங்கு நடக்கும் கலாட்டாவை அறிந்து ஓடி வந்தனர்.

நாராயண் ,அவர்கள் இருவரை பார்த்து"whats happening here,ஒரு MNC கம்பனியில் வேலை பார்த்திட்டு ரெண்டு பேரும் தெரு பொறுக்கிங்க மாறி சண்டை போட்டுட்டு இருக்கீங்க.ராஜா you are in next level.i didn't expect this from you.both will get severely punished.i will take a action,come to my cabin tomorrow in lunch time.both of you get out immediately from this place" என்று கத்தினார்.

சஞ்சனா தகவல் அறிந்து ராஜாவிடம் ஓடி வந்தாள்.

"ஏண்டா இப்படி பண்ணே.நீ இப்ப தான் steps அட்டென்ட் பண்ணி இருக்கே.நீ அடுத்த லெவலுக்கு போகும் நேரம் இப்படி பண்ணலாமா?" சஞ்சனா கேட்க ராஜா மௌனமாக தலைகுனிந்து இருந்தான்.

இப்ப வாயை திறக்க போறீயா, இல்லையாடா என்று அவள் மாறி மாறி அவன் கன்னத்தில் அறைந்தாள்.

ராஜா சஞ்சனாவின் கையை இழுத்து கொண்டு தனியாக சென்றான்.

இப்போ எங்கடா என்னை கூட்டிட்டு போற?

ராஜா ஒரு தனிமையான இடத்திற்கு அவளை கூட்டி சென்று முன்னும் பின்னும் யாரும் இல்லை என உறுதி செய்து கொண்டு,"உனக்கு தெரியாது சஞ்சனா .ஜார்ஜ் உன்னை பற்றி என்ன பேசினான் தெரியுமா?அது நாலு பேர் முன்னாடி சொல்ல கூடிய விசயம் இல்லை.அதனால் தான் உன்னை தனியே கூட்டிட்டு வந்தேன்.".

என்ன சொன்னான் அவன்?

அவன் அனுபவித்து தூக்கி எறிந்த எச்சில் இலை நீ என்று சொன்னான்.என் சுந்தர நிலவை தப்பா பேசும் போது அதை கேட்டு எப்படி என்னால் தாங்கி கொள்ள முடியும்?

அதை நீ நம்பறீயா?

"ச்சீ,நான் எப்படிடி இதை போய் நம்புவேன்,என் உயிரின் பெண் வடிவம் நீ,உன் உயிரின் ஆண் வடிவம் நான் அல்லவா கண்மணி.உன்னை பற்றி தப்பா பேசிய வாயை உடைச்சி உன் காலில் விழுந்து அவனை மன்னிப்பு கேட்க வைத்தால் தான் என் ஆத்திரம் தீரும் சஞ்சனா"

சும்மா கோபப்பட்டு அறிவிழக்க வேண்டாம் ராஜா,அவன் சரியா பிளான் போட்டு எல்லா பெரிய ஆளுங்க ஒண்ணா இருக்கும் போது உன் கோபத்தை தூண்டி, சண்டை போட வைத்து உன் வேலைக்கு உலை வைச்சு இருக்கான்.நீயும் அவன் விரிச்சு வைச்ச வலையில் போய் வகையாக விழுந்துட்ட.

அதுக்கு உன்னை பற்றி தப்பா பேசும் போது சும்மா இருக்க சொல்றியா,உன்னை விட இந்த வேலை எனக்கும் ஒன்னும் பெரிசு இல்ல.ராஜா எகிறினான்.

"அப்படி அவசரப்பட்டு எதையும் முடிவு எடுக்க வேண்டாம்டா , நீ என்னை நம்பற, எனக்கு அது போதும்,அந்த எச்சை என்னை பற்றி என்ன வேணாலும் பேசிக்கட்டும்.எனக்கு கவலை இல்ல ,எனக்கு நீ அடுத்த நிலைக்கு போகனும் அது தான் எனக்கு முக்கியம்.முதலில் பொறுமையா இருக்க கத்துக்க,அவசரப்பட்டு ஒன்னும் ஆக போறதில்ல.அதுக்குன்னு அவனை சும்மாவும் விட கூடாது.சமயம் பார்த்து தான் பழி வாங்க வேண்டும்.அவனுக்கு நாம திருப்பி அடிக்கும் பொழுது அவனுக்கு மட்டும் தான் பாதிப்பு இருக்கணும்.நமக்கு எந்த பாதிப்பும் வர கூடாது.அதுக்கு பொறுமையா மறைந்து இருந்து தான் அடிக்கணும்.

