Chapter 24
சஞ்சனா இன்னிக்கு லீவு போட வேண்டாம்,போய் வேலை பாரு ராஜா சற்று அழுத்தமாக சொன்னான்.
சரிடா,நீ என் கூட இருப்பாய் என நினைத்து தான் நான் லீவு போட்டேன்.இப்போ தான் அது நடக்கலயே,நான் போய் ஒர்க் பண்றேன்.ஆனா நாளைக்கு நான் உன்னை ஒரு இடத்திற்கு கூட்டிட்டு போகனும் வர்றியா?
எங்கே சஞ்சனா,?
நாளைக்கு என் அம்மா நினைவு நாள் ராஜா,நான் பிறந்து வளர்ந்த இடம் திருமழிசை பக்கம் ஒரு கிராமம்.அங்க நான் வளர்ந்த வீடு இன்னும் என் பெயரில் தான் இருக்கு.அந்த வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரலாமா.?
ராஜாவிற்கு எங்கே தனியாக இவளுடன் இருக்க நேர்ந்தால் கூடல் மறுபடியும் நிகழ்ந்து விரதம் கலைந்து விட்டால் அதனால் அவள் உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற பயம்.ஆனால் அவள் அம்மா நினைவு நாள் என்று கூறும் போது ஏனோ மறுக்க தோன்றவில்லை.
ராஜா அவள் கைபிடித்து,"சரி எத்தனை மணிக்கு போகலாம் சொல்லு,லீவு போட வேண்டும் என்றால் கூட போட்டு விடலாம்"
வேண்டாம் ராஜா,நான் காலையில் 6 மணிக்கெல்லாம் டான்னு உன் ரூமுக்கு வந்து விடுகிறேன்.அங்கிருந்து நாம ரெண்டு பேர் ஒண்ணா ஒரே பைக்கில் கட்டி பிடிச்சு போலாம்.போய் கொஞ்ச நேரம் இருந்து விட்டு,அங்கிருந்து கிளம்பினோம் என்றால் எப்படியும் பத்து மணிக்கு வேலைக்கு வந்து விடலாம்..ஓகேவா
ராஜா தன் வெள்ளை நிற பற்கள் தெரிய சிரித்து,நல்லா தான் பிளான் போடற சஞ்சனா, சரி வா நான் உனக்காக காலையில் ரெடியாக காத்து இருக்கிறேன்.
அடுத்த நாள் காலை சொன்னது போலவே சஞ்சனா 6 மணிக்கு வந்து விட்டாள்.ராஜாவும் இப்பொழுது மகா மிருத்யுஞ்சய மந்திரம் படிக்க சீக்கிரமே எழுந்து விடுவதால் தயாராக இருந்தான்.இருவரும் அவனுடைய பைக்கில் திருமழிசை தாண்டி செல்லும் போது இயற்கை எழில் காட்சிகள் வரவேற்றது.சுத்தமான தென்றல் காற்றை சுவாசித்து கொண்டே தன் இனியவனோடு உற்சாகமாக சஞ்சனா வழி காட்டி கொண்டே வந்தாள்.
தார் சாலையில் இருந்து மண் சாலைக்கு வண்டி பயணிக்க, வழியில் ஒரு கடையில் பூ வாங்கி கொண்டனர்.
பின் ஒரு இடத்தில் வண்டி விட்டுவிட்டு,அவனை ஒரு வயல்காட்டு வரப்பில் கூட்டி சென்றாள்.
ராஜா அவளிடம்"எங்கே சஞ்சனா கூட்டி போறே,சுற்றிலும் வயல்வெளியா இருக்கு, வீடே காணோம்.
ராஜா, அதோ அங்கே ஒரு ஒட்டு வீடு தெரியுது பாரு,அது தான் என்னோட வீடு.
அழகான ஒரு சின்ன ஓட்டு வீடு.சஞ்சனா மேலே உள்ள சாவி போட்டு திறந்தாள்.
உள்ளே வீடு பெருக்கி சுத்தமாக இருந்தது.
சஞ்சனா இங்கே வீட்டில் யாரும் இல்லை என்று சொன்னே,ஆனா வீடு சுத்தமா இருக்கு.
ராஜா இது அம்மா என்னை வளர்த்த வீடு,இது எனக்கு கோவில் மாதிரி.அதனால் தினமும் சுத்தம் செய்ய ஒரு அம்மாவை வேலைக்கு வைத்து உள்ளேன்.அவங்க இதுக்கு மேல வந்தால் வருவாங்க.அவள் ஓடியாடி விளையாடிய இடங்களை எல்லாம் சொல்லி சொல்லி காண்பித்தாள்.
"ராஜா என் கூட வாயேன்,ஒரு முக்கியமான இடத்திற்கு கூட்டி போறேன்"என சின்ன குழந்தை ஆசையோடு கூட்டி செல்வது போல் அவனை கூட்டி சென்றாள்.
