Chapter 29

ராஜாவிற்கு தலையில் பலத்த அடிப்பட்டதால் டாக்டர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர்.மேலும் 5 லட்ச ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்றனர். ஷன்மதி எப்படி பணத்தை புரட்டுவது ஒரு நிமிடம் யோசித்தாள்.ஆனால் சஞ்சனா யோசிக்கவே இல்லை. அரைமணி நேரத்தில் கட்டி விடுவதாக சொன்னாள்.

உடனே தன் அம்மா உடன் பிறந்தவர்களுக்கு ஃபோன் செய்தாள்.

"பெரியப்பா நீங்க என் பேரில் உள்ள நிலத்தை கேட்டீங்களே ,இப்போ நான் உடனே தரேன்.எனக்கு உடனே 5 லட்ச ரூபாய் பணம் அனுப்பி வைக்க முடியுமா?.

என்னம்மா சஞ்சனா,எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அந்த நிலத்தை கொடுக்க மாட்டேன் என்று சொன்னே.இப்போ உடனே விக்கிறதா சொல்ற,கேட்கவே ஆச்சரியமா இருக்கு.

நான் கல்யாணம் பண்ணிக்க போற பையன் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கான்.உடனே அறுவை சிகிச்சை செய்ய அவசரமா பணம் தேவைப்படுது பெரியப்பா.எனக்கு அவனை விட்டா வேற யாரும் இல்லை.அதனால் கொஞ்சம் உடனே பணம் போட்டு விடுங்க,நீங்க எப்போ வந்து கையெழுத்து போட சொன்னாலும் நான் போடறேன்..

அவள் பெரியப்பாவும்"ம் அப்ப சரி சஞ்சனா,எந்த ஹாஸ்பிடல் என்று சொல்லு.நான் நாளைக்கு பத்திரத்தோட வரேன்.இப்போ உன் அக்கவுண்ட் நம்பர் அனுப்பிச்சு விடு.நான் உடனே பணம் அனுப்புறேன்."என ஒப்பு கொண்டார்.

சஞ்சனா உடனே பணமும் கட்டி விட்டாள்.அறுவை சிகிச்சை முடிந்து ராஜா ICU வார்டு கொண்டு வரப்பட்டான்.

விவரம் கேள்விபட்டு ராஜாவின் அம்மா,தங்கை ஓடி வந்தனர்.ஆணிவேர் போல் வீட்டை தாங்கி கொண்டு இருந்தவன் அவன்.இப்போது மரமே அறுந்து விழும் நிலையில் இருந்ததால் துடித்தனர்.

ராஜாவின் நண்பர்கள் உடனே ஓடி வந்து விட்டனர்.அவர்கள் சஞ்சனாவிற்கு பக்கபலமாக இருந்தாலும் அவர்களும் மனதளவில் நொறுங்கி போய் இருந்தனர். ராஜாவிற்கு தெரிந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் குவிந்து விட்டனர்.மாலா அக்கா,அவள் குழந்தையோடு வந்து விட்டார்.உடன் வேலை செய்பவர்கள் என ஏறக்குறைய ஐம்பதுக்கும் மேற்பட்டோர் வந்து இருந்தனர்.எல்லோரும் அவன் கண் திறப்பதற்காக காத்து கொண்டு இருந்தனர்.

டாக்டர் வந்து பார்த்துவிட்டு " என்ன இது ஒரு பேஷன்டுக்கு இவ்வளவு கூட்டமா? "என்று ஆச்சரியப்பட்டார்.

இங்கு ராஜாவிற்கு சொந்தக்காரங்க மற்றும் நெருங்கியவர்கள் யார் என்று கேட்டார். ராஜாவின் அம்மா,தங்கை ,சஞ்சனா ,ராஜேஷ் மற்றும் வாசு முன்னே வர,டாக்டர் அவர்களை பார்த்து"இங்கே பாருங்க ராஜா நிலைமை கொஞ்சம் மோசமாக உள்ளது.அவனுடைய மூளை நரம்புகள் கொஞ்ச கொஞ்சமா செயல் இழந்து கொண்டே வருது.அவன் இன்னும் அரை மணி நேரத்திற்குள் கண் விழிக்க வேண்டும்.இல்லை என்றால் மூளை சாவு அடைந்து விடுவான்.அதனால் அவன் கிட்ட பேசி உடனே நினைவுக்கு கொண்டு வர வேண்டும்.இதில் ரொம்ப நாளாக யார் அவனுக்கு பழக்கமோ அவங்க முதலில் போய் பேச்சை கொடுங்க..என்றார்

சஞ்சனா நான் போறேன் என்று சொல்ல,டாக்டர் நீ யாரும்மா என்று கேட்டார்.

சார் நாங்க இருவரும் உயிருக்குயிராக லவ் பண்றோம்,என்னால் அவன் நினைவை கொண்டு வர முடியும்.என்னை முதலில் போக விடுங்க..