"எனக்கு எதுவாக இருந்தாலும் நேருக்கு நேராக தான் மோதி பழக்கம் சஞ்சனா.மறுபடியும் சொல்றேன் இந்த வேலை எனக்கு முக்கியம் இல்ல,நீதான் எனக்கு முக்கியம்."

"சரி விடு,இந்த பிரச்சினையில் இருந்து உன்னை எப்படி வெளிக்கொண்டு வருவது என்று எனக்கு தெரியும். ஜார்ஜ் கிட்ட இருக்கும் ஒரு ஆடு ஒரு விசயத்தில் என்னிடம் சிக்கி இருக்கு,அதை நான் மிரட்டுற மிரட்டுல நாளைக்கு நடக்க போகும் வேடிக்கையை மட்டும் பாரு. இந்த சஞ்சனா உன் கூட இருக்கிற வரை,அவ்வளவு எளிதாக இந்த வேலையில் இருந்து உன்னை யாரும் எடுக்க விட மாட்டேன்."

ஜார்ஜ் பாலாஜியை சந்திக்கும் பொழுது

என்னடா ஜார்ஜ் இப்படி பண்ணிட்டே.இப்போ உன்னோட வேலைக்கே ஆபத்து வந்து விட்டதே? பாலாஜி கேட்டான்.

டேய் பாலாஜி,நமக்கு ரெண்டு கண்ணு போனாலும் எதிரிக்கு ஒரு கண்ணாவது போகனும்.எனக்கு வேலை போனாலும் பரவாயில்லை,ஆனா அவன் வார்னிங் லெட்டர் வாங்கி அடுத்த லெவலுக்கு போக கூடாது.நாளைக்கு கண்டிப்பா குறைந்தபட்சம் வார்னிங் லெட்டர்,இல்ல வேலையை விட்டு தூக்குவார்கள்.அப்புறம் அவனை இன்னொரு இடத்தில் சிக்க வைக்க ஏற்பாடு செய்து இருக்கேன்.அந்த ஏற்பாட்டில் இரண்டு பேரும் கண்டிப்பாக பிரிவது உறுதி..என கொக்கரித்தான்.

ராஜாவின் வேலையை சஞ்சனா காப்பாற்ற முடிந்ததா?இல்லை ஜார்ஜ்ஜினால் ராஜாவின் வேலை போனாதா?வெற்றி பெற்றது சஞ்சனாவா?இல்லை ஜார்ஜ்ஜா?

"பொறுக்கி மாதிரி சண்டை போட்டு எப்படி சட்டை பட்டன் கிழிந்து இருக்கு பாரு.முதலில் உள்ளே வா"

சஞ்சனா வீட்டுக்குள் சென்றவுடன் "என்ன சாப்பிடற டீயா இல்ல காஃபியா".

எதுவும் வேணாம் சஞ்சனா,ஏதோ ஜார்ஜ்கிட்ட இருக்கும் ஒரு ஆடு சிக்கி இருக்கு என்று சொன்னீயே என்ன விசயம் அது?

அதுவா! இந்நேரம் அது நமக்காக வேலை பார்த்துக்கிட்டு இருக்கும்.

கொஞ்சம் புரியும் படியா சொல்லு சஞ்சனா..

உனக்கு பாலாஜி தெரியும் தானே

ஆமா எப்பவுமே ஜார்ஜ் கூட சுத்திக்கிட்டு இருப்பானே .

அவனே தான்.அவன் ரெண்டு,மூணு கஸ்டமர் கிட்ட 6 மாசம் ,ஒரு வருஷத்திற்கான பிளான் அமௌண்ட் வாங்கி இவன் செலவு பண்ணிட்டு கஸ்டமருக்கு வெறும் 1 மாச பிளான் ஆக்டிவேட் பண்ணி கொடுத்து இருக்கான்.