வீட்டின் பின்பக்கம் ஒரு சமாதி இருந்தது.அதன் அருகே சென்று,"ராஜா எங்க அம்மாவை இங்கே தான் புதைத்து இருக்கோம்"என்று கண்ணீருடன் சொல்ல,
ராஜா அவளை அணைத்து தேற்றினான்.சமாதியை சுத்தம் செய்து,அவளிடம் இருந்த பூவை வாங்கி போட்டு இருவரும் தரையில் விழுந்து வணங்கினர்.
அப்பொழுது காற்று தென்றலாய் வீச, பூவரச மரம் பூக்கள் அவர்கள் மேல் விழுந்தது.அவள் அம்மா தான் ஆசிர்வாதம் செய்கிறார்கள் என அவர்களுக்கு நன்றாக தெரிந்தது.
மீண்டும் வீட்டுக்குள் சென்று,சஞ்சனா அவன் மடியில் படுத்து கொண்டு"ராஜா எங்க அம்மாவோடு கூட பிறந்தவங்க நாலு அண்ணன்கள்,எங்க அம்மா தான் கடைசி.ஊரிலேயே நல்ல வசதியான குடும்பம்.இப்போ இந்த வீட்டை சுற்றி இருக்கிற நிலங்கள் எல்லாம் என் அம்மா கூட பிறந்தவங்களுக்கு தான் சொந்தம்.என் அம்மா என் அப்பாவை காதலித்து வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கட்டாங்க.என் அப்பா வேறு சாதி என்பதால் ரெண்டு பேர் வீட்டுக்குள்ளேயே சேர்க்கல.என் தாத்தா,பாட்டி தான் இரக்கப்பட்டு இந்த வீட்டை ஒதுக்கி தந்தாங்க.இங்கே தான் பிறந்தேன்,வளர்ந்தேன்.என் அம்மா ஒரு கட்டத்தில் இறந்து விட்டாங்க.நான் இப்ப ஓரளவு படித்து இருக்கேன் என்றால் அதுக்கு காரணம் என் தாத்தா பாட்டி தான்.அவங்க தான் என்னை வளர்த்து ஆளாக்கினாங்க.என் அம்மா கூட பிறந்தவங்க,என்னை சீண்ட கூட மாட்டாங்க.ஒரு கட்டத்தில் என் தாத்தா ,பாட்டிக்கும் உடம்பு மோசமாகும் போது சொத்தில் ஒரு பகுதி எனக்கு கொடுக்க ஆசைப்பட்டாங்க.அதுக்கு என் மாமாக்கள் யாருமே ஒப்புக்கல.அப்புறம் நான் எனக்கு சொத்து எதுவும் வேண்டாம்,என் அம்மா என்னை வளர்த்த வீடு மட்டும் எனக்கு கொடுத்துடுங்க என கெஞ்சினேன்.அதை மட்டும் ஒப்பு கொண்டு கொடுத்து இருக்காங்க.இப்போ இதை கூட விற்க சொல்லி என் அப்பா என்னை வற்புறுத்தி கொண்டே இருக்காரு.நான் எப்போதாவது இங்கே வந்து படுத்தால் என் அம்மா மடியிலேயே படுத்த மாதிரி இருக்கும்.அதனால் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் இதை விற்கவில்லை.எனக்கென்று யாருமே இல்லை ராஜா,நீ மட்டும் தான் இருக்கே என அவன் மடியில் விசும்பி விசும்பி அழுதாள்.
ராஜா அவள் தலையை வருடி பாட ஆரம்பித்தான்.
"ஆகாசவாணி நீயே என் ராணி,
தாய் போல நானும் தாலட்டுவேனே,
ஓ பிரியா..உயிருக்கு அருகினில் இருப்பவன் நான் தானே..
ஓ பிரியா. இதயத்தின் சிகரத்தில் இருப்பவள் நீ தானே,
கண்ணீரே.. ஏன் ஏன் என்னுயிரே..
அன்னை தந்தையாக உன்னை காப்பேன் அம்மா..
அன்பு தந்து உன்னில் என்னை பார்ப்பேன் அம்மா.."
டேய் ராஜா இப்போ தான் என் மனசு லேசான மாதிரி இருக்குது.என் அம்மா மடியில் படுத்த மாதிரியே இருக்குடா.இப்படியே என் உயிர் போனாலும் எனக்கு சந்தோஷம் தான்.
வாயை மூடு சஞ்சனா என்ன வார்த்தை பேசறே,நீ இல்லாத உலகத்தில் நான் மட்டும் இருப்பேன் என்று நினைச்சியா?
அய்யோ சாரி சாரி கண்ணா,ஏதோ உணர்ச்சி வசத்தில் பேசிட்டேன்.அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டு போக மாட்டேன் போதுமா?.கண்ணை துடைத்து கொண்டு சிரிக்க,
"சஞ்சனா உன் இந்த ஒரு சிரிப்பு மட்டும் போதுமடி எனக்கு,என் எல்லா கவலையும் பஞ்சு போல் மறந்து விடும்.எப்பவும் நீ இதே மாதிரி சிரித்து கொண்டே இருந்தால் போதுமடி என் கண்ணே.."