எமன், தன் உதவியாளர்களிடம்,டேய் இப்போ அவளை உள்ளே விட கூடாது.அப்படி விட்டால் அவனை பிழைக்க வைத்து விடுவாள்.நாம டாக்டர் மூலமா இவளை தடுக்க வேண்டும்.அவன் இறந்தால் கூட அவளின் கோபம் இந்த டாக்டர் மீது தான் திரும்பும்.நாம தப்பித்து விடலாம்.எப்படி?

சூப்பர் பிரபு, எப்படி பிரபு உங்களுக்கு இந்த மாதிரி எல்லாம் யோசிக்க தோணுது.நாங்கள் எல்லாம் எப்போ உங்ககிட்ட தொழில் கத்துகிட்டு மேல வருவது..?என பெருமூச்சு விட்டனர்.

சும்மா என்னை புகழாதீங்கடா..என எமனே வெட்கப்பட்டான்.

டாக்டர் அவளிடம் "இங்க பாரும்மா,முதலில் அவன் அம்மா,தங்கை போகட்டும்.உன்னோட ஆடை ,கன்னம் எல்லாம் இரத்தம் பட்டு காய்ஞ்சி போய் இருக்கு பாரு.முதலில் அதை போய் துடைங்க.இப்படியே அவன் கிட்ட போனால் அவனுக்கு தான் infection தான் ஆகும்..

ராஜாவின் அம்மா,தங்கை உள்ளே சென்று அவனிடம் பேச்சு கொடுத்து நினைவை வர வைக்க முயன்றனர். ஆனால் அவனிடம் அசைவே இல்லை.அடுத்து ராஜேஷ்,வாசு பேச்சு கொடுத்தாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.வாசு பெரும்பாலும் அழுவது இல்லை.ஆனால் அவனாலும் இன்று ராஜாவின் நிலையை பார்த்து அழுகையை அடக்க முடியவில்லை.

நேரம் கடந்து கொண்டே இருந்தது.சஞ்சனா டாக்டரை தள்ளி விட்டு உள்ளே நுழைந்தாள்.டாக்டர் அவளை வெளியே இழுக்க முயற்சிக்க ,ராஜேஷிம் ,வாசுவும் டாக்டரை பிடித்து கொண்டனர்.

அங்குனி எமனிடம் "பிரபு அவள் டாக்டரை தள்ளி உள்ளே போய்ட்டா,என்ன பண்றது?",

அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம தான்டா நான் முழித்து கொண்டு இருக்கிறேன்.இன்னிக்கு ஒரு நாள் மட்டும் நீ எமனாக இருக்கீயா.வேலை இன்னிக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு.

"இல்ல பிரபு,நீங்க தான் எப்பவும் எங்க தல.எதுவாக இருந்தாலும் நீங்களே சமாளிங்க"என எமனை மாட்டி விட்டனர்.

வாசுவும் ,ராஜேஷிம் டாக்டரிடம் "சார் இந்த நேரத்தில் இன்ஃபெக்ஷன் அது இது என்று பார்க்காதீங்க.நேரம் ரொம்ப குறைவாக இருக்கு.அவள் மட்டும் தான் அவனுக்கு நினைவை கொண்டு வர முடியும்."என கெஞ்சினர்.

சஞ்சனா,அவன் கையை எடுத்து தன் கரங்களில் வைத்து கொண்டு

"டேய் ராஜா,பிளீஸ் எந்திரிடா.எனக்கென்று இந்த உலகில் இருக்கிற ஒரே துணை நீ மட்டும் தான்.அன்று என் பூர்வீக வீட்டில் உன் மடியில் நான் படுத்து இருந்தது என் அம்மா மடியில் படுத்தது போல் இருந்ததுடா.எனக்கு அம்மாவா,தோழனா,கணவனா இருப்பது எல்லாம் நீ மட்டும் தான்டா,எனக்கு நீ வேணும்டா, பிளீஸ் கண்ணை திறடா" என்று அவள் கூறும் போதே அவன் கண்ணின் ஓரம் நீர் கசிந்தது.

அதை பார்த்த டாக்டர் உற்சாகம் அடைந்து ,"கமான் விடாதீங்க சஞ்சனா.கொஞ்ச கொஞ்சமாக அவனுக்கு நினைவு வருது.தொடர்ந்து முயற்சி பண்ணுங்க" என்று கத்தினார்.

உடனே சஞ்சனா ,அவன் கையை எடுத்து அவள் வயிற்றில் வைத்து,"டேய் எல்லா பெண்களும் இந்த விசயத்தை முதல்முறை தன் புருஷனிடம் தனியா சொல்ல ஆசைப்படுவார்கள்.நான் எல்லோர் முன்னிலையில் உன்னிடம் இந்த விசயத்தை சொல்றேன்.நீ அப்பாவாக போறேடா,உன் குழந்தை என் வயிற்றில் வளருது என்று அவள் சொல்ல அதை கேட்டு அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.சஞ்சனா அப்பா உட்பட..