அடப்பாவி, ஆனா சஞ்சனா கஸ்டமருக்கு ரெண்டாவது மாசமே தெரிந்து விடுமே.அப்போ கஸ்டமர் கேருக்கு complaint பண்ணால் பெரிய பிரச்சினை ஆகி விடுமே.

அது தான் துரை என்ன பண்ணுவார்,மாச மாசம் கஸ்டமருக்கு இவரே ரீசார்ஜ் பண்ணி விட்டுடுவாரு.இது கஸ்டமருக்கும் தெரியாது.நம்ம கம்பனிக்கும் தெரியாது.இவன் மாச மாசம் ரீசார்ஜ் பண்ணுவதால் கஸ்டமருக்கு 6 மாச பிளானுக்கு உண்டான benefit கிடைக்காது.6 மாசம் கழித்து கஸ்டமருக்கும் ஞாபகம் இருக்காது.இதையே சாக்காக வைத்து துரை மாசம் ரெண்டு ,மூணு கஸ்டமர் பணத்தை ஆட்டைய போட்டு கொண்டு இருக்கிறார்.அதை நான் கண்டு பிடித்து விட்டேன்.அந்த மூணு கஸ்டமர் பேர் சொன்னவுடனே துரை ,பெட்டி பாம்பா அடங்கிட்டான்.என் கணிப்பு சரியாக இருந்தால் இந்நேரம் அவன் ஜார்ஜ் கிட்ட பேச்சு கொடுத்து அவன் வாயாலேயே உண்மை வாங்கி ரெக்கார்டிங் வந்து சேரும் பாரு என்று சஞ்சனா சொல்லி கொண்டு இருக்கும் பொழுதே அவள் மொபைலுக்கு notification வந்து சேர்ந்தது.

சஞ்சனா அதை காட்டி தன் மின்னும் விழிகளால் "எப்படி"

என்று கேட்க,

"யம்மா பலே ஆளு தான்மா நீ"என்று ராஜா கூற,

பின்னே உன்னை மாதிரி கடிவாளம் போட்ட குதிரை போல இருக்க சொல்றியா. நாலாபுறமும் கவனிக்கனும்.நம்ம கிட்ட நயவஞ்சகமாக செயல்படும்‌ கெட்டவங்க நம்மை சுற்றி தான் இருப்பாங்க,நாம தான் எச்சரிக்கையா இருந்து அதே பாணியில் அவர்களுக்கு திருப்பி அடிக்கணும்.இரு நான் போய் ஊசி ,நூல் எடுத்திட்டு வரேன்.

இவ என்ன இப்படி இருக்கா,பள்ளி பாடம் தான் சொல்லி கொடுக்கிறாள் என்று பார்த்தால்,வாழ்க்கை பாடம் கூட இவ கிட்ட இருந்து நிறைய கற்று கொள்ளலாம் போல உள்ளதே.அடுத்து காம பாடம் தான் ,அதிலாவது இவளை விட நான் பெட்டராக செயல்பட வேண்டும் என்று ராஜா மனதில் நினைக்க,ஆனால் காம பாடத்திலும் சஞ்சனா தான் சொல்லி கொடுத்து அவனை சூப்பராக செயல்பட வைக்க போகிறாள் என்று அவனுக்கு தெரியாது.

சஞ்சனா உன்கிட்ட ஒன்னு கேட்கட்டுமா?

கேளு ராஜா..!

நான் உன்னை ஒரே நாள் மட்டும் தான் சேலையில் பார்த்தேன்.அதுவும் ஓணம் பண்டிகை அன்று மட்டும் தான் கொஞ்ச நேரம் பார்க்க முடிந்தது.ஏன் எப்போ பார்த்தாலும் மாடர்ன் ட்ரெஸ் இல்லை சுடிதார் மட்டும் போடற.

ஏன் இதுக்கென்ன குறைச்சல்?

சேலையில் நீ அவ்வளவு கொள்ளை அழகு தெரியுமா?அதுவும் உன்னோட அழகான இடுப்பு தெரிய செக்ஸியா இருந்தே..உண்மையை சொல்ல வேண்டும் என்றால் உன் இடுப்பு மடிப்பை அன்னிக்கு பார்த்து எனக்கு அடி வயிற்றில் ஏதோ ஒரு அமிலம் சுரந்த மாறி இருந்தது.