அங்கு இருவருக்கு இடையே நெருக்கம் இருந்தாலும் காமத்தை விட அன்பே மேலோங்கி இருந்தது.
"இந்த வீட்டுக்கு நாம அடிக்கடி வரணும் ராஜா"
"கண்டிப்பாக வருவோம் செல்லம்"
ஆனால் இதுவரை எக்காரணத்திற்காகவும் இந்த வீட்டை விற்க எண்ணம் இல்லாத சஞ்சனா,ராஜாவிற்காக இந்த வீட்டையே விற்க வேண்டிய சூழ்நிலை வரக்கூடும் என கனவிலும் எதிர்பார்த்து இருக்க மாட்டாள்.
நிறைவான மனதுடன் இருவரும் கிளம்பி சென்னை வரும் பொழுது,ராஜாவிற்கு டெக்னீஷியன் வேலு ஃபோன் செய்தான்
"அண்ணே உங்க கஸ்டமர் இன்ஸ்டலேஷன் வந்தோம்,இங்க இந்த ஏரியா கவுன்சிலர் எங்களை பிடித்து வைத்து கொண்டு கலாட்டா பண்றார்.அடிக்கிறாங்க அண்ணா,ஆபீஸுக்கும் தெரிவித்து விட்டோம்,இன்னும் எந்த தகவலும் இல்ல,கொஞ்சம் நீங்க வர முடியுமா?"என்று கேட்டான்.
"கவலைபடாதே வேலு,நான் ஒரு அரை மணிநேரத்தில் வந்து விடுகிறேன்."என போனை வைத்தான்.
ராஜா அவளிடம் "சஞ்சனா நீ cab புக் பண்ணி போ,நான் கொஞ்சம் அவசரமாக ஒரு இடத்திற்கு போகனும்.
சஞ்சனா ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதை உணர்ந்து"ம்ஹீம்,நான் போக மாட்டேன்.நான் உன் கூட தான் வருவேன்."
இல்ல சஞ்சனா போற இடத்தில் பிரச்சினை ஏதோ இருக்கு,ஆம்பள நாங்க ஏதாவது சமாளித்து விடுவோம்.நீ பொண்ணு அதனாலே தான் சொல்றேன்
ராஜா ஒன்னு போறதா இருந்தால் என்னையும் கூட கூட்டிட்டு போ,இல்லை என்றால் நீயும் போகாதே.
"சரி வா உட்காரு.சீக்கிரம் போகனும்."
குறிப்பிட்ட இடம் வந்தவுடன் பைக்கை நிறுத்தி,"சஞ்சனா நீ இங்கேயே நில்லு,உள்ளே வராதே.நான் மட்டும் போய்ட்டு வந்துடறேன்."
அங்கு கவுன்சிலர் அவனது அடியாட்களுடன் ராஜாவின் கம்பனி ஆட்களை சிறைப்படுத்தி வைத்து இருந்தான். போதாக்குறைக்கு அவர்களை அடித்து காயப்படுத்தி இருந்தான்.
"வாடா பொறம்போக்கு,நீதான் இந்த ஏரியா சேல்ஸ் மேனா?இங்க கம்பம் நடுவதற்கு உனக்கு யாருடா பெர்மிஷன் கொடுத்தது.?"
ராஜா தன்மையாகவே"சார் நாங்க முறையாக சென்னை மாநகராட்சியில் பணம் கட்டி அனுமதி வாங்கி தான் இங்கே கம்பம் நட்டு கேபிள் ஒட்டுகிறோம்."
"மாநகராட்சியில் அனுமதி வாங்கிட்டா போதுமா,மாநகராட்சி உறுப்பினர் கிட்ட அனுமதி வாங்க வேணாமா?ஒழுங்கா எனக்கு வர வேண்டிய கமிஷன் வராமல் எவனும் இங்கு இருந்து நகர முடியாது.ஆமா யாரு அந்த பொண்ணு ,செம்ம ஜிகிடியா இருக்கு.யப்பா என்ன கலரு அள்ளுதே,என்ன ஷேப்,உன் லவ்வராடா?
"அவ நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு சார்,கொஞ்சம் மரியாதையா பேசுங்க"
"உனக்கு இப்படி ஒரு வாழ்க்கையாடா,வாழ்வு தான்.சரி நீ கல்யாணம் காலம் முழுக்க அவளோட வாழ்ந்துக்க, ஆனா இன்னிக்கு ஒரு நாள் அவ எனக்கு பொண்டாட்டியா இருக்கட்டும்.அது தான் உனக்கு தண்டனை.டேய் போய் அவளை தூக்கிட்டு வாங்கடா,"என கவுன்சிலர் தன் அடியாட்களை பார்த்து கூறினான்.
ராஜா கோபமாக "அவ மேல எவன் சுண்டு விரலாவது பட்டுச்சு, இன்னிக்கு அவன் உயிரோடவே இருக்க மாட்டான்."கத்தினான்
டேய் சுருளி,போடா இவன் கண் முன்னாடியே அவளை வச்சி அனுபவிக்கனும்,என்ன பண்றான்னு பார்ப்போம்.
