Chapter 31

"ஹனி.எல்லாம் ரெடியா..?ராஜா சஞ்சனாவிடம் கேட்டான்..

"டேய் நீ போய் தான் ஆகணுமாடா.."சஞ்சனா அலுத்து கொண்டே கேட்டாள்.

"ஏய் செல்லக்குட்டி..நான் முதலிலேயே உன்கிட்ட இந்த டிரான்ஸ்ஃபர் வித் புரொமோஷன் ஆஃபர் வேண்டாம் என்று சொன்னேன்.நீதான் கேக்கல..இப்போ வந்து அடம் பிடிச்சா எப்படி செல்லம்.."ராஜா கேட்க,

சஞ்சனா அவன் முகம் பார்த்து"டேய் எனக்கு அப்ப எதுவும் தோணலடா..நீ அடுத்த லெவல் போறத நினைச்சு சந்தோசமா இருந்துச்சு.ஆனா இப்ப பிரியும் போது தான் கஷ்டமா இருக்கு..நான் வேணா உன் கூட புறப்பட்டு வந்துடட்டுமா.."

ராஜா அவள் கன்னத்தை கிள்ளி,"அப்போ நம்மள நம்பி இங்கே 30 பேரு வேலை செய்யும் கம்பனி யார் பாத்துக்குவாங்க சொல்லு கண்மணி..கொஞ்சம் பொறுத்துக்க செல்லம்.. இப்போ நான் வேலை செய்யும் கம்பனி புதுசா தொடங்கி இருக்கும் கிளையை எப்படியாவது மூணு மாசத்துல கொஞ்சம் டெவலப் பண்ணிட்டு இங்கே டிரான்ஸ்ஃபர் வாங்கி ஒடி வந்துடறேன்..போதுமா"என அவன் கெஞ்சலாக கேட்டான்.

"டேய் இருந்தாலும்."சஞ்சனா ராகம் இழுக்க,

"அடியே பொண்டாட்டி..நான் என்ன கடல் கடந்து வெளிநாடா போக போறேன்..இங்க இருக்கும் திருச்சிக்கு தானே..வெறும் 330 kms..வாரம் ஒருமுறை இங்கே என் கண்மணியை பார்க்க ஓடோடி வரப்போறேன்.அப்புறம் என்ன பிரச்சினை..சொல்லு.."

"டேய் உன்னை பிரிந்து சாரா எப்படி இருப்பா..சொல்லு.."

" நான் போவதால் சாராவுக்கு மட்டும் தான் கஷ்டமா..!இல்லை அவ அம்மாவுக்குமா "என ராஜா சொல்லி சிரித்தான்..

சஞ்சனா அவன் சட்டை பட்டனில் விரல் நுழைத்து,"சாராவுக்கு தான் கஷ்டம்..ஆனா அவ அம்மாவுக்கு கொஞ்சம் கூடுதல் வருத்தம்.."என அவள் சொல்ல,ராஜா சஞ்சனாவை கட்டி அணைத்தான்..

"எனக்கு மட்டும் கஷ்டமா இல்லையா செல்லம்,இந்த நிலவு முகத்தில் தினமும் விழிக்கும் நான் ,இப்போ அந்த பிரிவை நினைத்து என் மனம் மட்டும் வாடாதா..!ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாளுக்காக காத்து இருப்பேன் கண்மணி,இந்த பொன் நிலவு முகத்தை காண.மற்றபடி வீடியோ காலில் பேசிக்கலாம்."என அவள் நெற்றியில் காதலுடன் முத்தம் வைக்க,கீழே கார் ஹாரன் சத்தம் கேட்டது..

ராஜா கீழே எட்டி பார்த்து"கேப் வந்து விட்டது செல்லம்,நான் கிளம்பறேன்.."என கிளம்பினான்..

சஞ்சனா கெஞ்சுதலாக"டேய் நானும் பஸ் ஸ்டாண்டு வரை உன் கூட வரட்டுமா.."

"வேற வினையே வேணாம் கண்மணி..அப்புறம் உன் அழுகிற முகத்தை பார்த்து விட்டு என்னால் ஊருக்கே போக முடியாது..இங்க பாரு கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் இந்த மூணு மாசம் ஓடிடும்..எப்படியாவது vp காலில் விழுந்தாவது நான் மீண்டும் சென்னைக்கு மாற்றலாகி வந்து விடுகிறேன்..அப்படியும் அவர் மாற்றல் கொடுக்கவில்லை என்றால் நான் வேலை resign பண்ணி விடுகிறேன் போதுமா..இப்போ கொஞ்சம் சிரிச்சு வழியனுப்பு என் கண்ணே..!"