வாசு ராஜேஷிடம் "டேய் மச்சான்,அவள் அப்போ சொன்னாலே ரெண்டு பந்து,ஒரு பொந்து,அதனோட அர்த்தம் இப்போ தான் எனக்கு புரியுது.பூனை மாதிரி இருந்துகிட்டு என்ன வேலை பார்த்து வச்சி இருக்கான் பாரு..அவன் கண் மட்டும் முழிக்கட்டும்,அவனுக்கு இருக்கு கச்சேரி."என வாசு கத்தினான்.

சஞ்சனா தொடர்ந்து பேச்சு கொடுத்தாள்.டேய் நம்ம ரெண்டு பேரை நம்பி,ஒரு புது ஜீவன் உலகத்திற்கு வருது.அதுக்கு நாம ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டாமா..!இப்போ நீ மட்டும் எழவில்லை என்றால் அப்புறம் நானும் உன்னோடு வந்து விடுவேன் என்று அவன் மார்பில் விழுந்து அழுது கண்ணீரால் நனைத்தாள்.

அவள் தலையை யாரோ வருடுவது போல் இருந்தது..அந்த ஒரு கணம் சஞ்சனாவின் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தையே இல்லை.தொடுவதிலேயே ராஜா தான் என உணர்ந்து சஞ்சனா தலையை தூக்கி பார்க்க ராஜா கண் விழித்து இருந்தான்.ராஜாவின் நினைவுகளை பறவையாக சென்று சஞ்சனா மீட்டு கொண்டு வந்தாள்.

ராஜா அவளை பார்த்து, " மழலை சுமந்த மரகதம் !

மனதை சுமந்த தளிர் மரம் !

நிழலை கொடுத்த வளைக்கரம் !

உயிரும் அவளின் அடைக்கலம்!

புண்ணியம் கோடி செய்தவன் நானோ ! ஜென்மங்கள் யாவும் என்னுடன் சேர!

உறவின் சிறகை விரித்தவள் !என்று கூற அவள் கண்களில் நீரோடு அவன் முகம் முழுக்க முத்த மழையில் நனைத்தாள்

அங்கு இருந்த அனைவரும் சந்தோஷத்தில் கண்ணீர் சிந்தினர்.சஞ்சனாவின் அப்பாவும் தான் செய்த தவறை உணர்ந்து கொண்டு விட்டார்.இருவரும் ஒருவரையொருவர் உயிருக்குயிராக விரும்புகின்றனர்.இதற்கு மேல் இவர்களை பிரிப்பது பாவம்.சீக்கிரமே கல்யாணம் பண்ணி வைத்து விட வேண்டும் என நினைத்தார்.

அங்குனி,மங்குனி இருவரும் எமனை பார்த்து"பிரபு அவன் பிழைச்சிட்டான்.இப்போ என்ன பண்றது.இன்னிக்கு வெறும் கை வீசிட்டு நாம எமலோகம் திரும்ப முடியாது.நாம ஒன்னு பண்ணலாம்,இங்கே நிறைய பேர் அவனை பார்க்க வந்து இருக்காங்க,இதில் தினமும் நம்மிடம் அடி வாங்குவதற்கே ஒரு பீஸ் சிக்கி இருக்கு,அவனை தூக்கலாமா என்று வாசுவை நோக்கி கை காட்டினர்.

டேய் உதவாகரைகளா,வேண்டாம் விடு.அவங்க எல்லோரும் சந்தோஷமா இருக்காங்க.அப்படியே இருக்கட்டும்.நாம வெறுங்கையோடு திரும்பி போக தேவை இல்லை.அதற்கு ராஜாவே ஒரு வழி ஏற்படுத்தி கொடுத்து உள்ளான்.அவன் கங்கையில் விட்ட விந்தணுவை போய் கங்கையிடம் கேட்டால் கொடுப்பாள்.அதை வைத்து கணக்கை சீர் செய்ய வேண்டியது தான்.வா கிளம்பலாம்.

வாசு,ராஜாவிடம் வந்து "டேய் அன்னிக்கு என்னவோ உத்தம புத்திரன் போல பேசின,நான் கல்யாணத்திற்கு முன்னாடி சஞ்சனாவை கூட தொட மாட்டேன் என்று சொன்னே.ஆனா இப்போ என்ன வேலை பார்த்து வைச்சு இருக்கே என்று அவனை செல்லமாக மார்பில் அடிக்க நடுவில் செங்குத்தாக சஞ்சனா ஊசி நீடிலை வைத்தாள்.அது சரக்கென்று வாசு உள்ளங்கையை பதம் பார்த்தது.

"ஆ"வென வாசு வலியில் அலறினான்.

பக்கத்தில் உள்ள அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தும் கத்தியை எடுத்து கொண்டு"டேய் வாசு ஒழுங்கா ஓடி போய்டு,அவன் மேல ஏதாவது ஒரு சின்ன அடி பட்டுச்சு, இன்னிக்கு உன் வீட்டுக்கு சொல்லி அனுப்ப வேண்டியது தான்" என மிரட்டினாள்.