சுருளி முன்னே போக ,ராஜா அவன் காலிலேயே எட்டி உதைத்தான்.உதைத்த வேகத்தில் சுருளி அங்கேயே ராஜா காலடியில் விழுந்தான்.ராஜா ஷூ காலால் அவன் பின்தலையை தரையோடு வைத்து வெறியோடு அழுத்த சுருளி வலி தாங்காமல் கதறினான்.
அடுத்து மேலும் கவுன்சிலரின் நான்கு அடியாட்கள் கையில் ஆயுதங்களுடன் சூழ்ந்து கொண்டனர்.
சஞ்சனா பதறி ஓடி வர,ராஜா உடனே"சஞ்சனா அங்கேயே நில்லு.கிட்ட வராதே "என கத்தினான்.
நால்வரும் ராஜாவை தாக்க வர,அங்கு டெக்னீஷியன் வைத்து கேபிள் ரோலை மின்னலென தாவி எடுத்து,அதை கேடயமாக பயன்படுத்தி அவர்களுடன் அனாசயமாக சண்டை போட்டான். சக்கரம் போல கேபிள் ரோலை வெட்ட வந்தவர்களின் ஆயுதங்களில் இருந்து தற்காத்துக் கொண்டு,பின் கேபிளை சவுக்கு போல் சுழற்றி சுரீர் சுரீர் என்று அடிக்க ஒவ்வொருவரும் அடி தாங்காமல் கதறினர்.அதை பார்த்து சஞ்சனா விசில் அடித்து ரசித்தாள்.ராஜாவின் பலமே மின்னல் போல வேகமாக செயல்படுவது தான்.அவன் கையும் காலும் மின்னல் போல் செயல்பட்டு சிலம்பாட்டம் போல் கேபிள் மூலம் சுற்றி இருந்த ஆட்களை வெளுக்க வலி தாங்க முடியாமல் ஒவ்வொருவராக சிதறி ஓடினர்.வேடிக்கை பார்த்த மக்கள் அனைவரும் கைதட்டி ராஜாவை உற்சாகப்படுத்தினர். ஏரியாவில் தன் மீது உள்ள பயம் மக்களிடம் குறைவதை கண்டு கவுன்சிலர் கோபத்தில் தானே அரிவாளை எடுத்து கொண்டு,சண்டை போட்டு கொண்டு இருக்கும் ராஜாவின் கழுத்தை வெட்ட பின்புறமாக செல்வதை சஞ்சனா பார்த்து விட்டாள்.நொடியும் தாமதிக்காமல் அவள் ஓட,கவுன்சிலர் ராஜாவை வெட்ட நெருங்கினான்.ராஜாவின் கழுத்தை வெட்ட கவுன்சிலர் கையை ஒங்க,"அம்மா."என சஞ்சனாவின் அலறல் சத்தம் கேட்டது.
என்ன நேர்ந்தது சஞ்சனாவிற்கு?அடுத்த பதிவில்
ராஜாவை வெட்ட வந்த கத்தியை சஞ்சனா இறுக பற்றி கொண்டாள்.இதனால் அவள் அழகான வெண்டை விரல்கள் அறுபட்டு இரத்தம் வழிய தொடங்கியது.அவளின் அலறல் சத்தம் கேட்டு திரும்பி ராஜா புட்பால் பிளேயர் போல பறந்து கவுன்சிலர் தலையை புட்பால் போல் எட்டி உதைக்க ,அவன் கையில் இருந்த கத்தியை தவற விட்டு சற்று தள்ளி விழுந்தான்.சஞ்சனாவின் விரலில் வழிந்த இரத்தத்தை பார்த்து வெறி வந்தவன் போல கவுன்சிலர் மார்பிலும்,மூஞ்சிலும் உதைக்க கவுன்சிலர் அங்கேயே மூக்கு உடைபட்டு மூர்ச்சை ஆனான்.உடனே தன் சட்டையை கிழித்து அவள் விரலில் கட்டு போட்டு பைக்கில் அமர்த்தி கொண்டு பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு விரைய அவள் விரல்களில் இருந்து வழிந்த இரத்தம் அவன் அணிந்து இருந்த பனியனை நனைத்தது.அது இன்னும் அவன் வேகத்தை அதிகப்படுத்தியது.
"டேய் எனக்கு ஒன்னும் இல்ல,மெதுவா போடா"என சஞ்சனா கூறினாலும் அவள் குரலில் இருந்த தொய்வு அவள் வலியை அவனுக்கு உணர்த்தியது.
பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் எளிதாக அட்மிட் பண்ண முடிந்தது.உபயம்:- இன்ஸ்பெக்டர் அருள்.
சஞ்சனாவிற்கு முதலுதவி அளிக்கப்பட்டு கட்டு போடப்பட்டது.வலி குறைய இஞ்செக்சன் செலுத்தினர்.
சஞ்சனாவின் அப்பா வந்தார்,பெரிதாக ஒன்றும் காயம் இல்லை என்று சென்று விட்டார்.