சஞ்சனா கொஞ்சம் செல்ல கோபத்துடன் முறுக்கி கொண்டு நிற்க,ராஜா அவளிடம்"உனக்காவது துணைக்கு அம்மா,சாரா,சஞ்சய் எல்லோரும் இருக்காங்க..ஆனா எனக்கு அங்கே யாரும் இல்லை தானே..!என ராஜா முகத்தை பரிதாபமாக வைத்து கொண்டு,"இப்போ கொஞ்சம் சிரிம்மா..என் செல்லம் "என ராஜா காதில் விரலை வைத்து தோப்புக்கரணம் போட்டு கெஞ்ச சஞ்சனா சிரித்தாள்..

அதை பார்த்து ராஜா நிம்மதி அடைந்தான்.."சரி போய்ட்டு வா..வாராவாரம் கண்டிப்பா இங்கே வந்துவிடனும்.."

"உத்தரவு ராஜகுமாரி.."என ராஜா சொல்லி விட்டு திருச்சி கிளம்பினான்..

புது பணிபுரியும் இடம்,புது ஆட்கள் எல்லாமே ராஜாவுக்கு சவாலாக இருந்தது..எப்பவுமே புது இடம் பழகும் வரை கஷ்டமாக தான் இருக்கும் என்பதை ராஜா நன்கு அறிவான்..முன்பு அவன் பார்த்த வேலையில் sales dept மட்டுமே கவனித்தால் போதுமானதாக இருந்தது..ஆனால் இப்போ பிராஞ்ச் மேனேஜர் ஆக புரோமோட் ஆனதால் மற்ற டிபார்ட்மெண்ட் வேலைகளையும் அவனே கவனிக்க வேண்டியதாகி விட்டது..உண்மையில் இந்த பிராஞ்ச் மேனேஜர் போஸ்ட் திருச்சியை பூர்வீகமாக கொண்டு இருந்த தாமோதரன் என்கிற தாமுவுக்கு கிடைக்க வேண்டியது.அவன் ராஜாவை காட்டிலும் சீனியர்,மேலும் டெக்னிகல் டிபார்ட்மெண்ட்டில் இருந்து வந்ததால் அவனுக்கு தான் இந்த புரொமோஷன் கிடைக்கும் என மிகவும் நம்பி இருந்தான்.ஆனால் கடைசி நேரத்தில் திறமையின் அடிப்படையில் ராஜாவை செலக்ட் செய்து விட்டார்கள்.திருச்சி லே அவுட் தனக்கு மட்டுமே நன்றாக தெரியும்,தன்னை மீறி ராஜாவால் இங்கு ஒரு மயிரும் புடுங்க முடியாது என அவன் நினைத்த வேளையில் வந்த ரெண்டே நாளில் திருச்சி லே அவுட் முழுக்க ராஜா தெரிந்து கொண்டு விட்டான்.அதற்கேற்ப ராஜா திட்டமிட்டு வேலை செய்ய தாமுவின் கனவுகள் தவிடுபொடியாகி விட்டன..அதனால் அவன் மனதில் கெட்ட எண்ணங்கள் உருவாயின..

வழக்கம் போல ராஜா வேலை முடித்து விட்டு போகும் பொழுது,தாமு மற்றும் அவன் நண்பர்கள் முகமூடி அணிந்து காரில் பின் தொடர்ந்தனர்.சஞ்சனாவுடன் கொஞ்சி குலாவி போனில் பேசி கொண்டே சென்றதால் அவர்கள் பின் தொடர்வதை ராஜா கவனிக்கவில்லை.

ராஜா போனை கட் செய்யவும் ஒரு ஆள்அரவமற்ற சாலையில் பின் தொடர்ந்து வந்த கார் ராஜாவின் பைக் மீது மோதியது..ராஜா நிலைதடுமாறி விழ,காரில் இருந்து இறங்கிய தாமு மற்றும் அவன் நண்பர்கள் ராஜாவை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர்..ராஜா மயக்கம் ஆனவுடன்,தாமு உடனே,"போதும் நிப்பாட்டுங்கடா..அப்புறம் செத்து கித்து தொலைக்க போறான்..இந்த அடிக்கே அவன் ஊரை விட்டு ஓடி விடுவான்.."என்று சொல்லி விட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

தன் கிளினிக் வேலை முடிந்து அந்த வழியே ஸ்கூட்டியில் வந்த ஒரு அழகிய நங்கை,யாரோ அடிப்பட்டு கிடப்பதை பார்த்து வண்டியை நிறுத்தி அருகே சென்றாள்..அவன் முகத்தை பார்த்த உடன் ,ராஜா காரில் அடிப்பட்டு கிடந்த பழைய நினைவுகள் உடனடியாக வந்தன.கண்களில் நீர் பெருக ராஜா..ராஜா என பதறினாள்..

அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனே கூட்டி சென்றாள்.டாக்டர் உடனே அவனுக்கு முதலுதவி செய்து விட்டு,"பயப்படுவதற்கு ஒன்னும் இல்லை..கொஞ்சம் நேரத்தில் கண் விழித்து விடுவார்"என சொல்லி விட்டு சென்றார்..

அவளின் கையில் ராஜாவின் ஃபோன் இருந்தது.கைபேசியில் ராஜாவின் கைரேகையை வைத்து ஒத்தி எடுக்க டிஸ்ப்ளே ஓபன் ஆகியது..அதில் கடைசியாக பேசிய சஞ்சனா நம்பர் தெளிவாக தெரிந்தது.."பேசலாமா..வேண்டாமா.."என அவள் மனதில் பெரும் போராட்டமே நிகழ்ந்து கொண்டு இருந்தது..ஆனால் உடனே ராஜாவின் மொபைல் ஒலிக்க தொடங்க அவள் போராட்டம் முடிவுக்கு வந்தது..அழைத்தது சஞ்சனா தான்.

ஃபோன் அழைப்பை எடுத்தாலும் பேச அவள் நா எழவில்லை.."ஹலோ ராஜா.ராஜா என சஞ்சனா திரும்ப திரும்ப கூப்பிட,சில நொடி மௌனத்திற்கு பின் ஷன்மதி "ஹலோ"என்றாள்.

குரலை உடனே அடையாளம் கண்டு கொண்ட சஞ்சனா,"ஷன்மதி நீயா"என கேட்க,

ஷன்மதியும்,"நான் ஷன்மதி தான் சஞ்சனா..ராஜாவிற்கு இங்கே கொஞ்சம் அடிபட்டு இருக்கு..அவன் மயக்கமா இருக்கான்.கொஞ்சம் நீ உடனே புறப்பட்டு திருச்சி வரமுடியுமா.."என கேட்டாள்..

"என்ன ஆச்சு ராஜாவுக்கு"சஞ்சனா பதறி கேட்க, ஷன்மதி சுருக்கமாக சொல்லி முடித்தாள்..

"பயப்பட ஒன்னும் இல்லை சஞ்சனா..ஆனா நீ இப்போ ராஜா கூட இருப்பது நல்லது.நீ மட்டும் வந்தா போதும்..வீட்டில் வேற யாருக்கும் சொல்லி வீணா அவர்களுக்கு கஷ்டம் கொடுக்க வேணாம்.."..என்று ஷன்மதி சொல்ல,சஞ்சனா உடனே திருச்சி கிளம்பி விட்டாள்.

வீட்டில் ராஜாவின் அம்மாவிடம் சாராவை மட்டும் பார்த்து கொள்ள சொல்லிவிட்டு,கைக்குழந்தையான சஞ்சயை மட்டும் தூக்கி கொண்டு சிலமணி நேரங்களில் காரை எடுத்து கொண்டு திருச்சி ஓடிவந்தாள்.

ஷன்மதி சொன்ன ஹாஸ்பிடல் உள்ளே சஞ்சனா நுழைவதை பார்த்த ஷன்மதி உடனே அங்கிருந்து கிளம்பி விட்டாள்.அதுவரை அக்கறையோடு ராஜாவை பார்த்து கொண்டு இருந்த ஷன்மதி,சஞ்சனா முகத்தை எதிர்கொள்ள திராணி இல்லாமல் உடனே வீட்டுக்கு சென்று விட்டாள்..

ராஜா அட்மிட் ஆகி இருந்த அறைக்குள் சஞ்சனா நுழைய,"டாக்டர் என்ன ஆச்சு இவருக்கு.."என பதறி கேட்க,

"ஒன்னும் இல்லம்மா..இவரை யாரோ நாலு பேர் சேர்ந்து அடிச்சி இருக்காங்க.. வலி அதிகமாக இருக்கும் என்பதால் ஸ்லீபிங் இன்ஜெக்சன் கொடுத்து இருக்கோம்..இன்னும் கொஞ்ச நேரத்தில் கண் விழித்து விடுவார்..பயப்பட ஒன்னும் இல்ல.."

சஞ்சனா சுற்றும் முற்றும் பாத்து விட்டு "டாக்டர்..!இவரை அட்மிட் பண்ண ஷன்மதி எங்கே.."

டாக்டரும்"அந்த பொண்ணு தான் நைட் எல்லாம் கண் முழிச்சு கூடவே இருந்து இவரை பார்த்து கொண்டது..இங்கே எங்கேயாவது தான் இருக்கும்..தேடி பாருங்க.."

சஞ்சனா ஷன்மதியை தேடி பார்க்க அவள் கிடைக்கவில்லை..அங்கு விசாரித்ததில் ஒரு வழியாக அங்கு இருக்கும் வார்டு பாய் மூலம் அவள் இருக்கும் இடம் தெரிந்தது..