ராஜா அவனிடம்"டேய் வாசு,இப்போ அவளை எந்திரித்து பிடிக்க கூடாதா நிலைமையில் நான் இருக்கேன்டா.அவ முன்னாடி என்னை அடித்து தொலையாதே.."

சஞ்சனா சிஸ்டர்,சும்மா செல்லமாக அடிக்க வந்ததிற்கு கத்தியை காட்டி மிரட்டினா எப்படி?நான் இவன் மேல கையையே வைக்க மாட்டேன் போதுமா? என ராஜேஷ் பின்னாடி ஒளிந்து கொண்டான்.

ஷன்மதி வந்து சஞ்சனாவின் கையை பிடித்து,"என்னை மன்னிச்சிடு சஞ்சனா.என்னால தான் இவ்வளவு பிரச்சினையும்.நீங்க பேருக்கு தான் ரெண்டு உடலாக இருக்கீங்க.ஆனால் உசிரு ஒன்னு தான் என்று புரிந்து கொண்டேன்"என்று அவளும் அழுதாள்.

ராஜாவை பார்த்து,"ராஜா இதற்கு மேல் பழைய மாதிரி என்னை ஒரு தோழியாகவாவது ட்ரீட் பண்ணுவீயா" என்று அழுது கொண்டே கேட்க,

"அழாதே ஷன்மதி,நீ இப்பவும் எனக்கு நல்ல தோழி தான்.நீ தான் ஏதோ தப்பு தப்பா நினைச்சிக்கிட்டே"

ஷன்மதி அழுகையை அடக்கி கொண்டு அறையின் வெளியே வர,அங்கே அவள் அப்பா கமிஷனர் நின்று கொண்டு இருந்தார்.

அவரை கட்டி பிடித்து கொண்டு அடக்கி வைத்து அழுகையை கொட்டி தீர்த்தாள்.அழுகையின் ஊடே,அப்பா ராஜா மாதிரியே எனக்கும் ஒரு மாப்பிள்ளை பாருங்க,

சரிம்மா கண்டிப்பா பார்க்கிறேன்.ராஜா மாதிரி தானே,ராஜா இல்லையே என்று சிரித்து கொண்டே கேட்க

அவளும் சிறு புன்னகையோடு "ஆமாம்ப்பா ,ராஜா மாதிரி தான் கேட்டேன்,ராஜாவே இல்ல என்று அழுத்தமாக சொன்னாள்.

இதுக்கு தான் அனுபவம் உடையவங்க சொல்ற பேச்சை கேட்கனும்‌ ஷன்மதி.நான் முதல் சந்திப்பிலேயே தெரிந்து கொண்டேன்.அந்த பொண்ணு அவன் மேலே வெறித்தனமான அன்பு வைச்சு இருக்கு.அவனுக்காக என்ன வேண்டுமானாலும் அந்த பொண்ணு செய்யும்.

உண்மை தாம்ப்பா.அவன் என்னடாவென்றால் அவளுக்காக உயிரையே கொடுக்கிறான்.அவ இன்னும் ஒரு படி மேலே போய் சாக கிடந்த அவனை மீட்டு கொண்டு வந்துட்டா.சத்தியமா என்னால் இதை பண்ண முடியாது.கண்டிப்பாக அவங்க ரெண்டு பேர் ஒன்னு சேருவது நியாயம்.நான் சஞ்சனாவிடம் தோல்வி அடைந்தது கவலையே இல்ல.ராஜாவிற்கு சிறந்த ஜோடி அவள் மட்டும் தான்.

டாக்டர் வந்து "சரி சரி எல்லோரும் போங்க, பேஷன்ட்டை யாரும் கஷ்டபடுத்தாதீங்க.அவர் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.யாராவது ஒருவர் மட்டும் கூட இருந்தால் போதும்.அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம்,ராஜாவுக்கு கார் வந்து மோதியதில் வலது கால் எலும்பு கொஞ்சம் தாறுமாறாக உடைந்து இருக்கு.இப்பொழுது கட்டு போட்டு வச்சு இருக்கோம்.ஒரு வேளை எலும்பு கூடவில்லை என்றால் ஒரு கால் எடுக்க வேண்டி கூட வரலாம்.

எல்லோரும் இதை கேட்டு அதிர்ச்சியாக,சஞ்சனா இதை கேட்டு கொஞ்சமும் கலங்கவில்லை.

சார் அவன் எமனையே எதிர்த்து போராடி உசிரோட திரும்பி வந்துட்டான்.அவன் போராளி சார்,அவன் கால் கண்டிப்பாக கூடி நல்லா நடப்பான்.நீங்க கவலைபடாமல் போய்ட்டு வாங்க..என அவள் டாக்டருக்கு தைரியம் கூறினாள்.

ராஜாவின் அம்மா அவளிடம் வந்து,"சஞ்சனா காலையில் இருந்து நீ பச்சை தண்ணி கூட குடிக்கல. வாயும் வயிருமா வேற இருக்கே நீ .இந்தா முதலில் காஃபி சாப்பிட்டு விட்டு நீ வீட்டுக்கு கிளம்பு.நான் இவனை நான் கூட இருந்து பார்த்துக்கிறேன்.