சாருக்கு கண் எங்கே போது பாரு,டேய் நான் முழுக்க முழுக்க உனக்கு தான் சொந்தம்.என்னோட அங்கங்களை பார்க்க உரிமை உள்ளவன் நீ மட்டும் தான்.கொஞ்சம் நாள் மட்டும் பொறுமையா இரு.

கிழிந்து இருந்த சட்டை பட்டனை சஞ்சனா தைக்கும் போது அவள் விடும் மூச்சு காற்றும்,வைத்து இருந்த மல்லிகை வாசமும்,அவளின் அருகாமை,அவளிடம் இருந்து வெளியே வரும் சுகந்த வாசம் யாவும் அவனை சூடாக்கியது.நூலை அறுக்க அவள் வாயை ராஜா மார்பின் அருகே அவள் இதழும் அவன் மார்பில் பட்டது.ராஜா மெய்மறந்து கண்ணை மூடி இன்பசுகத்தை அனுபவித்தான்.

"போதும் கண்ணை திறடா"

"என்ன இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே"என்று அவன் வருந்தி,"ச்சே இப்படி நடக்கும் என்று தெரிந்து இருந்தால் இன்னும் ரெண்டு பட்டன் கூட கிழித்து இருக்கலாம் போல் இருக்கே"

ஆ .,ஆசை தோசை,என்று அவன் கன்னத்தில் செல்ல குத்து குத்த,

ஆ வலிக்குதுடி,

என்ன ஆச்சு ?

சண்டை போட்டதில் சின்ன காயம்,அப்படியே அங்கே உன் இதழை ஒத்தி எடுத்தால் வலி காணாமல் போய் விடும் என் செல்லமே,..

ஹே..நீ பொறுக்கி மாதிரி சண்டை போட்டுட்டு வருவே,நான் உனக்கு முத்தம் தரணுமா?அதெல்லாம் கொடுக்க முடியாது போடா

உனக்காக தானே செல்லம் சண்டை போட்டேன்.கொஞ்சம் கன்சிடர் பண்ணுமா.

சரி போனா போகுது, எங்கே வலிக்குது மட்டும் சொல்லு அங்கே மட்டும் தரேன்.

நெற்றி ,மூக்கு கன்னம்,கழுத்து மார்பு என்று பல இடங்களை காட்டி உதட்டையும் சேர்த்து ராஜா காட்ட,

ஏய் நிப்பாட்டு நிப்பாட்டு ,என்ன நீ பாட்டுக்கு அடுக்கிட்டே போற.உதட்டில் எல்லாம் அடிபடவே இல்ல ,அங்கே எல்லாம் கொடுக்க முடியாது.

இல்லடி,உதட்டில் உள்ளே உள்காயம் செல்லம்,அடிப்பட்டு இரத்தம் உள்ளுக்குள் லீக் ஆகிட்டு இருக்கு.சீக்கிரம் ட்ரீட்மென்ட் ஆரம்பி.

சரி சைவ முத்தம் வேணுமா,இல்ல அசைவ முத்தம் வேணுமா?

ம்..,மற்ற இடத்தில் சைவ முத்தம் கொடு.ஆனா உன் தேன் இதழால் என் உதட்டில் கொடுக்கும் போது மட்டும் அசைவ முத்தம் கொடு.சும்மா நச்சென்று ஆழமா ,உடம்பில் உள்ள இரத்தம் சூடேற,குப்பென்று வேர்க்கிற மாதிரி கொடுக்கணும்.தீப்பெட்டி இல்லாம நீ தென்றலாய் விடும் மூச்சு காற்றில் என் உடம்பு அப்படியே தீப்பற்றி எரியனும்.

ஹே ஹே. துரைக்கு ரொம்ப ஆசை தான்.அந்த மாதிரி எல்லாம் தர முடியாது.ஒன்லி 2 கிஸ் தான்

எங்கே வேணும் நீயே ஏரியாவை தீர்மானித்து சொல்லு.