ராஜா கண் விழிப்பதற்குள், ஷன்மதியை சென்று பார்த்து விட்டு வந்து விடலாம் என்று கிளம்பினாள்.

ஷன்மதி தங்கி இருந்த வீடு வசதியாக வீடாக இருக்கும் என சஞ்சனா நினைத்தாள்..ஆனால் அது ஒரு மிக மிக எளிய ஒரே அறை கொண்ட வீடாக இருக்குமென சஞ்சனா கனவிலும் நினைக்கவில்லை..அறைக்கதவு திறந்து உள்ளே நுழைய, ஷன்மதியின் அறைக்குள் ராஜா போஸ்டர் பெரிதாக ஒட்டபட்டு இருப்பதை பார்க்க நேர்ந்தது..

சஞ்சனாவின் வரவை ஷன்மதி சற்றும் எதிர்பார்க்கவில்லை.அவள் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.

"சஞ்சனா.நீ எப்படி இங்கே ..!"அவள் அதிர்ச்சியோடு கேட்க..

"நான் இங்கே வந்தது ஒருபுறம் இருக்கட்டும் ஷன்மதி..என்ன இது..!ஏன் உனக்கு இந்த நிலைமை..?கல்யாணம் ஆகி வெளிநாட்டில் போய் நீ சந்தோசமாக இருப்பாய் என்று நாங்கள் நினைத்தோமே..!இங்கே ஏன் புறாக்கூண்டு போன்ற அறையில் வந்து கஷ்டப்படுறே..!"

ஷன்மதி அதற்கு பதில் சொல்லாமல்,சஞ்சனா கையில் இருந்த குழந்தையை ஆசையுடன் வாங்கி கொண்டு,"அப்படியே ராஜாவை உரிச்சு வைச்சு இருக்கான்..ஆமா உன்னோட முதல் குழந்தை யார் ஜாடை சஞ்சனா..!"என அவள் கேட்க..

"ஷன்மதி பிளீஸ் பேச்சை மாற்றாதே..!உன் கல்யாணத்திற்கு கூட நாங்க வந்தோமே..!நீ இந்த நிலைமையில் இருப்பதை பார்த்தால் கண்டிப்பா ராஜா உடைஞ்சு போயிடுவான்..என்ன தான் ஆச்சு உனக்கு..!தயவு செய்து சொல்லு ஷன்மதி.."

ஷன்மதி நடந்ததை சொல்ல அதை கேட்டு சஞ்சனா மனம் சுக்குநூறாக உடைந்து போனது..

ஷன்மதி சஞ்சனாவை பார்த்து,"ராஜாவின் வாழ்வில் இருந்து உன்னை அகற்ற வேண்டும் என்று நினைச்சேனே தவிர,என்றுமே உன்னை அழிக்க நினைத்தது இல்ல சஞ்சனா..!எப்போ அவன் உனக்கு வந்த ஆபத்தை அவன் ஏற்று கொண்டு உனக்காக உயிரை விட துணிந்தானோ அந்த ஒரு நொடியே ,உங்க வாழ்வில் நான் தலையிட கூடாது என முடிவு பண்ணிட்டேன்.உங்களுக்கு தொந்தரவு தரக்கூடாது என நினைச்சு தான் நான் கல்யாணமும் பண்ணி கொண்டேன்..ஆனால் என் மனசு முழுக்க ராஜா இருக்கும் பொழுது எப்படி இன்னொருத்தரை தொட அனுமதிக்க முடியும் சொல்லு..அதனால் என் புருஷன் கிட்ட,என்னோட காதலை சொல்லி கொஞ்ச நாளைக்கு மட்டும் என் மனசு மாறும் வரை உடலுறவை தள்ளி வைக்க சொல்லி அனுமதி கேட்டேன்..ஆனால் அவன் ஒத்துக்கல.என்னை உடலுறவுக்கு பலவந்தபடுத்தினான். நான் போராடி பாத்தேன்,என்னால் அவனை எதிர்க்க முடியல.கடைசியில் அவன் என்னை தொடும் பொழுது நான் ராஜா என்னை தொடுவதாக நினைத்து தான் கற்பனை பண்ணி கொண்டேன்.அவனுக்கு என் அழகு மேல தான் மோகம் என்பதை புரிந்து என் மனசு வலித்தது..தினம் தினம் சித்திரவதை,என்னை இழிவாக பேசினான்.வெறும் காதல் தானா..!இல்லை ரெண்டு பேரும் அதற்கு மேல் போய்ட்டீங்களா..!என்று கேட்டான்.அதுக்கு நான் அவனிடம் நான் மட்டும் ராஜாவை லவ் பண்ணேன்..அவன் என்னை லவ் பண்ணல என்று சொன்னேன்..ஆனா அவன் அதற்கு நம்பல..அது எப்படி இவ்வளவு அழகான பெண்ணே வந்து லவ் சொல்லும் பொழுது அதை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஒன்று அவன் முட்டாளாக இருப்பான்,இல்லை அவன் ஆண்மை அற்றவனாக இருப்பான் என்று சொல்லி ராஜாவை திட்டும் பொழுது,என்னால பொறுக்க முடியல.அவனிடம் சண்டை போட்டு இந்தியா வந்தேன்..அவன் என் வீட்டில் என்ன சொல்லி இருப்பான் என்று தெரியல..!என் பிரியமான அப்பாவின் வெறுப்பை சம்பாதிக்க நேர்ந்தது..என்னை வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை.எனக்கு தெரிந்த ப்ரெண்ட் மூலம் திருச்சி வந்தேன்.விவாகரத்து வாங்கினேன்..என்னோட கற்பனை உலகத்தில் ராஜாவோடு சேர்ந்து நிம்மதியா வாழ தொடங்கினேன்..என்று அவள் சொல்ல கண்களில் கண்ணீர் வழிந்தது..சஞ்சனா அந்த அறையை நோட்டம் விட்டாள்..அந்த சிறு அறையில் திரும்பும் பக்கம் எல்லாம் ராஜாவின் உருவமே தென்பட்டது. கடிகாரம்,கப்,போர்வை என ஒன்றை கூட ஷன்மதி விட்டு வைக்கவில்லை..எல்லாவற்றிலும் ராஜாவின் உருவத்தை ஷன்மதி பொறித்து வைத்து இருந்தாள்..