"இல்லம்மா நீங்க போங்க,நான் ஹாஸ்பிடலில் இருந்து ராஜாவோடு தான் வெளியே வருவேன்."

ராஜேஷ் அருகில் வந்து ராஜாவின் அம்மாவிடம்"அம்மா நீங்களும் தங்கையும் என் வீட்டுக்கு வந்து இரவு தங்கிக்கோங்க,சஞ்சனா நீ ராஜாவை பார்த்துக்க.இந்த ட்ரெஸ் மட்டும் நீ மாத்திட்டு உன் பழைய டிரஸை கொடு.நாளைக்கு வரும் பொழுது நான் உன் வீட்டுக்கு போய் வேற ட்ரெஸ் எடுத்து வரேன்."

எல்லோரும் ராஜா பிழைத்து விட்ட சந்தோஷத்தில் கிளம்பினர்.

(ராஜா ,சஞ்சனா பிரச்சினை முடிந்ததா இல்லை இன்னும் ஒரே ஒரு சின்ன தடையை மட்டும் தாண்ட வேண்டி உள்ளது.பிறகு ராஜாவின் முன்னாள் காதலி சுஜிதா வந்து மொக்கை வாங்கி கொண்டு செல்வாள்.)

காலையில் ராஜா ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்டான்.இந்த வார்டில் ஒரு ரூமில் இரண்டு பேஷன்ட் மட்டுமே இருந்தனர்.மேலும் ICU வார்டில் இருந்த கெடுபிடி பார்வையாளர்களுக்கு இங்கே இல்லை.எல்லோரும் குழுமி இருந்து அரட்டை அடித்து கொண்டு இருந்தனர்.சிறிது நேரத்தில் யாரோ உள்ளே வரும் ஆரவாரம் சத்தம் கேட்டது.

"ஶ்ரீலஶ்ரீ மகானந்த பாண்டி சுவாமிகள் பராக் பராக் பராக்" என்ற சத்தம் தான் அது.

சீடர்கள் புடை சூழ மடத்தின் தலைமை பொறுப்பை ஏற்று இருந்த பாண்டி உள்ளே நுழைந்தான்.

"டேய் பாண்டி என்னடா இது கோலம்"சஞ்சனா ஆச்சரியப்பட்டு கேட்க

உடனே ஒரு சீடன் நடுவில் வந்து "அவர் இப்போ சாதாரண பாண்டி கிடையாது,பவர் பாண்டி ஆக்கும்.அதாவது ஶ்ரீலஶ்ரீ மகானந்த பாண்டி என்பது தான் புது பேர்.தமிழ் நாட்டில் உள்ள 20 ஆசிரமங்களுக்கு எல்லாம் இப்போ தலைமை பீடாதிபதி இவர் தான்.give respect take respect.அதாவது மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்.புரியுதா" என்று மிரட்டினான்.

பாண்டி உடனே பதறி "டேய் நீ வேற சும்மா இருடா,நானே இப்போ தான் கஷ்டப்பட்டு தலைமை பீடாதிபதி ஆகி இருக்கேன்.எடுத்த எடுப்பிலேயே பதவியில் இருந்து இறக்கி விட்டு விடுவான் போல் இருக்கு.அம்மா சஞ்சனா இவன் சொல்றது எதுவும் மனசில் வச்சிக்காதே.

என்ன சாமி இவங்களுக்கு போய் இப்படி பயப்படுறீங்க..!! சீடன் சீண்ட

"அடேய் முட்டாள்,நான் இப்போ இந்த பதவியில் இருக்க காரணமே அவள் தான்.அவள் இல்லை என்றால் இதோ இங்கே படுத்து இருக்கானே ராஜா இவன் தான் இந்த பதவிக்கு வந்து இருப்பான்.அதுவும் இல்லாம இவங்க ரெண்டு பேரையும் போகர் சாமி தன் பிள்ளைகளாக பார்க்கிறார்."

சஞ்சனாவோ வருத்தத்துடன் "அட போ பாண்டி , தன் பிள்ளையா இருந்திருந்தால் போகர் சாமி இவனை இந்த மாதிரி அடிபட விட்டு இருப்பாரா? "என சஞ்சனா கூறினாள்.

"அங்க தான் நீ தப்பு பண்ற சஞ்சனா,அவன் இப்போ உயிரோடு இருப்பதற்கே காரணமே அவன் இருந்த விரதமும் நீயும் தான்.அந்த விரதத்தை என் குரு மூலமாக போகர் சொல்லி இருந்ததன் பலன் தான் இவன் ஒருவகையில் உயிரோடு இருக்க காரணம்.அதுவும் இந்த கண்டம் உனக்கு வர வேண்டியது,ஆனால் இவன் தினமும் பிரார்த்தனை பண்ணி அந்த கண்டத்தை தனக்கு வாங்கிக்கிட்டான்.