ராஜா,சஞ்சனாவை விட்டு விலகவே இல்லை.அன்று இரவு முழுக்க அவள் கூடவே இருந்து அருகில் இருந்து கவனித்து கொண்டான்.சஞ்சனாவிற்கு இரவில் வலி தெரிய ஆரம்பித்து வலியில் முனக ஆரம்பிக்க, ராஜா இரவு முழுக்க கண் விழித்து அவளுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து கொண்டு இருந்தான்.இயற்கை உபாதைகள் உட்பட.
காலையில் சஞ்சனா எழும் போது ராஜா அருகில் இல்லை.சஞ்சனாவின் விழிகள் அவனை தேடியது.ராஜா காலையில் அவளுக்காக தினம் மந்திரம் ஒதுவதால் வெளியில் சென்று இருந்தான்.
காலையில் நர்ஸ் படிக்கும் மாணவிகள் வந்து "மேடம் இன்னும் கொஞ்ச நேரத்தில் டாக்டர் ரவுண்ட்ஸ் வர ஆரம்பித்து விடுவார்.வாங்க நாங்க உங்களை குளிப்பாட்டி விடுகிறோம்."என்று கூப்பிட
"இல்லை நானே குளிச்சிக்கிறேன்."சஞ்சனா மறுத்தாள்.
மேடம் உங்க கையில் அடிப்பட்டு இருக்கு,உங்களால் ஜக்கை தூக்க கூட முடியாது.முக்கியமா அடிப்பட்ட இடத்தில் தண்ணி படவேகூடாது.அப்புறம் செப்டிக் ஆயிடும்.அதுவும் இப்போ உங்களால் விரலை மடக்க முடியாது.கட்டு போட்டு இருக்காங்க ..
இல்ல நான் உங்களை குளிப்பாட்ட அனுமதிக்க முடியாது என கலாட்டாவே சஞ்சனா பண்ண தொடங்கினாள்.
என்ன இங்கே பிரச்சினை ? என்று ராஜாவின் குரல் கேட்டது.
நல்ல வேளை நீங்க வந்தீங்க சார்,இவர்களை குளிப்பாட்ட வேண்டும்.குறைந்தபட்சம் தண்ணி தொட்டாவது உடம்பை துடைக்கனும்.ஆனா இவங்க தொடவே விட மாட்டறாங்க.அவங்க உடம்பில் இரத்தம் எல்லாம் பட்டு இருக்கு.ட்ரெஸ் கூட மாத்தணும்.
என்ன சஞ்சனா,ஏன் அடம் பிடிக்கிற,நான் வெளியே நிக்கறேன்.டாக்டர் வருவதற்குள் சீக்கிரம் ரெடி ஆகு.
"டேய் பிளீஸ் இங்கே கிட்ட வாடா,"சஞ்சனா அவனை அழைத்தாள்.
"என்ன?"என்று அவன் அருகில் வந்து கேட்க,
டேய் என் உடம்பை உன்னை தவிர வேறு யாரும் நான் பார்க்க விரும்பல.நீ வேணா என்னை குளிப்பாட்டு.நான் குளிக்கிறேன்.
அப்போ குழந்தை பெத்துக்கும் போது என்ன பண்ணுவே,ராஜா வினவ
அப்பவும் நீ தான் மவனே எனக்கு பிரசவம் பார்க்கணும்..சஞ்சனா உரிமையுடன் சொன்னாள்.
ம் அப்ப சரி தான்.அம்மணி ஒரு முடிவோடு தான் இருக்கீங்க.சிஸ்டர் நீங்க கொஞ்சம் வெளியே இருங்க.இவ இன்னும் அரைமணி நேரத்தில் ரெடியாக இருப்பா.
இரு சிஸ்டர்களும் சிரித்து கொண்டே சென்றனர்.
சஞ்சனா அட்மிட் ஆகி இருந்தது சிங்கிள் அறை ரூம்.அதனால் தனியே பாத்ரூம் வசதி எல்லாம் இருக்க,ராஜா அவளை நடத்தி கூட்டி சென்றான்.
அவளை முதலில் இயற்கை உபாதை கழிக்க வைத்து கொஞ்சம் கூட கூச்சம் படாமல் அவள் அந்தரங்க பாகத்தை தொட்டு சுத்தம் செய்தான்.
அவள் துணிகளை களைந்து
"சஞ்சனா, தண்ணி படாமல் இருக்க கையை மேலே தூக்கி பிடிச்சிக்க",என கூறி ஒரு சிலைக்கு அபிசேகம் செய்வது போல அவளை குளிப்பாட்டி துடைத்தான்.
என்ன சஞ்சனா உன் மார்பில் உள்ள காயம் இன்னும் ஆறவே இல்ல,
அது என் ராஜா,என் மேல் ஆசையாக கடித்து ஏற்படுத்திய காதல் காயம்.அவ்வளவு சீக்கிரம் ஆறாது.
நம்ம கல்யாணத்திற்கு அப்புறம் அடிக்கடி இந்த மாதிரி காயம் ஏற்படும் பார்த்துக்க,ராஜா சிரித்து கொண்டே அவளை குளிப்பாட்டினான்.