இவற்றை எல்லாம் சஞ்சனா பார்ப்பதை அறிந்த ஷன்மதி,"சஞ்சனா என்னை மன்னிச்சிடு..உன்னோடவன் நிழலை நான் வைத்து மட்டும் வாழ அனுமதி கொடு..நான் உன்னோட வாழ்வில் கண்டிப்பா நான் எப்பவுமே குறுக்கே வர மாட்டேன்.."

சஞ்சனா அவளை கட்டி கொண்டு,"இப்பவும் ராஜாவோட வாழ உனக்கு ஆசையா ஷன்மதி.."என கேட்டாள்..

ஷன்மதி கலங்கிய கண்களுடன்,"இப்போ கூட என் ராஜாவையும்,அவன் குழந்தையையும் என்கிட்ட கொடுத்துடு என்று உன்கிட்ட கத்தனும் போல இருக்கு..ஆனால் இது தப்பு என்று என் மனசு சொல்வதால் கேக்க முடியல.."

அதற்குள் சஞ்சனா மொபைல் அழைக்க,அதை எடுத்து பேசினாள்."சரி உடனே வரேன்.."என்று போனை வைத்தாள்..

"வா ஷன்மதி ஹாஸ்பிடல் போலாம்..'

"இல்ல நான் வரல சஞ்சனா.."

"நீ கண்டிப்பா வந்து தான் ஆகனும் ஷன்மதி..! உன் ராஜா நல்லா இருப்பதை நீ பார்க்க வேண்டாமா..!"என சொல்லி அவளை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றாள்.

உன் ராஜா என்று சஞ்சனா சொன்ன வார்த்தை ஷன்மதிக்கு உள்ளூர மகிழ்ச்சி தந்தாலும்,அவள் தன்னை மறந்து சொல்லி இருப்பாள் என்ற எண்ணம் வர,பொங்கி வந்த மகிழ்ச்சி உடனே வடிந்து போனது..

ராஜாவின் அறைக்குள் நுழைய,அவன் கண்விழித்து அமர்ந்து இருந்தான்..

ஷன்மதியை பார்த்து ராஜா அவளிடம்,"வா ஷன்மதி நீயா என்னை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணே..நான் எப்போ சென்னையில் இருந்து இங்கே வந்தேன்..நீ இங்கே எப்படி?என கேட்டான்..

ஷன்மதி,சஞ்சனா இருவரும் ஒன்றும் புரியாமல் விழிக்க அடுத்த அதிர்ச்சி சஞ்சனாவிற்கு தாக்கியது..சஞ்சனாவை பார்த்து,"இவங்க யாரு உன்னோட ப்ரெண்ட்டா.. ஷன்மதி!"என அடுத்த தாக்குதலை தொடுத்தான்..

ஷன்மதி சஞ்சனாவை பற்றி சொல்ல வாயை திறக்க,சஞ்சனா அவள் கைபிடித்து அழுத்தினாள். "ஆமா நான் இவளோட ப்ரெண்ட் தான்..நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க..நாங்க கொஞ்சம் டாக்டரை பார்த்திட்டு வந்து விடுகிறோம்" என சஞ்சனா சொல்லி விட்டு ஷன்மதியை வெளியே அழைத்து சென்றாள்..