"அப்போ இந்த மாதிரி கண்டம் வரும் என்று முன்பே தெரியுமாடா"என்று சஞ்சனா ராஜாவிடம் கேட்க,

"அதை தான் நான் அப்பவே பலமுறை சொன்னேனே சஞ்சனா,எதுவாக இருந்தாலும் 31 ந் தேதி வரை பொறு பொறு என.அதுக்கு தான் நான் உன்னை விட்டு விலகி இருந்தேன்"என்று அவன் கூற ,சஞ்சனா கண்களில் நீரோடு அவன் நெற்றியில் தன் ஈர இதழ்களை பதித்தாள்.

"இரும்மா நான் இன்னும் சொல்லி முடிக்கல" என்று பாண்டி மேலும் தொடர்ந்தான்.இங்க பாரு சஞ்சனா,அவனை கண்டத்தில் இருந்து நீ மீட்டு விடுவாய் என போகர் சாமிக்கு தெரியும்.ஒரு தந்தையா அவர் மட்டும் சும்மா இருப்பாரா?அவனோட காயங்கள் சீக்கிரம் குணமாக அவர் தன் கைப்பட அரைத்து ஒரு மருந்தை குடுத்து விட்டு இருக்கார்.இதை இன்று ஒருநாள் மட்டும் மூணு வேளை அவனுக்கு கொடுத்து பார்.அவன் காயம் எல்லாம் எப்படி பஞ்சா பறக்க போகுது.

ராஜா ஆச்சரியமாகி"என்ன பாண்டி சொல்ற,போகர் சாமியா நேரில் வந்து உன்கிட்ட இந்த மருந்தை கொடுத்து விட்டாரா?

பாண்டி "என் முன்னாடி எல்லாம் அவர் வருவாரா ராஜா,நான் இன்னும் அந்த அளவுக்கு எல்லாம் புண்ணியம் பண்ணல.கோரக்கர் குகைக்கு அருகில் ஒரு அம்மா வசிக்கிறாங்க.அவங்க கிட்ட தான் குடுத்து இருக்கார்.சஞ்சனாவிற்கு கூட அந்த அம்மாவை தெரியும்.எனக்கு போகர் சாமி கனவில் வந்து இந்த மருந்தை வாங்கி உன்னிடம் சேர்ப்பிக்க உத்தரவு இட்டார்"என அவன் இடுப்பில் இலையில் முடித்து வைத்து இருந்த மூலிகை உருண்டைகளை எடுத்து சஞ்சனாவிடம் கொடுத்தான்.

மேலும் பாண்டி அவளிடம்"சஞ்சனா இந்த மருந்தை உன் கையால் அவனுக்கு ஊட்ட சொன்னார்.உன் கையில் அமிர்தவர்ஷினி ரேகை ஒடுதாமே.உன் கையால் கொடுக்கப்படும் மருந்து பல மடங்கு வேலை செய்யுமாம்".

"டேய் பாண்டி என்னடா ஓவரா பீலா விடற"சஞ்சனா கலாய்த்தாள்.

சஞ்சனா இதை நான் சொல்லவில்லை.சொன்னது போகர்,எதுவாக இருந்தாலும் நீயாச்சி, போகர் சாமி ஆச்சு.அப்புறம் உனக்கு வயிற்றில் கரு உருவாகி இருக்காம்.அந்த குழந்தை பிறந்த பிறகு ,நீங்க ரெண்டு பேரும் குழந்தையோட அவரோட குகைக்கு வரணும் என்று கண்டிப்பாக சொன்னார்."

"சரிடா பாண்டி நாங்க இணைந்த இடம் அது தானே,கண்டிப்பாக வருவோம்.அங்கே நான் ராஜாவோடு சேர வழிகாட்டிய அந்த அம்மாவை பார்த்து அவர் காலடியில் என் குழந்தையை வைத்து ஆசிர்வாதம் வாங்க கண்டிப்பாக வருவேன்."

சஞ்சனா ராஜாவிற்கு காலை வேளை மருந்து கொடுத்தாள்.

பாண்டி தான் வந்த வேலை முடிந்த திருப்தியோடு திரும்பி சென்றான்.

போகர் கொடுத்து மருந்து நன்றாகவே வேலை செய்தது.ஒரு வாரம் கழித்து எக்ஸ்ரே எடுத்து பார்க்க,உண்மையில் எலும்பு நன்றாக கூடி இருந்ததை பார்த்து டாக்டரே ஆச்சரியப்பட்டார்.எப்படி இது நடந்தது அதுவும் ஒரே வாரத்தில் என குழம்பினார்.ஒன்றும் புரியாமல் ராஜாவை நடக்க சொன்னார்.

அவன் சஞ்சனாவின் தோளில் கை போட்டு கொண்டு நடந்தான்.

டாக்டர் அவனிடம் " எப்படி ராஜா எனக்கும் ஒன்னும் புரியலையே.எப்படியும் உனக்கு எலும்பு கூட மூன்று மாதம் ஆகும் என்று நினைத்தேன்.ஆனால் எப்படி ஒரே வாரத்தில் உன் எலும்பு கூடியது என்றே தெரியவில்லை.it is Medical miracle.உன் உடம்பில் ஏதோ இருக்கு.வா உடனே செக் பண்ணி விடலாம்.