நான் அதற்காக தயாராக தான் இருக்கேன்டா..
சஞ்சனா,உனக்கு நைட்டி எடுத்து வந்து இருக்கேன்.வேற ட்ரெஸ் அப்புறமா போட்டுக்கலாம்.
"சரி" என அவளும் அழகாக தலை ஆட்டினாள்.
அவளுக்கு தலை சீவி,சிங்காரித்து ரெடி பண்ணி விட்டான்.
ராஜா "சிஸ்டர்ஸ் இங்க வந்து பாருங்க ,ரெடி ஆகிட்டாங்க போதுமா.!"
சிஸ்டர்கள் ஏக்க பெருமூச்சு விட்டு,"சூப்பர் சார்.உங்களை மாதிரி ஒரு பாய் ப்ரெண்ட் எங்களுக்கும் இருந்தா நல்லா இருக்கும்.எங்களுக்கும் வந்து வாய்ச்சு இருக்கே, உடம்பு சரியில்லை என்றால் ஒரு டீ கூட வாங்கி கொடுக்க மாட்டாங்க."
சஞ்சனா குளுகோஸ் பாட்டிலை தூக்கி அவர்களை நோக்கி எறிந்தாள்.
"என்னங்கடி,ஆளாளுக்கு என் பாய் ப்ரெண்ட் கிட்டேயே வரீங்க.வெளியே போங்கடி எல்லோரும்"என்று கையில் கிடைத்தவற்றை அவர்களை நோக்கி வீசி எறிந்தாள்.
"ஏய் சஞ்சனா விரலில் அடிபட்டு இருக்கு,நீ பாட்டுக்கு அதில் அழுத்தம் கொடுக்கிற.அவங்க என்ன சொன்னாங்க,என்னை மாதிரி பாய் ப்ரெண்ட் தான் கேட்டாங்க,என்னையே ஒன்னும் கேக்கல " என ராஜா சமாதனப்படுத்த
உங்களை மாதிரி எல்லாம் இல்ல,நீங்களே தான் சார் வேணும் எங்களுக்கு.ரெண்டு பேரில் யாரை வேண்டும் ஆனாலும் நீங்க செலக்ட் பண்ணிக்கலாம்.இதில் எங்களுக்குள் போட்டியே கிடையாது.இல்ல ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து உங்க கூட குடும்பம் நடத்த தயார்,அக்கா உங்களுக்கு ஓகேவா என்று கோரஸாக சொல்லி சஞ்சனாவை சீண்ட ,
"வாடி என் சக்களத்திகளா,இன்னிக்கு உங்களை சும்மா விட மாட்டேன்" என பக்கத்தில் இருந்த கத்தியை சஞ்சனா எடுத்து கொண்டாள்.
"ஏய் சஞ்சனா ,அவங்க சும்மா உன் கூட விளையாடுறாங்க.நீங்க போங்க சிஸ்டர்ஸ்" என்று சஞ்சனாவை ராஜா பிடித்து கொள்ள
மாணவிகள் விட்டால் போதும் என சிரித்து கொண்டே தப்பித்து ஓடினர்.
அவளுக்கு அவன் காலை உணவு ஊட்டி விட்டு கொண்டு இருக்க,ராஜேஷ் மற்றும் வாசு வந்து சேர்ந்தனர்.
வாசு அவளிடம்"என்ன சஞ்சனா,விரலில் அடிபட்டு இருக்கு .அப்போ இன்னிக்கு நான் என்ன பேசினாலும் உன்னால் என்னை அடிக்க முடியாதே"என கலகலப்பாக ஆரம்பித்தான்.
டேய் சும்மா இருடா வாசு,இப்போதான் ரெண்டு ஸ்டூடண்ட்ஸ் அடி வாங்கிட்டு போய் இருக்காங்க.நீ வேற அவ கோபத்தை கிளறி விடாதே
சஞ்சனா அவனை பார்த்து"டேய் கருவாயா,ரெண்டு மூணு நாள் தான் அப்புறம் உனக்கு இருக்குடி" மிரட்ட.
அய்யயோ நான் சும்மா இருந்தாலும் என் வாய் மறுபடியும் மறுபடியும் சும்மா இருக்க மாட்டேங்குதே.வாசு புலம்பினான்.
சஞ்சனா செல்லம் நீ அமைதியா இரு, அவனே ஏற்கனவே எங்கேயோ உதை வாங்கி வந்த மாதிரி இருக்கு.என்னடா ஒரு பக்கம் கன்னம் வீங்கி போய் இருக்கு.
எங்கேயோ இல்ல மச்சான்,என் பொண்டாட்டிக்கிட்ட தான் உதை வாங்கிட்டு வந்து இருக்கேன்.அது என்னோட சொந்த கதை ,சோகக் கதை விடு.
பரவாயில்லை சொல்லு வாசு,உன் கதை எப்பவுமே சுவாரசியமா தான் இருக்கும்.