சஞ்சனா டாக்டரை சென்று பார்த்து,"டாக்டர் என்னை அவருக்கு அடையாளம் தெரியல..ஆனால் ஷன்மதியை மட்டும் அடையாளம் தெரியுது.."என்று சொல்ல

"நீங்க அவருக்கு எவ்வளவு நாளா பழக்கம்"என டாக்டர் கேட்க,

'ஒரு நாலு வருஷம் இருக்கும் டாக்டர்.."என சஞ்சனா சொன்னாள்.

"அப்போ நீங்க" என ஷன்மதியை பார்த்து கேட்டார்.

"எனக்கு எட்டு வருஷம் மேல தெரியும் டாக்டர்.."

"அப்போ ரொம்ப சிம்பிள்.அவருக்கு பின் மண்டையில் அடிபட்டதால் சமீபமா நடந்த நிகழ்வுகள் எல்லாம் மறந்து விட்டது..அது ஒன்னும் பிரச்சினை இல்ல..கொஞ்ச கொஞ்சமாக எல்லாம் ஞாபகத்திற்கு வந்து விடும்.உதாரணத்திற்கு அவர் செய்யும் வேலையில் இந்த நாலு வருஷத்தில் ஏதாவது கற்று கொண்டு இருந்தால் இப்போ அது அவருக்கு ஞாபகம் இருக்காது. ஆனா அவருக்கு அதை யாராவது ஒருவர் ஞாபகப்படுத்தினால் அந்த விசயம் மட்டும் உடனே ஞாபகத்திற்கு வந்து விடும்..அதே போல உங்க கூட அவர் பழகிய நினைவுகளை கொஞ்ச கொஞ்சமா நீங்க ஞாபகப்படுத்தினால் அவர் பழைய நினைவுக்கு கூடிய சீக்கிரமே வந்து விடுவார்..நான் scan ரிப்போர்ட் எல்லாம் பார்த்துட்டேன்.பயப்படும்படி ஒன்னுமே இல்லை.."என்று சொன்னார்.

"அது போதும் டாக்டர்..மிச்சத்தை நாங்க பார்த்துக்கிறோம்"என ஷன்மதி சொன்னாள்..

டாக்டர் அறை விட்டு வெளியே வந்த உடன் சஞ்சனா, ஷன்மதி கைப்பிடித்து,"ஷன்மதி,நான் இப்போ ராஜா கிட்ட பேசும் பொழுது நீ குறுக்கே பேச மாட்டேன் என்று சஞ்சய் மேல சத்தியம் பண்ணி சொல்லு.."

"எதுக்கு சஞ்சனா..? இப்போ சத்தியம் எல்லாம் கேட்கிற.."

"எல்லாம் காரணமாக தான்..நான் கேட்பதை உடனே செய்.."

ஷன்மதி சத்தியம் செய்ய,சஞ்சனா தீர்மான முடிவோடு ராஜா அறையை நோக்கி நடந்தாள்.

சஞ்சனா மற்றும் ஷன்மதி ராஜாவிடம் சென்றனர்..

சஞ்சனாவை பார்த்து மீண்டும் ராஜா ஈர்க்கபட்டான்.ஆனால் அவள் கழுத்தில் இருந்த தாலி,அவள் வேறொருவரின் மனைவியோ என்ற எண்ணம் தோன்ற செய்தது.அதனால் அவன் பார்வையை ஷன்மதி பக்கம் திருப்பினான்.

சஞ்சனாவை ஏன் நான் திரும்ப திரும்ப பார்த்து ரசிக்கிறேன் என புரியாமல் அவன் குழம்பினான்..

குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதில் சஞ்சனா கை தேர்ந்தவள்..ராஜாவை பார்த்து,"ராஜா உங்களுக்கு இப்போ மண்டையில் அடிப்பட்டதால் நாலு வருஷமா நடந்த சம்பவம் எதுவும் உங்களுக்கு நினைவு இல்லை..நீங்களும், ஷன்மதியும் ஒருவரையொருவர் விரும்பி இருக்கீங்க.."என்ற ஒரு குண்டை தூக்கி போட்டாள்.

இதை கேட்டு ஷன்மதி அதிர்ந்தாள்..சஞ்சனா எதுவும் பேசக்கூடாது என்று சத்தியம் வாங்கி இருந்ததால் அமைதியாக இருந்தாள்.