என்ன இன்னிக்கு ரொம்ப பிகு பண்ற,நான் போய் பல்லவி கிட்ட கிஸ் வாங்கிக்கிறேன்.அவ எவ்வளவு கேட்டாலும் தருவா?

ஓ,சார் அவ்வளவு தூரம் போயாச்சா,அப்ப அந்த பல்லவிகிட்டயே போய் வாங்கிங்க,

ராஜா போனை எடுத்து டயல் செய்து,"ஹாய் பல்லவி,நாம புதுசா காதல் ஒப்பந்தம் போட்டுக்கலாமா?

.

என்னது அந்த சஞ்சனாவா?

..

அவளை கழட்டி விட்டுட்டேன்.!

..

நம் காதலுக்கு முன்னோட்டமா இன்னிக்கு 1000 கிஸ் லிப் to லிப் தரீயா.எங்கே வரணும் சொல்லு.உடனே வரேன்."

ராஜாவின் மொபைலை பிடுங்கிய சஞ்சனா,என்னடி அவன் தான் என் ஆளு என்று தெரியும் இல்ல,அவன் கிட்ட நெருங்கின அவ்வளவு தான் பார்த்துக்க,

எதிர்முனையில் ராஜேஷ்"சிஸ்டர் ஒரு நிமிஷம் கொஞ்சம் பொறுமை பொறுமை,ஆத்திரபடாதீங்க.அவன் தான் போனை போட்டுட்டு ஏதோதோ உளறுகிறான் என்றால் நீங்க அதுக்கு மேல இருக்கீங்க."

"டேய் நீயாடா நான் பல்லவி என்று நினைச்சேன், போனை வைடா முதலில்".

"நான் போனை வைக்கிறேன் சிஸ்டர்,அவன் என்ன கண்ட மேனிக்கு 1000 லிப் டூ லிப் கிஸ் கேட்கிறான்.உதடு வீங்கி அப்புறம் சாப்பிட கூட முடியாது என்று சொல்லுங்க"ராஜேஷ் போனை வைத்தான்.

ராஜாவை பார்த்து "ராஜேஷ் தான் உனக்கு பல்லவியா சார்.?"

பல்லவிகிட்ட பேசற மாதிரி சும்மா புருடா தான் விட்டேன் சஞ்சனா.அதுக்கே மேடம் எவ்வளவு கோப பட்டீங்க.கொஞ்சி கொஞ்சி நான் கொண்டாடிடும் என் வஞ்சி கொடி அது நீதானடி.என் காதல் கிளியை விட்டால் வேறு யாரிடம் நான் உம்மா வாங்க முடியும் சொல்லு?

ச்சீ போடா அவள் எந்திரித்து ஓட,ராஜா எட்டி அவளை பிடித்தான்.

உன்கிட்ட இருந்து எப்படி முத்தம் வாங்குவது என்று எனக்கு தெரியும்.!! அவள் நெற்றியில் முத்தம் வைக்க,சஞ்சனா தலையை ஒருபக்கம் சாய்த்து விரலால் கன்னத்தை காட்டி அங்கே முத்தம் வைக்குமாறு கேட்க,ராஜா அதற்கு "நான் கொடுத்த கடனை தேவி திருப்பி கொடுத்தால் தான் அங்கே கிடைக்கும்"

சஞ்சனா தன் செவ்விதழ்களை அவன் நெற்றியில் பதிக்க,அவன் பதிலுக்கு கன்னத்தில் முத்தம் வைத்தான்.மாறி மாறி இருவரும் முகம் முழுக்க முத்தங்களால் அன்பை பரிமாறி கொண்டனர்.

ராஜா அவளை பார்த்து,"என்ன என் கண்மணியின் பழம் விறுவிறுவென்று வளர்வதை பார்த்தால் சீக்கிரமே பறித்து சுவைக்க வேண்டும் போல் இருக்கே"

உதட்டு கீழே போன படுவா உன் வாலை ஒட்ட நறுக்கிடுவேன் ராஸ்கல்.மற்றதெல்லாம் மணமாலை இடும் வேளை வந்தவுடன் இந்த தேகம் தானாக உனக்கு விருந்துகள் படைக்கும்.அதுவரை நீ பொறுமையாக தான் இருக்கணும்.