சரி என் சோக கதையை சொல்றேன் நீ கேளு ராஜா,நேத்து என் பொண்டாட்டி அவ அம்மா வீட்டுக்கு போய் இருந்தா.நானும் ரொம்ப சந்தோஷமா கொஞ்சம் சரக்கு போட்டு மட்டையாகி சும்மா இல்லாம என் பொண்டாட்டிக்கு பாசத்தில் மெசேஜ் அனுப்பி இருந்தேன்.ஹாய் செல்லம்,ஹாய் பியுட்டி,ஹாய் சுவீட்டி என்று காதல் ரசம் சொட்ட சொட்ட மெசேஜ் அனுப்பினேன்.
நல்லா தான்டா அனுப்பி இருக்கே,ஒருவேளை பொண்டாட்டி காதலில் வெறி கொண்டு முத்தம் கொடுத்து கொடுத்து கன்னம் வீங்கிடுச்சோ..
டேய் எதுவாக இருந்தாலும் முழுசா கேட்டுட்டு பேசு,நான் மெஸேஜ் அனுப்பித்தது என் பொண்டாட்டிக்கு நம்பருக்கு அனுப்பல. போதையில் என் மாமியார் நம்பருக்கு மாற்றி அனுப்பிட்டேன்.
அய்யயோ என்று எல்லோரும் சிரித்தார்கள்.
ராஜா சிரித்து கொண்டே அவனிடம் "சரி உனக்கு அனுப்ப வேண்டிய மெஸேஜ்ஜை நம்பர் மாத்தி அனுப்பிட்டேன் என்று சொல்லி பொண்டாட்டி கிட்ட சமாளிக்க வேண்டியது தானே."
மச்சான் அங்கே தான் ஒரு டுவிஸ்டே,நான் அனுப்பிய மெஸேஜ்ஜில் எல்லாம் , கலா,மாலா,ஷீலா இந்த மாதிரி எனக்கு தெரிஞ்ச பொண்ணுங்க பேரை போட்டு லவ் symbol உடன் மாமியார்காரி கிட்ட அனுப்பி இருக்கேன்.என் மாமியார்காரி அவ கிட்ட காண்பித்து "என்னடி இது ஊரில் உள்ள பொண்ணுங்களுக்கு எல்லாம் உன் புருஷன் லவ் symbol அனுப்பிச்சு இருக்கான்.ஆனா கடமைக்கு கூட உன் பேர் இந்த லிஸ்டில் இல்லன்னு சொல்லி நல்லா ஏத்தி விட்டு அனுப்பி,என் பொண்டாட்டி காலையில் வந்து பூஜை போட்டு பூரி கட்டையில் வெளுத்தா பாரு, அதில் வந்த காயம் தான் இது என்று சொல்ல எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
"உனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் வாசு,.."ராஜா சிரிக்க
என்னது இன்னமுமா,டேய் இப்பவே அடிப்பட்டு நிறைய உள்காயம் ஆகி ,உள்ளுக்குள்ளேயே bleeding ஆகி ஓடிட்டு இருக்கு மச்சான்.இதுக்கு மேல தாங்காது.சரி சஞ்சனா உனக்கு எப்படி அடிப்பட்டது.அந்த கதையை சொல்லு கேப்போம்?
அதுவா அண்ணா,நேற்று இவரை ஒருத்தன் வெட்ட வந்தான்.அதை தடுக்க நான் கத்தியை கையில் பிடிச்சிட்டேன்.அது தான் இந்த காயம்.
இவ பண்ண கூத்து கேளு வாசு,அவன் தான் வெட்ட வர்றான் என்று தெரியுது இல்ல,ராஜா பின்னாடி பாரு,உன்னை ஒருத்தன் வெட்ட வர்றான் என்று சொல்லலாம் தானே,இல்லன்னா ஒரு கல்லை தூக்கி போட்டு எச்சரிக்கை பண்ண வேண்டியது தானே.அதை விட்டுட்டு பெரிய சாகசம் பண்றேன்னு அடிபட்டு உட்கார்ந்து இருக்கிறத பாரேன்,
ஹாங், அப்படி பண்ணி இருந்தால்,நீ இந்த மாதிரி என் கூட இருந்து இருக்க முடியுமா?இப்போ நான் ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிற வரை என் கூட இருந்து தானே ஆகனும்,சஞ்சனா குஷியோடு சொல்ல,
ஹாஸ்பிடலில் இருந்து இல்ல சஞ்சனா,உன் கை நல்லா ஆகிற வரை உன் கூட தான் நான் இருக்க போகிறேன் போதுமா?
அய் சூப்பர் ஜாலி ஜாலி. ,இது போதுமே எனக்கு.. என இன்னும் குஷி அடைந்தாள்.
ராஜாவின் நண்பர்கள் இருந்த வரை சந்தோஷமாக பொழுது போகியது.சஞ்சனா வலியை மறந்து ராஜாவின் தோளில் சாய்ந்து அனைவற்றையும் கேட்டு ரசித்து கொண்டு இருந்தாள்.பிறகு நண்பர்கள் செல்ல,இருவரும் தனித்து விடப்பட்டனர்.