அவள் சொல்வதை ராஜா நம்ப முடியாமல் பார்க்க,சஞ்சனா மேலும் தன் பேச்சை தொடர்ந்தாள்."உங்க காதலை தெரிந்து கொண்ட ஷன்மதி அப்பா வேறொருவருக்கு ஷன்மதியை திருமணமும் செய்து விட்டார். ஆனால் உன்னையே நினைத்து கொண்டு இருந்த ஷன்மதியால் அவனோடு வாழ முடியவில்லை.தினம் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்த ஷன்மதியால் மேற்கொண்டு அவனோடு வாழ முடியாமல் விவாகரத்து வாங்கி கொண்டு வந்து விட்டாள்.அவளோட உண்மை காதலை அறிந்த நீ ,நாளை ஷன்மதியை கல்யாணம் செய்து கொள்வதாகவும் இருந்தாய்..ஆனால் அதற்குள் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது. ஆனா இப்பவும் பாதகம் இல்ல,டாக்டர் உனக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார்..நீங்க ரெண்டு பேரும் ஏற்கனவே முடிவு பண்ண படி நாளை கண்டிப்பா திருமணம் பண்ணிக்க முடியும்.."

"என்ன சொல்றீங்க நீங்க சஞ்சனா..!நீங்க சொல்றத என்னால் கொஞ்சம் கூட நம்ப முடியல..முதலில் என்னோட அம்மா எங்கே..?.."

"உங்களோட அம்மாவுக்கும் இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்ல ராஜா காரணம் ஷன்மதி வேறொருவருக்கு கல்யாணம் ஆனவள் என்பதால் மறுக்கிறாங்க.."என அடுக்கடுக்காக பொய்யை சஞ்சனா சொன்னாள்.

ராஜா சிரித்தான்.."நீங்க சொல்றத கொஞ்சம் கூட என்னால நம்ப முடியல..சஞ்சனா..!மேலும் உங்களுக்கும்,எனக்கும் ஏதோ தொடர்பு இருக்கு என நான் உணர்கிறேன்.."

சஞ்சனா உஷாராகி,"நான் சொன்னா நீ நம்ப மாட்டே ராஜா..!உன் அம்மா சொன்னா நீ நம்புவீயா.."என கேட்டாள்.

"ம்ம்..நம்புவேன்.."

"சரி அப்போ ஒரு நிமிஷம் இருங்க,நான் உன்னோட அம்மாவுக்கு நான் ஃபோன் பண்ணிட்டு வரேன்.."

சஞ்சனா வெளியே வர, ஷன்மதி பின்னாடியே ஒடி வந்தாள்..

"சஞ்சனா நீ என்ன பண்றே.தெரிஞ்சு தான் பண்றீயா..",

"ஷன்மதி நான் என்ன பண்றேன் என்று நல்லா தெரிந்து தான் பண்றேன்..நீ கொஞ்சம் அமைதியா‌ இரு.நான் கடைசியாக உன்கிட்ட பேசறேன்.."

சஞ்சனா ராஜாவின் அம்மாவிற்கு ஃபோன் செய்தாள்..

"என்ன ஆச்சு சஞ்சனா..!நேற்று அவசரமா திருச்சி கிளம்பி போனே..ராஜாவிற்கு ஏதாவது பிரச்சினையா..!"

"ஆமாம் அம்மா.."என ராஜாவிற்கு நேற்று நடந்த விசயத்தை மட்டும் சுருக்கமாக சொன்னாள்.இப்போ ராஜாவிற்கு என்னையே அடையாளம் தெரியல.எனக்கும்,அவனுக்கும் நடந்த கல்யாணம் கூட ஞாபகம் இல்ல..நான் சொல்றத அவனை நம்ப சொல்லுங்க போதும்..அப்புறம் ரொம்ப பேச வேண்டாம்,அவன் ரெஸ்ட் எடுக்கணும் என டாக்டர் சொல்லி இருக்காங்க..அதனால் நான் சொல்றதுக்கு மட்டும் ஆமாம் என்று சொல்லுங்க.."

சரியென அவன் அம்மா தலையாட்ட,சஞ்சனா ராஜா அருகில் சென்றாள்..

அம்மா..! ராஜா பக்கத்தில் இருக்கிறான்,என ஸ்கிரீனை அவன் பக்கத்தில் திருப்பினாள்.."அம்மா ராஜாவுக்கு கல்யாண ஏற்பாடு நடந்தது உண்மை தானே."

"ஆமா..! சஞ்சனா சொல்றது எல்லாமே முழுக்க முழுக்க உண்மை தான். நீ சஞ்சனா சொல்றத முழுசா நம்பு"என அவன் அம்மா கூறினார்.

"அம்மா,திவ்யா எங்கே .?"என ராஜா கேட்க,

"அவளுக்கு கல்யாணம் கூட ஆகி விட்டது..நீ இப்போ ரெஸ்ட் எடு"என்று அவர் சொல்ல,ராஜா ஏதோ பேச வாயெடுக்க சஞ்சனா போனை துண்டித்து விட்டாள்..