"சார் நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல.சதுரகிரியில் இருந்து ஒரு நண்பர் வந்து இருந்தார்.அவர் கொடுத்த மருந்து தான் என் காயங்கள் சீக்கிரம் குணமாக காரணம்.

"அப்படியா,என்னை அவரிடம் கொஞ்சம் அறிமுகப்படுத்தி விடு.நானும் அந்த மருந்தின் ரகசியத்தை தெரிந்து கொள்கிறேன்."

அவன்கிட்ட நம்பர் எதுவும் கிடையாது சார்.அவன் நேரில் வரும் போது நான் உங்களுக்கு ஃபோன் பண்றேன் சரியா.!

ஓகே ராஜா .

ராஜா,சஞ்சனா கல்யாண வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருந்தன..

சஞ்சனா அனைவருக்கும் கல்யாண பத்திரிக்கை கொடுத்து விட்டு,தான் வேலையை விட்டு விலகுவதாக சொன்னாள்.

"ஏண்டி இப்படி ஒரு முடிவு எடுத்தே," என்று அவள் தோழிகள் கேட்டனர்.

அதற்கு சஞ்சனா,"இது ராஜாவின் விருப்பம்"என்று கூறினாள்.

அவள் தோழி துர்கா "ராஜாவை நான் என்னவோ விசாலமான மனசு உள்ளவன் என்று நினைச்சேன்.அவனும் பாரேன் தன் மனைவி வேலைக்கு போக கூடாது என குறுகிய புத்தி கொண்டனவாக இருக்கிறான் சஞ்சனா."என திட்டினாள்.

சஞ்சனா அதற்கு உடனே"அக்கா நீங்க அங்கே தான் என் ராஜாவை பற்றி தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க‌.அவன் என்னை இந்த வேலைக்கு மட்டும் தான் போக கூடாது என்று சொன்னான்.மற்றபடி வேலைக்கே போக கூடாது என்று சொல்லவில்லை."

"அப்படின்னா வேற எங்கே வேலைக்கு சேர போறே சஞ்சனா."

"இல்லக்கா,நான் வேலைக்கு போக போறதில்லை.வேலையை கொடுக்க போகிறேன்."

"எனக்கு ஒன்னும் புரியல சஞ்சனா,கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு."

அக்கா ரொம்ப சிம்பிள்,ராஜா என்னை தொழிலாளியாக பார்க்க விரும்பல. முதலாளி ஆக்கி அழகு பார்க்க விரும்புகிறான்.நம்ம கம்பனியின் franchise ஐ என் பெயரில் எடுத்து உள்ளான்.எங்களால் முடிந்த அளவு பணம் புரட்டினோம்.மேலும் முத்ரா லோன் மூலமா கடன் வாங்கி ஒரு சின்ன கம்பனி தொடங்கி உள்ளோம்.அதில் நான் தான் இப்போ முதலாளி.ராஜா இன்னும் இங்கே வேலை செய்ய தான் போகிறான்.ஆனால் என்னை மட்டும் ஒரு படி மேலே கொண்டு போய் அழகு பார்க்கிறான். போதுமா அக்கா!

சாரிடி சஞ்சனா நான் கூட அவனை தப்பாக நினைத்து விட்டேன்.அப்புறம் பிரியா மேடம்கிட்ட உன் கல்யாண பத்திரிக்கையை கொடுத்து விட்டாயா?

ம் நான் அப்பவே கொடுத்து விட்டேன் அக்கா,அவங்களும் கல்யாணத்திற்கு வருவதாக சொல்லி இருக்காங்க.. சரிக்கா ராஜா ஏதோ முக்கியமான விஷயமா வர சொல்லி இருக்கான்.நான் கிளம்பறேன்.

"போய்ட்டு வா சஞ்சனா,எங்களை எல்லாம் மறந்து விடாதே.."

"இல்லக்கா நான் எப்படி உங்க எல்லோரையும் மறப்பேன்."

எல்லாம் பொய்,கல்யாணம் ஆகுவதற்கு முன்பே அவன் வந்தா போதும் முயல் குட்டி மாதிரி அவன் பின்னாடியே போய்டுவா.இப்போ லைசென்ஸ் வேற கிடைச்சிட போவுது.அப்புறம் அம்மணி எங்களை எங்கே கண்டுக்க போறா..என கிண்டல் பண்ணினாள்.

"ச்சீ போக்கா"என வெட்க்கபட்டாள்.

பின் எல்லோரிடமும் சொல்லி கொண்டு விடைபெற்றாள்.

சஞ்சனா ராஜாவை ஒரு உணவகத்திற்கு வர சொல்லி இருந்தான்.

"சொல்லுடா ,அவசரமா என்னை எதுக்கு வர சொன்னே?"