"ம்ம் பொறுத்தார் பூமி ஆள்வார்.சரி இப்போ இந்த உதட்டு முத்தமே போதும் "என்று அவள் இதழ் அருகே அவன் முகத்தை கொண்டு வர சஞ்சனா கண்களை மூடி அவனை வரவேற்றாள்.இருவர் இதழ்களும் இணைய சஞ்சனா அவன் பாதம் மீது ஏறி நின்று கொண்டு அவனை கட்டி கொண்டு தன் இதழ்களை சுவைக்க கொடுத்தாள்.இருவரும் மெய்மறந்து கொடுத்த முத்தத்தில் ஒருவர் மீது ஒருவர் வைத்து இருந்த காதலே வெளிபட்டது.

மறுநாள் சஞ்சனவுக்கு விடுமுறை.இருந்தும் தன் காதலனுக்காக ஆபீஸ் சென்றாள்.

துர்கா அவளை பார்த்து"ஏய் சஞ்சனா,இன்னிக்கு உனக்கு week off தானே.எதுக்கு ஆபீஸ் வந்தே..!"

"அக்கா ஒரு சின்ன விசயம் நாராயணன் சாரை மீட் பண்ணுவதற்காக வந்தேன்."

சரி ஓகே சஞ்சனா.

நாராயணன் சார் அறையில்,

" May i come in sir,"

"Yaa come in

ஹே சஞ்சனா வந்து உட்காரு.என்ன விசயம்.எதுனா அவசரமா,நேற்று சண்டை போட்ட ரெண்டு முட்டாள்களை வேலை நீக்கம் பண்ண சொல்லி HR க்கு மெயில் அனுப்பிட்டு இருக்கேன்."

"சார் நான் அது விஷயமா தான் பேச வந்து இருக்கேன்."

"NO NO சஞ்சனா,அவர்களுக்காக நீ வக்காலத்து வாங்காதே.ரெண்டு பேரும் சேர்ந்து கம்பனி மானத்தை வெளியில் வாங்கி இருக்காங்க.இது மன்னிக்க முடியாத குற்றம்."

"சார் நான் பரிந்து பேச வரல,சில உண்மையை காண்பிக்க வந்து இருக்கேன்"

சஞ்சனா தன் மொபைலை எடுத்து,பாலாஜி மற்றும் ஜார்ஜ் இடையே நிகழ்ந்த உரையாடலை காண்பித்தாள்.

"சார் இன்னும் ஒரு ஆதாரமும் இருக்கு,நீங்க மனசு வைத்தால் ராஜா மற்றும் ஜார்ஜ் சண்டை இட்ட இடத்தில் சிசிடிவி காட்சியை வாங்க முடியும்.அதில் ஜார்ஜ் வேண்டும் என்றே ராஜாவை வம்புக்கு இழுப்பதை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும்."

நாராயண் ஓட்டலுக்கு ஃபோன் செய்து அந்த சிசிடிவி FOOTAGE கேட்க அது பத்து நிமிஷத்தில் வந்தது.அதில் ராஜா கை கழுவ செல்லும் போதே ஜார்ஜ் வேண்டுமென்றே தன் பிளேட்டை அவசர அவசரமாக போட்டு அவன் பின்னே ஓடுவதை பார்த்தார்.மேலும் ஜார்ஜ் ஏதோ கூற,ராஜா அவனை அடிப்பதையும் பார்த்து"அப்படி என்ன ராஜாவை கோபப்படுத்திற மாதிரி ஜார்ஜ் சொல்லி இருப்பான்."நாராயண் கேட்க

அதை நான் சொல்றேன் சார்,ராஜா,மற்றும் நான் இருவரும் ஒருவரையொருவர் லவ் பண்றோம்.ஏற்கனவே ராஜாவுக்கும் ,ஜார்ஜ்க்கும் ஆகாது.என்னை பற்றி ஜார்ஜ் தப்பாக பேசி அவன் கோபத்தை தூண்டி இருக்கான்.