இங்க பாரு ராஜா,"உங்க அம்மா உன்கிட்ட கோவித்து கொண்டு உன் தங்கை வீட்டில் தான் இருக்காங்க..சீக்கிரம் நீயும் ஷன்மதியும் கல்யாணம் செய்து கொண்டு ஒரு நல்ல விசயத்தோடு உன் அம்மாவை போய் பார்த்தால் அவங்க உன்கூடவே வந்து விடுவாங்க..இது ஒன்னு தான் நீங்க உன் அம்மாவோட ஒன்று சேர ஒரேயொரு வழி..எனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ண வேண்டிய நிறைய வேலை இருக்கு..நீ ரெஸ்ட் எடு..நாளை காலை உங்க ரெண்டு பேருக்கு கல்யாணம் "என்று மடமடவென சொல்லிவிட்டு வெளியே வந்தாள்..

"என்னது..! என் தங்கைக்கு கூட கல்யாணம் ஆகி விட்டதா..!அது கூட எனக்கு ஞாபகம் இல்லையே..!"என தலையில் கை வைத்து கொண்டு ராஜா குழம்பினான்..

"சஞ்சனா ஒரு நிமிஷம் நில்லு.."பின்னாடியே ஷன்மதி ஒடி வந்தாள்..

சஞ்சனா அவளிடம்,"இங்கே பாரு ஷன்மதி,கொஞ்சம் நேரம் முன்னாடி என்ன சொன்னே நீ..!ராஜாவையும்,குழந்தையும் உன்கிட்ட கொடுத்திட்டு போ என்று சொன்னே தானே..!அதில் ஒரு பாதியை நானாக உனக்கு விரும்பி தரேன்.."

"வேண்டாம் சஞ்சனா..!நீ வீணா ரிஸ்க் எடுக்கிறே.ராஜாவிற்கு பழைய நினைவு வந்து,உனக்கு துரோகம் செய்து விட்டதாக அவன் நினைத்தால் பிறகு விளைவுகள் மோசமாகி விடும்.."

"உன்னால் எவ்வளவு நாள் அந்த கற்பனை உலகில் வாழ முடியும் ஷன்மதி,நானே உனக்கு ராஜாவை விட்டு தரேன்..ராஜா உன்னோடு சேர வேண்டும் என்பதால் தான் அவன் நினைவுகள் தற்காலிகமாக மறந்து போய் இருக்கு.

நான் ராஜாவின் மீது எவ்வளவு அன்பு வைத்து இருந்தேனோ,அதே அளவு அன்பு நீயும் வச்சி இருக்கே..என்கூட நீ போட்டி போடும் பொழுது ராஜாவை உனக்கு விட்டு தர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை.ஆனா உன் அன்பை பார்த்து நானா உனக்கு அவனை விட்டு கொடுக்கிறேன்.."

"அப்போ நீ மட்டும் ராஜாவை பிரிந்து இருப்பீயா சஞ்சனா"

"அவனுக்கு திரும்ப கண்டிப்பா நினைவு வரும் என நான் நம்புகிறேன் ஷன்மதி..அதுவரை அவன் உன்னோட ராஜாவாக இருக்கட்டும்.."

"இப்போ உன்னோட முடிவு என்ன தான் சஞ்சனா.."

"நான் இப்போ அவனோட ரூமுக்கு போய் நானும்,அவனும் சம்பந்தபட்ட தடயங்களை அழிக்க போகிறேன்..ஏற்கனவே அவன் பர்ஸில் இருந்த என் போட்டோவை எடுத்து அதில் உன் போட்டோவை வைத்து விட்டேன்..நாளை உங்களுக்கு கல்யாணம் அவ்வளவு தான்.போய் ராஜாவுக்கு துணையாக இரு.."என்று அவள் வழியனுப்பி வைத்தாள்..

ராஜா,தன்னோட நண்பர்களுக்கு ஃபோன் அடிக்க நம்பரை அவன் மொபைலில் தேடினான்..ஆனால் அவன் நண்பர்கள் ஃபோன் நம்பர் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன சஞ்சனாவால்..

கொஞ்சம் கூட ராஜாவை யோசிக்க விடாமல் மடமடவென கல்யாண ஏற்பாடுகளை சஞ்சனா செய்து விட,அடுத்த நாள் காலை ஷன்மதி கழுத்தில் ராஜா தாலியை காட்டினான்.. ஆனால் ஷன்மதி கழுத்தில் தாலி கட்டும் பொழுது ஏனோ இதே நிகழ்வு அவன் வாழ்வில் ஏற்கனவே நடந்தது போல அவன் மனக்கண்ணில் விரிந்தது..​
Next page: Chapter 32
Previous page: Chapter 30