ராஜா பதில் ஏதும் கூறாமல் அவள் அழகை தொடர்ந்து ரசித்தான்.

சஞ்சனா வெட்கமுடன்"டேய் போதும் என் அழகை ரசிச்சது.சீக்கிரம் சொல்லு என்ன விசயம்."

"இல்லடி சஞ்சனா, வர வர உன் அழகு மெருகெறி கொண்டே போகுது.அப்படியே உன்னை அள்ளி சாப்பிடணும் போல இருக்கு"

அதெல்லாம் ஒன்னும் இல்ல,என் ராஜாவோட கல்யாணம் நடக்க போகுது.அதனால் வந்த பூரிப்பு தான் இது.சரி என்ன முக்கியமான விசயம்.?

"இப்போ உன்னோட பூரிப்பை பல மடங்கு கூட்ட போறேன்" என்று அவன் அவள் பூர்வீக வீட்டு பத்திரத்தை எடுத்து அவள் முன் நீட்டினான்.

ஆச்சரியத்தால் கண்கள் மலர்ந்து "டேய் இது எப்படிடா உன்னால் மீண்டும் வாங்க முடிந்தது"

"என்னோட மெடிக்கல் இன்சூரன்ஸ் மூலமாக ரெண்டு லட்சம் பணம் கிடைச்சது.மேலும் என்கிட்ட மூணு லட்சம் பணம் அக்கவுண்ட்டில் இருந்தது.அதையும் சேர்த்து கட்டிவிட்டு இந்த பத்திரத்தை உன் பெயரில் மீட்டு விட்டேன்."எப்படி என கண்ணடித்தான்..

"ஆனா காசு கொடுத்து இருந்தாலும்,என் பெரியப்பா இந்த வீட்டை தர ஒப்பு கொண்டு இருக்க மாட்டாரே " சஞ்சனா வினவ

இந்த ராஜா சிறந்த குடிமகன் என்று குடியரசு தலைவரிடம் அவார்ட் வாங்கினவன் சஞ்சனா,ஒரே ஒரு ஃபோன் கால் CM கிட்ட இருந்து.அவ்வளவு தான் உன் பெரியப்பா பத்திரத்தை அலறி எடுத்து கொடுத்து விட்டார்.காசு கூட வேண்டாம் என்று தான் சொன்னார்.ஆனா அவரோட காசு நமக்கு எதுக்கு?அதான் கொடுத்து விட்டு வந்து விட்டேன்.என்னால் பறிபோன என் கண்மணியின் வீடு என்னாலேயே வந்து விட்டது போதுமா?

சஞ்சனா அவனை கட்டி அணைத்து,"டேய் எனக்கு உன்னை விட வேறு எதுவும் முக்கியமே இல்லடா.எனக்கு என்ன தேவையோ பார்த்து பார்த்து செய்யறே.என்னிடம் இருப்பதில் உனக்கு என்ன வேணும் சொல்லு,நான் தரேன்.

ராஜா அவள் காதில் கிசுகிசுக்க," ச்சீ போடா" என வெட்கத்தில் சிணுங்கினாள்..

"இப்ப இல்லடி,நம்ம முதல் ராத்திரி அன்னிக்கு கொடுத்தால் போதும்."என்று மீண்டும் அவன் கேட்க

"சரி கண்டிப்பா தரேன்."என அவள் முகம் குங்கும பூவாய் சிவந்தது.

"அக்கா இது யாரோட கல்யாண பத்திரிக்கை "என மேசை மீது இருந்த பத்திரிக்கையை எடுத்து காட்டி அர்ஜுன் பிரியாவிடம் கேட்டான்.

"அதுவா,நீ வேண்டாம் என்று சொன்ன சஞ்சனாவிற்கு தான்."

"அக்கா, நான் எங்கே வேண்டாம் என்று சொன்னேன்.அவ தான் என்னை வேண்டாம் என்று சொன்னாள்."என கோபமுடன் சொன்னான்.

"சரி சரி இவளை மறந்துவிடு .உன் தொழில் நஷ்டமாகி கொண்டே இருக்கே பாரு.முதலில் அதை சரி செய்து முன்னுக்கு வர பார்" என அறிவுரை சொல்லி விட்டு பிரியா அகன்றார்.

என் தொழிலில் நஷ்டமே இவளால் தானே வந்தது.இவள் மேல் ஆசை வைத்து தானே கவனம் சிதறி எல்லாமே என் கையை விட்டு போனது.என் வாழ்கையை கேள்விக்குறியாக்கி விட்டு நீ மட்டும் ஜாலியாக இருக்க பார்க்கீறீயா .!விட மாட்டேன்..சஞ்சனா,உன்னை நான் ஆசை தீர அனுபவித்து,நான் தூக்கி எறியும் எச்சில் பழம் தான் ராஜாவிற்கு கிடைக்க வேண்டும். "இதோ இப்பவே" என ஒரு நம்பருக்கு கால் செய்தான்.

"ஹலோ காசிமேடு கபாலி"​
Next page: Chapter 30
Previous page: Chapter 28