ஓ ,சரிம்மா.சத்தியவான் சாவித்திரியை நான் கதையில் தான் படிச்சு இருக்கேன்.ம் ராஜாவுக்காக நீ இவ்வளவு தூரம் போராடுவதை பார்த்தால், சாவித்திரியை எனக்கு நேரில் பார்ப்பது போல் இருக்கிறது.நீ தைரியமாக இரு.i will remove his name from termination list.உனக்கு இன்னொரு முக்கியமான விசயம் இது அவனுக்கு கூட தெரியாது.இப்போ நடந்த ஸ்டெப்ஸ்ஸில் ராஜா TL ஆக செலக்ட் ஆகி இருக்கான்.

"நிஜமாவா சார்"சஞ்சனாவின் கண்கள் சந்தோஷத்தில் விரிந்தன.

ஆமாம்மா கடந்த ரெண்டு முறை அவன் இங்கிலீஷில் தான் சொதப்பிட்டான்.ஆனால் இந்த முறை அவன் இங்கிலீஷில் பேசி அசத்திட்டான்."IF I AM RIGHT YOU ARE THE ONE BEHIND HIS SUCCESS"

"சார் நான் மேலோட்டமாக தான் நான் சொல்லி கொடுத்தேன்.ஆனால் அவனோட முயற்சி தான் எல்லாமே"

"ANYWAY உன்னை மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க அவன் கண்டிப்பாக கொடுத்து வச்சிரக்கனும்.நீயே உன் வாயால் அவன் செலக்ட் ஆகி இருப்பதை சொல்லி விடு.ok best of luck.அப்புறம் சஞ்சனா நீங்க ரெண்டு பேர் சேர்ந்து Annual day நிகழ்ச்சி அன்று ஆடிய நடனத்தை நான் பார்த்தேன்.wow simply fantastic.எனக்கு நீங்க ரெண்டு பேர் சேர்ந்து ஒரு favour செய்யணும்."

சொல்லுங்க சார்,

இன்னும் ரெண்டு மாதத்தில் நாம 3 லட்சம் customers reach ஆகியதற்கான celebration நடக்க போகுது.அப்போ Head office இல் இருந்து CEO sanjay sukla மற்றும் சினிமா celebrities எல்லோரும் வருகிறார்கள்.அப்போ வழக்கமாக Head ஆபீஸில் இருந்து வரும் சித்தார்த் எல்லா branch office நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடுவான்.அவனுக்கு நான் என்ற மமதை அதிகம் ஒவ்வொரு தடவை உயர் அதிகாரிகள் meeting நடக்கும் பொழுது அவனுடைய அலம்பல் அதிகம்.அதனால் நீங்க ரெண்டு பேர் சேர்ந்து அந்த மேடையில் டான்ஸ் ஆடி உங்களோட best performance கொடுத்து அவனோட மூக்கை அறுக்கறீங்க ஓகே"

"நீங்க ராஜாவை தவிர்த்து வேறு யாருடன் நடனம் ஆட சொல்லி இருந்தால் முடியாது என்று சொல்லி இருப்பேன் சார்.ஆனால் அவனுடன் ஆடுவது எனக்கு மிக மிக விருப்பம். கண்டிப்பாக ரெண்டு பேர் சேர்ந்து ஆடுவோம் சார்"..சஞ்சனா சம்மதித்தாள்.

ஜார்ஜ் மட்டும் உடனே பணிநீக்கம் செய்யப்பட்டான்.

ராஜா சென்று நாராயண் சாரை சந்திக்க "அவர் அவனிடம் சஞ்சனாவால் நீ தப்பிச்ச.மீண்டும் உனக்கொரு வாய்ப்பு கிடைச்சு இருக்கு.அதை பயன்படுத்தி கொண்டு வாழ்வில் முன்னேற பார்"என்று அறிவுரை கூறி அனுப்பினார்.

ராஜா தன் காதலியை சந்திக்க அவள் வீட்டுக்கு உற்சாகமாக சென்றான்.

அடி மேல் அடி விழுந்து கொண்டு இருக்கும் ஜார்ஜ் என்ன செய்ய

போகிறான்.? சஞ்சனாவின் அப்பா இன்னும் இரண்டு நாளில் ராஜாவை சந்திக்க போகிறார்?அப்பொழுது நடக்க போகும் சம்பவம் என்ன?முக்கிய திருப்பங்களுடன் "நினைவோ ஒரு பறவை"​
Next page: Chapter 13
Previous page: Chapter 11