ஷன்மதி,ராஜாவிற்கு ஃபோன் செய்து "இன்று சந்திக்கலாமா" என்று கேட்டாள்.
சாரி ஷன்மதி,சஞ்சனாவிற்கு அடிப்பட்டு மருத்துவமனையில் கூட இருக்கிறேன்.என்னால் இப்போ எங்கும் வர முடியாது.
என்ன ஆச்சு ராஜா சஞ்சனாவிற்கு?
ராஜா நடந்த சம்பவங்களை விளக்கி சொன்னான்.
ஷன்மதிக்கு பொறாமையாக இருந்தது.ராஜாவிற்கு உதவி செய்ய,சஞ்சனாவிற்கு சந்தர்ப்பம் அமைவது போல் எனக்கு அமையவே இல்லையே என்று வருத்தப்பட்டாள்.
எந்த ஹாஸ்பிடல் ராஜா? ஷன்மதி கேட்க,ராஜா சொல்ல கொஞ்ச நேரத்திலேயே வந்து விட்டாள்.
சஞ்சனா ஷன்மதியை பார்த்து கண்களாலேயே பேச ஆரம்பித்தாள்."பார்த்தியா என் ராஜாவை,நீ கூப்பிட்டால் வர மாட்டேன் என்று சொல்லி விட்டான்.இன்னும் கொஞ்ச நாள் உன்னை சந்திக்க கூட வர மாட்டான்.அப்புறம் கூடிய விரைவில் எங்க கல்யாணம் நடந்து விடும்.இப்போ என்ன பண்ணுவே,?
ஷன்மதி அதற்கு,"இப்பொழுது உன் பக்கம் காற்று வீசுது சஞ்சனா.என் பக்கம் காற்று வீச ஆரம்பிக்கும்,அப்போ பாரு என் ஆட்டத்தை."
சஞ்சனாவிற்கு அடிப்பட்ட விசயம் கேள்விபட்டு ராஜாவின் அம்மாவும் அங்கே வந்து விட்டார்.
அப்பொழுது ஷன்மதியிடம்,ராஜா தன் தாயாரை அறிமுகப்படுத்தினான்.
ஷன்மதி உடனே"என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தை" என ராஜாவின் அம்மா காலில் விழ
அவர்" உன் மனசுக்கு பிடித்தவனுடன் சீக்கிரமே கல்யாணம் நடக்கும்" என வாழ்த்தினார்.
சஞ்சனா இதை கேட்டு திடுக்கிட்டு உடனே அவளும் வந்து காலில் விழுந்து " என்னையும் ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தை "என்று கேட்டாள்.
அய்யோ அடிப்பட்ட பொண்ணு,நீ வந்து காலில் விழுந்துக்கிட்டு முதலில் எந்திரிம்மா
ம்ஹீம் நீங்க ஆசிர்வாதம் பண்ணா தான் நான் எழுந்து இருப்பேன்.சஞ்சனா முரண்டு பிடிக்க
"நீ ஆசைப்பட்ட ராஜாவோடு சீக்கிரமே கல்யாணமே நடக்கும்"என்று அவர் வாழ்த்த சஞ்சனா ஷன்மதியை பார்த்து "இப்போ என்ன செய்வே"என்று பதிலடி கொடுத்தாள்.
ராஜாவின் அம்மா அவனிடம் "பார்த்தியாடா ரெண்டு பொண்ணுங்க என்ன அழகா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாங்க.நீ ஒரு நாளாவது இந்த மாதிரி என் காலில் விழுந்து இருப்பீயா"
உனக்கு என்னம்மா,இப்போ காலில் தானே விழனும். விழுந்தாச்சி போதுமா? என்று ராஜாவும் காலில் விழுந்தான்.
சின்ன சின்ன உரசல்கள் சஞ்சனா, ஷன்மதி இடையே ஏற்பட்டாலும் அன்றைய பொழுது நன்றாகவே கழிந்தது. ஷன்மதி கிளம்பி போய் விட்டாள்.
ராஜா அவனது அம்மாவிடம்,"அம்மா நீ ஊருக்கு கிளம்பு,நான் சஞ்சனாவை பார்த்து கொள்கிறேன்."
டேய் நீ எப்படி ஒரு பொண்ணை பார்த்து கொள்ள முடியும்?நான் கூட இருக்கேன்.
அம்மா,என் சஞ்சனாவை என்னால் பார்த்து கொள்ள முடியாதா?அங்கே திவ்யா தனியா இருக்கா,நீ கிளம்பு
ஆமா அத்தை,ராஜா என்னை நல்லா பார்த்துக்கிறான்.நீங்க கிளம்புங்க.சஞ்சனாவும் கூறினாள்.
சரியென அவரும் கிளம்ப,
ராஜா ச
ஞ்சனாவிடம்"சஞ்சனா நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு,நான் அம்மாவை பஸ் ஏத்திட்டு உடனே வந்துடறேன்.
ம்,நீ போய்ட்டு பொறுமையா வா ராஜா.அது போதும் எனக்கு.. என வழியனுப்பி வைத்தாள்.